பரபரப்பு தீர்ப்பு! மகிந்தவுக்கு மூன்றாவது தடவையும் முடியும்
மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்று உயர் நீதிமன்றம் உத்தியோக பூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அலரி மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில்,
அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தின் பிரகாரம் மற்றுமொரு தடவை தேர்தலில் போட்டியிடுவதற்கு இடையூறு இல்லை என்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவித இடையூறும் இல்லாம் தேர்தலில் போட்டியிட முடியும் என உயர் நீதிமன்றத்தின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்துக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment