"ஷீயாக்கள்" பற்றி அஷ்ஷெய்க் ரவூப் ஸய்ன், அஷ்ஷெய்க் M.P.M. இத்ரீஸ் ஆகியோர் சொல்ல வருவதுதான் என்ன?
நேற்றிரவு (23-01-2016) 9.30pm மணி முதல் "வசந்தம் டிவி"யில் "பள்ளிக்கூடம்" கலந்துரையாடல் நிகழ்ச்சியைக் காணக் கிடைத்தது. இதில், அஷ்ஷெய்க். S.H.M.பளீல், அஷ்ஷெய்க் ரவூப்ஸய்ன், அஷ்ஷெய்க். M.P.M.இத்ரீஸ் ஆகியோர் கலந்து கொண்டு "ஐஎஸ்ஐஎஸ்" ஐப் பற்றி கலந்துரையாடினர். அதில், நிகழ்ச்சியை நெறிப்படுத்தியவர் "ஷீயா + ஸுன்னி" பிரச்சினை பற்றி கேட்ட கேள்விக்கு அஷ்ஷெய்க் ரவூப் ஸய்ன், அஷ்ஷெய்க் M.P.M.இத்ரீஸ் ஆகியோர் மிகவும் அடர்த்தி குறைந்த அமைப்பினராகக் அவர்களைக் காண்பிக்க முற்பட்டனர்.
இன்று நாட்டில் ஷீயாக்கள் பற்றி ஏற்பட்டுவரும் விழிப்புணர்வை அழிப்பதற்கு முயல்வது போன்ற முயற்சியில் அறிவிப்பாளரும் ஈடுபடுவதுபோல் தெரிந்தது. அதற்கு உதவியாக அஷ்ஷெய்க் ரவூப் ஸய்ன், அஷ்ஷெய்க் M.P.M. இத்ரீஸ் ஆகியோர் தமது கருத்துக்களை சமூகமயப்படுத்திச் சென்றதைக் காணக் கூடியதாக இருந்தது. "வஹாபிஸத்தைப்" பற்றி மிகக் காரமாக விமர்சிக்கும் அஷ்ஷேய்க். ரவூப் ஸய்ன், அஹ்லுஸ் ஸுன்னா அகீதாவிலே முரண்பட்ட ஷீயாக்கள் பற்றி இவ்வாறான மிகவுமே இலகு நிலையில் கருத்துச் சொல்வதன் பின்னணி தான் என்ன?
எனவே, இவர்கள் யார்? எவர்களுக்காக செயல்படுகின்றார்கள்? என்ற கேள்வி எழுகின்றது.
எனவே, இவர்கள் யார்? எவர்களுக்காக செயல்படுகின்றார்கள்? என்ற கேள்வி எழுகின்றது.
குறிப்பாக ஈராக்கில் "ஷீயாக்களும் ஸுன்னிகளும்" திருமணத்தில் இணைந்து ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் இன்று இது பிரச்சினையாகி மக்கள் மத்தியில் அந்த அன்னியோன்னியம் மறைந்து விட்டதாகவும் கூறும் இவர்கள். அந்தந்த நாட்டுக்கு ஏற்றாற் போல செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இப்படியான கருத்துக்களை விதைப்பதன் நோக்கம் என்ன? இலங்கையில் ஷீயாக்கள் அன்னியோன்னியமாக வாழ்கிறார்களா? அல்லது அவர்கள் செய்கின்ற ஊடுருவல்களை சமூகத்துக்கு எடுத்துக் காட்டும் கடமை இவர்களுக்கு இல்லையா? அல்லது ஷீயாக்களையும் ஒரு தனிப்பட்ட இயக்கம் போல் காட்டி, மக்களால் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களுக்கு 'இது ஒரு சாதாரண இயக்கம், அகீதாவில் பிரச்சினையில்லை என்று சொல்லி' ஷீயா கருத்துக்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கின்றார்களா? இந்த அஷ்ஷெய்க் ரவூப் ஸய்ன், அஷ்ஷேய்க். M.P.M.இத்ரீஸ் ஆகியோர். இவை விடை தேட வேண்டிய முக்கிய கேள்விகளாகும். இவர்களில் யாரேனும் விளக்கம் தருவார்களா?
ஆக்கம்.
Sali Firdows
Sali Firdows
0 comments:
Post a Comment