மேலும் இரு அமைச்சர்கள் போகிறார்கள்..ஜீவன் – ஆறுமுகம் தொண்டமான் ? பரபரப்பில் கொழும்பு
அமைச்சரவை அந்தஸ்துள்ள இரு அமைச்சர்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் எந்த நேரத்திலும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களுடன் மிக பிரபலமான இரண்டு பெண் மாகாண சபை உறுப்பினர்களும் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க உள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன.
அரசாங்கத்தில் இருந்து வெளியேற உள்ள இரண்டு அமைச்சர்களில் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் 1994 ஆம் ஆண்டு கொழும்பு மாவட்டத்தின் ஊடாக அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர். குறித்த அமைச்சர் குமாரதுங்க குடும்பத்தின் நெருங்கிய உறவினர் எனவும் கூறப்படுகிறது.
மற்றைய அமைச்சர் மலையக அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர் ஏற்கனவே ஆளும் கட்சியின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அதிருப்தி வெளியிட்டு வருகிறார்.
கொழும்பு மாவட்ட அமைச்சர் பொது எதிர்க்கட்சியில் இணையும் போது அவருடன் இணைந்து இவரும் பொது எதிர்க்கட்சியில் இணைவர் என கூறப்படுகிறது.
அரசாங்கத்தில் இருக்கும் அதிருப்தியாளர்கள் படிப்படியாக பொது எதிர்க்கட்சியில் இணைவார்கள் என பொது எதிர்க்கட்சியின் பலமிக்க பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி அரசாங்கத்தில் இருந்து விலக உள்ளவர்களின் பட்டியலை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கியிருந்தார். எனினும் அந்த பட்டியலில் உள்ளவர்களின் விபரங்கள் இறுதி நேரத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கசிந்தது.
இதனையடுத்து பட்டியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை தனித் தனியாக தொடர் கொண்டு அவர்களின் குறைகளை போக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உத்தரவாதம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
puttalamtoday
0 comments:
Post a Comment