கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எல்லா தேரர்களும் தீக்குளித்தாலும் விலங்குகளை அறுப்பதை நிறுத்த முடியாது: மேதானந்த தேரர்

 தேசியக்கீதத்தில் எதிர்காலத்தில் வேடர்களின் மொழியையும் சேர்க்க நேரிடும் - எல்லாவள மேதானந்த தேரர்



இந்திரத்ன தேரர் தீக்குளித்து, நாட்டுக்கும் பௌத்த கோட்பாட்டுக்கும்  இழுக்கினையே ஏற்படுத்தியுள்ளார் ‘ எல்லா பௌத்த தேரர்களும் ஒன்றிணைந்து கொழும்புக்கு வந்து   பெற்றோல் ஊற்றித் தீக்குளித்தாலும் விலங்குகளைஅறுப்பதை    நிறுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை என தொல்பொருளியலாளர்   மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்
இவர் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் இஸ்தாபக தலைவரும் முன்னாள்  ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவருமாவார் . அதேவேளை ஹெல உறுமய கட்சியின் செயலாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்திரத்ன தேரரின்  தீக்குளிப்பை உயர்ந்த உயிர்த்தியாகம் என்று வர்ணித்துள்ளார் . அதேவேளை ஜாதிக ஹெல உறுமய  இந்த விடயம் தொடர்பில் அக்கட்சி ஒன்றுகொன்று முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
பேராசிரியர்  மேதானந்த தேரர் மேலும் தெரிவித்துள்ள தகவலில் தீக்குளிப்பதனால் எவ்விதத் தீர்வும் கிடைக்காது .’முழு உலகிற்கும் அன்பினை போதிக்கும்  புத்தபிரானை நினைவுறுத்தும் புனிதநாளான   வெசாக் தினத்தில் தேரரொருவர் புனித தலதா மாளிகைக்கு முன்பாக தீக்குளித்து நாட்டுக்கும், பௌத்த கோட்பாட்டுக்கும் இழுக்கையே தேடித்தந்துள்ளார் . இந்நாட்டிற்கு பண்டைய காலந்தொட்டு, மத மற்றும் சமூகப் பிரச்சினைகள் மேலெழும்போது அதற்கு பரிகாரமாக இருந்தவர்கள் இளம் பௌத்த பரம்பரையினரே. அவ்வாறான பௌத்த பரம்பரையினருக்கு இந்நிகழ்வானது தீயதொரு வழிகாட்டலையே வழங்கியிருக்கிறது.
அதனால் இவ்வாறான முட்டாள்தனமான நடவடிக்கைகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் இருக்குமாறு இளம் பௌத்த பிக்குகளிடம் மிகவும் தாழ்வாகக் கேட்டுக்கொள்கிறேன்.
போதி மாதவன் தன்னுயிரை விலங்குகளின் உணவுக்காகத் தியாகம் செய்தார். அதுதான் நேரியது. இந்த இளம் துறவியின் தீக்குளிப்பு அவ்வாறனதென்று கருத முடியாது. இது புனித நடவடிக்கை எனக்கூறவியலாது. மாறாக இது தீக்குளிப்பின் மூலம் நிகழ்ந்துள்ளதொரு தற்கொலையே. சிலர் இதனை உயிர்த்தியாகம் எனக் கருதுகிறார்கள்.
அந்தத் துறவி யாருக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்தார்? மாட்டுக்காகவா? மற்றையது தனது உயிரை அழித்துக்கொள்ளும்போது ஒருவருக்கு அவர்மீது வெறுப்பும், குரோதமும் ஏற்படுகிறது. மிருகங்களைப் பற்றி அனுதாபம் ஏற்படுவதில்லை.
தன்னுயிரை அழித்து மாடுகளைக் கொல்வதையோ, ஏனைய விலங்குகளைக் கொல்வதையோ நிறுத்த முடியாது. அதுபோல அதனை சட்டத்தினாலும்   இல்லாமற் செய்யவும் முடியாது. இது தொடர்பாக   மக்களுக்கு அதுபற்றிய தெளிவுறுத்தலை ஏற்படுத்த வேண்டும். எல்லா பௌத்த தேரர்களும் ஒன்றிணைந்து கொழும்புக்கு வந்து   பெற்றோல் ஊற்றித் தீக்குளித்தாலும் விலங்குகளை அறுப்பதை   நிறுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை.
இந்த தேரர்  எல்லைகளை  மீறியிருக்கிறார். இந்த தேரரின்  தீய நடவடிக்கையை சிலர் அடிநாதமாய்க் கொண்டு பல்வேறு கருத்துக்களைக் கூறிவருவதைக் காண்கிறேன். அவற்றை எக்காரணம் கொண்டும் ஏற்கவியலாது. இதன்மூலம் இல்லாத பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது’ என்றும் மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
 
எம்.அம்றித் :

இந்தக் குழந்தைக்கும் உதவிக் கரம் நீட்டுங்கள்

இல.90M/5/A, குரவலான, கஹட்டோவிட என்ற முகவரியில் வசிக்கும் மொஹமட் நவாஸ் என்பவரின் அன்பு மகள் எம்.என் பஹ்மா என்ற 3வயதுடைய சிறுமி “இதயத்தில் துளை” நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இச்சிறுமிக்கு சிகிச்சையளித்துவரும் கொழும்பு சிறுவா் பராமரிப்பு வைத்தியசாலையின் வைத்தியர் செஹான் பெரேரா என்பவர், குழந்தைக்கு அவசரமாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளார். இச்சத்திர சிகிச்சைக்காக சுமார் 2 இலட்சம் ரூபாய்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

சாதாரன தொழிலாளியாக வேலை செய்யும் இவரது தந்தையால் இத்தொகையை ஈடு செய்ய முடியாதுள்ளதால் ஏற்படும் செலவினங்களிற்கு நலன்விரும்பிகளின் உதவியை எதிர்பார்க்கிறார்.

உதவிக் கரம் நீட்ட விரும்புவா்கள் பின்வரும் வங்கி கணக்கில் தங்களால் முடிந்த தொகையை இட்டு இறை திருப்தியைப் பெற்றுக் கொள்ளுமாறு எமது இணையம் சார்பாக வேண்டுகிறோம்.

Bank: Peoples' Bank, Nittambuwa Branch,   A/C No :278200184748128   
Phone   : 0770779100

நாளை நான் பதவிதுறப்பேன்: பிரதியமைச்சர்



மின்சார கட்டண அதிகரிப்பிற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்த போராட்டத்தின் போது ஏதாவது ஒரு காரியாலயம் மூடப்பட்டால் நான் பதவிதுறப்பேன் என்று பிரதியமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க காரியாலயங்கள் அல்லது எந்தவொரு தனியார் காரியாலயமும் நாளை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டால் நான் பதவிதுறப்பேன். என்று பெருந் தோட்ட கைத்தொழில் பிரதியமைச்சர் ஏர்ல் குணசேகர தெரிவித்துள்ளார்.

கம்பளை ரத்னாசார விஹாரையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு சவால் விடுத்தார்.

சிறிய விடயங்களுக்கே எதிர்க்கட்சிகள்  வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும். இதுவும் அப்படியானதொரு தருணமாகும். ஒரு காரியாலயத்தையேனும் நாளை செவ்வாய்க்கிழமை மூடி காண்பிக்குமாறு நான் எதிரணிக்கு சவால் விடுக்கின்றேன்.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோய் லால்காந்த தனது முகத்தில் ஒருமுறை கரியை பூசிக்கொண்டார். இம்முறை ரணிலும் லால் காந்தவும் இணைந்து தங்களுடைய முகங்களில் கரியை பூசிக்கொள்ள போகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக சேவைப் பணியில் கஹடோவிட முஸ்லிம் வாலிபர் சங்கம்.


வதுபிடுவள போதனா வைத்தியசாலை ஊழியர்களின் கிரிக்கெட் அணியிற்கு சீருடைகளை வழங்கும் வைபவம் கடந்த 13ஆம் திகதி வதுபிடுவள BIO மைதானத்தில் நடைபெற்றது. இந்த சீருடைகளை வதுபிடுவள வைத்தியசாலை பொறுப்பதிகாரி Dr. சிசிர மற்றும் ஊழியர்களின் கிரிக்கெட் அணியின் தலைவர் ஜனித் ஆகியோர் அமான வங்கியின் ஆலோசகர் அஷ் சேய்க் M.H.M அஸ்லம் அவர்களிடமிருந்து பெற்றுகொண்டனர்.


