கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பெண்ணுக்கு உதவிய சோங்கா : பாராட்டும் இணைய உலகம்

பந்து எடுத்து கொடுக்கும் இளம்பெண்ணுக்கு செய்த உதவியால் சமூக வலைதளங்களில் புகழ்ந்து பேசப்படும் வீரராக டென்னிஸ் வீரர்  ஜோ-வில்பிரட் சோங்கா  காணப்படுகின்றார்.
டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 9ஆம் இடத்தில் உள்ள பிரெஞ்சு வீரர் ஜோ-வில்பிரட் சோங்காவுக்கும் அவுஸ்திரேலியா வீரர் ஒமர் ஜெசிகாவுக்கும் இடையேயான போட்டி அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்தது.
இந்த போட்டியின் போது, ‘போல் கேர்ள்’ என்று அழைக்கப்படும் வீரர்களுக்கு பந்தை எடுத்துக் கொடுக்கும் பணியில் உள்ள இளம்பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதை புரிந்து கொண்ட ஜோ, அவருக்கு ஆறுதல் கூறி மைதானத்திற்கு வெளியே கொண்டு சென்று பணியாளர்களிடம் ஒப்படைத்துள்ளார். 
பரபரப்பான போட்டியின் போதும், சக மனிதருக்கு உதவிய ஜோவை பாராட்டும் வகையில் அரங்கில் இருந்த ரசிகர்கள் கை தட்டி ஆர்ப்பரித்தனர். 

0 comments:

Post a Comment