கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

Muhammad Al-Daif (General Commander of Izz Ad-Din Al-Qassam Brigades) - விடுத்த விசேட செய்தி...!!

துவரை காலமும் ஹமாஸின் அரசியல் தலைவர்களே அவர்களது போராட்டம் பற்றி பேசி வந்துள்ள நிலையில் முதன் முறையாக அதன் இராணுவப் பிரிவான இஸ்ஸத்தீன் அல்-கஸ்ஸாம் பிரிக்கேட்டின் பொதுத் தளபதி Muhammad Al-Daif அவர்கள் காஸா சண்டைகள் தொடர்பாக பேசியுள்ளார். அவரின் வார்த்தை வரிகள்.......

“கருணைமிக்க அல்லாஹ்வின் பெயரால்..., சாந்தியும் சமாதானமும் முஜாஹிதீன்களின் தலைவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும் அவரது குடும்பத்தவர் மீதும் அவருடன் இருந்து ஸஹாபாக்கள், எவெரல்லாம் அவர்கள் வழியில் நியாயத் தீர்ப்பு நாள் வரை இருப்பார்களோ அவர்கள் மீதும் உண்டாவதாக.”

“அவர்களுடன் சண்டையிடுங்கள். அல்லாஹ் அவர்களை உங்கள் கரங்களினால் தண்டிப்பான். அவர்களை அவமானத்தினால் மூடி விடுங்கள். அவர்கள் மீதான வெற்றியை விசுவாசிகளான உங்கள் அமைதிபெற அழைப்பேன்” எனும் இறைமறை வசனங்களை உங்களிற்கு ஞாபகம் ஊட்ட விரும்புகிறேன்.

“யா அல்லாஹ் உனது உதவியுடனேயே எமது தாக்குதல்களை அவர்கள் மேல் பரவச்செய்ய முடியும், உனது உதவியுடனேயே நாம் அவற்றை கையாள முடியும், உனது உதவியுடனேயே நாம் சண்டையிடவும் முடியும். உனது உதவியில்லாமல் எமக்கு என்ற சக்தியும் வல்லமையும் கிடையாது.”

இந்த காலத்தில் அர்பகா எங்கள் உம்மாவின் மீது அதி பயங்கரமான போர் இயந்திரங்களை ஏவி ஜெரூஸலம், மேற்குக்கரை, காஸா போன்ற எமது மண்ணை அபகரித்து விட்டான். வரம்பு மீறி விட்டான். எதிரி முற்றுகையிட்டுள்ளான். மக்கள் மீது பட்டினி சாவினை சாட்டியுள்ளான். எமது குழந்தைகளை, பெண்களை, முதியவர்களை பயங்கரமான முறையில் கொல்கின்றான். வீடுகளை தரைமட்டமாக்குகின்றான். அவரகள் கண்கள் முன் அவர்கள் வீடுகள் அழிந்து போனது. வரலாற்றில் காணத வகையில் சிவிலியன் இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றான்.

சுரங்கங்களின் ஊடான தாக்குதல்கள் காரணமாகவும், ஏவப்படும் ரொக்கெட்கள் காரணமாகவுமே தாங்கள் காஸா மீது தாக்குதல்களை தொடுப்பதாக அவன் பொய்யான எமாற்று வேலைகளை செய்கின்றான். தோல்வியடைந்த அடைந்த அவர்களது இராணுவத்திற்கு நான் சிலவற்றை கூற விரும்புகிறேன். 

