என் உயிர் இருக்கும்வரை தம்புல்ல பள்ளி அகற்றப்படமாட்டாது: ஜனக பண்டார
தான் உயிரோடிருக்கும் வரை தம்புல்ல பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்படமாட்டாது என தெரிவித்துள்ளார் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன். நேற்று பி.ப அமைச்சின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிய போது ஊடகவியலாளர் அஷ்ரப் ஏ சமத் கேட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற பிரதேசங்களின் காணி விவகாரங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டிருந்த வேளையிலேயே அமைச்சர் தம்புல்லயைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் தம்புல்ல பள்ளிவாசலின் நிலைகுறித்து வினவப்பட்டபோது அங்கு எந்த பிரச்சினையும் இல்லை. நான் உயிரோடிருக்கும் வரை அங்கிருந்து பள்ளிவாசல் அகற்றப்படாது என அவர் பதிலளித்திருந்தார்.
தம்புல்ல முஸ்லிம் சமூகத்துடன் அமைச்சர் நெடுங்காலமாக நல்லுறவைப் பேணி வரும் அதேவேளை விகாராதிபதி சுமங்கல தேரர் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-sonakar

0 comments:
Post a Comment