சீன முஸ்லிம் பெண் கஹ்பத்துல்லாவிற்கு வெளியே தற்கொலை செய்த சம்பவம்.
சீனாவில் இருந்து உம்ரா செய்வதர்காக வந்த ஒரு பெண் மக்காவின் கஹ்பத்துல்லாவிற்கு வெளியே (ஹரமுக்கு உள்ளே) தற்கொலை செய்திருப்பது மக்காவில் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. |
தவாபுக்குரிய மேல் தட்டில் இருந்து அந்த 30 வயது மதிக்க தக்க பெண் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்
உடனடியாக அந்த பெண்ணின் உடலை கைபற்றி மருத்துவமனை அனுப்பி வைத்த ஹரமின் காவலர்கள் இது பற்றி பின்வருமாறு கூறியுள்ளனர்
அந்த பெண் தற்கொலை செய்த கொண்டதர்கு உரிய உண்மையான காரணத்தை இன்னும் அறிய முடியவில்லை
ஆயினும் இந்தியா சீன பங்களாதேஷ் பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் வாழும் மார்க்க அறிவில்லாத மக்களிடம் மக்காவில் சென்று மரணித்தால் அது மிகபெரிய புண்ணியத்திர்கு உரிய செயலாகும் என்றோரு நம்பிக்கை இருப்பதாக அறிய முடிகிறது இந்த மூட நம்பிக்கையின் அடிப்படையில் இந்த தர்கொலை செய்திருக்கலாம் என எண்ணுவதாக மக்காவின் காவல் துறையினர் கூறி உள்ளனர்
புண்ணியம் என்று நினைத்து கொண்டு தற்கொலை என்னும் மாபாதக செயலை செய்வது மிக மிக வருந்ததக்க செயலாகும்
இது போன்ற அறியாமையில் இருந்து முஸ்லிம்களை மீட்டு எடுப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீது் கடமையாகும்
கஹ்பத்துல்லாவின் வரலாற்றில் முதல் முறையாக நடந்திருக்கும் இந்த நிகழ்வே இறுதி நிகழ்வாகவும் இருக்க வேண்டும் அதர்காக நாம்பிரார்திப்பதோடு அறியாமையில் இருக்கம் மக்களை மீட்டு எடப்பதர்கும் உரிய முயர்ச்சிகளை மேர் கொள்ள வேண்டும்
தகவல் :உண்மை தமிழன்
0 comments:
Post a Comment