கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

J.R. ஜெயவர்தனவினால் இரட்டைப் பொறியியலாளர் பதவியும் பட்டமும் பறிக்கப்பட்ட கலாநிதி விக்கிரமபாகுவிற்கு கிடைக்கப்போகும் அதிஷ்டம்!

நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக கறுப்புக்கொடி உயர்த்திய காரணத்தால் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவினால் இரட்டைப் பொறியியலாளர் பதவியும் பட்டமும் பறிக்கப்பட்ட கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவிற்கு உரிய நட்ட ஈட்டினைப்பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சித்து வருவதாக டாக்டர் ராஜித்த சேனாரத்ன இன்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 19 ஆவது திருத்தச் சட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக இடதுசாரியான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன செயற்பட்டவர். அவர் இரட்டை பொறியியலாளராக பதவி வகிகத்தவராவார். அவர் நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிராக கண்டியில் கறுப்பு கொடி ஏற்றினார் என்பதற்காக அவரின் இரட்டை பொறியியலாளர் பதவி பறிக்கப்பட்டதுடன் பட்டங்களும் பறிக்கப்பட்டன. அவருக்கு இதுவரையில் அந்த பதவி வழங்கப்படவில்லை.
ஆகவே அவருக்கான நஷ்டஈட்டினை பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். அதன்படி தற்போது அதற்கு ஏற்ற ஆவணங்களை திரட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் 215 வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலம் மீது மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்துவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஒருமணிநேரம் ஒத்திவைக்கப்பட்டு கட்சித்தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.

அதன் பின்னர் அவை, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் மாலை 18.58க்கு கூடியது.  பின்னர், பெயர் கூப்பிட்டு வாக்கெடுக்கப்பு நடத்தப்பட்டது. அதில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 215 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.


எதிராக ஒருவரும் , ஏழு பேர் சமூகமளிக்காமலும் , ஒருவர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளாமலும் இந்த வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது.
இன்றைய வாக்கெடுப்பின் போது ஜானக பண்டார, ஜகத் பாலசூரிய, எல்லாவல மேதானந்த தேரர், கெஹலிய ரம்புக்வெல்ல, பசில் ராஜபக்‌ஷ, விநாயகமூர்த்தி, பிரேமலால் ஜயசேகர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.

இதேவளை டொக்டர். சரத் வீரசேகர 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தார். பாராளுமன்ற உறப்பினர் அஜித் குமார வாக்களிக்கவில்லை.

தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் தாண்டி நேற்றைய தினம் 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் பாராளுமன்றில் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம்.

அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர்ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கின்றார். நடந்தது என்ன? அந்த மருத்துவரே விவரிக்கின்றார்.

பிரசவ வேதனையில் இருந்த அவரிடம், "எனது பணி நேரம் முடிந்து விட்டது. அடுத்து வருகின்ற ஆண் மருத்துவர் உங்கள் பிரசவத்தைப் பார்ப்பார்' என்று நான் சொன்னதும் அந்தப் பெண் அழவும் அலறவும் ஆரம்பித்து விட்டார். "ஆண் மருத்துவரா எனக்குப் பிரசவம் பார்க்கப் போகின்றார்? வேண்டாம். ஆண் மருத்துவர் வேண்டவே வேண்டாம்' என்ற கதறல் அவரிடமிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
அந்தப் பெண்ணின் இந்த விவகாரம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது ஒரு புரியாத புதிராக எனக்குப் பட்டது.
"இத்தனை ஆண்டு காலமாக எனது மனைவியை, தனது வாழ்நாளில் தன்னுடைய தகப்பனார், தன் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள், ஒன்று விட்ட சகோதர, சகோதரிகள், சிறிய, பெரிய தந்தையர் போன்றோர் தவிர வேறு எந்த அந்நிய ஆடவரும் பார்த்தது கிடையாது' என்று அப்பெண்ணின் கணவர் விளக்கம் சொன்னார். மிகக் கடுமையான ஆச்சரியத்தில் நான் சிரித்தேன்.
"என் முகத்தைப் பார்க்காத ஓர் ஆடவர் உண்டா?' என்று என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.
அவ்விருவரின் கோரிக்கையை என்னால் புறக்கணிக்க முடியவில்லை. அதனால் அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்தேன்; இணங்கினேன்.
குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற அவருக்கு ஆறுதல் அளிப்பதற்கு, அமைதியளிப்பதற்கு இரண்டாம் நாள் அவரிடம் வந்தேன்.
"பிரசவத்திற்குப் பின்னால் பெண்களுக்கு நாற்பது நாட்கள் அளவுக்கு இரத்தப்போக்கு இருக்கும். அமெரிக்க தம்பதியர்கள் இக்கால கட்டத்தில் காக்க வேண்டிய தடை, தடுப்புகளைத் தகர்த்தெறிந்து விட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி விடுகின்றனர்.
எனவே குறைந்தபட்சம் 40 நாட்களுக்கு தம்பதியர் பத்தியம் காக்க வேண்டும். உடலுறவுக்கு விடை கொடுத்து விடவேண்டும். இந்த 40 நாட்களுக்கு இடையே பாதுகாப்பான உணவு சாப்பிட வேண்டும். பாரமான, பளுவான பணிகள் எதையும் செய்யாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தொடர்ந்து நடைபெற்று வரும் நிரூபிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் தான் இதைத் தெரிவிக்கிறேன்'' என்று அந்தப் பெண்ணிடம் தெரிவித்தேன்.
அந்த அரபியப் பெண் ஆசுவாசமாக, அமைதியாக, எவ்வித பரபரப்புமின்றி, "பிரசவமான பெண்ணின் இரத்தம் நிற்கின்ற வரையில் தாம்பத்தியத்திற்கு இஸ்லாம் தடை விதித்திருக்கின்றது'' என்று தெரிவித்தார்.
"அத்துடன் மட்டுமல்லாமல் இக்கால கட்டத்தில் தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களையும் இத்தகைய பெண்களுக்கு இஸ்லாம் ரத்து செய்துவிடுகின்றது'' என்று அவர் தெரிவித்தது தான் தாமதம்! அவரது இந்த யதார்த்தமான பதில் என்னுள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நீண்ட, நெடிய ஆய்வுக்கூட அறிஞர்களின் ஆய்வை இஸ்லாம் தன் வாழ்க்கை நெறியில் சர்வ சாதாரணமாக இழையோடச் செய்திருக்கின்றது என்று எண்ணி பிரமித்துப் போய்விட்டேன்.
இந்த நேரத்தில் குழந்தைகள் நல பெண் மருத்துவர் வருகை தந்தார். குழந்தை நலன் தொடர்பான மருத்துவ அறிவுரைகளை மணிக்கணக்காக விவரிக்க ஆரம்பித்தார்.
"குழந்தைகளை அதன் வலது பக்கமாக உறங்க வைக்க வேண்டும். இதன் மூலம் அதனுடைய இதயத் துடிப்புகள் சீராக அடிக்கின்றன, அமைகின்றன'' என்று சொன்னதும் குழந்தையின் தகப்பனார், "நல்ல காரியங்கள் அனைத்திலும் வலது பக்கம் தான் என்று நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி வலது பக்கமாகவே நாங்கள் உறங்க வைக்கின்றோம்'' என்று சொன்னதும் மீண்டும் என்னுடைய உடலில் நாடி நரம்புகளில் அதிகமான அதிர்வலைகளைப் பாய்ச்சியது.
அவ்வளவு தான். மருத்துவமனைக்கு ஒரு மாதம் விடுப்பு போட்டேன். அருகில் உள்ள நகரத்தில் அமைந்திருக்கும் ஓர் இஸ்லாமிய மையத்திற்குச் சென்று விடை தேடினேன். ஏற்கனவே இருந்த மார்க்கத்திலிருந்து விடுதலையானேன். என்னை நான் இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டேன்.

நன்றி: அல்ஆலமுல் இஸ்லாம், அரபி வார இதழ்...

காத்தான்குடி உருவச் சிலைகள் பின்நாளில் “வணங்கு’ பொருளாகும்: கோவை எஸ். ஐயூப்"

இறைவனுக்கு இணை வைக்கும் சிலை வணக்கத்தில் ஈடுபடுவதற்கான ஆரம்ப நடவடிக்கைதான் உருவச்சிலைகளை நினைவுச் சின்னங்களாக வைப்பதாகும். இவ்வாறுதான் உலகில் சிலை வணக்க வழிபாடு தோன்றியது என அல்குர்ஆனும் எடுத்தியம்புகின்றது. எனவே காத்தான்குடியிலும் இன்று நினைவுச் சின்னங்களாக வைக்கப்பட்டுள்ள உருவச்சலைகள் பின்னொரு காலத்தில் வணங்கப்படத்தக்கதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினரும் இங்கு வைக்கப்பட்டுள்ள உருவச்சிலைகள் தொடர்பாக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் என தமிழகத்தின் பிரபல மார்க்க அறிஞரான கோவை எஸ். ஐயூப் தெரிவித்தார்.

காத்தான்குடி 6ம் குறிச்சி மார்க்கட் வீதியில் நேற்றிரவு (26.04.2015) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பிரச்சாரக்கூட்டமொன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:
அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் என்பது மிகப்பெரும் அநீதியும், கொடிய பாவச் செயலுமாகும். அந்த இணை வைத்தலில் மிகக் கொடியது சிலை வணக்கமாகும். இஸ்லாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிலை வணக்கத்தையோ, சிலைகளை நினைவுச் சின்னங்களாக வைத்துக் கொள்வதையோ ஆதரிக்கவில்லை. உருவச்சிலைகளை இறைதூதர் முகம்மத் (ஸல்) அவர்களே உடைத்தழித்து இஸ்லாம் எனும் ஏகத்துவ மார்க்கத்தை நிலைப்படுத்தியுள்ளார்கள்.

உலகில் சிலை வணக்கம் உருவானது நபி நூஹ் (அலை) அவர்களின் காலத்திலேயாகும். அக்காலத்தில் அல்லாஹ்வை வணங்கி வாழ்ந்து வந்த ஐந்து நல்ல மனிதர்கள் இறந்த பின்னர், அவர்களை நினைவுபடுத்துவதற்காக அவர்களுடைய உருவச்சிலைகளைச் செய்து வீடுகளில் வைத்துக் கொண்டு நினைவுபடுத்துமாறு சாத்தான் கூறியதற்கிணங்க, அந்த மக்கள் முதன் முதலாக அவர்களின் உருவச் சிலைகளைச் செய்து தமது வீடுகளில் வைத்துக் கொண்டு தமது முன்னோர்களை நினைவுபடுத்தி வந்தனர்.

சில காலத்தின் பின்னர் வீடுகளில் இருந்த அந்தச் சிலைகளை அவர்களின் இறையில்லங்களில் வைத்தால்தான் அங்கு வருகின்ற பல நாட்டவர்களும் அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வழி பிறக்கும் என மீண்டும் சாத்தான் வேதமோதியதற்கமைய, அந்தச் சிலைகள் அவர்களின் வணக்கத்தலங்களுக்கு எடுத்து வரப்பட்டு ஒரு பக்கமாக வைக்கப்பட்டன. அந்த மக்கள் அவற்றை அப்போது வணங்கி வழிபடவில்லை. ஏக இறைவனாகிய அழ்ழாஹ்வையே அவர்கள் வணங்கி வழிபட்டு வந்தனர். இந்தச் சிலைகளை மரியாதையுடன் நினைவு கூர்ந்தனர் அவர்களின் நல்ல செயற்பாடுகளை பலரிடமும் எடுத்துக்கூறினர்.

