கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பின்லேடனை சுட்டு வீழ்த்தியவரின் பெயரும் போட்டோவும் திடீரென வெளிப்பட்டது.

அமெரிக்கா வெளிநாட்டு வி.ஐ.பி.களை ‘போட்டுத் தள்ளும்’ ஆபரேஷன்களை செய்யும் அதிரடிப்படை குரூப்புகள் பற்றி இதுவரை இருந்த முக்கிய பிளஸ் பாய்ன்ட் – ‘ரகசியம் காத்தல்’ அது இப்போது மாறத் தொடங்குகிறது. 


பல வெளிநாடுகளில் அதிரடி ஆபரேஷன்களில் அமெரிக்க கடற்படையின் சீல் (SEAL) டீம்கள், ஈடுபட்டுள்ளன. SEAL என்பது எதைக் குறிக்கிறது என்றால், SEa, Air and Land. கடல், வான், மற்றும் தரையில் அதிரடியாக தாக்குதல் நடத்தி ‘காரியத்தை முடிக்க’, பயிற்றுவிக்கப்பட்ட ஆட்கள் இவர்கள். 

இந்த அதிரடி தாக்குதல் பயிற்சியைவிட மற்றொரு முக்கிய பயிற்சியும் இவர்களுக்கு கொடுக்கப்படுகிறது – அது, ரகசிய ஆபரேஷன்கள் பற்றிய ரகசியம் காக்கும் பயிற்சி!

 பின்லேடன் ஆபரேஷனில், முதல் பயிற்சி வெற்றிகரமாக நடந்திருக்கிறது – அதிரடியாக சென்று பின்லேடனை கொன்றார்கள். 

இரண்டாவது பயிற்சி சறுக்கி விட்டது – அந்த ஆபரேஷன் பற்றிய விபரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டுள்ளன.

 பின்லேடனை கொல்ல சென்ற டீமைச் சேர்ந்த ஒருவர் எழுதிய புத்தகம் (No Easy Day: The Firsthand Account of the Mission That Killed Osama Bin Laden) வெளியானது. டிஸ்னி நிறுவனத்தின் திரைப்படம் Zero Dark Thirty வெளியானது, எஸ்கொயரில் நீளமான, விரிவான பேட்டி ஒன்று வெளியானது. 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது, பின்லேடனின் தலையில் சுட்டு வீழ்த்தியவரின் அடையாளமே வெளியாகியுள்ளது! ராபர்ட் ஓ’நீல். 2011-ம் ஆண்டு ஒரு நள்ளிரவு கடந்த நேரத்தில் பாகிஸ்தானில் இருந்த பின்லேடனின் ரகசிய மறைவிடத்துக்கு ஹெலிகாப்டரில் போய் இறங்கிய 23 பேரடங்கிய சீல் டீமில் இவரும் ஒருவர். இந்த 23 பேரும் அந்த வீட்டின் வெவ்வேறு பகுதிகளில் தேடுதல் நடத்திய நிலையில்… ஒரு ரூமில் பின்லேடனை பார்த்தவுடன் சுட்டு வீழ்த்தியவர் இந்த ராபர்ட்தான். 

எஸ்கொயரில் வெளியான நீளமான, விரிவான பேட்டி பற்றி குறிப்பிட்டிருந்தோம் அதில் “சுட்டவர்” (“the Shooter”) என அடையாளம் வெளியிடப்படாமல் குறிப்பிடப்பட்டவர் இந்த ராபர்ட் ஓ’நீல்தான். இப்போது இவரே திரையை விலக்கி, தமது முகத்தை காட்டியுள்ளார் (மேலே போட்டோ பார்க்கவும்). தமது அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார். ராபர்ட் ஓ’நீல், அமெரிக்கா மொன்டானா மாநிலத்தின் உள்ள புட்டே என்ற சிறு நகரத்தை (ஜனத்தொகை வெறும் 35,000) சேர்ந்தவர். 20 வயதில் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து, 17 ஆண்டுகளின் பின் ஓய்வு பெற்ற இவருக்கு இப்போது வயது 38. 

இவர் தமது அடையாளத்தை வெளிப்படுத்தும் பேட்டி ஒன்றை பாக்ஸ் நியூஸ் சேனலில் கொடுப்பதாக இருந்தது (அந்தப் பேட்டி அடுத்த வாரம் வெளியாகவுள்ளது) அதற்கிடையே, அமெரிக்க சிறப்பு அதிரடிப்படையினருக்கான இணையதளம் ஒன்றில் இவரது அடையாளம் வெளிப்படுத்தப்பட்டது. 

பின்லேடனை சுட்டு வீழ்த்தியது தாம்தான் என்று இவர் ஏன் தம்மை வெளிப்படுத்திக் கொண்டார்? இதே கேள்வியை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை இவரிடம் கேட்டபோது கிடைத்த பதில், “என்னுடைய அடையாளம் லீக் ஆகப் போகிறது என தெரிந்தது. மற்றவர்கள் லீக் செய்வதைவிட நானே, என்னை வெளிப்படுத்திக் கொண்டேன்” 

viruvirupu

0 comments:

Post a Comment