கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தம்புள்ளை முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்றில் சிறு அசம்பாவிதம்…சில மணிநேரங்களில் தம்புள்ளையில் ஞானசார தேரர

தம்புள்ள நகரில் “ZEE” எனும் பெயரில் இயங்கி வரும் ஆடை வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் இன்றைய தினம் வாடிக்கையாளராக வந்த சிங்கள பெண் ஒருவருடன் முறைகேடாக நடந்து கொள்ள முயற்சித்தாக கூறி சிங்களவர்கள் சிலரால் கடை ஊழியர்களை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இன்றைய தினம் ஆடையொன்றை அணிந்து பார்க்க அதற்கான அறைக்குள் சென்ற குறித்த பெண்ணிடம் ஒரு ஊழியர் முறைகேடாக நடந்து கொள்ள முயன்றதன் பின்னணியில் அப்பெண் வெளியில் சென்று ஊராருடன் அங்கு வந்து நியாயம் கோர முற்பட்டு வர்த்தக நிலையத்தினையும் தாக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட பதட்ட நிலையைத் தவிர்க்க உடனடியாக அங்கு பொலிசார் விரைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக சற்றுமுன் மடவளை நியுசுக்கு தொடர்ப்புகொண்ட மேல் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியார் சுமார் எட்டு மணியளவில் பொதுபல சேனா ஞான சார தேரர் தம்புள்ளை நகருக்கு வந்ததாகவும் தம்புள்ளை நகர மத்தியில் கூட்டம் ஒன்றை நடாத்த முற்பட்டதாகவும் போலிசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தியதாக தமக்கு தகவல் கிடைத்தாக தெரிவித்தார்.

தம்புள்ளை நகரில் போலீசார் விஷேட பாதுகாப்பில் ஈடுபட்டுத்தப் பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

madawala news

0 comments:

Post a Comment