கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முன்மாதிரி பெண் ஸுமையா அக்ரம்...

மரணித்தவரின் நல்ல விடயங்களை நினைவு படுத்துங்கள் அது
வாழ்கின்றவர்களுக்கு பிரயோசனமாகும் என்ற கருத்துக்கு ஏற்ப அண்மையில் வாழ்ந்து தன் இள வயதிலேயே மரணித்த இந்த சகோதரியை ஞாபகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.. எனக்கு இவர் பற்றி கிடைத்த சில தகவல்களைத் தான் இங்கு எழுதுகிறேன், இ...தில் ஏதும் தவறுதலாக எழுதப்பட்டிருந்தால் சுட்டிக்காட்டுமாறு தயவைக் கேட்டுக் கொள்கிறேன்..)

கஹட்டோவிட்டாவை வசிப்பிடமாக கொண்ட முஹம்மது அக்ரம், சீனங்கோட்டையை வசிப்பிடமாக கொண்ட பாத்திமா பர்ஸானா என்பவருக்கும் நான்காவது புதல்வியாக பிறந்தவர்தான் ஸுமையா. தன சிறு பராயத்தை கஹட்டோவிட்டவில் ஆரம்பித்தவர். பின்னர் தாயாரின் பிறப்பிடத்தை வசிப்பிடமாக்கி தன் கல்வியை தொடர்ந்தார். உயர் தரத்தில் விஞ்ஞான துறையை தேர்ந்தெடுத்து வைத்தியர் ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் படித்திருக்கிறார். சிறு பராயம் முதலே இஸ்லாமிய குடும்பத்தின் அரவணைப்பில் வளர்ந்ததால் இஸ்லாம் தனது வாழ்க்கையாக மாறி இருந்தது எனலாம்.

தனது தோலில் ஏற்பட்ட சிறு சிறு மாறுதல்கள் ஒரு தோல் நோய்க்காக இருக்கும் என்றே எண்ணியிருந்தனர் இவரின் பெற்றோர். ஆனால், இந்த சகோதரி தனது மாறுதல்களை இந்த இன்டெர் நெட்டில் தேட நினைத்தார். தான் படித்ததும் விஞ்ஞான துறை அல்லவா. அல்லாஹ் தந்த அறிவை தனது நோய் பற்றி அறிய தனது தேடலை தொடங்கினார். சுருங்கச் சொல்லப் போனால் தான் என்ன நோயினால் பீடிக்கப் பட்டுள்ளேன் என்பதை அறிய தானே தேடுகின்றார். சும்மா சொல்ல கூடாது, தேடலின் விளைவு சாதகமா பாதகமா என்று அறிகின்ற இந்த துணிச்சல் 20 வயதில் யாருக்கு தான் வரும்? பாதகமான விளைவு வந்தால் அதை ஏற்கின்ற மனோநிலை யாருக்கும் இல்லையே.. உண்மையில், இந்த பெண் துணிச்சலானவள் தான்..

தான் தேடிய இணைய தளங்கள் தனக்கு பீடித்துள்ளது குணப்படுத்த முடியாத இரத்தத்தில் ஏற்பட்ட புற்று நோய் என்பதனை இவருக்கு உணர்த்துகிறது. அதை உறுதி செய்துகொள்ள மகரகமையில் அமைந்துள்ள வைத்திய சாலையை நாடுகிறார், அதுவும் தனது பெற்றோருடன். அங்கே பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர் அது இரத்த புற்று நோய் என்பதனை உறுதி செய்கிறார்.

மரணம் எம்மை பின்தொடர்ந்து வருகின்றது என்பதனை அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால், தன்னை மரணம் பிடித்துவிட்டது என்று ஊர்ஜிதப்படுத்தப் பட்டால் எமது வாழ்க்கை எப்படி இருக்கும்.? ஒரு நிமிடம் கொஞ்சம் யோசித்து பாருங்கள்..!!! ஒரு கருத்து சொல்வாங்க "இறக்கின்ற நாள் தெரிஞ்சு போச்சுன்னா வாழ்கின்ற நாள் நரகமாகிடும்" என்று. ஆனால், இந்த பெண் இவ்விடத்தில் மாறுபடுகிறாள்.
தன்னை மரணம் பிடித்துவிட்டது என்பதால் கலங்கவில்லை. தன்னை பெற்று இந்த இஸ்லாமிய சூழலில் வளர்த்தெடுத்த தன் பெற்றோருக்கு ஆறுதலாக, நம்பிக்கையூட்டும் விதமாக "இது அல்லாஹ் எனக்கு தந்த சோதனை. இன்ஷா அல்லாஹ் நான் இதில் பொறுமையாளராக இருப்பேன்" என்று கூறுகிறார். என்ன ஒரு அழகிய முன்மாதிரி நண்பர்களே!!

இந்த பொறுமையை இவர் மரணிக்கும் வரை காப்பாற்றியிருக்கிறார். இவர் வைத்திய சாலையில் இருக்கும் போது ஒருமுறை தொடர்பு கொண்டு பேசினேன். அந்த குரலில் எந்த கலக்கமும் தென்படவில்லை. அவர் சொன்னது "நான் பொறுமையை கையாளுகிறேன் இன்ஷா அல்லாஹ்" என்றுதான். அவரது யோசனைகள் எல்லாம் தன் மீது அன்பு வைத்திருக்கும் தன் பெற்றோரை நினைத்து தான் இருப்பதாக சொன்னார். இந்த அழகிய பொறுமை, தடுமாற்றம் இல்லா பேச்சு, இயக்க பேதமில்லாமல் பழகும் குணம் என்பவை அவரின் தகப்பனாரிடம் நான் பார்த்தவை.

எமது சமூகத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் அந்த நோயாளியை எப்படியாவது, எந்த வழியிலாவது குணமாக்கணும் என்ற மனப்பாங்கு இருக்கிறதே ஒழிய அந்த நேரத்தில் இஸ்லாம் கூறும் பொறுமையை கடைப்பிடிக்க அந்த நோயாளியை அறிவுறுத்துவது குறைவு. இதனால் தான் இஸ்லாம் காட்டாத வழிகளில் கூட நோய்களுக்கு தீர்வு தேடி அலைகிறார்கள் இந்த அப்பாவி முஸ்லிம்கள். கடைசியில் முஸ்லிம் அல்லாத சாமியார்களிடம் கூட போய் இஸ்லாத்தையும் அந்த நோயாளியையும் அடகு வைக்கின்ற நிலை இன்னும் இருக்கிறது. இந்த நிலை மாற்றப்பட ஸுமையா அக்ரம் ஐ ஒரு முன்மாதிரியாக கொள்ளுங்கள் என் நெஞ்சங்களே..

மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட தனது குடும்பத்தில் தான் தான் முதலில் இறைவனை சந்திக்க போவதாக அடிக்கடி சொல்வாராம். வேதனை அதிகமாகும் போது இரண்டு ரகாத் தொழுதுவிட்டு அப்படியே சுஜூதில் இருப்பாராம். சனிக்கிழமை (29-12-2013) காய்ச்சலால் பீடிக்கப் பட்ட அவரை வைத்தியசாலைக்கு கொண்டு போயிருக்கிறார்கள் அவரது பெற்றோர். வைத்திய சாலையில், தனது அப்பா ( உம்மாவின் வாப்பா) வை பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அப்பாவும் வந்து பேசியிருக்கிறார். பின்னர் வாப்பாவை கூப்பிட்டு பேசியிருக்கிறார். அப்படியே கண்ணை மூடியிருக்கிறார்.. உயிரைத் தந்த ரப்பு தானே அதை வாங்கிக் கொள்கிறான்....
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

தனது நோயை தானே கண்டுபிடித்தது முதல் மரணிக்கின்ற வரை அழகிய பொறுமையை கடைபிடித்தார். இஸ்லாம் அல்லாத எந்த வழியையும் தனது நோய் நிவாரணத்துக்காக பயன்படுத்தாமை. இவை இந்த சகோதரி விட்டுச் சென்ற அழகிய முன்மாதிரிகள்..