  1. சண்டைக்களத்தில் படைப்பல மேலோங்கு நிலை மாறிவிட்டது. நீங்கள் எவ்வளவிற்கு போராடி உயிர் வாழ ஆசைப்படுகிறீர்களோ அவ்வளவிற்கு அவ்வளவு போராடி அல்லாஹ்வின் பாதையில் உயிரை விட விரும்புபவர்களுடன் தான் நீங்கள் சண்டையிடுகிறீர்கள் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் படைகளின் அனைத்து பிரிவுகளிற்கும் எதிராக போராட எமது மக்கள் எம்முடன் ஒன்றிணைந்துள்ளனர். 
  2. தாக்குதல் விமானங்கள், ஆட்டிலறிகள், பீரங்கி படகுகள் என எவ்வளவோ முயன்றும் உங்களால் எதையும் அடைய முடியவில்லை. உங்கள் தோற்கடிக்கப்பட்ட தரைப்படையுட்பட. அல்லாஹ்வின் அருளால் எமது முஜாஹிதீன்களின் துப்பாக்கி ரவைகளிற்கும், அதிரடி தாக்குதல்களிற்கும் முன் உங்கள் படைகள் சிதறுகின்றன. தரையில் நகர்ந்த எதிரிகளிற்கு எதிரான எமது வெற்றிகளிற்கு நிறைய ஆதாரங்கள் உண்டு. அவர்களின் படைகளின் பின்புறம் சென்று தாக்கியுள்ளோம்.  Al-Shujaya-வில் என்ன நடந்தது?. எதிரியின் பல அடுக்கு உளவமைப்புக்கள்  தோற்று விட்டன. தான் விட்ட தவறை எதிரி உணர்கிறான். தான் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதும் அவனிற்கு தெரியும். கடுமைாயன நரகம் அவர்களிற்கு தயாராக உள்ளது. இறைநாட்டம் அது.
  3. எதிரி எமது அயல் கிராமங்களில் புகுந்து மக்கள் மீடு படுகொலைகளை பிரிந்து அவற்றை இரத்தக்காடாக மாற்ற திட்டமிட்டிருந்தான். ஆனால் அது நடக்காமல் போயுள்ளது. அவர்கள் கொல்லப்படுகிறார்கள். எதிரியின் உடல்களே அங்கே இரத்தத்தில் மிதந்தன.
  4. ஸியோனிஸ்ட்கள் நினைக்கும் நிம்மதியான தேசம் என்பது ஒரு போதும் இருக்காது. அவர்களை பாதுகாப்பாக வாழ விடமாட்டோம். தாக்குதலை நிறுத்தி, முற்றுகையை தளர்த்தி அவன் பழைய இடங்களிற்கு பின்வாங்க வேண்டும். அது வரை போர் நிறுத்தம் கிடையாது. எமது மக்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் பகராமாக எதையும் நாம் ஏற்கப் போவதில்லை.
  5. நாம் ஏற்கனவே தயாராகி விட்டோம். எதிரி எம்மை உணர்வூட்டியோ அல்லது அவசரப்பட வைத்தோ அழிக்க முடியாது. நாம் ஒரு யுத்த கணிப்பிடலின் அடிப்படையில் நகர்கிறோம். எம்மை அவர்கள் முட்டாளாக்கி அழிக்க முடியாது. அல்லாஹ்வின் கருணையும், உதவியும் எமக்கு உண்டு என்பதை உறுதியாக நம்பியே நாம் இதில் இறங்கியுள்ளோம். 
“எம்மீதான முஸ்லிம் உம்மாவினதும், பலஸ்தீன் மக்களினதும் நம்பிக்கையையும், ஆதரவையும் நாம் அறிந்துள்ளோம். இறைவனிற்கு அடுத்து உங்களை நாம் நன்றியுடன் நினைக்கின்றோம். நாம் வலுவாக உள்ளோம். வெற்றி என்பது பொருமையிலேயே உள்ளது. அது இராணுவ ரீதியான செயற்பாடுகளிற்கும் பொருந்தும். உங்களிற்கும் பொருந்தும். வெற்றி நிச்சயம். அதற்கான பொருமையான செயற்பாடுகளும் இறைவனின் உதவியை எதிர்பார்ப்பதும் அவசியம். ஓ...முஸ்லிம் உம்மா!! நீங்கள் எங்கள் தலைகளின் கிரீடம் போன்றவர்கள். நாங்கள் உங்கள் கவசம் போன்றவர்கள். நாங்கள் உங்கள் ஊழியர்கள். நான் இதை உறுதியாக கூறுகிறேன். இறைவன் பாதுகாவலன். அவன் கருணையாளன். அல்லாஹ் எமது தியாகிகள் மீது கருணை காட்ட வேண்டும். எமது காயப்பட்ட போராளிகள் மீது கருணை காட்ட வேண்டும். எதிரிகளால் கைது செய்யப்பட்ட போராளிகள் மீதும் கருணை காட்ட வேண்டும். அல்லாஹ்வின் மாபெரும் வெற்றி வரை இது நிகழ வேண்டும். 

0 comments:

Post a Comment