அனைத்து பைல்களையும் தூசு தட்டி எடுத்துள்ளேன்; கட்டாயம் நடவடிக்கை என்கிறார் தில்ருக்சி
ஜனாதிபதியினால் புதிதாக நியமிக்கப்பட்ட இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம். திருமதி தில்ருக்சி விக்கிரமசிங்கவின் முதலாவது செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு7 இல் உள்ள இலஞ்ச ஆனைக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இதுவரை கடந்த ஆட்சியில் இருந்த 61 அரசியல்வதிகளுக்கு எதிராக ஆதாரபூர்வமான முறைப்பாடுகள் இலஞ்ச ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
இதில் 521 முறைப்பாடுகள் இந்த ஜனவரி மாதத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், துறைமுக அதிகார சபையின் தலைவர், முன்னாள் பொருளாதார அமைச்சர், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, முன்னாள் இலங்கை மத்திய வங்கியின் தலைவர் போன்ற 61 அரசியல்வாதிகளும் இதில் அடங்குகின்றனர்.
எனது அறைக்குள் 1600 பைல்கள் மறைக்கப்பட்டு ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. அதனையும் தூசு தட்டி விசாரணைக்கு மீள எடுத்துள்ளேன். அத்துடன் 423 முறைப்பாடுகள் முழுதாக விசாரணைக்கும் உட்படுத்தியுள்ளேன். இருந்தும் இந்த விடயத்திற்காக தனியானதொரு நீதிமன்றமும், விசாரணைப் பொலிஸ்பிரிவும் அமைப்பதற்கு சட்டத்தில் சீர்திருந்தம் வேண்டும் எனவும் திருமதி விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நான் கடமையை பாரமெடுத்து 2 கிழமையாகின்றது. எனது அலுவலகத்தில் மேலதிக ஊழியர்கள் தேவையாக உள்ளது. ஏற்கனவே சேவையில் உள்ளவர்களுக்கு ஒருபோதும் 2 மாதங்களுக்கு எந்த வித லீவுகளும் வழங்கப்படமாட்டாது. இந்த நாட்டில் ஏதாவது இலஞ்ச,ஊழல் நடைபெறுமிடத்து எனது தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொல்ல முடியும்.
சோனகா் இணையம்
0 comments:
Post a Comment