கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பெருநாள் தினத்தில் ஊரைப் பிரித்த பெருநாள் குத்பா உரை!

அல்லாஹ்வின் அருளால் புனித நோன்பை சிறப்பாகக்கழித்துவிட்டு ஈகைத் திருநாளை அனைவரும ஒரு நாளில் கொண்டாடும் சிறந்த சந்தர்ப்பத்தை நாம் இன்று பெற்றோம். இந்த மகிழ்ச்சியில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக கஹட்டோவிட முஹியத்தீன் மஸ்ஜிதில் இடம்பெற்ற பெருநாள் குத்பா அமைந்ததாக பலரும் கவலை தெரிவித்தனர். எமதூரின் தௌஹீத்வாதிகள் பெருநாளன்று சொல்லும் தக்பீரை சுருக்கி விட்டதாகவும் மார்க்க விடயங்களில் கஞ்சத்தனம் காட்டுவதாகவும் அவர் படுமோசமாக விமர்சித்தது மட்டுமின்றி தௌஹீத்வாதிகள் மடையர்கள் என்றும் பகிரங்கமாக மிம்பர் மேடையில் முழங்கினார். இவரின் இக்குத்பா உரையை கேட்காமல் நடுநிலையில் சிந்திக்கும் பலர் எழுந்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பெருநாள் தினத்தில் அடுத்தவர்களை விமர்சிப்பது முறையல்ல என்று அந்த நடுநிலைவாதிகள் கருத்துத் தெரிவித்தனர். எமதூர் மக்களிடையே கொள்கை ரீதியாக பல பிரிவினர்கள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டிக்கொள்ளாமல் ஒற்றுமையாக அவரவர் பாட்டில் அவரவரது முறைப்படி அமல் செய்து கொண்டு வருகின்றனர். இந்த ஒற்றுமையில் விரிசலை ஏற்படுத்துவதாக அவரது உரை அமைந்தமை பலரும் கவலை தெரிவித்தனர். அவர் இவ்வாறு பேசுவதற்கான உள்நோக்கம் பள்ளி நிர்வாக சபையை திருப்திப்படுத்தவா? அல்லது இரு தரப்பினரையும் மோதவிட்டு அதில் இன்பம் காணவா?

10 comments:

ஊரான் said...

தவ்ஹீத் பிரிவினரின் பெருநாள் ஜூம்ஆவைக் கீழே தருகின்றேன். இவர்களின் உரையுடன் சம்பந்தப்பட்ட அந்த குலாம் மௌலவியின் உரையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்...இவர்களின் தரம் புரியும்

“தொழுகையைத் தொடர்ந்து முஜாஹித் மௌலவி குத்பா உரையை நிகழ்த்தினார். ரமழானில் நாம் இறையச்சத்தை அதிகரிப்பதற்காக முயற்சி எடுத்தோமா அந்த முயற்சிகள் பலனளித்துள்ளனவா என்பதை அனைவரும் மீள்பரிசீலனை செய்து பார்க்க வேண்டும் என்பதை குத்பா உரையில் அவர் வலியுறுத்தினார். அல்குர்ஆன் வசனங்களை ஓதுகின்ற போது எமது உள்ளங்களில் அசைவும் அல்லாஹ்வைப் பற்றிய அச்சமும் ஏற்பட வேண்டும். அதே போன்று சமூகத்தில் ஏழைகள் அனாதைகள் விதவைகள் ஆதரவற்றவர்கள் அறியப்படாதவர்கள் அனைவரது துன்ப துயரங்களின் போதும் ஒரு முஃமினின் உள்ளம் நெகிழ்வடைந்து அவர்களுக்காகக் கவலைப்பட்டு உதவி செய்யக்கூடிய மனப்பான்மை உருவாக வெண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.“

இன்றைய தினம் பாகிஸ்தானிலே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாட முடியாமல் உணவும் உடையும் வீடும் இன்றி அல்லலுறுவதை நினைவூட்டிய அவர் அவர்களுக்காக எமது பிரார்த்தனைகளும் உதவியும் அவசியம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

