கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

BREAKING.. ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் மரணமடைந்த விபத்தில் சதி அம்பலமானது.

நாராஹென்பிட்டி பகுதியில் 2012 மே மாதம் 17ம் திகதி நடைபெற்ற வசீம் தாஜூதீன் என்ற றகர் வீரரின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2012 மே 17ம் திகதி நாராஹென்பிட்டியில் இடம்பெற்ற றகர் வீரர் வசீம் தாஜூதீன் என்பவரின் மரணம் தொடர்பில் நாராஹென்பிட்டி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை ஆரம்பித்தது. இதில் இரண்டு விஞ்ஞானபூர்வ சாட்சிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. முதலாவது பிரேத பரிசோதனை நடத்திய வைத்தியரின் அறிக்கை. இரண்டாவது இரசாயன பகுப்பாய்வாளர்களின் அறிக்கை.
இது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் கருத்து கிடைக்கப்பெற்றிருந்தது. ஆனால் அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரியின் கருத்து எமக்கு கிடைக்கப்பெறவில்லை.
அது தொடர்பான அறிக்கை 2015 பெப்ரவரி 12ம் திகதியே கிடைத்தது. இரசாயன பகுப்பாய்வாளர் சம்பவம் குறித்து இறுதி முடிவுக்கு வர முடியாது என அறிவித்துள்ளார். ஆனால் மற்றைய அறிக்கையில் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

விசேடமாக உயிரிழந்த நபரின் உடலில் காபன் மொனொக்சைட் வாயு சேர்ந்திருப்பது மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதென தெரியவருகிறது. அதனால் இது விபத்தினால் ஏற்பட்ட மரணம் அல்ல என்பது சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதியாகிறது.
அதனால் இந்த மரணம் குறித்து விசாரணையை நாராஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இருந்து அகற்றி நேற்று தொடக்கம் குற்றத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்க பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளார். அதன்படி குற்றத் தடுப்புப் பிரிவினர் பூரண விசாரணை நடத்துவர்” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

madawalanews

வாணையை உடுறுத்துச் செல்லும் பாதை ஏ.சி.எம் தஸ்லிம் மாவத்தை என பெயர் சுட்டப்பட்டுள்ளது,

ஓகடபொல கஹடோவிடாவை இணைக்கும் வாணையை உடுறுத்துச் செல்லும் பாதை ஏ.சி.எம் தஸ்லிம் மாவத்தை என பெயர் சுட்டப்பட்டுள்ளது, இப்பபாதைக்கு சமுக சேவையாளராக இருந்த மர்ஹீம் தஸ்லிம் அவர்களுடைய பெயரை சுட்டுவதற்கு அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் நஜீப் அவர்களால் முன்மொழியப்பட்டதற்கினங்க சபையோரும் ஏக மனதோடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

தகவல் ஸுஹைல்

அனைத்து பைல்களையும் தூசு தட்டி எடுத்துள்ளேன்; கட்டாயம் நடவடிக்கை என்கிறார் தில்ருக்சி

ஜனாதிபதியினால் புதிதாக நியமிக்கப்பட்ட இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம். திருமதி தில்ருக்சி விக்கிரமசிங்கவின் முதலாவது செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு7 இல் உள்ள இலஞ்ச ஆனைக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இதுவரை கடந்த ஆட்சியில் இருந்த 61 அரசியல்வதிகளுக்கு எதிராக ஆதாரபூர்வமான முறைப்பாடுகள் இலஞ்ச ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
dilruksi
இதில் 521 முறைப்பாடுகள் இந்த ஜனவரி மாதத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், துறைமுக அதிகார சபையின் தலைவர், முன்னாள் பொருளாதார அமைச்சர், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, முன்னாள் இலங்கை மத்திய வங்கியின் தலைவர் போன்ற 61 அரசியல்வாதிகளும் இதில் அடங்குகின்றனர்.

எனது அறைக்குள் 1600 பைல்கள் மறைக்கப்பட்டு ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. அதனையும் தூசு தட்டி விசாரணைக்கு மீள எடுத்துள்ளேன். அத்துடன் 423 முறைப்பாடுகள் முழுதாக விசாரணைக்கும் உட்படுத்தியுள்ளேன். இருந்தும் இந்த விடயத்திற்காக தனியானதொரு நீதிமன்றமும், விசாரணைப் பொலிஸ்பிரிவும் அமைப்பதற்கு சட்டத்தில் சீர்திருந்தம் வேண்டும் எனவும் திருமதி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நான் கடமையை பாரமெடுத்து 2 கிழமையாகின்றது. எனது அலுவலகத்தில் மேலதிக ஊழியர்கள் தேவையாக உள்ளது. ஏற்கனவே சேவையில் உள்ளவர்களுக்கு ஒருபோதும் 2 மாதங்களுக்கு எந்த வித லீவுகளும் வழங்கப்படமாட்டாது. இந்த நாட்டில் ஏதாவது இலஞ்ச,ஊழல் நடைபெறுமிடத்து எனது தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொல்ல முடியும்.

சோனகா் இணையம்

நான் முஸ்லிமல்ல... ஆனால் குர் ஆனை நம்புகிறேன்: பிரபல விஞ்ஞானி

மாரீஸ் புகைல் ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு அறுவை சிகிச்சை மருத்துவராவார். புகழ்பெற்ற அறிஞரும் ஆவார். அவரது நாட்டினர், எகிப்திய அரசிடமிருந்து ’மம்மியாகப் பாதுகாக்கப்பட்ட ஃபிரவ்னின் உடலை பரிசோதனை செய்வதற்காகப் பெற்றனர்.
gambar
ஃபிரவ்னின் உடலில் மீது காணப்பட்ட மிகுதியான உப்பு அவன் மூழ்கி இறந்ததைத் தெளிவாக எடுத்துரைத்தது. ஆராய்ச்சிக்குழுவினர் மேற்கொண்டும் தமது பணியினை செய்துகொண்டிருக்க, அக்குழுவின் தலைவரான மருத்துவர் மாரீஸ் புகைலுக்கோ ஃபிரவ்ன் எப்படி மூழ்கினான் என்று வியப்பு மேலிட்டது. இது பற்றி இஸ்லாமியர்களின் வேதமான குர் ஆனில் இருப்பதாக அறிய வந்தார். 18ம் நூற்றாண்டில் தான் ‘மம்மிகள்’ கண்டெடுக்கப்பட்டன. ஆனால் அவற்றைப் பற்றி 14ம் நூற்றாண்டிலேயே குர் ஆனில் குறிப்பிடப்பட்டதை அறிந்த மருத்துவர் குர் ஆனைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு தமது 50வது வயதில் அரபி கற்க சவூதி அரேபியா சென்றார்.

ஃபிரவ்ன் குறித்த குர் ஆனின் கீழ்வரும் வசனங்களைக் கண்டு ஸ்தம்பித்து நின்றார். ஏக இறைவனின் ஒரு எழுத்தைக் கூட மறுக்கவியலாதவராக ஏற்றுக்கொண்டார்.

10:90. மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

10:91. “இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.

10:92. எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது).

தான் கற்றுணர்ந்த குர் ஆனின் முதல் வசனம் அவரைப் பெரிதும் ஈர்க்க இன்னுமின்னும் தன் தேடலைத் துவங்கினார். இஸ்லாம் மீதிருந்த தமது தவறான கண்ணோட்டங்களைத் தம்மை மருத்துவத்திற்காகக் காணவந்த முஸ்லிம்கள் மூலம் அறிந்து களைய முயற்சிகளை மேற்கொண்டார். அவருக்கு அதுவரை தகவல் களஞ்சியமாக விளங்கியவை வானொலியும் தொலைக்காட்சியும் சில நூல்களுமேயாகும். அவற்றைத் தவிரவும் இஸ்லாம் மீதான தன் பார்வையை விரிவுபடுத்தினார். தாம் முன்பு கண்டெடுத்த, இஸ்லாம் என்பது முஹம்மது என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மதம் என்னும், ஆராய்ச்சி முடிவுகளை மீளாய்வு செய்தார். இப்பொழுது அவருக்கு குர் ஆனைக் குறித்து கிடைத்திருந்த மேலதிக தகவல்களையும் விரிவான கண்ணோட்டங்களையும் கொண்டு தமது முன் முடிவுகள் தவறாக இருப்பதையும் முழுமையாக உணர்ந்தார்.

1976ல் Quran, Bible, and Science என்ற புத்தகம் எழுதி புகழடைந்தார் மருத்துவர். அதன் பின் குர் ஆனை நன்கு ஊன்றிப்படித்த மருத்துவர் (மனிதனின் தோற்றம்) The Origin of Man என்ற புத்தகம் எழுதி வெளியிட்டார். இப்புத்தகம் இஸ்லாத்தையும் மருத்துவரையும் உலகின் பலதரப்பட்ட மக்களுக்கும் அறிமுகப்படுத்தியது. அன்றைய தினம், உலகைக் குறித்த விடைகிடைக்காத பல கேள்விகளுக்கும் ஆதாரப்பூர்வமாகத் தம் விடைகளை குர் ஆனின் ஒளியில் பதிந்தார். அவரது ஆராய்ச்சிகளையும் முடிவுகளையும் தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருமனதுடன் ஏற்றுக்கொண்டனர். குர் ஆன் மீதான தமக்கிருந்த ஆழ்ந்த அறிவால் பல அறிஞர்களுக்கும் உண்மையை எடுத்துரைத்தார். டார்வினின் தத்துவத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக்கொண்டார். ஒரு கட்டத்தில் குர் ஆன் ஏக இறைவன் த்னது தூதரின் வாயிலாக உலகுக்கு வழங்கிய இறைவேதமே என்று தான் ஆய்ந்தறிந்த முடிவினை வெளியிட்டார்.

இருப்பினும் ஒரு முஸ்லிமின் ஆராய்ச்சிகள் இஸ்லாத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்று பலரும் குற்றம் சுமத்தி அவரது கருத்துகளை உலகம் ஒதுக்கியபோது ஒரு சுயவிளக்கம் அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வாயடைக்கச் செய்தார். அந்த சுயவிளக்கம் இதுதான்:

”என் ஆராய்ச்சிகளின் முடிவுகள் அனைத்தும் இஸ்லாத்தையும் அதன் ஏக இறைவனையும் மெய்ப்படுத்துகின்றன என்பது முழுக்க முழுக்க உண்மையாகும். ஆனால் இதனை ஒரு முஸ்லிமாக நான் கூறவில்லை. அவ்வாறு இஸ்லாம் என்ற ஒரு வட்டத்தில் இருந்து கொண்டு என் ஆய்வறிக்கைகளை நான் வெளியிட்டால் உலகம் ஏற்கத்தயங்கும். நான் அந்த வட்டத்தை விட்டும் வெளியே இருந்தே இஸ்லாம் என்பது உண்மை; அதன் வேதம் மெய்யானது என்று ஒப்புக்கொள்கிறேன்” என்று அறிவித்தார்.

இவ்வாறு முஸ்லிம்களுக்கு ஆதரவாகத் தம் வாழ்வைக் கழித்த அவர் இஸ்லாத்தினை ஏற்றிருந்தால் அவருக்கும் நன்மையாக அமைந்திருக்கும்.

vkalathur.in 

சீன முஸ்லிம் பெண் கஹ்பத்துல்லாவிற்கு வெளியே தற்கொலை செய்த சம்பவம்.

சீனாவில் இருந்து உம்ரா செய்வதர்காக வந்த ஒரு பெண் மக்காவின் கஹ்பத்துல்லாவிற்கு வெளியே (ஹரமுக்கு உள்ளே)  தற்கொலை செய்திருப்பது மக்காவில் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.