இதேவேளை கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உபேக்க்ஷா சுவர்னமாலி அவர்களின் நிதி ஓதிக்கீட்டின் கீழ் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் உபேக்க்ஷா சுவர்னமாலி அவர்களின் ஊடகச் செயலாளர் கஹடோவிட சுஹைல் முகம்மட் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வுகளில் அல்-ஹாஜ் M.A.M சில்மி (MLT), கஹடோவிட முஹிடீன் ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவர் அல்-ஹாஜ் M.S.M லாஹிர், அமான வங்கியின் ஆலோசகர் அஷ் சேய்க் M.H.M அஸ்லம் (LLB), முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் பொறுப்பாளர் M.G.M ரிபாஸ் மற்றும் ACE கிரிக்கெட் அணியின் வீரர்கள் கலந்து சிறப்பித்தனர்.
 

 தகவல்
Suhai Zarook

ஜம்மியத்துல் உலமாவின் கவனத்திற்கு !!!!!

 
மதிப்புக்குரிய உலமாசபையே உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்ட முஸ்லிம்
சமூகம் உங்கள் மெளனத்தின் அர்த்தம் புரியாமல் தடுமாறுகிற...து !
ஹலால் செட்டுபிக்கெட் விடயத்தில் உங்களை குறிவைத்து எங்களைத்தாக்கி
பொது பல சேனா கூட்டம் போட்டவேளை பள்ளிவாசல் தோறும் துஆ பிரார்த்தனையை
அறிவித்தீர்கள் நோன்பு நோற்க சொன்னீர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டோம்
உங்கள் அறிவிப்பின்படி குனூத்தை நிறுத்தினோம் ஒருவாறு இந்தப்பிரச்சினைக்கு
உயர்மட்ட ஒன்றுக் கூடலில் ஏற்றுமதிக்கு இலவச ஹலால் முத்திரை கொடுப்பதாகவும்
உள்நாட்டில் ஹலால் முத்திரை தடை என்று ஒரு விட்டுக்கொடுப்பு ஒப்பந்தத்தை
ஏற்படுத்திக்கொண்டீர்கல் அதன் மூலம் நீங்கள் பிரச்சினைகளில் இருந்து ஒதுங்க்கிக்கொண்டீர்கல் !!!!!!
ஹலால் பொருட்கள் பற்றிய அறிவிப்புகளை பள்ளிவாயல் மூலமாக அறிவிப்பதாக கூரப்பட்டபோதும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை !!!!!
ஏற்றுமதிக்குமாத்திரம் ஹலால்முத்திரை ?!!!!
பொது பலசேனா மீண்டும் களத்தில் கேகாலையில் மாபெரும் கூட்டம் நடைபெற்றது
நீங்கள் அறிந்திரிப்பீர்கள் இதுபோன்ற இனவாத கூட்டங்கல் நடைபெறும்போது
ஜம்மியத்துல் உலமாவின் விசேட அறிவித்தல்கள் வெளியாகும் !!
மாலைவேளைகளில் வெளியில் சுற்ற வேண்டாம் குறிப்பாக பெண்கலை வீட்டுக்காகி
இருக்கும்படி இம்முறை கண்டும் காணாததை போல் இருந்துவிட்டீர்கள் !
எங்கள் பிரச்சினை முடிந்துவிட்டது அல்ஹம்துலில்லாஹ் !! என்று ஒதுங்கி விட்டீர்களா ?!!
உங்களை நம்பிய முஸ்லிம் சமூகம் திக்கற்று ?!!

இம்ரான்கான் வெற்றி, நவாஸ் ஷெரீப் 3வது முறையாக பிரதமராகிறார்



பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னணியில் இருப்பதால் 3வது முறையாக அவர் அந்நாட்டின் பிரதமராவது உறுதியாகி உள்ளது.

பாகிஸ்தானில் வரலாற்று சிறப்பு மிக்க நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெற்றது. அத்துடன் கைபல் பாக்துங்வா, பஞ்சாப்,சிந்து மற்றும் பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களுக்கும் இன்று தேர்தல் நடத்தப்பட்டது.

342 பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்கு 4670 வேட்பாளர்களும், மாகாண சபைகளுக்கு சுமார் 11 ஆயிரம் வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். தீவிரவாதிகளின் மிரட்டல் மற்றும் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை முதல் மாலை வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்காளர்கள் வருகையை அதிகரிப்பதற்காக வாக்குப்பதிவுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டது. அதன்படி 6மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பம் முதலே நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

சர்கோதா தொகுதியில் நவாஸ் ஷெரீப் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப்பும் முன்னிலையில் உள்ளார்.

பெஷாவர்-1 தொகுதியில் தெரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட குலாம் பிலவுரை விட 66 ஆயிரத்து 464 வாக்குகளை இம்ரான்கான் அதிகமாக பெற்றுள்ளார.

லாகூர், ராவல்பிண்டி மற்றும் மியான்வாலி ஆகிய தொகுதிகளிலும் இம்ரான் கான் முன்னிலையில் இருக்கிறார்.

online results: http://hamariweb.com/pakistan-election-2013/ 

இறுதியில் இஸ்லாம் தான் வெற்றி பெரும் - க்லென் பேக் TV live fox news

இஸ்லாமே இறுதியில் வெற்றிபெரும்! காரணம் அதன் கடவுள் பற்றிய பலமான நம்பிக்கையை முஸ்லிம்கள் கொண்டுள்ளார்கள்! அருமையான விளக்கம்! இது அல்லாஹ் அவனது தீனுல் இஸ்லாத்தை பாதுகாக்க ஏற்படுத்தும் அழகிய வழிமுறைகளும் பிரச்சார நடவடிக்கையுமாகும்! உண்மையில் ஆச்சரியமான அற்புதமான செய்தி! பாடம்பெறுவோம்! முடிந்த பங்களிப்பை அவனது தீன் உலகில் நிலைபெற வழங்குவோம்! அது எமது பொறுப்பும் கடமையுமாகும்!

பிரதேச சபை உறுப்பினர் சகோதரா் நஜீம் அவா்களின் நிதியொதுக்கில் பாதை புணரமைப்பு



ஐக்கிய தேசயக் கட்சியின் அத்தனகல்லப் பிரதேச சபை உறுப்பினரும் ஏழைகளின் தோழன் என்று பலராலும் அழைக்கப்படுபவருமான சகோதரா் நஜீம் அவா்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் செலவில் கஹட்டோவிட ACS இற்கு அருகாமையில் உள்ள 100 அடி நீளமான பாதை கொங்கிரீட்டு செப்பனிடப்பட்டது. 03.05.2013ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் அன்றய தினமே நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பாதையானது மக்களது பிரயோகத்திற்கு நாளை 06.05.2013 நாளைமுதல் திறந்துவிடப்படவுள்ளது.

நீண்ட நாட்களாக செப்பனிப்படாதிருந்த இப்பாதையை செப்பனிட்ட சகோதரா் நஜீமுக்கு ஊர்மக்கள் சார்பாக எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இதுபோன்ற இன்னும் பல சேவைகள் அவா்மூலம் நடைபெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆக் கேட்போம்.

அஸாத் ஸாலி தொடர்பாக நமது (?) நீதி அமைச்சர் ரவுப் ஹகீம் வாய் திறந்தார்!


தலை கொடுத்த தளபதியாம் ஆஸாத் சாலி



பெறுப்புள்ள தலைமைகள் வாய்கள் பொத்தி
பொந்துக்குள் எலிகளெனப் புகுந்த வேளை
இறுக்கமுடன் சமூகத்திற்காய் குரல் எழுப்பி
இனவாத சக்திகளின் முகத்தின் திரையை
அறுத்தெடுத்த நம் தலைவன் ஆஸாத் சாலி
அரசாங்கத் தரப்பினரால் கைதி ஆனான்.
பொறுக்காமல் உளம் நொந்து புலம்புகின்றோம்.
போதுமினி அராஜகங்கள் ஒழிய வேண்டும்.

எம்மினத்துப் பெண்களது பர்தா முறையை
எழிலான மார்க்கத்து ஹலால் வழியை
நம்பிக்கை கொண்டவரின் இறையில்லத்தை
நசுக்கிடத்தான் முயற்சித்தார் பொதுபல சேனா
சும்மாதான் கிடக்கையிலே தலைவர் எல்லாம்
சுனாமியென எழுந்தவன்தான் ஆஸாத் சாலி.
வம்புக்கு வந்தவரை அழைத் தெடுத்து
வளையாது விளக்கத்தைச் சொல்லி வைத்தான்.

தலைவரெனச் சொன்னவர்கள் தயங்கி நின்று
தலை சொறிந்து தன் மானம் இழந்த வேளை
தலை கொடுத்த தளபதியாம் ஆஸாத் சாலி
தைரியத்தை சமூகம் இன்னும் மறக்க வில்லை
விலையேதும்; கொடுத்தேனும் மீட் டெடுக்க
விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அலையெனவே திரளுகின்ற மக்க ளெல்லாம்
அல்லாஹ்விடம் இருகரத்தை ஏந்த வேண்டும்

-மதியன்பன்-