அந்த அரபு நாட்டில் மாத்திரமல்ல இந்த கஹட்டோவிட்டாவில் கூட இஸ்லாத்தை வாழ்க்கையாக கொண்ட ஸுமையாக்கள் வாழ்ந்து மரணித்தாலும், இது போன்ற முன்மாதிரிகளால் இன்னும் நிறைய ஸுமையாக்கள் உருவாக வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை...

யா அல்லாஹ் அந்த சகோதரியை ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவனத்தில் சேர்த்து வைப்பாயாக.. அவரின் பெற்றோருக்கு உனது சாந்தியையும் சமாதானத்தையும் நல்குவாயாக...


ஜதாகுமல்லாஹ்
Muhammadh Muhammadh.

மர்ஸூக் ஆசிரியர் அவர்கள் காலமானார்.

கஹடோவிடவைச் சேர்ந்த ஹைருள் பாத்திமா ஆசிரியை அவர்களின் அன்புக் கணவர் மர்சூக் (நளீமி) ஆசிரியர் அவர்கள் காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். குருனாகல் ஐப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், அன்மையில் இடமாற்றம் பெற்று எமது ஊர் பாடசாலைக்கு வந்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அன்னார் சாகுல் ஹமீத் மௌலவி, மொகமட் ஹில்மி ஆகியவர்களின் மைத்துனரும் ஆவர. ஜனாஸா நல்லடக்கம் நேற்று (30.12.2012) மாலை 5.30 மணியலவில் கஹடோவிட ஜாமிஉத் தௌஹீத்  ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
.
அல்லாஹ் சகோதரரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

சகோதரி பாதிமா சுமையா காலமானார்.

கஹடோவிடவைச் சேர்ந்த அக்ரம் ஹாஜியார் அவர்களின் அன்புப் புதல்வி சகேதரி பாதிமா சுமையா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் அல் ஹாஜ் அக்ரம், பர்ஸானா தம்பதியரின் அன்புப் புதல்வியும், மர்ஹும் தம்பீம் ஹாஜியார் அவர்களின் பேத்தியும் ஆவர். 
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (30.12.2012) காலை 10.00 மணியலவில்  சைனாபோட், பேறுவலையில் நடைபெறும்.

அல்லாஹ் இச்சகோதரியின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

கைகள் அற்ற நிலையில் சடலம் மீட்பு (ரன்பொக்குனகம)


நிட்டம்புவ, ரன்பொக்குனகம பகுதியில் அடையாளம் காணப்படாத நிலையில் இரு கைகளும் இல்லாதவாறு சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.


நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இச்சடலம் மீட்கப்பட்டபோது, இரு முழங்கைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், உயிரிழந்த இந்நபர் சுமார் 26 வயதுடையவராக இருக்கலாமென்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

நடவடிக்கை எடுக்கப்படும் முஸ்லிம் பிரதிநிதிகளிடம் கோதபாய ராஜபக்ஷ தெரிவிப்பு


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று நண்பகல் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை அவரது அலுவலகத்தில் சந்தித்து முஸ்லிம் சமூகம் சமகாலத்தில் எதிர்நோக்கிவரும் பல்வேறு சவால்கள் தொடர்பில் சுமார் ஒன்டரை மணித்தியாலம் கலந்துரையாடியதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் துணை செயலாளர் தாஸீம் மௌலவி தெரிவித்தார் .
மேலும் அவர் எமக்கு தெரிவித்த தகவல்களில் இருந்து , இந்த சந்திப்பில் கண்டி மற்றும் பதுளையில் நடந்த சம்பவங்களை விளக்க அந்த பிரதேசங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர் .அங்கு சமகாலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதிகள் விளக்கியுள்ளனர்.
குறிப்பாக ஹலால் சான்றிதழுக்கு எதிரான பிரசாரம் , முஸ்லிம் சனத்தொகை அதிகரிப்பு தொடர்பான பிரசாரம் , முஸ்லிம் வர்த்தகம் தொடர்பான பிரசாரம் மேலும் சமூக வலைத்தள, இணையத்தள பிரசாரங்கள் ,கண்டி , பதுளை முஸ்லிம்களுக்கு எதிரான மேற்கொள்ளப் பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பாகவும் முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலாருக்கு விளக்கியதுடன் அவை தொடர்பான ஆவணங்களையும் அவரிடம் கையளித்துள்ளனர்.
சந்திப்பில் மௌலவி ரிஸ்வி முப்தி, என்.எம்.அமீன் மற்றும் சட்டத்தரணி சுஹைர் ஆகியோர் கருத்துக்களை முன்வைத்தனர். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பாக தெரிவித்ததுடன் இலங்கை முஸ்லிம்கள் வரலாற்று நெடுகிலும் மற்ற சமூகங்களுடன் சமாதானமாக வாழ்ந்து வருவதாகவும் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளனர்
மேலும் அவர்கள் முஸ்லிம் சமூக தொடர்பில் ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருப்பின் அவற்றை தமக்கு தெரியப்படுத்துமாறும் அவை தொடர்பாக தாம் நடவடிக்கை எடுக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இவைகள் தொடர்பில் கருத்துரைத்துள்ள பாதுகாப்பு செயலாளர். மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளதுடன் .மேற்படி முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் , நடவடிக்கைகள் அரசாங்கத்தின் ஆதரவை அங்கீகாரத்தை பெற்றவை அல்ல என்றும் இந்த செயல்பாடுகளை பெரும்பான்மையான பௌத்தர்கள் ஏற்றுகொள்ள வில்லை என்றும் முஸ்லிம்கள் பௌத்தர்களுடன் மேலும் நெருக்கமான உறவை பேணிவரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளதுடன் இவ்வாறான சந்திப்புக்கள் தொடர்ந்தும் இடம்பெறவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று நண்பகல் 12 மணி முதல் 1:30 மணி வரை நிகழ்ந்த இந்த சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் மௌலவி ரிஸ்வி முப்தி , செயலாளர் மௌலவி முபாரக் துணைச் செயலாளர் மௌலவி தாஸீம் , மௌலவி முர்ஸித், தாரிக் பதியுதீன் மஹ்மூத் ,முஹிதீன் , முஸ்லிம் கவுன்சில் சார்பில் அதன் தலைவர் என்.எம்.அமீன் , ஹில்மி அஹமத் , மற்றும் அஸ்கர் கான் வை .எம் எம் .ஏ தலைவர் தீன் , சட்டத்தரணி சுஹைர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
அதேவேளை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அடங்களான முஸ்லிம் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் முறைபாடுகளை கேட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்கள் மீதான சிங்களப் பேரினவாதம்; தீர்வு என்ன?



சுமார் முப்பது வருடகால கொடூர யுத்தம் நிறைவுக்கு கொண்டுவந்ததன் பின்னர் இலங்கைத் திருநாட்டில் நான்கின மக்களும் இன,மத,மொழி பேதங்களை மறந்து ஓர்தாய் பிள்ளைககளாக சுதந்திரக்காற்றை சுவாசித்துவரும் வேளையில் இந்நாட்டிற்கும் இந்நாட்டின் சகல இன மக்களுக்கும் சாபக்கேடாய் சில பேரினவாத சக்திகள் ஊடுருவி குறிப்பாக முஸ்லிம்களையும் முஸ்லிம்களின் பொருளாதாரம்,கலாச்சாரம்,வணக்கஸ்தலங்கள் போன்றவற்றை பகிரங்கமாகவே சூறையாடி வருகின்றமை இன்று உலகறிந்த விடயமாகும்.

இதற்கு உதாரணமாக,

01) 2011 செப்டம்பர் மாதம் பத்தாம் திகதி பொலிஸ் அதிகாரிகள் கைகட்டி நிற்க பௌத்த பிக்குகளின் தலைமையின் கீழ் அனுராதபுரம்-குருநாகல் வீதியில் அமைந்துள்ள ஒட்டுப்பள்ளம் தர்கா தகர்க்கப்பட்டது.

02) குருநாகல் மாவட்டம் வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெதுறு ஓயாவில் அமைந்துள்ள அல் அக்ரம் தைக்கியாவில் கடந்த ரமழான் கால வணக்கங்களுக்கு இடையூறு விளைவிக்கபட்டது.தெதுறு ஓயாவிலுள்ள கிரிந்திவேல்மட விகாரையின் விகாராதிபதி தலைமையில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பிக்குகள் அடங்கலாக சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பெரும்பான்மையினத்தவர்கள் பள்ளிவாயிலின் வளவிற்குள் கதிரைகளில் அமர்ந்தவாறு பிரித் பாராயணம் செய்து தொழுகைக்கு இடையூறை ஏற்படுத்தினர்.இப்பள்ளிவாயில் 1994ம் ஆண்டு ஸ்த்தாபிக்கப் பட்டு முஸ்லிம் சமயக்கலாச்சார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

03) 2012 ஏப்ரல் மாதம் இருபதாம் திகதி தம்புள்ள புனித நகரிலுள்ள மஸ்ஜிதுல் ஹைரிய்யா ஜும்மா பள்ளிவாயில் தகர்க்கப்பட்டது.இவ்வன்முறைச் சம்பவம் தம்புள்ளை ரன்கிரி ரஜமகா விகாரையின் பீடாதிபதி இனாமளுவ ஸ்ரீ சுமங்கல தேரரின் தலைமையில் வழிநடாத்தப்பட்டது.பொலிசாரும் இராணுவத்தினரும் வேடிக்கை பார்க்க சுமார் நூறு பேர் வரையிலான பெரும்பான்மையினக் காடையர்கள் பள்ளிவாயிலுக்குள் அத்துமீறி உட்சென்று அங்கிருந்த பல பெறுமதியான பொருட்களை அடித்து நொறுக்கி அட்டகாசம் புரிந்து வெளியேறினர்.

இதனைத் தொடர்ந்து இன்று வரைக்கும் அப்பள்ளிவாயிலில் ஐவேளை தொழுகைக்கும் கூட பாரிய அச்சுறுத்தல்களே காணப்படுகின்றன.

இச்சம்பவம் நடைபெற்று ஓரிரு நாட்களில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ரன்கிரி விகாரையின் விகாராதிபதி இனாமளுவ ஸ்ரீ சுமங்கல தேரர் "இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் இங்கே விரும்பினால் இருக்கலாம்.இல்லாவிடில் எங்காவது சென்றுவிடவேண்டும்.காகம் தலைக்கு மேல் பறக்கலாம் அனால் தலையில் கூடு கட்ட எத்தனிக்கக் கூடாது"என்று தனது இனத்துவேசத்தை வெளிக்காட்டினார்.

இவ்வன்முறைக்கு உந்து சக்தியாக தம்புள்ளையை தளமாகக் கொண்டு இயங்கும் ரன்கிரி FM என்னும் ஓர் தனியார் வானொலி சுமார் ஆறு மாத காலமாக முஸ்லிம்களுக்கெதிரான இனவாதப்போக்கைக் கொப்பளித்துவந்தது.

இஸ்லாமிய சரீயா சட்டம்,இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் போன்றவற்றை எள்ளி நகையடுவதையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டு செயற்பட்டது.இன்னும் செயற்பட்டுவருகிறது.

04) 2012ஓகஸ்ட்,முப்பதாம் திகதி கோகிலவத்தை என்னும் ஊரில் உள்ள அல்-இப்ராஹிமிய்யா ஜும்மா பள்ளிவாயிலுக்குள் மஃரிப் தொழுகைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் பெரும்பான்மையின வாலிபர்கள் இருவர் மதுபோதையுடன் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பொது மக்களைத் தாக்கி பள்ளிவாயிலில் இருந்த பொருட்களையும் துவம்சம் செய்துவிட்டுச் சென்றனர்.

05) 2012 மே மாதம் குருநாகல் ஆரிய சிங்களவத்தையிலுள்ள உமர் இப்னு ஹத்தாப் பள்ளிவாயிலில் தொழுகை நடாத்துவதற்கு அப்பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகளால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.குறித்த இப்பள்ளிவாயில் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக அவ்விடத்தில் இயங்கிவந்திருந்த போதிலும் கடந்த மே மாதமே இப்பிரச்சினை உருவெடுத்துள்ளது.

06) கடந்த ரமழான் மாதம் ராஜகிரிய தாருல் ஈமான் பள்ளிவாயிலில் தொழுகை நடாத்தக்கூடாதென்று பௌத்த தேரர்கள் குழுவொன்று திரண்டு வந்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.அதனைத் தொடர்ந்து அப்பள்ளிவாயிலில் ஐங்காலத் தொழுகைக்கும் இடையூறுகள் ஏற்படுவதால் மக்கள் அங்கே தொழுகைக்காகச் செல்வதில்லை.எனவே இன்றளவும் ராஜகிரிய தாருல் ஈமான் பள்ளிவாயில் மூடப்பட்ட நிலையிலேயே காட்சியளிக்கிறது.

07) 2012 மே மாதம் தெகிவளை கல்விகாரை வீதியிலுள்ள தாருர் ரஹ்மான் பள்ளிவாயிலில் முஸ்லிம்கள் தொழுவதற்கு தடைவிதிக்குமாறு கோரி கல்விகாரையிலுள்ள பௌத்த தேரர்கள் தலைமையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நிகழ்த்தப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்திற்கு காரணமாக குறித்த இப்பள்ளிவாயில் மாடுகளை அறுக்கப் பயன்படுத்தப்படும் மடுவமாகத் தொழிற்படுகின்றது என்ற பொய்யாகப் புனையப்பட்ட குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

08) 2012 ஒக்டோபர் 27ம் திகதி முஸ்லிம்களின் பெருநாள் தினமான ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று அனுராதபுரம் புதிய நகர் மல்வத்துஓயா லேனிலுள்ள தைக்காப் பள்ளி தீக்கிரையாக்கப் பட்டது.இச்சம்பவத்தில் பள்ளிவாயிலுக்குச் சொந்தமான பல பெறுமதி மிக்க உடைமைகள் முற்றாக அழிந்து போயின.

இதனைத் தொடர்ந்து எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல் "அபிவிருத்திப் பணிகளுக்காக இப்பள்ளிவாயில் உடைக்கப்படும்" என்று அனுராதபுரம் மாநகர மேயர் தெரிவித்துள்ளார்.

09) 2012 ஓகஸ்ட் மாதம் புத்தளம் கற்பிட்டிப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் மாத்திரம் தனித்து வாழும் பகுதியில் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளது.சிங்கள மக்களே இல்லாத ஒரு ஊரில் புத்தர் சிலையை நிர்மாணித்துவிட்டு அங்கு சென்று வழிபடுவதற்காக வெளிப்பிரதேசங்களிளிருந்து மக்கள் அனுப்பப்படுகின்றனர்.
10) அண்மையில் பதுளை நகரில் ஒரு முஸ்லிம் வர்த்தகரின் கடையில் விற்பனை செய்யப்பட்ட கையுறைகளில் புத்தரின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததாகக் குற்றம் சாட்டி அக்கடையின் உரிமையாளரையும் ஊழியர் ஒருவரையும் போலீசார் கைது செய்ததன் தொடர்ச்சியாக "பொதுபல சேனா" என்னும் அனாமதேய அமைப்பின் ஏற்பாட்டில் பௌத்த பிக்குகளின் தலைமையில் சுமார் நூற்றியைம்பது பேர் வரையில் கலந்துகொண்டு பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டது.

