ATM இலிருந்து 1 கோடி 78 ஆயிரம் ரூபா எடுத்த 17 வயது இளைஞன் - ஜாஎலவில் சம்பவம்
வங்கி ஒன்றில் சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பித்த 17 வயது இளைஞன் ஒருவன் அவ்வங்கியின் ATM இலிருந்து ரூபா ஒரு கோடி எழுபத்தெட்டு இலட்சம் எடுத்த சம்பவம் ஒன்று ஜாஎலவில் இடம்பெற்றுள்ளது. இது சம்பந்தமான வழக்கு இன்று கொழும்புக் கோட்டை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கெடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த இளைஞனின் கணக்கில் ரூபா 163000 இருந்துள்ள நிலையில் ஒன்றரைக் கோடி ரூபாவுக்கு மேல் பணமெடுத்தமைக்கு வங்கியின் ATM களின் கோளாறே காரணம் என வங்கி நீதவான் முன்னிலையில் ஏற்றுக்கொண்டது.
சந்தேக நபர் ஏழு மாதங்களில் வெவ்வேறு நகரங்களில் 558 முறை இனைப் பயன்படுத்து பணம் எடுத்துள்ளார்.
எடுத்த பணத்தினை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பிக் கொடுக்க குறித்த இளைஞன் இணங்கியுள்ளார். சந்தேக நபர் ரூபா 50000 பிணையிலும் ரூபா 10 இலட்சம் பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டார்.
0 comments:
Post a Comment