கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

வாயை மூடிக்கொண்டிருக்க மேலிடம் உத்தரவு! வாலைச்சுருட்டிக் கொண்ட ஞானசார

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார எதுவித அரசியல் கருத்துக்களையும் வெளியிடக் கூடாது என்று மேலிடத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் உருவாக்கத்தினூடாக சிங்கள பௌத்த வாக்குகளை தொடர்ந்தும் தம்வசம் வைத்திருக்கும் எதிர்பார்ப்பு கோத்தபாய உள்ளிட்ட ராஜபக்ஷவினருக்கு இருந்தது.

எனினும் அந்த எதிர்பார்ப்பில் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க கூட்டிணைவு மண்ணை அள்ளிப் போட்டுள்ளது. இதனை நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஞானசார தேரர் பகிரங்கமாவே ஏற்றுக் கொண்டிருந்தார்.

தற்போதுள்ள நிலையில் பொதுபல சேனா வெளியிடும் அரசியல் கருத்துக்கள் ஆளுங்கட்சியின் கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் தகர்த்துவிடும் என்ற பயம் ஜனாதிபதி தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இனிவரும் நாட்களில் எதுவித கருத்துக்களையும் வெளியிடாது மௌனமாக இருக்குமாறு ஞானசார தேரர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை தொடக்கம் ஞானசார தேரர் அல்லது திலந்த விதானகேவைத் தொடர்பு கொண்டு சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்துக்களை அறிய முயன்றபோதும் முயற்சி பலிக்கவில்லை. ஞானசார தேரர் தற்போது தனது மொபிடெல் இலக்கத்தை அணைத்து வைத்துள்ளார். திலந்த விதானகேவின் தொலைபேசி இலக்கத்தை பல தடவைகள் தொடர்பு கொண்டபோதும் அவர் பதிலளிக்கவில்லை.

இது தொடர்பாக ஞானசார தேரரின் உதவியாளர் ஒருவர் கருத்து வெளியிடும் போது, அரசியல் நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இன்னும் இரண்டொரு நாட்கள் வரை ஞானசார தேரர் தனது நடமாட்டங்களை மட்டுப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

tamilwin

0 comments:

Post a Comment