கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

என்னை நாசமாக்க பார்க்கிறீர்களா...? பௌத்த தேரரிடம் சீறிப்பாய்ந்த மஹிந்த...!

பொதுவேட்பாளரை நிறுத்தும் மாதுளவாவே சோபித தேரரின் முயற்சிகள் காரணமாக அச்சமடைந்த ஜனாதிபதி அவரை அழைத்து பேச்சுக்களை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
வாராந்தர அமைச்சரவை மாநாடு முடிவடைந்த பின்னர்,அமைச்சர் நிமால் சிறிபாலசில்வாவுடன் ஜனாதிபதி ஜனநாய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலெஸின் வீட்டிற்கு சென்றார், அங்கு செல்வதற்கு முன்னதாகவே சோபித தேரரை அங்கு வருமாறு செய்தியொன்றை அனுப்பியிருந்தார்.

ஜனாதிபதி டிரான் அலஸ் வீட்டிற்கு சென்ற வேளை அங்கு ஏற்கனவே கோத்தாபயவும் பிரசன்னமாகியிருந்தார். பின்னர் தேரரும் வந்து சேர்ந்தார். தேரரை பார்த்து ஆவேசப்பட்ட மகிந்த என்னை நாசமாக்க பார்க்கிறர்களா என கேட்டார்

இதற்கு பதிலளித்த தேரர் தான் தனிநபர் ஒருவருடனும் போட்டியிட முயலவில்லை என்றும் நீதியான சமூகத்தை ஏற்படுத்தவே முயல்வதாகவும் குறிப்பிட்டார். இதன்பின்னர் பதிலளித்த ஜனாதிபதி தான் மீண்டும் பதவியேற்று ஆறு மாதகாலத்திற்குள் நிறைவேற்று அதிகார முறைநீக்கம் உட்பட தேரரின் சகலவேண்டுகோள்களையும் நிறைவேற்றுவதாக தன்னால் உறுதிமொழி வழங்க முடியும் என்றார்.

இதற்கு பதிலாக பொதுவேட்பாளர் என்ற திட்டத்தை கைவிடுமாறு ஜனாதிபதி சோபிதரை கேட்டுக்கொண்டார். சோபித தேரர் தான் இது குறித்து தனியாக முடிவெடுக்க முடியாது எனவும் தனது அமைப்பினருடன் கலந்தாலோசித்து விட்டு வருவதாகவும் தெரிவித்தார். GTN

0 comments:

Post a Comment