தவாபுக்குரிய மேல் தட்டில் இருந்து அந்த 30 வயது மதிக்க தக்க பெண் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்
உடனடியாக அந்த பெண்ணின் உடலை கைபற்றி மருத்துவமனை அனுப்பி வைத்த ஹரமின் காவலர்கள் இது பற்றி பின்வருமாறு கூறியுள்ளனர்
அந்த பெண் தற்கொலை செய்த கொண்டதர்கு உரிய உண்மையான காரணத்தை இன்னும் அறிய முடியவில்லை
ஆயினும் இந்தியா சீன பங்களாதேஷ் பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் வாழும் மார்க்க அறிவில்லாத மக்களிடம் மக்காவில் சென்று மரணித்தால் அது மிகபெரிய புண்ணியத்திர்கு உரிய செயலாகும் என்றோரு நம்பிக்கை இருப்பதாக அறிய முடிகிறது இந்த மூட நம்பிக்கையின் அடிப்படையில் இந்த தர்கொலை செய்திருக்கலாம் என எண்ணுவதாக மக்காவின் காவல் துறையினர் கூறி உள்ளனர்
புண்ணியம் என்று நினைத்து கொண்டு தற்கொலை என்னும் மாபாதக செயலை செய்வது மிக மிக வருந்ததக்க செயலாகும்
இது போன்ற அறியாமையில் இருந்து முஸ்லிம்களை மீட்டு எடுப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீது் கடமையாகும்
கஹ்பத்துல்லாவின் வரலாற்றில் முதல் முறையாக நடந்திருக்கும் இந்த நிகழ்வே இறுதி நிகழ்வாகவும் இருக்க வேண்டும் அதர்காக நாம்பிரார்திப்பதோடு அறியாமையில் இருக்கம் மக்களை மீட்டு எடப்பதர்கும் உரிய முயர்ச்சிகளை மேர் கொள்ள வேண்டும்
தகவல் :உண்மை தமிழன் 

ஜனாதிபதி மைத்திரி மனைவி தமிழ்ப் பெண்! வெளியானது உண்மைகள்…

இலங்கையின் வரலாற்றில் நாட்டின் முதல் பெண்மணியாக தமிழ் பெண் ஒருவர் விளங்கின்றார் என்பது இது வரை ஊடகங்களில் வெளிவந்து இராத செய்தி ஆகும். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாரியார் யாழ்ப்பாண தமிழர் ஆவார். இவரின் பெயர் ஜெயந்தி. மைத்திரிபால சிறிசேன சிறிய வயது முதல் மார்க்ஸியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். இவர் ஐ. சண்முகதாஸன் தலைமையிலான இலங்கை கமியூனிஸ்ட் கட்சியிலேயே முதன்முதல் அரசியலில் ஈடுபட்டார். தலைவர் சண்முகதாஸனுக்கு நெருக்கமான தோழர்களில் ஒருவராக காணப்பட்டார்.
இவரின் பாரம்பரிய இல்லத்தில் இன்றும் கால் மார்க்ஸ், லெனின், மாவோஓ போன்ற தலைவர்களின் புகைப்படங்களை காண முடிகின்றது. மார்க்ஸிய ஈடுபாடும், தலைவர் சண்முகதாஸனுடனான தொடர்பும் இவருடைய காதல் திருமணத்துக்கு ஊக்கிகளாக அமைந்தன.MS

இலங்கையில் ஆட்சிசெய்த ஜனாதிபதிகளின் கல்வித் தகைமைகள். Academic Qualifications Of All The Presidents Of Sri Lanka [1972 Till Date]

Sri Lanka has a history that is somewhat regarded as “rare” considering the time it all began. Before the arrival of the colonial masters, Sri Lanka was ruled by 181 kings and queens from the Anuradhapura to Kandy periods. We all are quite familiar with how the British rule started and how it ended with the declaration of Sri Lanka as an Independent country. Despite all the struggle leading to several armed uprisings against the British, Sri Lanka was finally declared an Independent state in 1948 even though the country remained a Dominion of the British Empire.
Later on, Sri Lanka introduced its own constitution in 1978 after it had assumed the status of a Republic in 1972. We seem to know quite much about the over all history of Sri Lanka, but not so much about the profile and background of the great men and women who have paddled the boat all through the journey even up to this point especially their academic qualifications. After a long research, we gathered the academic qualifications of all the Presidents of Sri Lanka including those who were only acting Presidents. Read on so you don’t miss out on this big information.
pg
William Gopallawa, MBE was the last Governor-General of Ceylon from 1962 to 1972 and became the first President of Sri Lanka when Ceylon declared itself a republic in 1972 and changed its name to Sri Lanka.
Born on 17 September 1896 at the Dullewe Maha Walauwa, Dullewe in the Matale District of Ceylon, William had his primary education at the Dullewe village school then proceeded to St. John’s College, Kandy.
He had his secondary education at Dharmaraja College Kandy in 1909, and furthered his studies in St.Anthony’s College, Kandy. He earned his sat at the Cambridge Senior Certificate Examination in 1917
He joined the Ceylon Law College in 1920 and qualified as a Proctor in 1924.

Junius Richard Jayewardene (1906–1996):

Jayawardene

Junius Richard Jayewardene, famously abbreviated in Sri Lanka as JR, was the leader of Sri Lanka from 1977 to 1989.
He served as the Prime Minister from 1977 to 1978 and as President of Sri Lanka from 1978 till 1989.
Junius earned his primary education at Bishop’s College, Colombo. He also schooled at prestigious Royal College, Colombo for his secondary education. In 1926, he was admitted into the University College, Colombo. In 1928 he enrolled to Colombo Law College and passed out as an advocate.

Ranasinghe Premadasa (1924–1993):

Sri Lankabhimanya Ranasinghe Premadasa was the 3rd President of Sri Lanka from 2nd January 1989 to 1st May 1993. Before that, he served as the Prime Minister in the Government headed by J. R. Jayewardene from 6th February 1978 to 1st January 1989
Ranasinghe schooled at St Joseph’s College, Colombo.

Dingiri Banda Wijetunga (1916–2008):

Dingiri Banda Wijetunga was the President of Sri Lanka from 1 May 1993 to 12 November 1994. He had his secondary education at St. Andrew’s College, Gampola,

Chandrika Kumaratunga (1945):

Chandrika Bandaranaike Kumaratunga was the fifth President of Sri Lanka, who served from 12 November 1994 to 19 November 2005. She was educated at the St Bridget’s Convent, Colombo and at the Aquinas University College Colombo where she studied for the bachelor of laws.
She was granted a scholarship to the University of Paris, where she spent five years, and graduated from the Institut d’Etudes Politiques de Paris (Sciences Po) in Political Science and International Relations in 1970. She also acquired  a diploma in Group Leadership from the same university in Paris.
Chandrika was also trained as a Political Journalist at “Le Monde” newspaper. She started PhD studies in Development Economics at the University of Paris 1970-73  but it was never concluded as she returned to Sri Lanka to enter politics.

Mahinda Rajapaksa (1945):

Percy Mahendra “Mahinda” Rajapaksa was the 6th President of Sri Lanka and Commander-in-Chief of the Sri Lankan Armed Forces, who served from 19 November 2005 to 9 January 2015. Rajapaksa schooled at Richmond College in Galle, he then moved to Nalanda College Colombo.
Later on, he continued at Thurstan College, Colombo. Rajapaksa studied law at the Sri Lanka Law College and  was admitted to bar at-law in November 1977.

Maithripala Sirisena (1951):

Incumbent President of Sri Lanka, Maithrpala received his educated at Thopawewa Maha Vidyalaya and Royal College. He attended Sri Lanka School of Agriculture, Kundasale for three years, from where he earned a diploma in agriculture in 1973.
In 1980, he added a Diploma in Political Science at the Maxim Gorky Literature Institute in Russia to the host of his educational qualifications.

எனது வாழ்க்கையில் கண்ணீர் வடித்துள்ளேன், மீண்டும் நினைக்கையில் வேதனையே அதிகம் - ஜனாதிபதி மைத்திரி

நாட்டின் மிகவும் ஊழல் நிறைந்ததாகக் காணப்பட்ட சுகாதார அமைச்சானது புதிய மருந்துப் பொருட்கள் சட்டத்தின் அமுலாக்கத்தோடு தூய்மை பெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சுகாதார அமைச்சு இந்தளவு ஊழல்கள் நிறைந்ததாக மாறியமைக்குக் காரணம் ஒரு வருடத்தில் 21,000 ற்கு மேற்பட்ட டென்டர்கள் அங்கு நடைமுறைப்படுத்தப்படுவதே எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய மருந்துப் பொருள் சட்டம் மூலம் இதற்குத் தீர்வுகிட்டும் என்றும் தெரிவித்தார்.
மருத்துவ தாதியர்களுடனான சந்திப்பொன்று மஹரகம இளைஞர் சேவை மன்ற மண்டபத்தில் நடைபெற்றபோது நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற் றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.  இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

சுதந்திர மருத்துவ சேவையைப் பலப்படுத்தி பொது மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த சுகாதார சேவையைப் பெற்றுக்கொடுப்பதற்கும், இத்துறையை முறையாக முன்னெடுப் பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கை களையும் அரசாங்கம் உச்ச அளவில் மேற்கொள்ளும்.

மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையைப் பெற்றுக்கொடுப்பதற்கு துறைசார்ந்த சகலரும் தமது பொறுப்புக்களையும் கடமையையும் சரியாக இனங்கண்டு செயற்படுவதும் முக்கியமாகும்.கடந்த காலங்களில் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்காக சுகாதார அமைச்சர் என்ற வகையில் நான் மேற்கொண்ட செயற்திட்டங்களில் சில வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதுடன் மேலும் சில செயற்பாடுகள் தோல்வியடைந்தன. இதற்குக் காரணம் அமைச்சராகிய நான் அல்ல.

இது எனது குறைபாடும் அல்ல, எனக்கான ஒத்துழைப்பு உயர் மட்டத் திலிருந்து கிடைக்கவில்லை என்பதே. சுகாதார அமைச்சரான ராஜித சேனாரத்னவுக்கு அவர் சுதந்திரமாக செயற்பட முழுமையான சுதந்திரம் வழங்கப்படும். அதேபோன்று பிரதமர் மற்றும் அமைச்சரவையும் சுதந்திரமாக செயற்பட முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டு ள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமைச்சர்களுக்கோ அமைச்சரவைக்கோ அல்லது பிரதமருக்கோ இத்தகைய சுதந்திரம் வழங்கப்படவில்லை என்பதை நான் குறிப்பாகச் சுட்டிக்காட்ட விரும்பு கிறேன்.

சுகாதார அமைச்சிலும் சுகாதார சேவையிலும் பணிபுரிந்த அதிகாரிகள் விடியற்காலையில் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று முகஸ்துதி பாடிவிட்டே கடமைக்குச் சமுகமளிப்பர். இவர்கள் இரண்டு தினங்களுக்கு ஒருமுறையாவது இவ்வாது ஜனாதி பதியைச் சந்திப்பர். இதன்போது கோல் மூட்டல்கள் மற்றும் அமைச்சர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளைத் தடை செய்யும் செயற்பாடுகளுமே இடம்பெற்றன.

அரச ஆஸ்பத்திரிகளில் வெளிநோயாளர் பிரிவை இரவு 8.00 மணிவரை திறப் பதற்கு நான் பெரும் முயற்சி எடுத்தேன். அதனை நான் செயற்படுத்துவதை விரும்பாதவர்கள் நான் வெளிநாடு சென்ற பின்னர் அவசரம் அவசரமாக முடிவெடுத்து அதனை ஜனாதிபதிக்குக் கூறி சம்பந்தப்பட்ட அறிவிப்பை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவித்தார். மறுநாள் ஊடகங்களில் அவை தலைப்புச் செய்திகளாக வெளிவந்தன. இத்தகைய நடவடிக்கைகளே அப்போது இடம்பெற்றன.

