கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சிங்கள, முஸ்லிம் "மாணவா்களை கௌரவிக்கும் விழா " இமாம் ஷாபி நிறுவனத்தின் ஏற்பாட்டில்

2014, 5ம் ஆண்டுப் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் திறமை காட்டிய சிங்கள, முஸ்லிம் மாணவ மாணவிகளை கௌரவிக்கும் விழா ஒன்றை கஹடோவிட இமாம் ஷாபி நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிகழ்வு எதிர்வரும் 2014.11.22ம் திகதி சனிக்கிழமை மு.ப. 9.30 மணிமுதல் பி.ப 12.30 வரை  கஹடோவிட பாலிகா வித்தியாலய வளாகத்தில் நடைபெறவிருப்பதாகவும்,

பிரதம அதிதிகளாக வை.எல்.எம் நவவி  சிரேஷ்ட உதவிச் செயலாளர்,  உயர் கல்வி அமைச்சு அவர்களும்,
மற்றும் அஜித் விஜேசுன்தர கோட்ட கல்விப் பணிப்பாளா்- அத்தனகல்ல,
தம்மிக ஜயசிங்க- விரிவுரையாளர் ருஹுனு பல்கலைக்கழகம்,
சுசில் சிரிசேன- விரிவுரையாளர் கல்விக் கல்லூரி மீரிகம.

விசேட உரை மௌலவி மாஹிர் ரம்டீன் அவர்களால் நிகழ்தப்படவள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. 

0 comments:

Post a Comment