'இலங்கை முஸ்லிம்கள்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில், அரபு நாடுகளுக்கு எல்லாம் தெரியும்' - ஆடிப்போன மஹிந்த..!
அளுத்கம பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்தமாதம் கட்டவிழ்த்து விடப்பட்ட பௌத்த பேரினவாத வன்முறை தொடர்பில், அரபு நாடுகள் அதீத ஆர்வத்தை வெளிப்படுத்தவே , ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தென்னிலங்கையைச் சேர்ந்த மௌலானா ஒருவரை அவசரமாக அரபு நாடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
இதுதொடர்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சவூதி அரேபியாவில் இருந்து கிடைக்கப்பெற்ற நம்பத்தகுதந்த தகவல்கள் கீழ்வருமாறு,
ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்த அந்த மௌலானா 56 முஸ்லிம் நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பின் செயலாளரை சந்தித்து இலங்கை முஸ்லிம்களுக்கு எத்தகைய பாதிப்புகளும் இல்லை, அவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், அவர் தலைமையிலான அரசாங்கமும் சுமூகமாகவே நடந்து கொள்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் என ஊடகங்கள் பொய் கூறுவதாகவும், சிறிய விடயங்களை பெரிது படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றையெல்லாம் பொறுமையாக செவிமடுத்துள்ள இஸ்லாமிய நாடுகளின் அமைப்பின் செயலாளர், மஹிந்த ராஜபக்ஸவின் தூதுவராக சென்ற அந்த தென்னிலங்கையைச் சேர்ந்த மௌனாவுக்கு முன், கடந்த வருடங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்கள், தாக்கப்பட்ட பள்ளிவாசல்களில் விபரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை அப்படியே தூக்கிப்போட்டுள்ளார்.
இதனால் கலங்கிப் போன அந்த தென்னிலங்கை மௌலான, வேறு வழியின்றி மீண்டும் இலங்கைக்கு திரும்பிவந்து, இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் நேரடியாக குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து முஸ்லிம் நாடுகள் தமக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டுவிடுமோ என ஆடிப்போன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ , உடனடியாகவே இஸ்லாமிய நாடுகளின் அமைப்பின் செயலாளருடன் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு, இலங்கை முஸ்லிம்களை பாதுகாக்க தமது அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பு - இதனுடன் தொடர்புடைய மேலும் 2 முக்கிய செய்திகளை இன்ஷா அல்லாஹ் ஜப்னா முஸ்லிம் இணையத்தில் விரைவில் எதிர்பருங்கள்..!
jaffnamuslim web

0 comments:
Post a Comment