கஹட்டோவிட அல்பத்ரியாவிலிருந்து 3 மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கலகம் தெரிவு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயாதரப்பரீட்சைக்குத் கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்திலிருந்து கலைத்துறையில் 18 மாணவர்கள் தோற்றினர். இவர்களுல் 3 மாணவிகள் இம்முறையும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்டுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிறந்த பெறு பேறாக 2A, B பெறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. வழமை போன்று ஆண் மாணவாகள் எவரும் பல்கலைக்குத் தெரிவு செய்யப்படாமை மாணவர்களின் கல்வியின் மீதான நம்பிக்கையை குறைத்துள்ளதாக பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். எது எப்படியிருப்பினும் மாணவர்களை கல்வியின்பால் ஊக்கப்படுத்தவதற்கான ஒரு செயற்திட்டத்தை புத்திஜீவிகளும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் உருவாக்க முயற்சிப்பது காலத்தின் தேவையாகும்.
1 comments:
ஊரில் என்ன நடப்பதென்பதே இந்த வெப்சைட்டைப் பார்ப்பதன் மூலம்தான் அறிந்துகொள்ள முடிகிறது. உங்களு சேவைக்கு எமது வாழ்த்துக்கள். நீங்கள் கூறியதைப் போன்று நிச்சயமாக மாணவர்களது கல்வி விழ்ச்சிக்கான காரணங்களை கண்டரிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைளை மேற்கொள்வது எமது பாடசாலை மற்றும் SDS பொறுப்பாகும்.
Post a Comment