மா.ச உருப்பினர் சாfபி ரஹிமிற்கு கஹடோவிட மண்ணிலிருந்து ஒரு திறந்த கடிதம்
அஸ்ஸாலாமு அலைக்கும் வவ
மா.ச உருப்பினர் சாfபி ரஹிமிற்கு கஹடோவிட மண்ணிலிருந்து ஒரு திறந்த கடிதம்
நேற்று பி.ப 4.00 மணிக்கு எமதூர் சந்தியில் ஜனாதிபதி வேற்பாளர் மைதிரி பால சிறிசேனவை ஆதரித்து நடைபெற்ற கூட்டம் அல்லாஹ்வின் உதவியினால் ஏற்பாட்டாளர்களின் கடும் பிரயத்தனத்தின் ஊடாக எதிர்பார்த்ததை விட சாலச் சிறந்ததாகவே இருந்தது ஆனால் சாfபி ரஹிமின் வருகையையும் பேச்சையும் தவிர
முஸ்லிம்களின் பொருளாதாரம் திட்டமிட்டு முடக்கப் படுதலில் தொடங்கி சுங்கத் தீர்வுகள் இனங்கானப்படும் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு அதிகரித்தல் என்று நகர்ந்து வெள்ளை வேன் கடத்தல், கறீஸ் கள்ளன், BBS ன் உருவாக்கமும் அராஜகங்களும் என்று தொடர்ந்து அளுத்கமவில் ஒரு வரலாற்று கறையை பதித்தது வரை அனைத்திலும் ஆளும் தரப்புக்கு விசாலமான பங்குண்டு என்பது வெளிப்படை.

இந்த எல்லா நேரங்களில் மு.கா அரசுடன் இருந்தது என்பதை பலவாறு விமர்சித்தாலும் அதற்கும் பின்னால் ஏதாவது அரசியல் சானக்கியம் இருக்கலாம் என்று அமைதியாக இருந்தோம்.
இந்த நேரத்தில் மைதிரி பாலவின் வருகையுடன் முஸ்லிம் சமுகமே ஒன்று சேர்ந்து இது வரை காலமும் நமது சமூகத்திற்கு நடந்த கொடுமைகளுக்காகவும், நாட்டின் நல்லாட்சிற்காகவும் மஹிந்த ராஜபக்சவை ஓரம்கட்ட வேண்டும் என்ற ஓரே நோக்கில் ஓரணியில் நின்ற போதும் அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் உங்களைப் போல் அரசியல் வாதிகளுக்கும் மஹிந்தவை எதிர்ப்பதற்கு ஒன்றரை மாதத்திற்கு அதிகமான காலமும் 20 ற்கு மேற்பட்ட மந்திர ஆலோசனை கூட்டங்களும், பல ஆழும் தரப்புடன் பேரம் பேசலும், சேதார பேதார கணக்குகளும் தேவைப் பட்டது என்பது ஒரு கசப்பான உண்மையே. இவற்றுக்கெல்லாம் அப்பால் இவையெல்லாம் ஒரு வித அரசியல் காய் நகர்த்தல் என்று எமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டு மு.கா ன் மைதிரியை ஆதரிக்கும் முடிவை பட்டாசு கொளுத்தி வரவேற்றோம்.
இவற்றை எல்லாம் சகித்துக் கொண்ட எம்மால் நேற்றைய உங்களுடைய உறையை மாத்திரம் சகித்துக் கொள்ள முடியவில்லை. காரணம்
1. நானும் தலைவர் ரவுfப் ஹகிமும் அளுத்கம கலவரத்தின் போது அங்கு சென்று கலவரம் மேலும் பரவாமல் தடுத்தோம் என்று கூறினீர்கள். அளுத்கமயில் இனவாதிகள் ஆட்டம் போட்டு களைப்படைந்து ஓய்வெடுத்த பின் ரவுfப் ஹகிமும் அவருடன் உங்களைப் போல் சிலரும் சென்று நான் இந்நாட்டின் நீதி அமைச்சராக இருக்க வெட்கப் படுகிறேன் என்று சொல்ல அவருக்குப் பின்னால் video ற்கு முகத்தைக் காட்டிக் கொண்டு நிங்களெல்லாம் இருந்ததையும் நாம் மறக்க வில்லை. அதைக்கூட நாம் பெறிதாக அலட்டிக் கொள்ள வில்லை, ஏனென்றால் உங்களுக்கு அதைவிட அதிகம் ஒன்றுமே செய்ய முடியாது என்பதையும் நாம் நன்கறிவோம். அனால் கஹடோவிட வாழ் மக்களெல்லாம் மடையர்கள் என்று நினைத்துக் கொண்டு நாம் அலுத்கம கலவரம் பரவாமல் தடுத்தோம், நிறுத்தினோம் என்று நிங்கள் நேற்று மேடையில் பேசியதைத்தான் தாங்க முடிய வில்லை.