இவ்வாறு வாழ்ந்த அந்த மக்கள் சமூகம் மரணித்த பின்னர் அவர்களின் சந்ததியினர் அச்சிலைகளை மிகவும் கண்ணியப்படுத்தி வந்தனர். இந்த கண்ணியம் பின்னர் படிப்படியாக அச்சிலைகளை வணங்கவும், அவற்றிடம் உதவிகள் தேடிப் பிரார்த்திக்கவும் வழிவகுத்தது. இவ்வாறுதான் உலகில் சிலை வணக்கம் எனும் மிகக் கொடிய இணை வைப்பு ஏற்பட்டது.

இன்று எமது முன்னோர்களின் சிலைகளை வணங்குவதற்காக நாம் வைக்கவில்லை, அவர்களை நினைவுபடுத்துவதற்காகத்தான் நாம் வைத்திருக்கின்றோம் என்று கூறிக் கொண்டாலும், காலப்போக்கில் எமது சந்ததியினரால் இச்சிலைகளுக்கு மதிப்பும், மரியாதையும், கண்ணியமும், கௌரவமும் வழங்கப்பட்டு அவற்றை வணங்கி வழிபட்டு, அவற்றிடம் உதவிகோரிப் பிரார்த்திக்கும் நிலைமை நிச்சயம் ஏற்படும் என்பதற்கு அல்குர்ஆனே நமது முன்னோர்களின் வரலாற்றை எடுத்துச் சொல்லி அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றது.

உலகத்தில் மூன்றாவது நபியாக அனுப்பப்பட்ட நூஹ் நபி அவர்களின் காலத்தில் உருவாக்கப்பட்ட, அல்குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட இந்த ஐந்து நல்ல மனிதர்களின் உருவச் சிலைகளும் காலங்காலமாகக் கடத்தப்பட்டு வந்து எம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் புனித கஃபா எனும் இறை ஆலயத்திலும் அவை கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தன. இந்த ஐந்து சிலைகளையும் மக்காவில் வாழ்ந்த ஐந்து கோத்திரத்தார் தினமும் வணங்கி வழிபட்டு, அவற்றிடம் தமது தேவைகளை முன்வைத்து நேர்ச்சைகள் செய்து, அவற்றுக்கு மிருகங்களைப் பலியிட்டு வந்துள்ளனர் என்பதையும் அல்குர்ஆன் எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றது.

மக்கா வெற்றியின் பின் புனித கஃபா ஆலயத்திற்குள் நபியவர்களும், தோழர்களும் பிரவேசித்தபோது அங்கே நூற்றுக்கணக்கான உருவச் சிலைகள் இருந்தன. அவற்றுள் இறைத்தூதர்களான இப்ராஹீம், இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் சிலைகளும் இருந்தன. அவற்றை நாம் வணங்கவில்லை, நினைவுபடுத்தவே வைத்திருக்கிறோம் என்று மக்காவாசிகள் கூறிய போதிலும் நபியவர்கள் அவற்றையும் உடைத்தழித்த வரலாற்றை நாம் மறந்துவிட முடியாது.

இணைவைப்பு என்பது இன்று எத்தனையோ வடிவங்களில் நம்மிடையே நிகழ்ந்து கொண்டிருந்தாலும் அவையனைத்திலும் மிகக் கொடியது சிலை வணக்கமாகும். சிலை வணக்கத்திற்கான அத்திவாரம்தான் எமது முன்னோர்களான நல்ல மனிதர்களுக்கு நாம் சிலைகள் உருவாக்கி அவற்றை நினைவுச்சின்னங்களாக வைத்துக் கொள்வதாகும். இதனை இஸ்லாம் முற்றாக வெறுக்கின்றது. தடைசெய்துள்ளது எனத் தெரிவித்தார்.

– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் – காத்தான்குடி

நேபாள நில நடுக்கம்: மெய்சிலிர்க்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகின

நேபாளத்தில் இடம்பெற்ற நில நடுக்கத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இக்காட்சிகள் அமைந்துள்ள.

