கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இவனைப் பற்றிய விபரம் தேவை? - வெளிநாட்டு வேலைவாய்ப்பின் பேரில் பாரிய பணத்திருட்டு

கீழுள்ள புகைப்படத்தில்  இருக்கும் கடவத்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ரிஸ்வான் என்ற நபர் ஒரு மோசடிக்காரன். வெளிநாட்டில் வேலைவாய்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியுள்ளான். இவனின் மோசடிக்கு கஹடோவிடாவைச் சேர்ந்த  நான்கு நபர்கள் சுமார் 120000 பணத்தை  இழந்துள்ளனர். இது தவிர்ந்த மருத்துவப் பயிற்சிக்கான ஆவணங்களை தயாரிக்க வென தனக்கென 5000 வீதம் 25000 ஐ அறவிட்டுள்ளான்.. 

பணப் பரிமாற்றங்களுக்காக மற்றுமொருவருடைய வங்கிக்கணக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த கணக்கின் உரிமையாளர் ரமீஸ் இவர் ரிஸ்வானுடைய சகாவாக இருக்கலாம். இவர்களுடைய முகவரி மாவரம் மண்டிய ரோட், கெஸல்வத்தை எனக் கானப்படுவதாகவும் அறியக்கிடைக்கிறது. 

இவர்களைப் பற்றிய தகவல்கள் யாராவது அறிந்திருந்தாள், பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்கு நீங்களும் உதவலாம். இவனின் ஏமாற்றில் வேறுயாரும் சிக்கிவிடாமல் இருக்கவே நாம் இதனை பிரசுரிக்கிறோம். 

இவனைப் பற்றிய மேலதிக விபரங்களை ....  
புகைப்படம்,  
வங்கி கணக்கு, 
தொலைபேசி இலக்கம் (பணப்பறிமாற்றத்தின் பின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது) போன்றவற்றை நாம் வெகுவிரைவில் பிரசுரிக்கவுள்ளோம். 

 இந்த தகவலை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம் வெளிநாட்டு செல்ல எந்தனிக்கும் உறவுகள் யாராவது இவனைபோன்ற மோசடிக்காரனின் கையில் சிக்கிவிடாமல் பாதுகாக்கலாம். 

0 comments:

Post a Comment