கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இம்ரான் கான், ரெஹம் கான் எனும் தொலைக்காட்சித் தொகுப்பாளரைத் திருமணம் செய்துகொண்டா்.

இஸ்லாமாபாத்திலுள்ள மதரஸா மாணவர்களுடன் அமர்ந்து அவர்களுக்கு விருந்து வைத்திருந்தார். இம்ரான் கான் இன்று வைத்த விருந்து வலிமா விருந்தாக இருந்தாலும் அவர் தொடர்ச்சியாக பல்வேறு மனிதநேய பணிகளில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. 
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தெரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைவரும், மனிதநேயமிக்கவருமான இம்ரான் கான், ரெஹம் கான் எனும் தொலைக்காட்சித் தொகுப்பாளரைத் திருமணம் செய்துகொண்டார்.

இம்ரான் கானுக்கு ஏற்கெனவே பிரிட்டனைச் சேர்ந்த ஜெமிமா கான் என்பவருடன் திருமணமாகி இரண்டு மகன்களும் உள்ளனர். எனினும், பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஒருவருடன் இம்ரான் பழகி வருவதாகச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தன்னைச் சுற்றி வந்த கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரெஹம் கானை எளியமுறையில் திருமணம் செய்துகொண்டார். ரெஹம் கானுக்கும் ஏற்கெனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. ஆனால் அவர் விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திருமணத்தையொட்டி பெரிய ஆடம்பரங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், திருமணத்தை முன்னிட்டு ஏழைக் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment