கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

நாடாளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் எதிர்க்கட்சி - அமைச்சர்களை நியமிப்பதில் சிக்கலை எதிர்நோக்கும் மஹிந்த

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் தருவாயில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு ஆதரவு வழங்கி எதிரணியில் இணைய அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்களவானோர் தயாராகி வருகின்றனர். மேலும் சிலரது ஒத்துழைப்புகளை பெறுதற்காக தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அரசாங்க பலத்தை இழக்கும் நிலைமையில் நாடாளுமன்றத்தை கலைக்கும் செயற்பாடுகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை தவிர்க்க தேவையான சகல திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலைமையை கவனத்தில் கொள்ளவில்லை என்றால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும் அதேவேளை பெரும்பான்மை பலத்தில் பிரதமரை தெரிவு செய்யவும் எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.
அதேவேளை வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் முறை வசிப்பின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற அரசாங்கம் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது.
வெளியேற போவது யார்?- அமைச்சர்களை நியமிப்பதில் சிக்கலை எதிர்நோக்கும் ஜனாதிபதி
எதிர்க்கட்சிகளுடன் இணைய போவது யார் என்பது அறிந்து கொள்ள முடியாத காரணத்தினால் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வதில் ஜனாதிபதி சிக்கலை எதிர்நோக்கி வருவதாக அரசாங்கத்தின் உள்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
72 மணிநேரத்திற்குள் அமைச்சரவையில் மாற்றங்கள் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முதல் கட்டமாக அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்படும். எனினும் அமைச்சு பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டியவர்களை தெரிவு செய்ய முடியாத சிக்கலை ஜனாதிபதி எதிர்நோக்கியுள்ளார்.
எதிரணியில் இணைய போவது யார் என்பதை அறிய முடியாததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த விடயம் சம்பந்தமாக புலனாய்வு பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளை அழைத்து ஜனாதிபதி கடுமையாக சாடியுள்ளார்.
அதேவேளை பிரதமர் பதவியில் இருந்து டி.எம். ஜயரத்னவை நீக்கி விட்டு வேறு ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவதை சுதந்திரக் கட்சியில் எஞ்சியிருக்கும் நபர்கள் எதிர்த்துள்ளனர்.
அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு வேறு ஒருவரை நியமித்தால், ஜயரத்னவுக்கு ஆதரவானவர்கள், ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரதமரின் புதல்வராக அனுராத ஜயரத்னவும் அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் ஜனாதிபதிக்கு, ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் நாள் வரையில் அமைச்சரவையில் மாற்றங்களை செய்வதை தவிர வேறு வேலைகளை செய்ய நேரம் இருக்காது என எதிர்க்கட்சிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்காக வாரம் தோறும் அதிகளவானோர் அரசாங்கத்தில் இருந்து வெளியேற உள்ளதே இதற்கு காரணம் எனவும் எதிர்க்கட்சிகளின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன
tamilwin

0 comments:

Post a Comment