இஸ்லாம் தாய்மையை மிக உயர்வாக மதிக்கிறது, பெண்ணியவாதிகளுக்கு அது புரியாது - எர்துகான்
பெண்களை ஆண்களுக்கு நிகராக நடத்த முடியாது என்று துருக்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்துகான் குறிப்பிட்டுள்ளார். பெண்ணியவாதிகள் தாய்மையை நிராகரிப்ப தாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஸ்தன்பு+லில் மாநாடொன்றில் உரையாற்றிய எர்துகான், "பெண்களையும் ஆண்களையும் ஒரே நிலையில் வைக்க முடியாது. அது இயற்கைக்கு முரணானது" என்றார்.
இஸ்லாத்தில் தாய்மைக்கு அளிக்கும் மதிப்பை பெண்ணியவாதிகள் புரிந்துகொள்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எர்துகானின் கருத்து அவரது ஆதரவாளர்களால் வரவேற்கப்படும்போதும் மிதவாதிகள் அவரின் கருத்துகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். இது நாட்டை அபாயகரமான இலக்கை நோக்கி இட்டுச் செல்வதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
முன்னதாக கருக்கலைப்பு மற்றும் மகப்பேற்று அறு வைச் சிகிச்சை முறைக்கு எதிர்ப்பு வெளி யிட்டிருந்த எர்துகான், பெண்கள் மூன்று குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
ஸ்தன்பு+ல் நகரில் நடந்த பெண்களின் மாநாடொன்றிலேயே அவர் இந்த புதிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
"தொழில் புரியும் இடத்தில் ஒரு ஆணையும் கர்ப்பமுற்ற ஒரு பெண்ணையும் ஒரே இடத்தில் வைத்து நடத்த முடியாது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"ஆண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் பெண்களால் செய்ய முடியாது. ஏனென்றால் அது அவர்களது மென்மையான தன்மைக்கு எதிரானதாகும். எமது மதம் தாய்மையை மிக உயர்வாக மதிக்கிறது. பெண்ணியவாதிகளுக்கு அது புரியாது. அவர்கள் தாய்மையை நிராகரிக்கின்றனர்" என்றார் எர்துகான்.
சம இடம் என்பதை விட பெண்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இந்த நீதிதான் இனவாதம், யு+த எதிர்ப்பு மற்றும் பெண்களின் பிரச்சினை உட்பட உலக பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் இருக்கும் என்று ஸ்தன்பு+ல் மாநாட்டில் எர்துகான் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய பின்னணி கொண்ட துருக்கி அரச தலை வரின் கருத்து அடிக்கடி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இம்மாத ஆரம்பத்தில் அவர் வெளி யிட்ட கருத்தில், கிரிஸ்டோபர் கொலம்பஸ{க்கு 300 ஆண்டு களுக்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவை கண்டு பிடித்ததாக குறிப்பிட்டார்.
எர்துகானின் 11 ஆண்டு ஆட்சியில் துருக்கி பிராந்தியத்தின் தீர்க்கமான சக்தியாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment