சமூகப் பிரச்சினை பற்றிய இரு நண்பிகளுக்கிடையேயான ஒரு கருத்துப் பறிமாற்றம்.
அஸ்ஸலாமு அலைக்கும் மஹ்தியா, எப்படி சுகமாக இருக்கியா. வ அலைக்கும் முஸ்ஸலாம் நபீஸா, நல்ல சுகம், என்னடி விசேஷம். மபாஸ் எங்கடி. பெருசா ஒன்றும் இல்லடி வழமையப் போலதான் மச்சான் கடைக்குப் போயிட்டாங்க. மனசுக்கு கொஞ்சம் கஸ்டமா இருந்திச்சு அதான் உனக்கிட்ட பேசினா ஆறுதலாக இருக்குமே என்று கோல் எடுத்தேன்.
சொல்லுடி என்ன பிரச்சினை.
இல்லடி நம்மட கண்ணுக்கு முன்னால நம்மள விட சின்னச் சின்னப் பிள்ளைகள் எல்லாம் ஒன்றிரன்டு பிள்ளைகளோட புரிசன இழந்துட்டு தன்னந் தனியா வாழ வழி தெரியாமல் தவிச்சுட்டு இருக்கிறதப் பார்த்தா வேதனையா இருக்குடி. நேற்றும் வலீமா ஒன்றுக்கு ஊருக்கும் போயிருந்தேன் அங்கயும் ஒரு பிள்ளைய சந்திக்க நேரிட்டது. ஒரு மாதம்தான் வாழ்க்கையாம் பிரிஞ்சுட்டு பாவம்டி நினைச்சா கவலையா இருக்கு.
அதுக்கு நாம என்னடி செய்யுற அல்லாஹ் அவங்கட தலையில அப்படித்தான் எழுதி வச்சிருக்கான். இல்லடி அப்படி முழுசா சொல்லிட்டு நாம தப்பிக்க முடியுமா. அல்லாஹ் நமக்கிட்ட கேள்வி கேட்கமாட்டானா.
கிறுக்காடி உனக்கு அல்லாஹ் நமக்கிட்ட என்ன கேள்வி கேட்குற சும்மா உளரிட்டு இருக்காம இருக்கிற வேலயப் பாரு
இல்ல மஹ்தியா இந்த மறுமணம் சம்பந்தமாத்தான் எனக்கு ஒரே கொளப்பமா இருக்கு நாம நல்லாத்தான் வாழுரோம் புரிசன் பிள்ளை குட்டி என்று அல்லாஹ் அனுமதிச்சதும் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டியதும்தானே இந்த மறுமணம் சஹாபிப் பெண்கள் எல்லாம் எப்படி கணவனைப் பகிர்ந்து விட்டுக் கொடுத்து என்னமா வாழ்ந்திருக்காங்க. ஏன் நம்மளுக்கு அப்படி பகிர்ந்துகொள்ள முடியுதில்ல. எவ்வளவுதான் அல்லாஹ் ரசு+ல் என்று வாழ்ந்தாலும் இந்த ஒரு விசயத்துல நம்மளால முழுசா ஏற்றுக் கொள்ள முடியல்லியே.
அது இப்படித்தானடி சஹாபிப் பெண்கள் தூய்மையா இஸ்லாத்தையும் நபியவங்களையும் ஏற்றுக்கொண்டவங்க. அவங்க மார்க்கத் தூய்மை நம்மளுக்கு வருமா? நாம எவளெவலுக்கு பொறந்தோம் என்று யாருக்குடி தெரியும் இவளுகள் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்று புரிசன் செத்தா உடன்கட்டை ஏறினவளுகள் அவளுகள்ட ரெத்தம் கொஞ்சமாவது நம்மட ஒடம்புல ஓடாமலா இருக்கும்.
சரி நம்மளால முடிஞ்சளவுக்கு சின்னதா ஒரு பண உதவியாவது செய்வோம் என்று நினைத்தா அதுவும் போதாது என்று டாக்டர் ஷாகிர் நாயக் அடிச்சி சொல்லுரார்டி. பெண்ணுரிமை சம்பந்தமான அவருடைய சீ.டி. பார்த்தாயா நீங்க மாசம் முப்பது ஆயிரம் கொடுத்தாலும் அதையும் தாண்டி அவர்களது உடலியல் உழவியல் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது இதற்று தீர்வு மறுமணம் ஒன்றேதான் என்று.
உண்மைதானடி அவர் சொல்றது நமக்குத் தெரியாதா? நம்மட மச்சான் ஒரு நாளுக்கு கொழும்புக்கு போனா அன்றைக்கு முழுக்கவே தூக்கம் வரமாட்டேங்குது. இத ஆயுளுக்கும் அனுபவிக்கிற பெண்கள நினைத்தா பாவமாத்தான்டி இருக்குது. அதான் இப்பெல்லாம் இந்த பேஸ்புக்ல நிறைய நல்ல சமூக சேவையெல்லாம் நடக்குதே மெதுவா வாழப்பழத்துல ஊசிய ஏத்துரமாதிரி இந்த மெஸேஜ சொல்லுவோம் என்று ஒன்றிரண்டு ஸ்டேட்டர்ஸ் போட்டேன்டி.
யா ரப்பு என்ன சோதனை உடனே கொமென்ஸ்சுலயும், இன்பொக்ஸ்லயும் ஒவ்வொருத்தனா வந்து ஒவ்வொன்றா சொல்லி என்ன பின்னி எடுத்துட்டானுவள்டி. போதாதற்கு ஒருத்தன் தனியா ஸ்டேட்டர் வேற போட்டுட்டான்டி. மார்க்க விடயங்களில் இளைஞர்களுடன் மல்லுக்கட்டும் நபீஸா எம். மபாசுக்கு இரங்கல் ஒன்றே தெரிவிக்க முடியும் என்று செத்தவளுக்கு போட்டாப் போல் போட்டு என்ன சாடிச்சிட்டுனுவள்டி.
ஆனாலும் அதில் பல கருத்துக்களை என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது. ஒவ்வொருத்தனும் ஒவ்வொன்றா சொன்னானுவள். பொருளாதரப் பிரச்சினை, சமூக அந்தஸ்த்து, ஒரு பெண்ணை சஞ்சலப்படுத்தி இன்னொரு பெண்ணுக்கு வாழ்வு கொடுக்கிறதா நீங்க விட்டுக்கொடுப்பீங்களா இப்படியாக பல்வேறு கருத்துக்கள் அவர்களுடைய நியாயங்களை கொஞ்சம் ஏற்றுக்கொள்ளத்தான் வேணும்.
இருந்தாலும் ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் தாடனடி முடிவெடுக்கணும் அல்லாஹ் ரசூல் என்று வந்துட்டா உம்மா வாப்பா என்று கொள்கைய விட்டுக் கொடுக்க முடியாதுதானே. நாளை மறுமை நாளில் உம்மா வாப்பாவெல்லாம் பதில் சொல்லவாங்களா? அவரவர் பகுத்தறிவைக் கொண்டுதானே விசாரிக்கப்படும் அங்கு எதையும் மறைக்க முடியாதே. உதடுகளுக்கு முத்திரையிட்டு உள்ளங்களைப் பேச வைப்பேன் என்றுதானே அல்லாஹ் சொல்ரான். அப்ப என்னடி சொல்லுவாங்க இவங்களெல்லாம். சரி அதையும் ஏற்றுக் கொள்வோம் ஏன்டி இவங்கல்லாம் ஒரு பொன்டாட்டிய வச்சிட்டு இன்னொரு கல்யாணம் முடிக்கிறதாலதான் இப்படியெல்லாம் பிரச்சினை வரும் ஆனா புதிசா திருமணம் முடிக்கிற ஆண்கள் இப்படியான பிள்ளைகளை முடிச்சா இந்தப் பிரச்சினையெல்லாம் வராதுதானடி. நபி (ஸல்) அவர்களும் நபித்துவம் கிடைக்கிறதற்கு முன்னமாகவே விதவையைத்தானடி முடிச்சாங்க. இவ்வளவும் ஏன் நம்மட அன்சார் நாநாவத் தெரியும்தானேடி நம்மளோட வேலை செஞ்சாரு அழகிருந்தும் அறிவிருந்தும் அரசாங்க உத்தியோகம் இருந்தும் ஒரு பிள்ளைக்குத் தாயான பெண்ணைத்தானே திருமணம் முடிச்சாரு இப்ப அவருக்கு ரெண்டு பிள்ளைகள் மொத்தம் மூணு பிள்ளைகள் அவரு சந்தோஷமாக வாழல்லியா. உனக்குத் தெரியுமா பொண்டாட்டி ஏதோ டிக்கிரி செய்யணுமாம் என்று இப்ப வேலய நோ-பே போட்டுட்டு இந்தியாவுக்கு போய் அவவ கொலீஜூக்கு அனுப்பிட்டு வீட்டுல பிள்ளைகளப் பார்த்துட்டு இருக்கிறார்டி.
அவர் நல்ல மனுசன் தெரியாதா உனக்கு அல்லாஹ்வுக்கு பயந்தவரு, ஐந்து வக்தும் நேரத்துக் நேரம் என்னமா தொழுவாரு ஒருத்தருக்கும் மனசு நோவுறமாதிரி பேசமாட்டாரு எல்லாருக்கும் எப்படியெல்லாம் உதவி செய்வாரு அவரப்போல எல்லாரும் வருவாங்களாடி. ம்ஹ்ம் என்ன செய்யுற யாருக்கிட்டயும் எதும் பேச முடியல்ல அதான் சும்மா உனக்கிட்ட சொன்னா கொஞ்சம் பாரம் குறையும் என்று பேசிட்டேன். நீயும் யாருக்கிட்டயும் எதுவும் சொல்லாத. அல்லாஹ்தான் எல்லாருடைய உள்ளங்களிலும் தூய்மையான ஈமானை தர வேண்டும் என்று பிரார்த்திப்போம்.
சரி மஹ்தியா சமைக்கணும் வைக்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வ அலைக்கும் முஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ். ஜதாகுமுல்லாஹ்:- அபூ ஸுமையா
0 comments:
Post a Comment