கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சரத் பொன்சேகாவுக்கு அனைத்து உரிமைகளையும் மீள வழங்க உத்தரவு

கடந்த ஆட்சிக்காலத்தில் அனைத்து சிவில் உரிமைகளும் பறிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீண்டும் பாராளுமன்றம் செல்லும் வழியில் அவருக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்றிருந்த ஜனநாயக கட்சியின் பா.உ ஜயந்த கெடகொட தனது உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்க முன் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை முன்னாள் இராணுவ தளபதியிடமிருந்து பறிக்கப்பட்ட இராணுவ நிலைகள் மற்றும் அனைத்து சிவில் உரிமைகளையம் மீள வழங்குமாறு ஜனாதிபதி மைத்ரி உடனடி உத்தரவும் பிறப்பித்துள்ளதாக தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் சரத் பொன்சேகா மீண்டும் பாராளுமன்றம் செல்வதோடு தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகராகவும் செயற்படுவார் என தகவலறிந்த வட்டரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment