தைவானில் 58 பயணிகளுடன் சென்ற விமானம் ஆற்றுக்குள் விழுந்தது 2 பேர் பலி (plane crash video)
தைவான் நாட்டில் 58 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள் சிக்கியது.
தைவான் தலைநகர் தைபே நகரில் இருந்து காலை கின்மெனுக்கு டிரான்ஸ் ஏசியா ATR 72-600 டர்போப்ராப் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தைபே நகருக்கு வெளியே பாலம் ஒன்றில் மோதியது .பின்னர், கீலங் ஆற்றுக்குள் விழுந்தது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் விமானத்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் இருந்த பலர் காயம் அடைந்து இருந்தனர் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து விமானத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம்ஏர் ஏசியா விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியது இதில் 48 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment