அமைச்சர்கள் இன்றி இயங்கும் 10 அமைச்சுக்கள்
ஆளும் கட்சி அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் எதிரணிக்கு மாறியதால் ஐந்து அமைச்சரவை அமைச்சுப் பதவிகளும் ஐந்து பிரதியமைச்சுப் பதவிகளும் காலியாக இருக்கின்றது.
ரவூப் ஹக்கீம் எதிரணிக்கு மாறியதால் நீதி அமைச்சும் பஷீர் சேகுதாவூத் விலகியதால் திறன் அபிவிருத்தி அமைச்சும் பாட்டாளி சம்பிக் ரணவக்க விலகியதால் தொழில் நுட்ப மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி அமைச்சும் நவீன் திசாநாயக்க பதவி விலகியதால் அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சும் துமிந்த திசாநாயக பதவி விலகியதால் கல்விச் சேவைகள் அமைச்சும் அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் காலியாகவுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக களமிறங்கியதால் அவர் வகித்த சுகாதார அமைச்சு மாத்திரம் திஸ்ஸ அத்தநாயகவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ராஜித சேனாரட்ன வகித்த மீன்பிடி நீரியல்வள அமைச்சுக்கு பதில் அமைச்சராக சரத் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் எம்.ஜே.டி.எஸ். குணவர்தன நந்திமித்ர ஏக்கநாயக, பைஸர் முஸ்தபா, ப. திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் வகித்த பிரதி அமைச்சுப் பதவிகளுக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை.
0 comments:
Post a Comment