கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பசிலை கண்டித்தாரா மஹிந்த..?

அமைச்சர் பசில் ராஜபக்சவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் நால்வர் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் பசிலை தனது கண்காணிப்பு வலயத்தின் கீழ் கொண்டுவந்துள்ளார்.
சிறிலங்கா சுதந்தரக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார,ஊடக அமைச்சின் செயலாளர் சரித்த கெரத், தம்மிக்க திசநாயக்க மற்றும் ஜகத் வெல்லவத்த ஆகியோரின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்கத்தின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொள்ளாமல், மக்கள் மத்தியில் அதற்கான ஆதரவை அதிகரிக்க முயலாமல் குறிப்பிட்ட குழு பசில் ஊடாக அடுத்த தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்கின்றது,என அவர்கள் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதி தோற்பதையும்,அதன் பின்னர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக பசில் வருவதையுமே குறிப்பிட்ட குழு விரும்புவதாகவும் சிறிலங்கா சுதந்தரக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை ஆராய்ந்த பின்னர் தான் நாட்டில் இல்லாத வேளை குறிப்பிட்ட குழுவால் கொழும்பு 7 இல் திறக்கப்பட்ட தேர்தல் தலைமை அலுவலகத்தை அலரி மாளிகைக்கு மாற்றுவதற்க்கு உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கான இணைத்தலைவராக பசிலுடன் சேர்ந்து செயற்படுவதற்கு நாமல் ராஜபக்சவை நியமித்துள்ளார்.

இதேவேளை தேர்தல் ஜனவரி 7 ம் திகதி நிச்சயமாக நடைபெறும் என ராய்ட்டரிற்க்கு தெரிவித்ததற்காக பசிலை ஜனாதிபதி கண்டித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இறுதி முடிவை எடுப்பது தானே என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

jaffnamuslim

இனி உங்கள் கணணியை WiFi ஆக பாவியுங்கள்

wi-fi
  1. ஆரம்பமாக Start க்கு செல்லுங்கள்.Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-1
  2. பின்பு அதில் Search Bar இல் cmd என Type செய்யுங்கள். பின்பு cmd என்ற File ஐ Right Click செய்து Run as Administrator என்பதை அழுத்துங்கள்.Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-2
  3. பின்பு வரக்கூடிய Dialoge Box இல் உள்ள Yes என்பதை Click பண்ணுங்கள்.Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-3
  4. வரக்கூடிய Command Prompt இல் netsh wlan show drivers என Type செய்து Enter பண்ணுங்கள். பிறகு பின்வருமாறு தோன்றும். அதில் Hosted network supported : என்பது YES என இருக்கின்றதா என உறுதி செய்யுங்கள்.Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-4
  5. அடுத்ததாக நீங்கள் கீழே netsh wlan set hostednetwork mode=allow ssid=Hotspotnamekey=password என Type செய்து Enter பண்ணுங்கள். (Hotspotname என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுக்கலாம்.) இப்பொழுது WiFi உருவாக்கப்பட்டுவிட்டது. எங்கிலும் அது Offline இல் தான் உள்ளது.Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-5
  6. நீங்கள் WiFi ஐ Start பண்ண netsh wlan start hostednetwork என Type செய்து Enter பண்ணுங்கள். இனி உமது WiFi ஏனைய Mobile களிலோ அல்லது Computer களிலோ காட்டும்.Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-6
  7. அதை நிறுத்த netsh wlan stop hostednetwork என Type செய்து Enter பண்ணுங்கள்.670px-Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-7
  8. WiFi இன் விபரங்களை அறிய netsh wlan show hostednetwork என Type செய்து Enter பண்ணுங்கள்.Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-8
techislam web

சன்னாவில் Houthi Militia-விற்கு எதிராக அல்-காயிதாவின் சிலீப்பர் செல்கள்...!!

நேற்றைய தினம் யெமனின் தலைநகர் சன்னாவின் isytisyhadiyah எனும் பகுதியில் நடைபெற்ற குண்டு தாக்குதலில் 45 பேர் பலியாகியுள்ளனர். இதில் பெருமளவிலானவர்கள் Houthi  இராணுவத்தினர். மற்றையவர்கள் அவர்களுடன் இணைந்து இயங்கிய ஏனைய ஷியா குழுக்கள். இன்னும் இரு தாக்குதல்கள் கிழக்கு மாகாணமான Hadramout-ல் அமைந்துள்ள இரண்டு இராணுவ தளங்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. இதனை செய்தவர்கள் யெமனில் இயங்கும் அல்-காயிதாவின் அராபிய தீபகற்பத்திற்கான அமைப்பின் (AQAP) போராளிகள். 

முதலாவது  தாக்குதலானது சன்னாவின் மத்தியில் அமைந்துள்ள Tahrir Square-ல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த இடம் ஷியாக்களின் பூரண கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. குண்டு வெடித்ததன் பின்னர் அங்கு 20 வெற்றுடலங்கள் சிதைந்த நிலையிலும், எரிந்த நிலையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உடலில் வெடிகுண்டுகளை இணைத்து வந்து ஒரு நபர் ஹுதி ஷியா இராணுவ தலைவர்கள் கூடியிருந்த இடத்தின் அருகில் வைத்து டெடனேட் செய்ததனால் பல ஹுதி மிலீஷியாக்கள் ஸ்தலத்தில் இறந்துள்ளனர். ஒரு இராணுவ ஆலோசனை கூட்டத்திற்காக வருகை தந்திருந்த அதிகாரிகளே இதில் பலியாகியுள்ளனர். 


Hadramout இராணுவ சோதனைச்சாவடியில் அடுத்த குண்டு வெடித்தது. இங்கேயும் ஒரு மனித வெடிகுண்டுத் தாக்குதலே நிகழ்த்தப்பட்டுள்ளது. குண்டு வெடித்த சில நிமிடங்களில் அங்கு இறந்த நிலையில் 10 Houthi ஷியாக்களின் உடல்கள் இனங்காணப்பட்டுள்ளன. 

இந்த தாக்குதல்களை Houthi ஷியா இராணுவ தலைமை எதிர்பார்க்கவில்லை. அபூஜாவில் வைத்து அல்-காயிதாவின் கதையை முடிக்கவே அவர்கள் தயாராகி வந்தனர். அதற்குள் முந்திக்கொண்டுள்ளது அல்-காயிதா. ஸன்னாவின் சிலீப்பர் செல்கள் இயங்க ஆரம்பித்துள்ளன. தன்டரிங், லைட்டினிங் என கிடைக்கும் சந்தர்ப்பங்களிற்கு வாகான தாக்குதல்களை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு முன்னரும் கடந்த இரு வாரங்களாக உபரியான பல லைட்னிங்களை Houthi மிலீஷியாக்கள் எதிர்கொண்டு வந்திருந்தன. அதில் அவர்கள் கணிசமான இழப்புக்களையும் கண்டிருந்தனர். 

யெமனில் உள்ள சுன்னி முஸ்லிம்களிற்கு வேறு எந்த ஒப்சனும் இல்லை. Houthi ஷியாக்களின் தாக்குதல்களை ஆயுதங்கள் மூலம் எதிர்கொண்டு தங்களை தற்காப்பதை தவிர. இந்நிலையில் அவர்களிற்காக இராணுவ உதவிகளை வழங்க எந்த அரபு தேசங்களும் தயார் இல்லை. காஸாவை இஸ்ரேல் தாக்கியழித்த போது எப்படி இந்த அரபு தேசங்கள் மௌனம் காத்தனவோ அது போலவே இப்போதும் சன்னாவின் அஹ்லுல் சுன்னாவை பின் பற்றும் முஸ்லிம்களை ஷியாக்கள் கொல்லும் போதும் மௌனர் காக்கின்றனர். இந்நிலையில் இவர்களிற்கு உதவியாக களம் இறங்கியுள்ளது A.Q.A.P.யாகும்.


திடீரென எழுச்சிபெற்ற Houthi யெமனின் ஷியா படையணியினர் சடுதியாக தலைநகர் சன்னாவை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இவர்களின் இந்த இராணுவ நகர்வை மேற்கு நாடுகள் தடுக்கவும் இல்லை கண்டிக்கவும் இல்லை. அரபு நாடுகள் யெமனிய அரசிற்கு உதவ தங்கள் படைகளை அனுப்பவும் இல்லை. முஸ்லிம் தேசங்களின் தலைமையை எடுக்க துடிக்கும் துருக்கி தேசமும் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் ஈராக்கில் ஐ.எஸ். போராளிகள் அன்பாரை கைப்பற்றிய போது அவர்களை அழிக்க ஒரு நேர்கோட்டினுள் எல்லா தேசங்களும் அணிவகுத்தன. இது தான் சர்வதேச அரசியல் ஒழுங்கு. 
YEMEN-UNREST-BLAST : News Photo
யெமனின் தலைநகரினுள் புகுந்த Houthi மிலீஷியாக்கள், முதலில் செய்த வேலை என்ன தெரியுமா?. சுன்னி உலமாக்களை வேட்டையாடியது. அவர்களது நூல்களை பற்ற வைத்தது. அவர்களின் சொத்துக்களையும் சுகங்களையும் சூறையாடியது. வேற்று நாட்டு ஷியா தலைமைகளினாலும், அதன் உளவமைப்பினாலும் வழங்கப்பட்ட பட்டியலை வைத்துக்கொண்டு இஸ்லாமிய செயற்பாட்டாளர்களை கொலை செய்தது. இவர்களின் இந்த நடிவடிக்கைகள் எல்லா ஊடகங்களினாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டன. ஏன், யெமனின் சன்னாவில் வசிக்கும் பலரிற்கும் தெரியாது, சன்னாவினுள் மிலிஷியாக்கள் என்ன செய்கின்றன?, என்ன செய்யப் போகின்றன? என்பது.

யெமன் இஸ்லாமிய வரலாற்றில் பதியப்பட்ட தேசம். பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் யெமன் பற்றி நிறைய அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார்கள். அந்த வகையில் அதனை இலகுவாக ஷெய்டி ஷியாக்களின் கரங்களில் விழ எந்த முஸ்லிமும் விரும்பமாட்டான். 
khaibartalam

ஹிஸ்புல்லாஹ்வின் பலம்வாய்ந்த நிலைகள் மீதான ஐ.எஸ் (IS), ஜபாஃ அல்-நுஸ்ராவின் தாக்குதல்கள் !!

சிரிய துருக்கி எல்லையில் கொபானி நகரிற்கான குர்திஷ்களுடன் மூர்க்கமாக பொருதும் சமகாலத்தில் லெபனானில் தன் வேலையை காட்டியுள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். லெபனானின் Arsal-லில் அமைந்துள்ள சிரிய அகதி முகாம்களை தீயிட்டு கொளுத்தி, முகாமில் உள்ள பெண்கள் குழந்தைகள் கண் முன்பாக ஆண்களை கைது செய்து, கொலை செய்து, சித்திரவதைகளிற்கு உள்ளாக்கி தங்கள் வீரத்தை நிலைநாட்டிய லெபனானிய இராணுவத்திற்கு பதிலடி கொடுப்போம் என இஸ்லாமிய அரசின் (Islamic State - IS) லெபனானிய எல்லைகளில் செயற்படும் கொமாண்ட் அறிவித்து இருந்தது. பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம், சித்திரவதைகள், தீமூட்டல் போன்றவற்றில் ஈடுபட்ட ஷியாக்களிற்கும்  (ஹிஸ்புல்லாஹ்) நாம் பாடம் கற்பிப்போம் என்று் அவர்கள் கூறியிருந்தனர். அதனை அவர்கள் நேற்று முன்தினம் (Oct. 5) செயலில் காட்டியுள்ளனர்.

Brital, Baalbek இரண்டு ஏரியாக்களுமே ஹிஸ்புல்லாக்களின் கோட்டைகள். இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் வீட்டுக்கு ஒரு போராளி ஹிஸ்புல்லாவில் இணைந்துள்ளான். இந்த இரண்டுமே சமகாலத்தில் Islamic State - IS போராளிகளினாலும் ஜபாஃ அல்-நுஸ்ரா போராளிகளினாலும் தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளது. இங்கு ஷியாக்கள் செறிந்து வாழ்கின்றனர். லெபனானிய இராணுவ வீரர்கள் பலரும் இந்த ஊர்களில் உள்ளனர். 