நேபாளத்தில் நேற்று 7.9 ரிக்டர் அளவுகொண்ட பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் காத்மண்டு தொடங்கி போக்ரா, லோம்ஜங், கீர்த்தி நகர் என அந்த நாடு முழுவதும் பரவியது. இதில்  பலியானவர்கள் எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.












நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவில் 7.5 ஆக இது பதிவாகியுள்ளது. 

இந்தியாவின் டில்லி, பீகார், மேற்குவங்கம், தமிழகம் , உத்தரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நில அதிர்வும், நடுக்கமும் உணரப்பட்டுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் வீழ்ந்துள்ளதாகவும் பலர் காயமுற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 

இன்று காலை நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 80 கி.மீ., தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.









இந்திய அரசியலில் முஸ்லிம்களின் வரலாறு திரும்புகிறது :

இந்திய அரசியலில் முஸ்லிம்களின் வரலாறு திரும்புகிறது : அவுரங்காபாத் தேர்தல் - காங்கிரஸை பின்னுக்கு தள்ளி மராத்திய மண்ணில் மஜ்லீஸ் கட்சி முத்திரை....!!
மராத்தியர்களின் மாநிலமான மகாராஷ்டிரா அவுரங்காபாத்தில் நடைபெற்ற முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் சிவசேனா பாஜக கூட்டணிக்கும் அடுத்த இடத்தில் தனித்து நின்ற மஜ்லீஸ் கட்சி முத்திரை பதித்துள்ளது.
மொத்த இடங்கள் : 113
சிவசேனா + பிஜேபி = 57
மஜ்லீஸ் கட்சி = 23
காங்கிரஸ் = 10
என்.சி.பி = 3
சுயோட்சைகள் = 19
இந்தியாவை ஆளும் தேசிய கட்சியான பாஜகவும், மராத்திய மாநில கட்சியான சிவசேனாவும் இணைந்து பெற்ற 57 தொகுதிகளை மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக கால் பதித்த அசத்துத்தின் உவைஸி அவர்களின் மஜ்லீஸ் கட்சி 23 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸை பின்னுக்கு தள்ளி இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது இந்திய அரசியலில் முஸ்லிம்களின் வரலாற்றை திரும்ப செய்கிறது.
இறைவனுக்கே புகழ் அனைத்தும்....
நன்றி : சேலம் ஹுசைன் & செங்கிஸ்கான்

தெரிந்து கொள்வோம் ( 2G, E , 3G , H ,H+, 4G......... பற்றிய சில தகவல்கள்)

தெரிந்து கொள்வோம்
நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன்
2G, E , 3G , H ,H+
Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.

➖➖➖➖➖
1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.
இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும்.
இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம்.
இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.
➖➖➖➖➖
2). "E" இதுவும் 2G(2.5G)
EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும்.
2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது.
இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப 89மணி நேரமும் ஆகும்.
இந்த "E" பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
➖➖➖➖➖
3). "3G" இது 3G மொபைல் இன்டர்நெட்
UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 6மணி நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 18மணி நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
4. Symbol "H" இது 3G மொபைல் இன்டர்நெட்
HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.
இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்
இதன் மூலம் நாம் 1GB dataவை 25நிமிட நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 45நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
5). "H+" இதுவும் 3G மொபைல் இன்டர்நெட்
(Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 5-20நிமிடங்களில் டவுன்லோடும்,
1GB dataவை 15-39 நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
6). "4G" இச்சேவை 4G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது.
இதன் வேகம் மிகவும் அதிகம்.
இதை இயங்க அவசியம் 4G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 3நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம்.
அதே 1GB dataவை அனுப்ப 5நிமிடம் மட்டுமே போதும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு முழுவமும் இச்சேவை வரும் என எதிர்பார்க்க படுகிறது.
அன்புடன்... பத்மநாபன்