கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹடோவிடாவின் வெள்ள நிலவரங்கள் (Updates)

கடந்த 14.5.2016 ம் திகதி சனிக்கிழமை   இரவு முதல் பெய்த மழை காரணமாக கஹடோவிடாவின் பிரதான பாதை வெள்ளத்தினால்  முழ்கடிக்கப்பட்டுள்ளது.


இப்பெருவெள்ளம் முன்றாவது நாளாக  இன்னும் வற்றாது காணப்படுகிறது, சுமார் 300 பேரளவில்  இவ்வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட  இம் மக்களுக்கு  உணவு ஏனைய வசதிகளை கஹடோவிட  இளைஞர் குழுவினர்  ஊர்மக்களின்  ஆதரவுடன்  தொடர்தும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அத்துடன் அத்தனகல்ல பிரதேச செயலகத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு  உலர் உணவுப் பொதிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அது மட்டுமின்றி  வரலாற்றில் முதல் தடவையாக  பாதிக்கப்பட்ட மக்களை  சென்று பார்வையிடுவதற்காக  ஒரு படகு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும் . இப்படகை நிட்டம்புவ பிரதேச செயலகம் வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது. 

இவ்வாக்கத்தை எழுதும் இன்றைய தினம் 17.05.2016  காலை வெள்ள நீர் சற்று  குறைவடைந்த போதும் தற்போது கஹடோவிடாவுக்கு வடக்கு பிரதேசங்களில் தொடர்ந்தும் பெய்துவரும் மழை காரணமாக நீர் மட்டம் மீண்டும் அதிகரிப்பதை காணக்கூடியதாகவுள்ளது. மேலும் காலைமுதல் மாலை வரை இயங்கிய 185ம் இலக்க போக்குவரத்தும் தற்போது தடைப்பட்டுள்ளது. 

0 comments:

Post a Comment