இதில் பதுளையைச் சேர்ந்தவர்கள் இருபதுக்கும் குறைவானவர்களே காணப்பட்டனர்.

ஏனையவர்கள் வெளிப்பிரதேசங்களில் இருந்து வரவளைக்கப்பட்டிருந்தனர்.இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காடையர்கள் பலர் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கீழ்த்தரமான இழிவான வார்த்தைகளால் கோஷமெழுப்பி கேலிசெய்தனர்.

அத்துடன் பதுளை நகரில் ஜும்மா தொழுகையை முடித்துவிட்டு வீதியால் சென்று கொண்டிருந்த இரண்டு முஸ்லிம்கள் பேரினவாதக் காடையர்களால் தாக்கப்பட்டு அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் சேதப்படுத்தப் பட்டது.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஆறு ஆடுகள் அதே பேரினவாதக் காடையர்களால் திருடிச்சென்று பின்னர் கழுத்துக்கள் வெட்டப்பட்டு இறந்த நிலையில் அவ்வாடுகள் கண்டு பிடிக்கப்பட்டமை போன்ற முஸ்லிம்களின் உள்ளுணர்வுகளை தட்டிப்பார்க்கும் சம்பவங்கள் சுமார் பதினைந்திற்கும் மேற்பட்டவைகள் இன்றுவரைக்கும் பதுளை நகரில் மட்டும் நடந்தேறியுள்ளன.

11) சகல இன மக்களும் எதுவித முரண்பாடுகளும் இன்றி மிகவும் அன்னியோன்யமாக வாழும் ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம்தான் கண்டி மாநகர்.

அங்கே கடந்த 07.12.2012 அன்று பிரதான வீதிகள் உள்ளிட்ட பாதுகாப்புப் போலீசார் நடமாடுகின்ற முக்கிய பல இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தைத் தூண்டுகின்ற சுவரொட்டிகள் பல ஒட்டப்பட்டுள்ளன.இச்சுவரொட்டிகளில் உள்ள வாசகங்கள் இவைதான்.2025ம் ஆண்டில் இலங்கை சபரிஸ்தான் (என்னும் ஒரு முஸ்லிம்) நாடாக மாறும்.(இனியும்) முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களை வாங்குவோமா?

இவ்வாறு அச்சுவரொட்டிகளில் இனவாதத்தை தூண்டிவிடுகின்ற வாசகங்கள் பகிரங்கமாகக் காணப்படுகின்றன.

மேலே சொல்லப்பட்ட பேரினவாத அடக்குமுறைகளில் தற்போது மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டு வரும் ஒன்றுதான் கையடக்கத் தொலைபேசிகளில் உலாவருகின்ற ஓர் அநாமதேயக் குறுந்தகவல்(SMS).

இக்குறுந்தகவல் கண்டி,குருநாகல்,கொழும்பு,மாத்தறை,அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களிலுள்ள பெரும்பான்மையின மக்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அதிகளவில் வந்தடையக்கூடிய ஒன்றாகக் காணப்படுகின்றது.

-2032di sinhala jathiyata wada muslim jathiya 53%k wenawa,ape sinhala rata unta nithiyen aithi wenawa.danma muslim kadawalin badu ganna eka nathara karamu,halal lakuna sahitha badu warjanaya karamu,unta ape idakadan wikunanna epa,thambith ekka wiwaha epa..etisalat wani ayathana walin palli hadanna wisala lesa mudal denawa,fashion bug,nolimit walin redi ganna epa,ape rata beragamu,obath niyama sinhalayeknam meka sinhalunta yawanna-

இதுவே அக்குறுந்தகவலாகும்.

தமிழாக்கம்:
2032ல் சிங்கள இனத்தைவிட முஸ்லிம் இனம் 53% ஆகும்.நமது சிங்கள நாடு அவன்(ர்)களுக்கு நிரந்தரமாக சொந்தமாகிவிடும்.இப்பொழுதே முஸ்லிம் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்வதை நிறுத்துவோம்.ஹலால் சின்னம் உள்ள பொருட்களை பகிஷ்கரிப்போம்.அவ(ன்)களுக்கு நமது காணிகளை விற்க வேண்டாம்.தம்பி(முஸ்லிம்)களோடு விவாகம் வேண்டாம்..எடிசலாட் போன்ற நிறுவனங்கள் பள்ளிவாயில்கள் அமைப்பதற்கு பெருந்தொகையான பணம் வழங்குகின்றன,பெஷன் பக்,நோ லிமிட் போன்ற இடங்களில் உடுப்பு வாங்க வேண்டாம்,நமது நாட்டை பாதுகாப்போம்.நீங்களும் உண்மையான சிங்களவர்கள் என்றால்,இதை சிங்களவர்களுக்கு அனுப்புங்கள்.

இவ்வாறு இக்குறுந்தகவல் தொடர்கிறது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை த் தொடர்ந்து 2009ம் ஆண்டிலிருந்தே முஸ்லிம்களுக்கெதிராக பேரினவாத அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுவிட்டது."புத்த மதத்தை காப்போம்,இது பௌத்தர்களின் பூமி.............."போன்ற பேரினவாதத்தைப் பறை சாற்றுகின்ற வசனங்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் பெரும்பான்மை இனத்தவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் முச்சக்கர வண்டிகளிலும் பொதுமக்கள் நடமாடும் பஸ் நிலையம்,சந்தைகள் போன்ற இடங்களிலும் இன்றளவும் காணப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் முஸ்லிம்களுக்கெதிராக நம்நாட்டில் வேர்விட்டு வளர்கின்ற பேரினவாத அடக்குமுறைக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகளாகும்.

இலங்கை நாட்டில் எந்தவொரு மனிதனுக்கும் எந்தவொரு மதத்தினையும் பின்பற்றி வாழ்வதற்குரிய முழு சுதந்திரமும் உண்டு.

யாருடைய மத விவகாரங்களிலும் யாரும் இடையூறு ஏற்படுத்துவது பாரிய குற்றமாகும்.அவ்வாறு இடையூறுகளோ தடைகளோ விதிப்பது இலங்கை மதவுரிமைச் சட்டத்தின் கீழ் பாரிய குற்றமாகக் கருதப்படும்.

ஆனால் இலங்கை நாட்டிற்கும் இந்நாட்டில் வாழ்கின்ற நான்கின மக்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கின்ற இப்பேரினவாத செயற்பாடுகள் குறித்து அரசாங்கமோ பாதுகாப்புத்தரப்புக்களோ இது வரைக்கும் வாய்திறக்காமல் இருப்பதே ஆச்சர்யமான விடயமாகும்.

முஸ்லிம் சமூகத்தின் மீது நாடுமுழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இப்பேரினவாதத்திற்கெதிராக இதுவரையில் முஸ்லிம்கள் எந்தவொரு வன்முறைகளிலும் ஈடுபடாமல் பொறுமை காப்பது இலங்கை நாட்டின் ஜனநாயக செயற்பாடுகளில் முஸ்லிம்களுக்கு நம்பிக்கை இன்னும் குறைந்து போகவில்லை என்பதையே பறைசாற்றுகின்றது.


இப்பேரினவாத அடக்குமுறைகளின் நோக்கம் என்ன?

இலங்கையின் சனத்தொகை தற்போது 2 கோடியை கடந்துள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள அதேநேரம், முஸ்லிம்கள் இரண்டாவது பெரும்பான்மை சமூகமாக வியாப்பகம் பெற்றுள்ளனர்.

இதன் காரணமாகவே "சிங்களத் தாய்களும் அதிகமான பிள்ளைகளை பெற்று தாய் நாட்டை பாதுகாக்க முன்வாருங்கள்"என்று அண்மையில் சில பேரினவாத சக்திகள் அழைப்பு விடுத்திருந்தன.அத்தோடு சிங்களத் தாய்மார்கள் அதிகம் பிள்ளைகள் பெறும்போது அவர்களுக்கு விருது வழங்கப்படும் சம்பவங்கள் இன்றும் தொடரவே செய்கிறது.

நாட்டின் சனத்தொகைப் பரம்பலில் இந்நிலை நீடித்தால் எதிர்வரும் சந்ததிக்கு இலங்கை பாதியளவிலேனும் முஸ்லிம்களைக் கொண்ட ஒரு நாடாக மாறிவிடும் என்ற ஓர் அர்த்தமற்ற பயத்தின் காரணமாகவேதான் இன்று இவ்வாறான ஒரு சமூகத்தின் மீதான அடக்கு முறைகள் அலைபாய்கின்றன.

இவ்விடையத்தை தம்புள்ளை பள்ளிவாயிலில் நடைபெற்ற வன்முறைக்கும்,காடைத்தனத்திற்கும் தலைமை வகித்த ரங்கிரி விகாரையின் விகாராதிபதி இனாமளுவ தேரர் ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியொன்றில் வெளிப்படுத்தினார்.

எனவே எதிர்வரும் காலங்களில் இலங்கையின் பௌத்த சந்ததியை பெருக்க வேண்டுமென்பதற்காகவே தற்போதுள்ள இரண்டாம் நிலை இனத்தின் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.இதன் பிரதிபலிப்புக்கள்தான் இன்று "பொது பலசேனா" என்னும் ஓர் அனாமதேய அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மையின அப்பாவி இளைஞர்களுக்கு வன்முறையை போதித்து நாட்டின் எதிர்காலத்தையும் சிங்கள மக்களின் குடும்ப,சமூகக் கட்டமைப்பையும் சீர்குலைக்கின்ற கைங்கர்யத்தையுமே இவ்வமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

முஸ்லிம்கள் ஆளடையாள அட்டைக்கு தொப்பி அணிந்து படம் பிடித்தல் பற்றிய சர்ச்சை, குர்பான் கொடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள்,பள்ளிவாயில்கள் தகர்ப்பு, சிங்கள மொழிமூல பாடசாலைகளில் முஸ்லிம் பிள்ளைகள் எதிர்கொள்ளும் திட்டமிட்ட சவால்கள் போன்ற முஸ்லிம்களுக்கெதிரான சவால்களில் முன்னின்று செயற்படுவது இந்த "பொது பலசேனா"அமைப்பே.

கடமை தவறிய முஸ்லிம் தலைமைகள்.

இலங்கை நாட்டில் முஸ்லிம்களின் எதிர்கால இருப்புக்கள் கேள்விக்குறியாக்கப் பட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் தலைமைகள் தொடர்ந்தும் வாய்மூடி மௌனிகளாக இருப்பது முஸ்லிம்களுக்கெதிரான பேரினவாத அடக்குமுறைகளுக்கு மௌன அங்கீகாரம் அளிப்பதாகவே நோக்கப்படுகின்றது.

தேர்தல் மேடைகளில் முஸ்லிம்களின் தனியுரிமை என்றும்,முஸ்லிம்களின் எதிர்காலம் என்றும் வீர வசனங்கள் பேசிய முஸ்லிம் தலைமைகள் தங்களுக்கு பதவிகளும் கதிரைகளும் கிடைத்த மறுகணமே சமூகத்தை மறந்து சமூகத்திற்கு தங்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மறந்து அரசியல் லாபங்களுக்காக முழு சமூகத்தின் குரல்களையுமே அடக்குகின்ற மாபாதகச் செயல்களையே கைக்கொண்டுள்ளன.

தம்புள்ளை நகரில் பட்டப்பகல் வேளையில் பிக்குகளின் தலைமையில் மஸ்ஜிதுல் ஹைரிய்யா ஜும்மா பள்ளிவாயில் தகர்க்கப்படுகிறது.முழு முஸ்லிம் சமூகத்தினதும் மதச் சுதந்திரம் பேரினவாதக்காடையர்களின் கால்களின் கீழே நசுக்கப்படுகிறது.மறுநாள் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த முஸ்லிம் அமைச்சர் ஒருவர் "குறித்த பள்ளிவாயிலுக்கு எதுவித சேதமும் இழைக்கப் படவில்லை"என அறிக்கை விடுகிறார்

இன்னுமொரு முஸ்லிம் அமைச்சர் விளையாட்டு வீரர்கள் வெற்றி பெறுவதற்கு "தினமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை உச்சரியுங்கள் நன்மை கிடைக்கும்"என்கிறார்.

எங்கே செல்கின்றன எமது முஸ்லிம் தலைமைத்துவங்கள்.

மாற்றுமத அரசியல் தலைவர்களை தர்காக்களுக்கும் பள்ளிவாயில்களுக்கும் அழைத்துவந்து அவர்கள் பெயரில் பிரார்த்தனை செய்த நமது இறையச்சம்(?)மிக்க முஸ்லிம் தலைமைகள் அதே பள்ளிவாயில்களும் தர்காக்களும் பேரினவாத சக்திகளால் உடைக்கப்படும்போது மாயமாகிப்போனதேன்?

தேர்தல் மேடைகள் தோறும் ஜனாதிபதியை அழைத்துவந்து "எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு பள்ளிவாயிலுக்கும் எதுவித சேதமும் இழைக்கப்படமாட்டாது"என்று வாக்குறுதியளிக்க வைத்த முஸ்லிம் தலைமைகள் அதே ஜனாதிபதியின் கண் முன்னாலேயே முஸ்லிம்களின் கலாச்சார மையங்கள் அழித்தொழிக்கப்படும்போது வாய் மூடி மௌனம் காப்பதன் மர்மம்தான் என்ன?

தேர்தல்கள் நெருங்கும்போது முஸ்லிம் சமூகத்தின் மீது அதீத அக்கறைகொள்ளும் அரசியல் தலைமைகள் ஆட்சிக்கு வந்த மறுகணமே "ஆற்றைக் கடக்கும் வரைதான் அண்ணன் தம்பி" என்பதை சொல்லாமல் சொல்லி நிற்கின்றன.

மதிப்புக்குரிய முஸ்லிம் அமைச்சர்களே!தலைவர்களே!

நாம் எல்லாம் வல்ல இறைவனை கடவுளாக ஏற்று அந்த இறைவனுக்கு மாத்திரமே அடிபணிகின்ற முஸ்லிம்கள்.மறுமைக்குப் பின்னரான நிரந்தர வாழ்க்கையை நோக்கமாகக் கொண்டவர்கள்.பட்டங்கள்,பதவிகள் என்பன இவ்வுலகில் அல்லாஹ் நமக்களித்த பேறுகள்.அவற்றை நம்மால் முடிந்தளவு இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம்களுக்காகவும் பயன்படுத்தவேண்டும்.

மறுமையில் நமது பட்டம்,பதவிகள்,பொறுப்புக்கள் பற்றி நிச்சயமாக நாம் விசாரிக்கப்படுவோம்.அந்த நாளில் எந்தவொரு ஆட்சியாளரும் எமக்குப் பரிந்துரை செய்யப்போவதில்லை.இவ்வுலகில் கிடைக்கின்ற அற்ப சொற்ப இலாபங்களுக்காக மறுமை வாழ்க்கையினை தீர்மானிப்பதற்காக அல்லாஹ் நமக்களித்த பொறுப்புக்களை சரிவரப்பயன்படுத்துவோம்.அல்லாஹ்வை மாத்திரம் அஞ்சிவாழும் ஒரு முஸ்லிமைப் பார்த்து முழு உலகும் அஞ்சும்.நாங்கள் பத்ரையும் உஹதையும் கண்ட வீரமிகு முஸ்லிம் சமுதாயம்.கல்லையும் மண்ணையும் வணங்கும் காபிர்களுக்கு ஒருபோதும் அடிபணிந்து போகாமல் உறுதியுடன் வாழ்வதற்கு நம் சமூகத்திற்காகக் குரல் கொடுங்கள்.

பொதுமக்களின் கடமை................

நம் நாட்டில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையானது ஒரு சில பேரினவாத இயக்கங்களால் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றது.சிங்கள மக்களைப் பொறுத்த வரையில் கணிசமான அளவில் அவர்கள் அன்பான இரக்க மனமுடையவர்கள்.

சாதாரணமாக தொழில் செய்து அன்றாட வாழ்க்கை வாழக்கூடிய மக்கள் இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபடுவதில்லை.சிங்கள மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் வாழ்கின்ற எமது முஸ்லிம்கள் அவர்களை எதிரிகளாகப் பார்ப்பது கூடாது.அம்மக்களுடன் மிகவும் கண்ணியமாக நல்ல முறையில் நடந்து கொள்ளவேண்டும்.பரஸ்பரம் அன்பு பாராட்ட வேண்டும்.பெருநாள் தினம்,வெள்ளிக்கிழமை போன்ற விஷேட தினங்களில் அருகிலுள்ள சிங்கள மக்களுக்கு அன்பளிப்புக்களை வழங்குவது,அவர்களின் பிள்ளைகளுக்கு ஆடைகள்,புத்தகங்கள் போன்றவற்றை நமது சக்திக்கேற்ற வகையில் அன்பளிப்புச் செய்வது போன்ற விடயங்களில் அக்கறை செலுத்தவேண்டும்.

அது மட்டுமல்லாது அவர்கள் நோய்வாய்ப் படும்போது வீடுகளுக்குச் சென்று நலம் விசாரிப்பது போன்ற நற்செயல்கள் முஸ்லிம்கள் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

சமூக சேவை அமைப்புக்கள் சிங்கள் மக்கள் செறிவாக வாழக்கூடிய பிரதேசங்களுக்குச் சென்று அங்கே வறிய நிலையிலுள்ள மக்களுக்கு தங்களின் சேவைகளை முன்னெடுக்க வேண்டும்.இரத்ததானம் போன்ற உயிர்காக்கும் சேவைகளை சிங்கள மக்கள் வசிக்கின்ற பிரதேசங்களில் அதிகளவில் மேற்கொள்ள வேண்டும்.

எனவே இஸ்லாம் காட்டித் தந்த மனித நேயப்பணிகளை முன்னெடுத்துச் செல்லும் போது முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணங்கள் பெருமளவில் களையப்படும்.

அத்துடன் இறைவனை அஞ்சி நடக்கும் சமூகமாக நம் முஸ்லிம் சமூகம் மாற வேண்டும்.மாற்றுமத மக்கள் வசிக்கின்ற பிரதேசங்களில் வர்த்தகம் செய்கின்ற நாம் கொடுக்கல் வாங்கல்,அளவை நிறுவை போன்ற விடயங்களில் மிகவும் உன்னிப்பாக நடந்து கொள்ள வேண்டும்.மாற்று மதத்தவர்களுடன் நட்புடன் பழகும் நமது இளைஞர்கள் இஸ்லாம் விதித்த எல்லைக்குள் தங்களை காத்துக்கொள்ள வேண்டும்.எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மது,புகைத்தல் போன்றவற்றை கைக்கொள்ளுதல் கூடாது.

எனவே இஸ்லாமிய உணர்வுள்ள ஒவ்வொரு முஸ்லிம்களும் மாற்றுமத மக்களுடன் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமென்று இஸ்லாம் கட்டளையிட்டுள்ளதோ அவ்வழி வகைகளை கையாண்டு சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை சாதுர்யமான முறையில் எதிர்நோக்கி அழிவுப் பாதையிலிருந்து மீட்டெடுக்க எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக.

அபூஆஸியா, காத்தான்குடி.

வீட்டில் சிறைப்பட்ட சிறுமி நுஸ்கியா (உடுகொட, கஹடோவிட)

நுஸ்காவின் இருப்பிடம்


தனக்கேற்பட்டுள்ள ஒரு கொடிய நோயினால் தன் வீட்டிலேயே சிறைப்பட்டுக்கிடக்கும் ஒரு சிறுமியின் பரிதாப நிலையை ஆலோசனைக்காகவும், படிப்பினைக்காகவும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விளைகின்றோம். 
103 A, Thihariya Road, Udugoda, Ruggahawilla, Sri Lanka என்ற முகவரியையுடைய  எம், ஏ, எப், நுஸ்கா (M.A.F. Fathima Nuska) என்ற இந்தச் சிறுமி தனது மூன்றாவது வயதில் பதுளைப் பிரதேசத்துக்கு பெற்றோருடன் பயணம் சென்ற போது திடீரென்று அவளுக்கு மிகக் கடுமையான காய்ச்சலேற்பட்டு, அது வலிப்பு நோயாக மாறி, சுயநினைவிழந்த நிலையில் அச்சிறுமியை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.  சுமார் இரு வாரமாக வைத்தியசாலையிலிருந்த போதிலும் நோயின் தன்மையில் சாதகமான மாற்றங்களேதும் ஏற்படவில்லை. வைத்தியர்களாலும் உறுதியான முடிவொன்றைத் தர இயலவில்லை. பெரும் பெரும் வைத்தியர்களைச் சந்தித்துச் சிகிச்சை பெறுவதற்கோ, ஆலோசனை பெறுவதற்கோ முடியுமான சூழ்நிலையில் சிறுமியின் பெற்றோரும் அப்போது இருக்கவில்லை. ஆனாலும்  தம் குழந்தையின் சுகவாழ்வுக்காக தம்மால் முடியுமான பல்வேறு கோணங்களிலும் சிறுமியின் பெற்றோர் முயற்சித்துள்ளனர்.  இச்சிறுமிக்கேட்பட்டுள்ள நோய் குறித்து மருத்துவர்கள் கூறியவற்றிலிருந்து பின்வரும் விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

ENCEPHALITIS 'என்செபலிடிஸ்" மூளையழற்சி என்ற நோயினால் இக்குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது இலகுவில் இந்த நோயைக் குணமாக்க முடியாது. (மூளையழற்சி என்பது மூளையில் ஏற்படும் ஒரு கடிய அழற்சி நோய் ஆகும். இந்த தொற்றுநோய்கான நோய்க்காரணிகள் தீ நுண்மம், பாக்டீரியா போன்றனவாகும். தலைவலி, காய்ச்சல், குழப்பம், சோர்வு, களைப்பு போன்றன இந்நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். பின்னர் நோய் தீவிர நிலையை அடையும்போது வலிப்பு,  தசைவலிப்பு,  நடுக்கம், உளமாயம், நினைவாற்றல் பிரச்சனைகள் என்பன தோன்றும் (விக்கிபீடியா)

