கிறிஸ்டியானோ ரொனால்டோவை கருவில் கொலை செய்ய முயற்சித்த தாய்
பிரபல காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கருவில் அழிக்க முயற்சி செய்ததாக அவரது தாய் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
உலகில் பிரபலமான காற்பந்து வீரர்களின் பட்டியலில் கிறிஸ்டியானொ ரொனால்டோவும் உள்ளார். அவர் போர்ச்சுகல் மற்றும் ரியல் மாட்ரிட் கிளப் அணிகளுக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் அவரை கருவில் சுமந்த போதே அழித்து விட வேண்டும் என்று முயற்சித்தேன் என அவரது தாயார் டோலோரஸ் அவிரோ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
‘துணிச்சலான தாயார்’ என்ற பெயரில் டோலோரஸ் சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் ‘ரொனால்டோவை கருவில் இருக்கும் போதே அழிக்க நினைத்தேன். கருவை கலைப்பதற்கு மருத்துவரை அணுகியதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவர் முடியாது என்று மறுத்து விட்டார். இதனால் வேறு வழியிலாவது கலைத்து விடலாம் என்று நினைத்து, பீர் குடித்து விட்டு, நீண்ட தூரம் ஓடினேன். ஆனாலும் எனது எண்ணம் ஈடேறவில்லை. பின்னாலில் இந்த ரகசியத்தை தெரிந்து கொண்ட ரொனால்டோ அவ்வப்போது ‘ஜோக்’ செய்வார்.
‘அம்மா என்னை பாருங்கள்... நீங்கள் கருவிலேயே அழிக்க நினைத்தீர்கள். ஆனால் நான் தான் இப்போது சம்பாதித்து உங்களையும், வீட்டையும் காப்பாற்றுகிறேன் என அடிக்கடி சொல்வார்’ என்று அந்த புத்தகத்தில் டோலோரஸ் குறிப்பிட்டுள்ளார்.
jaffnamuslim

0 comments:
Post a Comment