அதிகாரத்தை கைப்பற்றியவுடன், ராஜபக்ஷக்களின் பயில்களை இழுப்போம் - சந்திரிக்கா குமாரதுங்க
ராஜபக்ஷக்களின் பயில்களை வெளியில் எடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய 25-11-2014 தினம் மைத்திரிபால சிறிசேன ஹொரகொல்ல பண்டாரநாயக்க சமாதிக்குச் சென்றிருந்த வேளை சந்திரிக்காவும் அவர்களுடன் விஜயம் செய்திருந்தார்.
இதன்போது, அங்கிருந்த ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி கருத்து குறித்து கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளிக்கையிலேயே சந்திரிக்கா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சியை விட்டுச் செல்லும் நபர்களின் பயில் தாங்கள் வசம் இருப்பதாகவும் ஆனால் அதனைக் கொண்டு பழிவாங்கும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க மேடையில் தெரிவித்தார்.
தான் ஆதரவு வழங்கும் குழு அதிகாரத்தை கைப்பற்றியவுடன் ராஜபக்ஷக்களின் பயில்களை இழுப்போம். இப்போதைக்கு அது போதும். இது குறித்து இனி கேள்வி கேட்க வேண்டாம்´ என தெரிவித்துள்ளார்.
Jaffnamuslim
0 comments:
Post a Comment