கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஹக்கீமிற்கு எதிரான தீர்மானத்தில் ஜனாதிபதி தீடிர் மாற்றம்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்களாகிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கிமிற்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளவிருந்த தீர்மானத்தில் தீடிர் மாற்றத்தை மேற்கொண்டதாக அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தூதுக் குழுவொன்று கடந்த வாரம் சவூதி அரேபியாவின் ஜித்தா நகரிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல்ää கல்முனை மேயர் நிசாம் காரியப்பர், கட்சியின் அரசியல் பீட உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் மற்றும் கலீல் மௌலவி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது இஸ்லாமிய நாடுகள் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் இயாட் மதனியையும் அமைச்சர் ஹக்கீம் சந்தித்து பேச்சு நடத்தினார். இதற்கு மேலதிகமாக இஸ்லாமிய நாடுகள் ஒன்றியத்தில் புதிதாhக உருவாக்கப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வுகளை கையளும் பிரிவின் முக்கியஸ்தர்களையும் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச்சு நடத்தினர்.

இந்த சந்திப்புக்கள் காரணமாக அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக கடுமையான நடவடிக்கையினை மேற்கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்திருந்தார். எனினும் பின்னர் அந்த தீர்மானத்தினை ஜனாதிபதி மாற்றிக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம் கலந்துகொண்டார். இந்த கூட்டத்திலிருந்து அமைச்சர் ஹக்கீம் வெளியேறும் போது, “இஸ்லாமிய நாடுகள் ஒன்றியத்தின் பொதுச் செயலாளரை நீதி அமைச்சர் சந்தித்தமை தனக்கு தெரியும்” என ஜனாதிபதி தெரிவித்தார்.

இதனை அமைச்சர் ஹக்கீம் உறுதிப்படுத்தினார். “நானும் அவர்களுடன் பேசினேன்” என ஜனாதிபதி இதற்கு பதலளித்தார். அத்துடன் அளுத்கம சம்பவங்கள் தொடர்பில் நானும் தகவல் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

vidiyal

0 comments:

Post a Comment