கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

வசீம் தாஜூதீனின் கொலையில் நாமல் உள்ளிட்ட 6 சந்தேக நபர்கள், வெளிநாடு செல்ல தடை

 முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீனின் கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், சந்தேகநபர்களில் ஒருவராக கருதப்படும் நிலை உருவாகியுள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


 அந்த சந்தேகநபர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சவே என்று விசாரணையாளர்களை கோடிட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

 குறித்த கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் கடந்த வாரங்களில் ரக்பி வீரரை கொலை செய்ய உத்தரவிட்டது யார் என்பதை ஆராய்ந்து வந்தனர்.

 இதன்போது இராணுவ கெப்டன் திஸ்ஸ, நாமல் ராஜபக்ச உட்பட்ட 6 பேர் இந்த கொலையில் தொடர்பு கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

 இந்தநிலையில் குறித்த 6 பேரும் வெளிநாடு செல்ல முடியாதபடி குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்ற தடையுத்தரவை பெற்றுள்ளனர்.

 கெப்டன் திஸ்ஸ, முன்னாள் முதல் பெண்மனி ஷிராந்தி ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, லெப்டினன்ட் யோசித்த ராஜபக்ச ஆகியோரின் மெய்பாதுகாவலராக செயற்பட்டு வந்துள்ளார்.

 இதேவேளை சந்தேகநபர்கள் 6 பேரும் இந்த மாத இறுதிக்குள் கைது செய்யப்படுவர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 இதற்கிடையில் விசாரணைகள் தடையின்றி மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் நாமல் ராஜபக்சவை கைது செய்யும் போது தமக்கு அழுத்தங்கள் ஏற்படலாம் என்று விசாரணையாளர் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

JAFFNAMUSLIM

0 comments:

Post a Comment