எனது அரசியல் வாழ்க்கையில் நான் கண்ணீர் வடிந்து கவலைப்பட்ட சந்தர்ப்பம் தான் மருந்துப் பொருட்கள் சட்டம் மற்றும் சிகரட் பெக்கட்டுகளில் விளம்பரங்களை காட்சிப்ப டுத்துவதில் மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்கள். 2012 டிசம்பரில் சம்பந்தப்பட்ட சட்டம் தயாரிக்கப்பட்டு 2013 ஜனவரியில் அமைச்சரவை அங்கீகாரத்துக்கு விடப்படவிருந்த நிலையில் அந்த ஆவணங்கள் காணாமற்போயின. இதன் உண்மை நிலை பின்னர் சில மருந்து நிறுவனங்கள் வாயிலாக எனக்குத் தெரிய வந்தது. இத்தகைய விடயங்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதால் வேதனையே அதிகமாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Jaffnamuslim

சரண எம்.பிக்கு எதிராக 107 குற்றச்சாட்டுகள்: கடும் பிணை

பெற்றோலிய வளத்துறை முன்னாள் பிரதியமைச்சரும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரண குணவர்தன, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டவினால் கடும் பிணையில் விடுவிக்கப்பட்டார். 
தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்தபோது 3கோடியே 60 இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டு அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது. 


ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 600 இலட்சம் டூபாயை சரீர பிணையாக நிறுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அவருக்கு எதிராக 107 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

டெல்லி தேர்தல்; பிரதமர் ஆன பின்னர் பிரதமர் மோடி சந்திக்கும் முதல்-தோல்வி

புதுடெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் தோல்வி பிரதமர் ஆன பின்னர் பிரதமர் மோடி சந்திக்கும் முதல் தோல்வி என்று கருதப்படுகிறது.

குஜராத் மாநிலத்தில் மூன்று முறை முதல்-மந்திரியாக ஆட்சி செய்த நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கட்சிக்குள் எதிர்ப்பு காணப்பட்டாலும் குஜராத் வளர்ச்சியை முன்வைத்து அவர், வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மோடி கோஷத்தை வைத்து பாரதீய ஜனதா பிரசாரம் செய்தது. அதற்கு பெறும் வெற்றியே கிடைத்தது. பாராளுமன்றத் தேர்தலில்  பாரதீய ஜனதா தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றது.

பாரதீய ஜனதா கட்சி 282 தொகுதிகளில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி பிரதமராக பணியாற்றினார். தமிழகம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் பாரதீய ஜனதாவின் ஆதிக்கமே பாராளுமன்றத் தேர்தலில் காணப்பட்டது. இதனையடுத்து நாட்டில் நடைபெற்ற பல்வேறு மாநில சட்டமன்றத் தேர்தலிலும் பிரதமர் மோடியை முன்வைத்தே பாரதீய ஜனதா பிரசாரம் செய்தது. அதற்கும் கைமேல் பலன் கிடைத்தது.. 

2014 பாராளுமன்றத் தேர்தலை அடுத்து நடைபெற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல்களில் ஜம்மு காஷ்மீர் தவிர்த்து மற்ற மாநிலங்களில்  பாரதீய ஜனதாவிற்கே முதலிடம் என்ற நிலை காணப்பட்டது. 

2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு அடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் விபரங்கள்

2014 அக்டோபர் மாதம் நடைபெற்ற அரியானா, மராட்டிய மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியே வெற்றிபெற்றது.

இருமாநிலங்களிலும் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியை பாரதீய ஜனதா வெளியேற்றியது. மராட்டியத்தில் 15 வருடங்களுக்கு பின்னர் முதல்-முறையாக பாரதீய ஜனதா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. சிவசேனா கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிட்டு 122 தொகுதிகளில் பாரதீய ஜனதா வெற்றிபெற்றது. தேர்தலை அடுத்து 63 தொகுதிகளில் வெற்றிபெற்ற சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. 

அரியானாவிலும் காங்கிரஸ் கட்சியை வெளியேற்றிய பாரதீய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாரதீய ஜனதா 47 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இருமாநிலங்களில் பிரதமர் மோடி தீவிர பிரசாரம் செய்தார். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் பாரதீய ஜனதாவிற்கு வெற்றி முகமே காணப்பட்டது. 

ஜார்கண்ட் மாநிலத்தில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கத்துடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. மாநிலத்தில் முதலிடம் பிடித்த பாரதீய ஜனதா முதல்-முறையாக மாநிலத்தில் நிலையான ஆட்சியை கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரில் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கவில்லை என்றாலும், இதுவரையில் இல்லாத அளவு மாநிலத்தில் பாரதீய ஜனதாவின் வளர்ச்சி காணப்பட்டது. 

பாரதீய ஜனதா இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் 25 தொகுதிகளை கைப்பற்றி இரண்டாவது இடத்திற்கு வந்தது. இது பாரதீய ஜனதாவிற்கு பெரிய வெற்றியாகவே பார்க்கப்பட்டது.

நரேந்திர மோடி பிரதமர் ஆன பின்னர் தொடர்ந்து வெற்றி பாதையிலே சென்ற பாரதீய ஜனதாவிற்கு சிறிய சரிவாக டெல்லி சட்டமன்றத் தேர்தல் அமைத்துள்ளது. இது பிரதமர் மோடி தான் பிரதமர் ஆன பின்னர் முதல் முறையாக சந்திக்கும் முதல் தோல்வி என்று கருதப்படுகிறது. 

வெறும் 4 தொகுதிகளில் முன்னிலை

கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாவிற்கே முதலிடம் கிடைத்தது. பாரதீய ஜனதா 32 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க முடியவில்லை. 28 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடம் பிடித்த ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்தார். ஆனால் ஆட்சி நீடிக்கவில்லை. ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமைக்கப்பட்டது. மீண்டும் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. தேர்தல்  முடிவு விபரம் பாரதீய ஜனதாவிற்கு பெரிய பின்னடைவாகவே உள்ளது. கடந்த தேர்தலில் 32 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக முதலிடம் வந்த பாரதீய ஜனதாவால் 5 இடங்களைகூட நெருங்க முடியவில்லை. காலைய நிலவரப்படி பாரதீய ஜனதா 12 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருந்ததாலும், அடுத்தத்தடுத்த வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மிக்கு சாதகமான நிலைபாடே காணப்பட்டது. ஆம் ஆத்மி கட்சி 65 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி மீண்டும் டெல்லியில் ஆட்சி அமைக்கிறது. 

முடி­வு­க­ளுக்கு கட்­டுப்­ப­டா­விடின் தலைமை பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வேண்டி வரும்

கட்­சியின் தலை­மைக்கு கட்­டுப்­பட்டு உறுப்­பி­னர்கள் நடக்­கா­விடின் கட்சித் தலைமைப் பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­து­விட்டு ஜனா­தி­ப­தி­யாக மட்டும் செயற்­படும் நிலை ஏற்­படும். அத்­துடன் பாரா­ளு­மன்­றத்­தையும் கலைக்­க­வேண்டி வரும் என்று சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வரும் ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.
சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுக் கூட்டம் நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நடை­பெற்­றது. புதிய அர­சாங்­கத்தின் இடைக்­கால வரவு செலவுத் திட்­டத்­தினை ஆத­ரிப்­பது தொடர்பில் இந்தக் கூட்­டத்தில் ஆரா­யப்­பட்­டது. இதன்­போது கருத்து தெரி­வித்த பல உறுப்­பி­னர்கள் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சுயா­தீ­ன­மாக முடி­வினை எடுப்­ப­தற்கு எமக்கு தலைமை அனு­மதி வழங்க வேண்டும். ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஆத­ர­வாக மட்டும் நாம் செயற்­ப­ட­மு­டி­யாது. இவ்­வி­ட­யத்தில் எமது நிலைப்­பாட்­டுக்கு கட்­சியின் தலைமை இணங்க வேண்டும் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.
அத்­துடன் பாரா­ளு­மன்­றத்தை எதிர்­வரும் ஏப்ரல் மாதம் கலைக்­காது அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை கொண்­டு­செல்ல வேண்டும். தற்­போது தேசிய அர­சாங்­கமே ஆட்­சியில் உள்­ளது. எனவே பாரா­ளு­மன்­றத்தை கலைக்­க­வேண்­டிய அவ­சியம் இல்லை என்றும் பல உறுப்­பி­னர்­களும் இந்தக் கூட்­டத்தில் எடுத்­துக்­கூ­றி­யுள்­ளனர்.
உறுப்­பி­னர்­களின் கருத்­துக்­க­ளை­ய­டுத்து உரை­யாற்­றிய ஜனா­தி­ப­தியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன, இடைக்­கால வர­வு­செ­லவுத் திட்டம் தொடர்பில் நீங்கள் விரும்­பி­ய­வாறு கருத்­து­களை, விமர்­ச­னங்­களை தெரி­வித்­தி­ருக்­கலாம். ஆனால் வரவு செலவுத் திட்­டத்­துக்கு ஆத­ரவு வழங்­க­வேண்டும் என்று கட்­சியின் தலைமை முடி­வு­செய்­துள்­ளது. எனவே இந்த முடி­வுக்கு அனை­வரும் கட்­டுப்­ப­ட­வேண்டும்.
அவ்­வாறு கட்­சியின் தலை­மைக்கு நீங்கள் கட்­டுப்­ப­டா­விடின் கட்சித் தலைமைப் பத­வி­யி­லி­ருந்து நான் இரா­ஜி­னாமா செய்து ஜனா­தி­ப­தி­யாக மட்டும் செயற்­படும் நிலை உரு­வாகும். அத்­துடன் பாரா­ளு­மன்­றத்­தையும் கலைக்­க­வேண்டி வரும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்திலேயே வரவுசெலவுத் திட்டத்தினை ஆதரிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 163பேர் வாக்களித் திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
virakesari

கஹடோவிடா பாடசாலைகளின் அதிபா் வெற்றிடமும் நலன்விரும்பிகளின் அதிபா் தேடல் முயற்சியும்

கஹடோவிடாவின் இரு பாடசாலைகளிலும் கடமையாற்றி வந்த அதிபா்கள் அதிபா் பதவியிலிருந்து விலகியமையினால் இரு பாடசாலைகளிலும் அதிபா் பதவிகள் வெற்றிடமாகியுள்ளன.

அல் பத்ரியாவின் அதிபா் தனது சொந்த அலுவல்கள் காரணமாக அதிபா் பதவியிலிருந்து தனது பொறுப்பை கையளித்துள்ள அதே வேலை பாலிகா பாடசாலையில் கடமையாற்றி வந்த அதிபா் கொழும்புப் பிரதேசத்தில் உள்ள ஒரு பாடசாலைக்கு இடமாற்றலாகி சென்றுள்ளாா். இதனையடுத்து பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினா்கள் மற்றும் பழைய மாணவா்கள் சங்க உறுப்பினா்கள் புதிய அதிபா்களைப் பெற்றுக் கொள்ளவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனா்.

இதன் ஒரு கட்டமாக எமது பாடசாலையில் நீண்ட காலமாக கடமையாற்றிவிட்டு 1993ம் வருடம் இடமாற்றலாகிச் சென்ற திரு. சுந்தரம் ஆசிரியா் அவா்களை மீண்டும் அதிபராக எமதூரின் பாடசாலையொன்றுக்கு பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

கடந்த இரு தசாப்தங்களுக்கு முன்னா் எமதூரின் பாடசாலையில் கடமையாற்றிவந்த திரு.சுந்தரம் ஆசிரியரின் காலத்தை பாடசாலையின் கல்வி நடவடிக்கையின் ஒரு பொற்காலம் என்றால் அது மிகையாகாது. மீண்டும் ஒருமுறை அவ்வாறான ஓரு பொற்காலம் மீள  வேண்டும் என்பது எமதூரின் புத்தி ஜீவிகளின் அவாவாகும். 

இறைவனிடம் குற்றவாளியாக நிற்க விரும்பவில்லை : எனது ஆட்சியில் எனது மகன்கள் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மன்னர் சல்மான் அதிரடி அறிவிப்பு....!!

இறைவனிடம் குற்றவாளியாக நிற்க விரும்பவில்லை : எனது ஆட்சியில் எனது மகன்கள் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மன்னர் சல்மான் அதிரடி அறிவிப்பு....!!
சவூதி அரேபியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்ற மன்னர் சல்மான் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்....
யாரும் எனது ஆட்சியில் அநியாயத்தக்கு உட்படுத்தப்படுவதையும் அதனால் இறைவனுக்கு முன்னால் நான் குற்றவாளியாக மாறுவதையும் நான் விரும்பவில்லை.
நான் வாழும் இந்த காலத்தில் எனது ஆட்சியின் கீழ் உள்ள குடிமக்கள் பாதிக்கப்பட்டால் எந்த துணையும் இல்லாமல் அவர் என்னை அணுகலாம், என்னிடம் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை முறையிடலாம் அவருக்கு நிச்சயம் நீதி வழங்கப்படும்.
அப்படி முடியாதவர்கள் மின்னஞ்சல் மூலமோ அல்லது எமது அரசி்ன் இணையதளத்தின் மூலமோ தமது புகாரை எமக்கு தெரியப்படுத்தலாம் அல்லது தபால் நிலையங்கள் மூலமாக எந்த கட்டணமும் இல்லாமல் தமது புகார்களை எனக்கு அனுப்பலாம் என்றும் அவர் கூறியுள்ளார்
அப்படி அனுப்பப்படும் புகார்கள் எனது பிள்ளைகளுக்கு எதிராக இருந்தாலும் எனது குடும்பத்திற்கு எதிராக இருந்தாலும் எனது பேரபிள்ளைகளுக்கு எதிராக இருந்தாலும் அவைகளை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நீதி நியாயத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கபடும் என்றும் அவர் அறிவித்திருப்பது பலரையும் கவர்ந்திருக்கிறது.
முகநூல் முஸ்லிம் மீடியா கருத்து :
நமது நாட்டில் முதல்வராக இருக்கும் நபர்களின் படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அராஜகம் புரிபவர்களுக்கு மத்தியில் ஒரு நாட்டின் மன்னரே தம்முடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தவறு செய்தாலும் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பது இறைவனின் மேலான அச்சமே காரணமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னுடைய மகள் பாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்று கூறினார்கள்.
நபிகளாரின் வார்த்தையை பின்பற்றும் விதமாக சவூதி அரேபியா மன்னர் சல்மான் அவர்களின் அறிக்கை இருக்கிறது.
இதையே உலக நாடுகள் பின்பற்றினால் உலகம் முழுவதும் அமைதியும், மகிழ்ச்சியும் மிளிரும்.
தகவல் உதவி : சையது அலி ஃபைஜி

தைவானில் 58 பயணிகளுடன் சென்ற விமானம் ஆற்றுக்குள் விழுந்தது 2 பேர் பலி (plane crash video)

தைவான் நாட்டில் 58 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள் சிக்கியது.

தைவான் தலைநகர் தைபே நகரில் இருந்து காலை கின்மெனுக்கு டிரான்ஸ் ஏசியா ATR 72-600 டர்போப்ராப் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தைபே நகருக்கு வெளியே பாலம் ஒன்றில் மோதியது .பின்னர், கீலங் ஆற்றுக்குள் விழுந்தது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர்  விமானத்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  விமானத்தில் இருந்த பலர் காயம் அடைந்து இருந்தனர் அவர்கள் அனைவரும்  மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தொடர்ந்து விமானத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம்ஏர் ஏசியா விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியது இதில் 48 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்றைய சுதந்திர தின நிகழ்வில் சாதாரணமாக Mr. Maithripala Sirisena என அழைக்கப்பட்ட ஜனாதிபதி

தன்னை “அதிமேதகு” (His excellency) என அழைப்பதை நிறுத்திக்கொள்ளும்படி ஜனாதிபதி மைத்ரிபால கடந்த வார இறுதியில் அறிவுறுத்தியதற்கேற்ப இன்றைய சுதந்திர தின நிகழ்வில் முதற்தடவையாக இலங்கை ஜனாதிபதியொருவர் திரு.மைத்ரிபால என சாதாரணமாக அழைக்கப்பட்டமையைக் காணக்கூடியதாக இருந்தது.

தன்னை அடைமொழிகள் கொண்டு அழைப்பதை விடுத்து சாதாரணமாக திரு. மைத்ரிபால சிறிசேன என்றும் தனது மனைவியை முதற்பெண்மணி என்று அழைக்காது திருமதி. மைத்ரிபால சிறிசேன என்றும் அழைத்தால் போதுமானது என கடந்த வார இறுதியில் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் வைத்து தெரிவித்த ஜனாதிபதி அதனை உத்தரவாகக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார்.

இன்றைய சுதந்திர தின உரையை நிகழ்த்தும் போது சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்களை நினைவு கூர்ந்த ஜனாதிபதி டி.பி. ஜாயா போன்ற முஸ்லிம் தலைவர்களின் பங்களிப்பையும் போற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sonakar

"முஸ்லிம் தம்பதிகளின் அந்தரங்க video" இது நாடகமா? நாட்டியமா?

அன்பான சகோதரர்களே, சகோதிரிகளே...!
இஸ்லாம் புனிதமான மார்க்கம். அப்படிப்பட்ட புனிதமிகு மார்கத்தின்புனிதத்தை நீக்குவதற்காக பல்வேறு சதிகள் நடந்துகொண்டே இருக்கின்றது... அதிலும் குறிப்பாக எமது கொளரவமான பெண்களை வழிகெடுக்கும் திட்டங்கள் பல. குறிப்பாக internet மூலம் எத்தனையோ கண் கட்டி வித்தைகள் நடந்துகொண்டேதான் உள்ளது.
அதில் ஒன்றுதான் சமீப காலமாக எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திய செய்தி
London riots burglar bumps into lamppost while hiding face behind paper
"முஸ்லிம் தம்பதிகளின் அந்தரங்க video"
இது நாடகமா? நாட்டியமா? புரியவில்லை.
மிக குறிகிய காலத்துக்குள் எம்மால் தேட முடிந்த சில விபரங்களை உங்களுக்கு சமர்பிக்கின்றோம்.
ஒரு வேலை இது உங்கள் பார்வைக்கு தப்பாக தோணலாம்.
ஆனால் இதில் பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன அதை உங்கலுக்குச் சொல்லுவது ஆரம்பம் முகனுளின் கடமை,
அதே போன்று எமது சமூகத்தை தாக்க வரும் அணு குண்டு...!!! ஆகையால் எமது சகோதிரிகளின் வாழ்கையை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமினதும் பொறுப்பு, கடமை.
இதன் மூலன் யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை அனால் சில உண்மைகள் பொய்யாவும் கூடாது.
இது தொடர்பாக இன்னும் எமது தேடுதல் தொடருகின்றது குறிப்பாக இந்த சம்பவத்தில் இடம்பெறும் கணவன் தொடர்பாக ஒரு விசேட தேடுதல் cyber உலகம் முழுவதில் நடைபெறுகின்றது. அது தொடர்பான தகவல்களை நாம் முன் கொண்டு வருவோம்.
(இந்த video வில் இடம்பெறும் சகோதரியிடம் நாம் சில கேள்விகள் முன் வைத்துளோம் அது தொடர்பாக அவர் தகுந்த ஆதாரத்துடன் உன்மைக்கலை எமக்கு விளக்கினால்........... என்னையும் உங்களையும் படைத்த இறைவனின் மீது ஆணையாக அந்த சகோதரிக்கு எம்மால் முடிந்த்த அனைத்து நியாயங்களையும் பெற்றுக்கொடுப்போம்,
எழுச்சியும், வீழ்ச்சியும்
ஆரம்பம் முகநூல்

திஹாரி ஊர்மனை சந்தியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டரநாயக சொன்ன கருத்துக்கள்.



இந்த நாட்டின் முஸ்லிம் பிரதேசங்களில் 98 சத வீத வாக்குகள் மைத்திரி ஆட்சிக்கு கிடைத்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்ரடாநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று திஹாரி ஊர்மனை சந்தியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்:
இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பாரிய பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. வாழ்வதற்கு கூட முடியாத நிலைமைகள் கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதே போன்று எமது சிங்கள மக்களுக்கும் பல பிரச்சினைகளை ராஜபக்ஷ அரசு உருவாக்கியிருந்தது.
சுதந்திரமாக வாழ உரிமை இருக்கவில்லை, சுதந்திரமாக தமது மத உரிமைகளை முன்னெடுக்க இடம்கொடுக்கவில்லை, அதேபோன்று சிங்களவர்களுக்கும் நிம்மதியாக உண்டு குடித்து வாழ முடியவில்லை, ராஜபக்ஷவின் கொள்ளைகளால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது, பொருட்களின் விலைகள் உயர்ந்தது, சம்பளங்களை அதிகரிக்க முடியவில்லை இது போன்ற பிரச்சினைகள் பல காணப்பட்டது.
நாம் தனியாக இந்த அரசாங்கத்தை உருவாக்கவில்லை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஒன்றிணைந்து இந்த புதிய அரசாங்கத்தை உருவாக்கினோம். அதேபோன்று இன்னும் ஒன்பது கட்சிகள், சுமார் 50 சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள் போன்ற பலர் எமது பயணத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
அதேபோன்று முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்கினார்கள். மேலும் எதிர்காலத்திலும் எமது அரசாங்கத்துக்கு முஸ்லிம்களது ஒத்துழைப்பு தேவைப்படுகிறது, நாம் அதற்கான சந்தர்ப்பம் வரும்போது உங்களிடம் கூறுவோம்.
தேர்தலின் போது, மைத்ரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தால், இந்த நாட்டில் முஸ்லிம், தமிழ் உட்பட அனைத்து இன மக்களுக்கும் தத்தமது உரிமைகளை முழுமையாகப் பெற்று, சுதந்திரமாக, பயம் இல்லாமல், வாழ முடியும் என்று உறுதியளித்திருந்தோம். அதை நாம் தற்பொழுது ஏற்படுத்தி இருக்கிறோம். இதன் பின்னர் உங்களைத் தாக்க பொதுபல சேனாவோ, வேறு பலு சேனாக்களோ முன்வராது. அப்படி வந்தால் நாம் அவர்களை பிடித்து நாய் கூண்டில் அடைப்போம். இதன் பின்னரும் இந்த நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த இடம் கொடுக்க முடியாது.
இந்த அமைப்புக்களின் பின்னணியை முஸ்லிம்கள் நன்றாக இனம் கண்டு கொண்டனர், இதனால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதேசங்களில் 98 சத வீத வாக்குகள் மைத்திரி ஆட்சிக்கு கிடைத்தது.
தற்பொழுது ராஜபக்ஷ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம், இதன் பின் மக்கள் மீண்டும்,ஒன்றாக, ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு யுகத்தை ஏற்படுத்தியுள்ளோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டரநாயக குமாரதுங்க மேலும் தெரிவித்தார். 
dailyceylon