எனது வாழ்க்கையில் கண்ணீர் வடித்துள்ளேன், மீண்டும் நினைக்கையில் வேதனையே அதிகம் - ஜனாதிபதி மைத்திரி
நாட்டின் மிகவும் ஊழல் நிறைந்ததாகக் காணப்பட்ட சுகாதார அமைச்சானது புதிய மருந்துப் பொருட்கள் சட்டத்தின் அமுலாக்கத்தோடு தூய்மை பெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சுகாதார அமைச்சு இந்தளவு ஊழல்கள் நிறைந்ததாக மாறியமைக்குக் காரணம் ஒரு வருடத்தில் 21,000 ற்கு மேற்பட்ட டென்டர்கள் அங்கு நடைமுறைப்படுத்தப்படுவதே எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய மருந்துப் பொருள் சட்டம் மூலம் இதற்குத் தீர்வுகிட்டும் என்றும் தெரிவித்தார்.
மருத்துவ தாதியர்களுடனான சந்திப்பொன்று மஹரகம இளைஞர் சேவை மன்ற மண்டபத்தில் நடைபெற்றபோது நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற் றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
சுதந்திர மருத்துவ சேவையைப் பலப்படுத்தி பொது மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த சுகாதார சேவையைப் பெற்றுக்கொடுப்பதற்கும், இத்துறையை முறையாக முன்னெடுப் பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கை களையும் அரசாங்கம் உச்ச அளவில் மேற்கொள்ளும்.
மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையைப் பெற்றுக்கொடுப்பதற்கு துறைசார்ந்த சகலரும் தமது பொறுப்புக்களையும் கடமையையும் சரியாக இனங்கண்டு செயற்படுவதும் முக்கியமாகும்.கடந்த காலங்களில் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்காக சுகாதார அமைச்சர் என்ற வகையில் நான் மேற்கொண்ட செயற்திட்டங்களில் சில வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதுடன் மேலும் சில செயற்பாடுகள் தோல்வியடைந்தன. இதற்குக் காரணம் அமைச்சராகிய நான் அல்ல.
இது எனது குறைபாடும் அல்ல, எனக்கான ஒத்துழைப்பு உயர் மட்டத் திலிருந்து கிடைக்கவில்லை என்பதே. சுகாதார அமைச்சரான ராஜித சேனாரத்னவுக்கு அவர் சுதந்திரமாக செயற்பட முழுமையான சுதந்திரம் வழங்கப்படும். அதேபோன்று பிரதமர் மற்றும் அமைச்சரவையும் சுதந்திரமாக செயற்பட முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டு ள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமைச்சர்களுக்கோ அமைச்சரவைக்கோ அல்லது பிரதமருக்கோ இத்தகைய சுதந்திரம் வழங்கப்படவில்லை என்பதை நான் குறிப்பாகச் சுட்டிக்காட்ட விரும்பு கிறேன்.
சுகாதார அமைச்சிலும் சுகாதார சேவையிலும் பணிபுரிந்த அதிகாரிகள் விடியற்காலையில் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று முகஸ்துதி பாடிவிட்டே கடமைக்குச் சமுகமளிப்பர். இவர்கள் இரண்டு தினங்களுக்கு ஒருமுறையாவது இவ்வாது ஜனாதி பதியைச் சந்திப்பர். இதன்போது கோல் மூட்டல்கள் மற்றும் அமைச்சர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளைத் தடை செய்யும் செயற்பாடுகளுமே இடம்பெற்றன.
அரச ஆஸ்பத்திரிகளில் வெளிநோயாளர் பிரிவை இரவு 8.00 மணிவரை திறப் பதற்கு நான் பெரும் முயற்சி எடுத்தேன். அதனை நான் செயற்படுத்துவதை விரும்பாதவர்கள் நான் வெளிநாடு சென்ற பின்னர் அவசரம் அவசரமாக முடிவெடுத்து அதனை ஜனாதிபதிக்குக் கூறி சம்பந்தப்பட்ட அறிவிப்பை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவித்தார். மறுநாள் ஊடகங்களில் அவை தலைப்புச் செய்திகளாக வெளிவந்தன. இத்தகைய நடவடிக்கைகளே அப்போது இடம்பெற்றன.
எனது அரசியல் வாழ்க்கையில் நான் கண்ணீர் வடிந்து கவலைப்பட்ட சந்தர்ப்பம் தான் மருந்துப் பொருட்கள் சட்டம் மற்றும் சிகரட் பெக்கட்டுகளில் விளம்பரங்களை காட்சிப்ப டுத்துவதில் மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்கள். 2012 டிசம்பரில் சம்பந்தப்பட்ட சட்டம் தயாரிக்கப்பட்டு 2013 ஜனவரியில் அமைச்சரவை அங்கீகாரத்துக்கு விடப்படவிருந்த நிலையில் அந்த ஆவணங்கள் காணாமற்போயின. இதன் உண்மை நிலை பின்னர் சில மருந்து நிறுவனங்கள் வாயிலாக எனக்குத் தெரிய வந்தது. இத்தகைய விடயங்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதால் வேதனையே அதிகமாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
Jaffnamuslim
0 comments:
Post a Comment