இன்றைய சுதந்திர தின நிகழ்வில் சாதாரணமாக Mr. Maithripala Sirisena என அழைக்கப்பட்ட ஜனாதிபதி
தன்னை “அதிமேதகு” (His excellency) என அழைப்பதை நிறுத்திக்கொள்ளும்படி ஜனாதிபதி மைத்ரிபால கடந்த வார இறுதியில் அறிவுறுத்தியதற்கேற்ப இன்றைய சுதந்திர தின நிகழ்வில் முதற்தடவையாக இலங்கை ஜனாதிபதியொருவர் திரு.மைத்ரிபால என சாதாரணமாக அழைக்கப்பட்டமையைக் காணக்கூடியதாக இருந்தது.
தன்னை அடைமொழிகள் கொண்டு அழைப்பதை விடுத்து சாதாரணமாக திரு. மைத்ரிபால சிறிசேன என்றும் தனது மனைவியை முதற்பெண்மணி என்று அழைக்காது திருமதி. மைத்ரிபால சிறிசேன என்றும் அழைத்தால் போதுமானது என கடந்த வார இறுதியில் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் வைத்து தெரிவித்த ஜனாதிபதி அதனை உத்தரவாகக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார்.
இன்றைய சுதந்திர தின உரையை நிகழ்த்தும் போது சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்களை நினைவு கூர்ந்த ஜனாதிபதி டி.பி. ஜாயா போன்ற முஸ்லிம் தலைவர்களின் பங்களிப்பையும் போற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Sonakar
0 comments:
Post a Comment