கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கபூரியா அரபுக் கல்லூரியின் மற்றுமொரு பெருந்தன்மை.

இலங்கையில் அண்மைக் காலமாக ஷீயாக்களுக்கு எதிரான கோசங்கள் அதிகரித்திருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றன. இதற்க்கு முக்கிய காரணம், திரைமறைவில் இருந்து கொண்டு செயற்பட்டு வந்த ஷீயாக்கள், அண்மைக் காலமாக மட்டக்கிளப்பில் கல்குடா பிரதேசத்தில் அமைந்திருக்கும் மன்பவுல் ஹுதா என்ற அரபு மதரசாவில் பகிரங்கமாக ஷீயாக்களை உருவாக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இதற்க்கு ஊர் மக்கள்,,மஹல்லா வாசிகள், உலமா சபை கடும் எதிர்ப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இங்கே கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் , இது ஷீயா கருத்துக்களை போதிக்கும் மதரசா என அடையாளம் காணப்பட்டதும், தற்போது தமது பிள்ளைகளை அந்த மத்ரசாவில் தொடர்ந்து கற்பதை விட்டும் இடை நிறுத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
இந்த பெற்றோரிகளின் நியாயமான ஆதங்கங்கள் :
• அந்த மதரசாவில் ஒரு வருடம் , இரு வருடம் , மூன்று வருடங்கள் அல்லது இதற்க்கு மேல் பல வருடங்கள் கல்விகற்று, இடை நிறுத்தப் பட்டிருக்கும் இந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக இருக்கின்றது.
• இவர்கள் தமது கல்வியை எவ்வாறு தொடர்ந்து மேற்கொள்வது.
• இவர்களுக்கு ஷீயா முத்திரை குத்தப்பட்டுள்ளது அதை எவ்வாறு நீக்குவது
இது போன்ற மன உளைச்சல்களுக்கு அந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் தள்ளப் பட்டு இருக்கின்றார்கள்.
இவர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி
மகரகமையில் அமைந்திருக்கும் கபூரியா அரபுக் கல்லூரி இவர்களுக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளது. இந்த மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு, இடையில் தமது கல்வியை நிறுத்திக் கொண்ட அந்த மாணவ செல்வங்கள் கல்வியை தொடர்வதற்கான வசதி வாய்ப்பினை செய்து கொடுப்பதற்கு அவர்கள் முன் வந்துள்ளார்கள்.
இதில் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
0777273177, 0772370016, 0772907803
இதனை share செய்வது அந்த பிள்ளைகளின் கல்விக்கு எங்களால் ஆன உதவியாகும்.
செய்தியை மஹரகம கபூரியா அரபுக் கல்லூரியின் ஆசிரியரிடம் உறுதிப்படுத்திய பின்னரே இங்கு பிரசுரிக்கிறேன்.

0 comments:

Post a Comment