2. முஸ்லிம்கள் 100% மைதிரியிற்கு ஆதரவாக உள்ளனர் என்பதை அரிந்தவுடன் நாமும் அரசிலிருந்து வெளியேறினோம் என்று சொன்னீர்கள்.
இதை மேடையில் வைத்து சொல்வதற்கு உங்களுக்கு நாவு கூச வில்லையா, அல்லது நாம் அனைவரும் காதில் பூ வைத்துக்கொண்டு கூட்டத்திற்கு வந்திருந்தோமா. அப்படியாயின் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி உங்களுக்கு அரசிலிருந்து வெளியேர ஏன் ஒன்றரை மாதத்திற்கு அதிகமான காலமும் 20 ற்கு மேற்பட்ட மந்திர ஆலோசனை கூட்டங்களும், பல ஆலும் தரப்புடன் பேரம் பேசலும், சேதார பேதார கணக்குகளும் தேவைப்பட்டது? இவற்றுக்கெல்லாம் மேலாக அப்படி உண்மையிலேயே சமுக அக்கறையிருந்தால் ஏன் சென்ற Nov 26 ஆம் திகதி மேல் மாகாண சபையில் ஹிருனிக்கா ஆழும் தரப்பிலிருந்து வெளியேறினால் மு.கா அரசுக்கு மேல் மாகாண சபையின் ஆட்சியை தக்கவைக்க ஆதரவு அழிக்கும் என்று ஒரு செய்தியை வெளியிட்டீர்கள் ( இந்த செய்திற்குப் பின்னால் உள்ள உங்களுடை அரசியல் சுய இலாபத்தை புறிய முடியாதளவு நாம் ஒன்றும் அரசியல் தெறியாதவர்களல்ல )
இது எல்லாவற்றுக்கும் மேலாக மு.கா தொடர்ந்து அரசுடன்தான் இருக்க வேண்டும் என்று மு.கா தலைமைக்கு அழுத்தம் கொடுத்த சிலருல் நீங்களும் ஒருவர் என்பதையும் நாம் நன்கறிவோம்.
இனி எமதூர் பிறைச்சயைக்கு வருகிறோம். சென்ற மேல் மாகாண சபைத் தேர்தலில் நிங்கள் கொடுத்த வாக்குறிதியிற்கு இனங்க உங்கள் மேல் மாகாண சபை உருப்புரிமையில் 2 வருடத்தை அல்ஹாஜ் முஸ்தாக் மதனியிற்கு கொடுப்பது உங்களது கடமை, அதை கேட்டுப் பெருவது எமது ஊரின் உரிமை. தயவு செய்து இதிலும் உங்களது அரசியல் தந்திரத்தை புகுத்தாதீர்கள். இப்படி 2 வருடத்தைக் கொடுப்பது நடைமுறை சாத்தியமற்றது, இன்னும் சில சாக்குப் போக்குகளை உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் நிங்கள் பகிர்ந்து கொள்வதும் எமது ஊர் வாசிகள் அரியாமல் இல்லை. இறுதியாக அவ்வாறு கொடுக்காவிட்டால் வரும் சேதார பேதாரா கணக்குகளும் நாம் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. இனி வரும் மேடைகளிலாவது கூடியிருப்போர் மடையர்கள் அல்லர் என்பதை கருத்தில் கொண்டு பேசும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
அப்துல் கரீம்-கஹடோவிட
அப்துல் கரீம்-கஹடோவிட
0 comments:
Post a Comment