சமூக விடயங்களில் ஸஹாபாப் பெருமக்களது பல முன்மாதிரிகளை எடுத்துக் காட்டியதோடு அல்லாஹ்வை மறந்து வாழும் போது அவர்களின் மீது அவனது அருள்களைத் திறந்து விடுவதாகவும் அவற்றை அனுபவிக்கின்ற போது எதிர்பாராத விதத்தில் அல்லாஹ்வின் பிடி கடுமையாக இருக்குமென்ற அல்லாஹ்வின் கடுமையான எச்சரிக்கையையும் நினைவுபடுத்தி அனைவரும் இஸ்லாம் கூறுகின்ற சத்திய வழியில் வாழ உறுதிபூண வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

Anonymous said...

வஹ்ஹாபிகளிற்கு ஏசி ஏசி அவர்களின் பணத்தைக் கொண்டு பள்ளி கட்டப் போகிறார்களா?

brother said...

இன்று அமெரிக்காவில் குரான் எரிப்பு தினம் என்று ஒண்டு கொண்டாடப்படப்போவதாக அறியக்கிடைத்தேன்,
இதன் உண்மை நிலவரம்கள் என்ன என்பது பற்றி எதுவுமே தளங்களில் பிரசுரமாகவில்லை.

நாம் இங்கு எதுக்காகவோ உறவுகளை பிரிந்தும், முஸ்லிம்களுக்கான இடையிலான ஒற்றுமைகளை இழந்தும் வாழ்கிறோம்.
அதே நேரம் யஹூடிகள், கிரிச்டியானிகள் அவர்களுக்கு இடையில் எவ்வளவு கருத்துவேறுபாடு இருந்தபோதிலும் இஸ்லாத்துக்கு எதிரான முயற்சிகள் ஒற்றுமையாகவே செயட்படுகின்றனர்.

Anonymous said...

ஏன் பிரசுரமாகவில்லை. இந்த விடயம் முன்னதாகவே கஹட்டோவிடாவின் ஆங்கில இணையத்தளத்தில் பிரசுரமாகியிருந்தது.அந்த திட்டம் கைவிடப்பட்டடுவிட்டது என்பதையும் கூறிக் கொள்கின்றேன். மேலும் இந்த பிரதா சொல்வது போல் நாம் பல வழிகளில் பிரிந்திருக்கின்றோம். இந்த பிரிவை சோ்க்க வேண்டிய தருணத்தில் குலாம அருஸிறயின் பெருநாள் குத்பா ஒற்றுமையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது

Anonymous said...

ASSALAAMU ALAIKUM WR WB...
All what I have got to say is nothing but,
I my self is from Sri Lanka and from the very first day I started to love Islam the only thing which hurts me a lot is nothing but the SECTS of Islam... why are we divided???? I some times feel like crying 'coz every one is fighting unnecessarily for tiny reasons without having a proper understanding on Islam...how can there be groups inside Islam, while ISLAM IS UNIQUE????
I pray that the day should reach us soon when all these people will be united under the pure Islam
"AND WHO IS BETTER IN SPEECH THAN HE WHO INVITES TO ALLAH'S, AND DOES RIGHTEOUS DEEDS, AND SAYS "I AM ONE OF THE MUSLIMS"(41:33)
FEE AMANILLAH

ஊரான் said...

எமதூர் வரலாற்றில் மார்க்க ரீதியாக ஊரைப் பிரித்த வரலாறு முஹியத்தீன் பள்ளிக்கே உரியது. ஆரம்பத்தில் திட்டமிட்டு சாதுலிய்யா தரீக்காக் காரர்களை வெளியேற்றி இரண்டாவதாக ஒரு பள்ளி உருவாகக் காரணமாக இப்பள்ளி இருந்தது. அதன் பின் தவ்ஹீத்வாதிகளின் அடிப்படை உரிமைகளை மறுத்து இன்னுமொரு பள்ளி உருவாகக் காரணமாக அமைந்தது மட்டுமின்றி வெள்ளிக்கிழமை குதபா உரை தொடங்கவும் வழி வகுத்தது. அவர்களிடமுள்ள தரீக்கா வெறியினால் கண் மூடித்தனமாக செய்யும் அதிரடி வேளைகளால் ஊர் பல பிரிவுகளாகப் பிரிவதை இவர்கள் அலட்டிக் கொள்வதே இல்லை.

Anonymous said...

பழைய விடயங்களைப் புடம் போடாமல் பழையவைகளை மன்னித்து மறந்து எதிர்கால சந்ததிகள் சிறந்த முறையில் வாழ எமதூரை வழி செய்வோம். புத்தி ஜீவிகள் கட்டாயம் இதில் ஒன்றுபட்டுச் செயற்படல் அவசியம்.

Anonymous said...

Allah give us opportunities to get united. One such opportunity was the day of Eid, one and same day for all SL muslims. If we do not utilize these gifts of Allah, when will we be united under one flag, i.e. ISLAM?

Anonymous said...

ஊரான் சொன்னது சரியானதுதான் அந்த நேரமே பெரிய பள்ளி நிர்வாகிகள் சரியானதீர்வுகளை எடுத்து இருந்தால் இந்த அளவுக்கு பிரிவுகள் வந்து இருக்காது.
ஆனால் தௌஹீத், டீ.ஏ , ஜமாத்தே இஸ்லாமி போன்ற பிரிவுகள் வரக்காரணமாக இருப்பது தௌஹீத் பள்ளி என்று நான் நினைக்கிறேன்,

அவைகள் எல்லாரும் ஒன்று சேர்ந்து தான் சென்டர் என்ற ஒன்றை உருவாக்கினார்கள் பின்னர் ஜமாத்தே இஸ்லாமி, டீ .ஏ என்பவர்களை அவர்கள் விரட்டி விட்டார்கள். இப்பொழுது அவர்கள் வேறு பள்ளிகளை கட்டிக்கொள்ளும் திட்டத்தில் மும்முரமாக உள்ளனர்.

பார்க்கப்போன ஊரான் சொன்னது போன்று அன்று பெரிய பள்ளி செய்த தவறினை இப்பொழுது சென்டர் பள்ளியும் செய்துள்ளது புலப்படுகிறது.
how ever, what ever all are same. no one can escape from that historical mistakes.

ஊரான் said...

பெரிய பள்ளி சரியான தீர்வை எடுத்திருந்தால் நிச்சயம் எமதூரில் பல பள்ளிகள் உருவாகியிருக்காது. அந்த வகையில் வரலாற்றில் ஒரு கரை படிந்த இடத்தை அப்பள்ளிவாசல் பிடித்துக் கொண்டது. மேலும் மார்க்கத்தில் ஏனைய பிரிவுகள் வர சென்றர் காரணமாக இருந்ததென்பது மாபெறும் தவறு. தவ்ஹீத் பள்ளியில் யாருக்கும் அவரவர் விரும்பியபடி தொழலாம். ஆனால் ஏனைய பள்ளிகள் அப்படியில்லை. அவர்க்ள ஒரு சட்ட்த்தை வைத்துக்கொண்டு அதன்படி அமல் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். இயக்கங்கள் அப்பள்ளியை விட்டு பிரிந்து சென்றது மடத்தனம். இவ்வளவு ஆழமாகக் கொமென்ட் அடிக்கும் சகோதரருக்கு எமதூரின் வரலாறு நன்கு தெரியும் என்று நான் நினைக்கின்றேன். இன்று கூட தஃவாப் பள்ளியில் எந்த இய்கத்திற்கும் குர்ஆன் சுன்னாவிற்குட்பட்ட முறையில் நிகழ்ச்சிகளை நடாத்த எந்தத் தடையும் இல்லை.

Post a Comment