ஈதுல் அல்ஹாஃ பண்டிகையை கொண்டாடும் முகமாக பல நூறு ஹிஸ்புல்லாஹ் கெரில்லாக்கள் சொந்த ஊரிற்கு வந்திருந்த தருவாயில் குளிர் காலத்தின் புலரி வேளையில் இந்த இடங்களை இலக்கு வைத்து ஐ.எஸ். மற்றும் ஜபாஃ அல் நுஸ்ரா போராளிகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இவர்களிற்கான உதவிக்கு ஹிஸ்புல்லாஹ் ஹை கொமாண்டினால் ரிடாலியேஷன் யுனிட்களை அனுப்ப முடியாமல் போயுள்ளது. காரணம் 80 விகிதமான ஹிஸ்புல்லாஹ் போராகளிகள் விடுமுறைக்காக விடுப்பில் சென்றிருந்தனர். 

ஹிஸ்புல்லாக்களின் குடும்பங்களை காப்பாற்ற லெபனானிய இராணுவம் அங்கு விரையும் என்பதனை எதிர்பார்த்திருந்தது போலவே வேகமாக வந்த லெபனான் டாஸ்க் போர்ஸஸை எதிர்கொண்ட ஜபாஃ அல்-நுஸ்ராவின் போராளிகள் சேதங்களை இவர்களிற்கு ஏற்படுத்தியுள்ளனர். ஐ.எஸ். இனது தாக்குதலில் ஷியா ஏரியாவில் நிலை கொண்டிருந்த ஹிஸ்புல்லாக்களும் பல இழப்புக்களை சந்தித்துள்ளனர். விடுப்பில் சென்ற பிராந்திய ஹிஸ்புல்லாக்கள் அனைவரையும் மீண்டும் உடனடியாக தங்கள் பொயின்ட்களிற்கு ரிப்போர்ட் செய்யுமாறு ஹிஸ்புல்லாக்களின் ஹை கொமாண்ட் கட்டளையிட்டுள்ளதுடன், லெபனானின் ஏனைய தங்களது நிலைகளையும் ரெட் அலெர்ட் பொசிஸனில் இருக்குமாரு பணித்துள்ளது. 

பஸர் அல் அஸாத்தின் இராணுவத்திற்கு துணை நின்றவை ரஷ்யா, ஈரான், ஹிஸ்புல்லாஹ். இவை போராளிகளின் தளங்கள் என ஊர்ஜிதமான இடங்களில் பல தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன. கடற்கரை நகரான ஹுஸைரில் எப்.எஸ்.ஏ.யுடனும் ஜபாஃ அல்-நுஸ்ராவுடனும் மிக மூர்க்கமான சண்டைகளை ஹிஸ்புல்லாஹ் நடாத்தியிருந்தது. ஆனால் இப்போது நிலைமை தலை கீழாக மாறி விட்டது. ஐ.எஸ். போராளிகள் ஹிஸ்புல்லாக்களின் கோட்டைக்குள் தங்கள் சப்பாத்துக்களை பதிக்க முனைந்துள்ளனர்.

ஐ.எஸ். இற்கும், ஜபாஃ அல்-நுஸ்ராவிற்கும் இடையில் பரஸ்பர படுகொலைகள் இடம்பெறுகின்றன என பேசிய மேற்கின் மீடியாக்களும், ஈரானின் செய்தி ஏஜென்ஸிகளும் இந்த தாக்குதலில் இரு அணிகளும் இரு முனைகளில் ஒரே நேரத்தில் மேற்கொண்ட தாக்குதல் பற்றி பெரிதாக செய்தி வெளியிடவில்லை. 

கைபா்தளம்.

பாலஸ்தீன நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதை போன்று, இந்தியா நடந்து கொள்கிறது

காஷ்மீர் மாநிலத்தில் ஒரு அங்குலம் கூட விட்டுத்தர மாட்டோம் என பாகிஸ்தான் மக்கள் கட்சிதலைவர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.
இது குறி்த்து அவர் கூறியிருப்பதாவது,
காஷ்மீர் விவகாரத்தை பொறுத்த வரையில் , குஜராத் மாநிலத்தில் மோடியால் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாய் இருப்பதை போல் இருக்க முடியாது எனவும், காஷ்மீர் மாநிலத்தை பாகிஸ்தானின் ஒரு பகுதி தான் . எனவே காஷ்மீரின் ஒரு அங்குலப்பகுதியை கூட யாருக்கும் விட்டுத் தர முடியாது என கூறியுள்ளார். 

மேலும் தனது டுவிட்டர் இணையத்தில் பாகிஸ்தான் விவகாரத்தில் பாலஸ்தீன நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதை போன்று இந்தியா நடந்து கொண்டு வருவது போல் தெரிகிறது. குஜராத் மாநிலத்தில் மோடியால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று அமைதியாக இருக்க மாட்டோம். பாகிஸ்தானால் தகுந்த பதிலடி தர முடியும் என்பதை மோடி உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
jaffnamuslim 

சமையல் எரிவாயு விலை குறைப்பு

கேஸ் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளார்.

நாளைய தினத்தில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் கேஸ் விலையை 250 ரூபாவால் குறைக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

களனியில் இடம்பெற்ற ஓய்வூதியம் பெறுவோரின் தினத்தை அனுஸ்டிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண சபை தேர்தலுக்கு முன் சீன ஜனாதிபதி இலங்கை வந்தபோது மின் கட்டணம் மற்றும் எரிபொருள்களின் விலையை குறைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

U.D.A. ஹஜ்ஜுப் பெருநாள் பரிசு : புதிதாக நான்கு பள்ளிவாசல்களை உடைக்கப் போகிறது..!!

இலங்கையிலுள்ள நான்கு பள்ளிவாயல்களை நகர அபிவிருத்தி அதிகார சபை ஊடாக அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பந்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

1. Borelesgamuwa Jumma Masjid ( case filed at MC Nugegoda  )
2. Muhydeen Thakkiya at Dippitigoda, Wattala
3. Mawanella keraminiya Watte Masjid and.,
4. Izzadeen town Masjidul Thakwa. ( Notice issued).

ஆகிய பள்ளிவாயல்களுக்கு எதிராக மாகாண சபை சட்டம் 98 பொதுமக்களுக்கு இடைஞ்சல், சட்டம் 81106 பிரதேசத்தில் அமைதிக்கு அச்சுறுத்தல் ஆகிய சட்டங்களின் கீழ் அந்தந்த நகரசபை ஊடாக அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனை சட்டரீதியாக எதிர்கொண்டு  வக்பு சபை வழக்கறிஞர்கள் முறியடித்த நிலையில் மேற்குறித்த பள்ளிவயல்களை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் வருகிறது.

puttalamtoday news

கஹட்டோவிட ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளி வாசலின் ஈதுல் அழ்ஹா பெருநாள் திடல்தொழுகை

அல்லாஹ்வின் அருளால் இம்முறையும் கஹட்டோவிட ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளி வாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை கஹட்டோவிட  அல் பத்ரியா மகாவித்தியாலய தானத்தில்  காலை 7.15 மணிக்கு நடைபெற்றது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே நேரத்தில் நடாத்தப்பட்ட இத்தொழுகையில் சுமார் 1000 பேரளவில் கல்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

தொழுகையைத் தொடா்ந்து பள்ளி வாசலின் பிரதம இமாம் மௌலவி மஸ்ஊத் ஸலபி அவா்களின் உரை இடம்பெற்றது. உள்ளத்தை உருக வைத்த இவரது உரையில் இப்றாஹீம் நபியவா்களின் வாழ்விலிருந்து நாம் பெறும் படிப்பினையை வழமைக்கு மாற்றமான வித்தியாசமான ஒரு கோணத்தில் சுருக்கமாக விளக்கிக் கூறினார். மேலும் கருத்து வேறுபாடுகளின் போது நடந்து கொள்ள வேண்டிய அழகிய முன்மாதிரிகளையும் தெளிவு படுத்தினார். இவரது உரையைத் தொடர்ந்து வந்திருந்தவா்கள் ஒருவருக்கொருவா் ஸலாம் கூறி துஆக்களைப் பரிமாறிக் கொண்டதையும் காணக் கூடியதாக இருந்தது.