கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த குடும்பத்தினருக்கு இன்று போதாத காலம்

அவரது நம்பிக்கைக்குரிய பொலிஸ் அதிகாரி அனுர சேனநாயக்க நேற்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
மறுபுறத்தில் வலது கரமாக இருந்தவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டு பிணையில் வெளிவந்துள்ளார்.
இன்னொரு வலது கரம் லலித் வீரதுங்க பொலிசாரின் கிடுக்கிப்பிடி விசாரணைக்குள் சிக்கி மூச்சுத்திணறிக் கொண்டிருக்கின்றார்.
நிதிமோசடிகளுக்குத் துணைபோன மேலதிக செயலாளர் காமினி செனரத் விசேட விசாரணைப் பிரிவில் முழிபிதுங்கிக் கொண்டிருக்கின்றார்.
இவை எல்லாவற்றையும் விட யோசித்தவின் காணிக் கொள்வனவு மோசடிகள் தொடர்பான விசாரணைகளும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அவர் தனது பாட்டியொருவரின் பெயரில் 14 இடங்களில் பெறுமதியான காணிகளை வாங்கிப் போட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
வயோதிகப் பாட்டியுடன் யோசித்தவும் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவில் திகைத்துப் போய் உட்கார்ந்து கொண்டிருக்கின்றார்.
facebook - Ashroffali Fareed

0 comments:

Post a Comment