அதற்குள்... அடுத்த விமானமா? அல்ஜீரிய விமானம் விபத்து
தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள அல்ஜீரிய விமானம் நைகரில் விபத்துக்குள்ளனதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அல்ஜீரியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் அல்ஜெரி, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா ஃபாஸோவிலிருந்து கிளம்பிய தன் விமானம் ஒன்றுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தது.
ஓவுகாகடகோவிருந்து கிளம்பிய 50 நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமான நிறுவனத்தை மேற்கோள் காட்டி அல்ஜீரியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த விமானம் அல்ஜியர்சிற்குச் சென்று கொண்டிருந்தது.
ஏ.எச்.5017 என்ற இந்த விமானத்தில் 110 பயணிகளும் 6 ஊழியர்களும் இருந்தார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment