கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

குழந்தைகளின் மனதில் ஜாஹிலியத்தை புகுத்தும் பாலர்பாடசாலைகள் எமது சமூகத்தின் சாபக்கேடா?

கடந்த சில தினங்களாக வருடாந்தம் நடாத்தப்படுகின்ற சிருவர் பாலர்பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டிகள், பயிற்சி அரங்கேற்றங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த அரங்கேற்றங்களுடன் நைடைபெறுகின்ற எமது கலாச்சாரத்துக்கு முரணான பலவிடங்களை நாம் ஏலவே பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறோம். ஆனால் இந்த சீரழிவுகள் பற்றி இம்முறை சற்று வித்தியாசமாக ஆங்காங்கே சந்து பொந்துகளில் எல்லாம் பொதுமக்களின் குரல்கள் ஒலித்திக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.


“எவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறெவரும் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக, ‘வீணான செய்திகள்’ என்பது  இசை கலந்த பாடலையே குறிக்கிறது.” என்று இப்னு மஸ்ஊத் (ரழி) கூறுகிறார். (இப்னு அபீஷைபா-21130)  இப்படி இஸ்லாம் சொல்லியிரக்க எமது ஊரில் இஸ்லாமிய வழிகாட்டல்களை போதிக்க வந்த ஒரு இஸ்லாமிய இயக்கத்தின்  வழிகாட்டலில் இயங்கும் ஒரு பாலர்பாடசாலையின் நிலைமை (?) வாா்த்தைகளால் சொல்லமுடியாது. அப்படிப்பட்ட சினிமா விபச்சாரிகளின் பாட்டை ஒலிபரப்பிக்கொண்டிருந்தது. இதை எந்த வித கூச்ச சுபாவமும் இல்லாம் அனைவரும் ரசித்துக்கொண்டிருந்தார்கள். இது இஸ்லாத்தை வாழவைக்க வந்த ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் நிலை என்றால் மற்றவர்களின் நலை எப்படியிருக்கும்.

மனிதன் இறந்துவிட்டால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகிறது. (அவை) நிரந்தர தர்மம், பயன்தரும் கல்வி, அவருக்காக துஆச் செய்யும் சாலிஹான குழந்தை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி); ஆதாரம் : முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களின் எத்தனை அழகான ஒரு அறிவுரை! நாம் நம்முடைய குழந்தைகளை மார்க்க போதனைகளுடன் வளர்த்து இருந்தால், நாம் இறந்தபிறகு, நமக்காக நம் குழந்தைகள் கேட்கக்கூடிய துஆக்கள் மூலம், மறுமை நாள்வரை நமக்கு நன்மைகள் வந்துக்கொண்டே இருக்கும் என்பதில் ஏதாவது மாற்றுக் கருத்து உண்டா?

பெற்றோர்களின் பங்கு இப்படியிருக்க எமது பாலர்பாடசாலைகளில் கல்வி பயிலச் செல்லும் பிஞ்சு உள்ளங்களில் பதியவைப்பது இந்த ஜாஹிலிய சித்தார்ந்தங்கள்தான்.  நம்முடைய குழந்தைகளிடம் ‘சிறந்த’ (சுவர்க்கவாசிகள் என நபி (ஸல்) அவர்களால் நன்மாராயம் கூறப்பட்ட) சஹாபாக்களின் பெயர்கள் கேட்கப்பட்டால், பதில் கூறக்கூடியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்! ஆனால் ‘டொப் டென்’ சினமாவோ அல்லது பாடலோ கேட்கப்பட்டால் பதில் கூறாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்!  இந்த நிலைமைகள் தான் எமது சமூகத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பதைப் போல் தென்படுகிறது. இதற்காக பெருமைப் படக்கூடிய பெற்றோர்களும் நம்மிடையே இருக்கின்றனர் என்பதுதான் இதிலே வேதனையான விஷயம்! இதுபோன்ற தவறான செயல்களில் ஆர்வமூட்டுவதன் மூலம், நம்முடைய குழந்தைகளை நாமே படுகுழியில் தள்ளியவர்களாக ஆகிவிடுகிறோம் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

எனவே, குழந்தைகளை நல்ல முறையில், இஸ்லாமிய வழிமுறைகளில், வளர்க்க வேண்டிய பொறுப்பு கண்டிப்பாக ஒவ்வொரு பெற்றோருக்கும் அதேபோன்று ஆசிரியர்களுக்கும் இருக்கின்றது என்பதை மறந்து விடவேண்டாம். அவ்வாறு வளர்த்து விட்டால், நாம் நம்முடைய பொறுப்பு மற்றும் அமானிதத்தை நிறைவேற்றி விட்டதோடு அல்லாமல், நம்முடைய குழந்தைகள் நமக்கும் மற்றும் நம் சமுதாயத்திற்கும்
நம் குழந்தைகளுக்கு இஸ்லாமிய அடிப்படை விஷயங்களான பெற்றோர்களைப் பேணுதல், நேர்மை, உறவினர்களுடன் நடந்துக்கொள்ளும் முறை, அமானிதங்களைக் கடைப்பிடிப்பது, தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதுடன் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறையில் குடித்தல், உண்ணுதல், பேசுதல், போன்றவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த அடிப்படையில் வளர்க்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்களான பிறகு அவர்களின் செயல்பாடுகள், அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக அமைவதோடல்லாமல் இறைவன் தன் திருமறையில் கூறியிருப்பது போல நம்மையும் நம்முடைய குழந்தைகளையும் நரகநெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொண்டவர்களாக மாறிவிடலாம்.

அன்பான ஆசான்களே, பெற்றார்களே வளரும் பிஞ்சுகளிற்கு முதலில் இஸ்லாத்தைக் கற்றுக் கொடுங்கள். செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கோசையைப் போன்று இஸ்லாமிய போதனைகளை ஆக்கவேண்டாம். அது விடயத்தில் நீங்கள் முன்மாதிரிகளாகவும் இருங்கள். இன்ஷா அல்லாஹ் அறிவிற் சிறந்த நல்லெழுக்கமுள்ள மாணவச் செல்வங்களைக் கொண்ட ஊரைக் காண்பீர்கள். ஒரு சமூகத்திலுள்ளவற்றை அவர்களாக மாற்றிக் கொள்ள முயலாவிட்டால் அல்லாஹ்வும் மாற்ற மாட்டான் (அல் குர்ஆன்)

0 comments:

Post a Comment