சில மருத்துவர்களின் கருத்துப்படி இந்நோய் குழந்தையின் 12வது வயதில் அல்லது 21வது வயிதில் குணமாகலாம்……….
சுமார் தற்போது ஒன்பது வயதை எட்டியிருக்கும் இச்சிறுமி தனது உடலில் ஆடை எதனையும் அணிவதில்லை. ஆடைகளை அணிவதற்குரிய மனநிலையில் அவளில்லை. ஆடைகள் அணிவிக்கப்பட்டால் அவற்றை அவள் கிழித்துக் கொள்வதாகவும், தன்னைப் பராமரிக்கச் செல்வோருக்கும் பலவித ஊறுகளை ஏற்படுத்துவதாகவும் சிறுமியின் தாயார் எம்மிடம் கண்ணீர்மல்கக் கூறினார். மருத்துவப் பரிசோதனைக்காக இச்சிறுமியைக் கொண்டு செல்வது மிகச் சிரமம் என்பதையறிந்த சில வைத்தியர்கள் சிறுமியைத் தம்மிடம் வரவழைக்காமலேயே மருந்துகளை வழங்குமளவிற்கு இச்சிறுமியின் நிலை பரிதாபகரமாகவுள்ளது. தான் என்ன செய்கின்றேன்? தனக்கு என்ன நேர்ந்துள்ளது போன்ற எதுவுமே தெரியாத நிலையில் நடைப்பிணம் போலவே இரும்புக்கம்பிகளாலான கதவால் அடைக்கப்பட்ட அறைக்குள் இச்சிறுமியின் நாட்கள் கழிகின்றன. இதில் வேதனை என்னவென்றால்… மாலையானால் இச்சிறுமிக்கு ஊசி போட்டு அவளை மயக்கமடைய வைத்துத்தான் தம் பிள்ளைக்குச் செய்ய வேண்டிய கடமைகளை இச்சிறுமின் பெற்றோர் செய்து வருகின்றனர் என்பதுதான். இந்தச் சிறுமியைப் பரிசோதித்த சில வைத்தியர்கள் அதற்காகக எவ்விதக்க கட்டணங்களையும் பெறாது இலவசமாக மருந்துகளையும் கொடுத்துள்ளனர் என்பதை வைத்து இந்தச் சிறுமியின் நிலை எந்தளவுக்குப் பரிதாபகரமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.  இன்று வரைக்கும் இதே நிலையே தொடர்கின்றது.

தமது குழந்தையின் நிலையைப் பார்த்து வெந்து போயுள்ள பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் கூறியுள்ள மாறுபட்ட கருத்துக்களால் நிலையான முடிவெதனையும் எடுக்க முடியாமற்போனமையால் தன் வீடே தனக்கு சிறையாகிப் போனமைதான் சிறுமிக்கு ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிiலாயாகும்.

இச்சிறுமியின் பெற்றோரிடம் காணப்படும் ஆதங்கமெல்லாம் எவ்வழியிலாவது யாராவது தம் குழந்தையின் நோயைக் குணப்படுத்த முடியுமான வழிகளைச் செய்ய வேண்டும், தேவையான ஆலோசனை வழிகாட்டல்களை வழங்க வேண்டும் என்பதுதான்.

இதை வாசிக்கும் போது வேதனையாயிருக்கின்றது. ஆனாலும் இதற்கு நாம் என்னதான் செய்யலாம்" என்று இருந்து விடாது உங்களால் முடியுமான ஏதாவதொன்றை இச்சிறுமியின் சுகவாழ்வுக்காகச் செய்ய முயலுங்கள் இம்மையிலும் மறுமையிலும் நிச்சயமாக அதனைப் பெறுவீர்கள். குறிப்பாக இந்நோய் பற்றி நன்கு தெரிந்த வைத்தியர்கள், துறைசார் நிபுணர்களின் தயவையே இச்சிறுமியின் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.






தொடர்புகளுக்கு

நுஸ்காவின் தந்தை அஷ்ரப்.
தொ.பே. இல - 072 6899774 அல்லது 0334906041

விண்டோஸ் 8 இணைந்து வரும் புரோகிறாம்கள்.



விண்டோஸ் 8 சிஸ்டத்தின் புதிய இடைமுகத்துடன் சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைந்தே தரப்படுகின்றன.

விண்டோஸ் ஸ்டோர் அணுகி, ஆயிரக்கணக்கில் நமக்குத் தேவையான அப்ளிகேஷன் புரோகிராம்களை,பெரும்பாலும் இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம். இங்கு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படும் இருபது அப்ளிகேஷன்கள் குறித்து காணலாம்.

1. ஸ்டோர்:

விண்டோஸ் ஸ்டோர் அணுகி நாம் பல புதிய அப்ளிகேஷன்களைப் பெற்றுக் கொள்ளலாம். இது ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே போலவே இயங்குகிறது. இதில் சர்ச் மூலம் நமக்குத் தேவையான அப்ளிகேஷனைத் தேடி, இன்ஸ்டால் பட்டனை அழுத்துவதன் மூலம் அதனை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம்.

சில அப்ளிகேஷன்கள், அவை வைக்கப்பட்டிருக்கும் இணைய தளங்களில் இருந்து தான் பெற முடியும். தளத்திற்கு இணைப்பு பெற்று, டவுண்லோட் செய்து, பின்னர் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

2. இன்டர்நெட் எக்ஸ்புளோரர்:

விண்டோஸ் 8 சிஸ்டத்தின் மாறா நிலையில் தரப்படும் பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10. முன்னர் வந்த பிரவுசர்களைக் காட்டிலும் இது, கூடுதல் வேகத்தில் இயங்குகிறது. தொடுதலில் இதனை இயக்கலாம்.

இதில் ஆட் ஆன் மற்றும் பிளக் இன் புரோகிராம்களைப் பெற்று இயக்க முடியாது. சில இணைய தளங்களில் மட்டும் பிளாஷ் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

3. மெயில், காலண்டர், மக்கள் மற்றும் செய்தி அனுப்புதல்:

விண் 8 சிஸ்டத்தில் Mail, Calendar, People மற்றும் Messaging ஆகிய அனைத்தும் ஒன்றுக் கொன்று இணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்கிறது. இவற்றில் ஒரு அப்ளிகேஷனில் ஒரு அக்கவுண்ட்டினை இணைத்தால், அது மற்றவற்றிலும் கிடைக்கும். இதில் கிடைக்கும் மெயில் அப்ளிகேஷன், நமக்கு வரும் மின்னஞ்சல்களைப் பெறுவதற்கான வசதியை மட்டும் தருகிறது.

இங்கு ஹாட்மெயில், அவுட்லுக் அல்லது ஜிமெயில் அக்கவுண்ட்களை இணைத்துக் கொள்ளலாம். IMAP, POP, or Exchange ActiveSync (EAS) போன்ற எதனையும் இணைக்கும் ஆப்ஷனையும் கொண்டுள்ளதால், எந்த மெயில் அக்கவுண்ட்டினையும் இணைக்கலாம்.

காலண்டர் அப்ளிகேஷன், இணைய தள சேவைகள் தரும் காலண்டர்களைக் காட்டுகிறது. ஹாட்மெயில், அவுட்லுக் மற்றும் கூகுள் காலண்டர்களை இணைக்கிறது. People அப்ளிகேஷன் ஒரே இடத்தில் உங்கள் காண்டாக்ட் அனைத்தையும் தருகிறது. ஹாட்மெயில், அவுட்லுக் மற்றும் கூகுள் அக்கவுண்ட்ஸ் மட்டுமின்றி, பேஸ்புக், ட்விட்டர் மற்றும் லிங்க்ட் இன் தொடர்புகளையும் இணைக்கிறது.

Messaging அப்ளிகேஷன் நம்முடைய நண்பர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. விண்டோஸ் லைவ் மெசஞ்சர் மற்றும் பேஸ்புக் சேட் ஆகியவற்றையும் சப்போர்ட் செய்கிறது. ஆனால், இதில் மற்ற பிரபலமான கூகுள் டாக் போன்றவைகளுக்கு சப்போர்ட் இல்லை.

4. சீதோஷ்ண நிலை (Weather):

இந்த அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் இயங்கும் இடத்தின் சீதோஷ்ண நிலையைக் காட்டுகிறது. இத்துடன் மற்ற இடங்களுக்கான சீதோஷ்ண நிலையைக் காட்டும்படியும், செட் செய்திடலாம். இதற்குள்ளாகச் சென்று, ஒவ்வொரு மணி நேரத்திற்குமான, சீதோஷ்ண நிலை, வர இருக்கின்ற நிலைக்கான முன்னறிவிப்பு ஆகியவற்றையும் பெறலாம்.

5. செய்தி, நிதி மற்றும் விளையாட்டு (News, Finance, மற்றும் Sports):

மைக்ரோசாப்ட் Bing தளத்திலிருந்து தகவல்கலைப் பெற்று இந்த அப்ளிகேஷன் இயங்குகிறது. News அப்ளிகேஷன் அண்மைச் செய்திகளை, விரல் தொடுதலில் தருகிறது. மாறா நிலையில் “Bing Daily” என்னும் செய்தியைக் கொடுக்கிறது.

மற்ற BBC, New York Times, மற்றும் Wall Street Journal போன்ற செய்தி சேனல்களுக்கும் இதில் செட் செய்திடலாம். Finance அப்ளிகேஷன் சந்தை நிலவரத்திற்கேற்ப தகவல்களையும் வரை படங்களையும் தருகிறது.

நாம் விரும்பும் பங்குகள் குறித்த தகவல்களை மட்டும் காணும்படி இதனை செட் செய்திடலாம். Sportsஅப்ளிகேஷன், விளையாட்டுத் துறை சம்பந்தமான அண்மைத் தகவல்கள், நடக்க இருக்கின்ற போட்டிகள், நடந்த போட்டிகளின் முடிவுகள் ஆகியவற்றைத் தருகிறது.

6.ட்ராவல் (Travel):

Bing Travel அப்ளிகேஷன் மூலம் நாம் சுற்றுலா செல்லக் கூடிய இடங்கள் குறித்த தகவல்களை அறியலாம். குறிப்பிட்ட இடம் குறித்த தகவல்கள், பயணிக்க வசதிகள், அங்கு இயங்கும் விடுதிகள் போன்றவற்றை அறியலாம்.

7. புகைப்படங்கள் (Photos):

பல்வேறு இடங்களில் நாம் சேவ் செய்து வைத்திருக்கின்ற போட்டோக்களை இந்த அப்ளிகேஷன் மூலம் பார்க்கலாம். ஹார்ட் ட்ரைவ் அல்லது இணைக்கப்பட்டிருக்கும் ட்ரைவ், ஸ்கை ட்ரைவ், பேஸ்புக் அல்லது ப்ளிக்கர் அக்கவுண்ட்ஸ் என எதில் வைத்திருந்தாலும், இதன் மூலம் காணலாம். ஆனால்,கூகுள் பிகாஸா உட்பட மற்ற எந்த புகைப்பட சேவை தளங்களும் இதில் சப்போர்ட் செய்யப்படவில்லை.

8. இசை மற்றும் வீடியோ (Music and Video):

இதன் மூலம் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பாடல் மற்றும் வீடியோ பைல்களை இயக்கலாம். இணையதள மியூசிக் மற்றும் வீடியோ ஸ்டோர்களும் இதில் இணைக்கப் பட்டுள்ளன. Xbox Music ஸ்டோரிலிருந்து பாடல்களை இந்த அப்ளிகேஷன் மூலம் கட்டணம் செலுத்திப் பெறலாம்.

9. விளையாட்டுக்கள் (Games):

Xboxbranded Windows 8 கேம்ஸ் மட்டும் இதில் பெறலாம்.

10. பிங் (Bing):

மைக்ரோசாப்ட் பிங் தேடல் சாதனத்தை இந்த அப்ளிகேஷன் தருகிறது.
உங்களுக்கு கூகுள் தேடல் வசதிதான் வேண்டுமென்றால், விண்டோஸ் 8க்கான கூகுள் சர்ச் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனைப் பெற http://apps.microsoft.com/webpdp/enUS/app/googlesearch/308dc1456851487db83b1223a3b52dc2 என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்திற்குச் செல்லவும்.

11. மேப்ஸ் (Maps):

இந்த அப்ளிகேஷன் Bing Mapsஐப் பயன்படுத்துகிறது. ஜி.பி.எஸ். இணைந்த டேப்ளட் ஒன்றை நீங்கள் வைத்திருந்தால், நீங்கள் இருக்கும் இடத்தினை இந்த மேப் மூலம் பெறலாம். கூகுள் மேப் பயன்படுத்துவது போல, குறிப்பிட்ட இரு இடங்களுக்கிடையே பயணம் செய்வதற்கான வழியைப் பெறலாம்.

12. ஸ்கை ட்ரைவ் (SkyDrive):

இணையத்தில் உங்கள் SkyDrive அக்கவுண்ட்டில் பதிந்து வைத்துள்ள பைல்களை இந்த அப்ளிகேஷன் காட்டுகிறது. உங்கள் பைல்களை, இந்த அப்ளிகேஷன் மூலம், SkyDrive தளத்திற்கு அப்லோட் செய்திடலாம்.

நீங்கள் ஸ்கை ட்ரைவ் வசதியை, டெஸ்க்டாப்பிலேயே வைத்துப் பயன்படுத்த வேண்டும் எனில், அதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டும். அதனைப் பெற http://windows.microsoft.com/enUS/skydrive/download என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

13. ரீடர் (Reader):

PDF மற்றும் XPS பைல்களைப் படிக்க உதவும் ஓர் எளிய அப்ளிகேஷன் இது. இந்த வகையில், விண்டோஸ் சிஸ்டம் முதல் முதலாக ஒரு பி.டி.எப். ரீடர் அப்ளிகேஷனைக் கொண்டுள்ளது.

14. கேமரா (Camera):

உங்கள் வெப் கேமராவினைப் பயன்படுத்தி, கேமரா அப்ளிகேஷன் மூலம் போட்டோ மற்றும் வீடியோவினை எடுக்கலாம். பெர்சனல் கம்ப்யூட்டரிலேயே வெப்கேமரா இணைக்கப் பட்டிருந்தால், அதனையும் பயன்படுத்தலாம். விண்டோஸ் ஸ்டோர் அணுகினால், இன்னும் நிறைய இது போன்ற அப்ளிகேஷன்களைப் பெற்று பயன்படுத்தலாம்.

மேலே காட்டப்பட்டவை அனைத்தும் விண்டோஸ் 8 சிஸ்டத்துடனேயே நமக்குக் கிடைக்கின்றன. வருங்காலத்தில், மைக்ரோசாப்ட் இந்த அப்ளிகேஷன் தரும் வசதிகளை இன்னும் சீரமைக்கும் என எதிர்பார்க்கலாம்.


Read more: http://therinjikko.blogspot.com/2012/12/8.html#ixzz2EwmIQghW

சகோதரி ரஜபுன்னிஸா அவர்கள் காலமானார்.

கஹடோவிடவைச் சேர்ந்த சகேதரி ரஜபுன்னிஸா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் அல் ஹாஜ் அனஸ் நானா அவர்களின் மனைவியும். ஹுஸ்னா, வஸ்னா ஆகியொரின் தாயாரும். முஜ்புர்ரஹ்மான், பைஸல் ஆகியொரின் மாமியும் ஆவர்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (12.12.2012) கஹடோவிடவில் நடைபெறும். மேலதிக விபரங்கள் பின்னனர் அறியத்தரப்படும்.

அல்லாஹ் இச்சகோதரியின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

........
ஜனாஸா நல்லடக்கம் இன்ற மாலை 3.30 மணியலவில் கஹடோவிட ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சாபி ரஹீமின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம்



மேல்மாகாண சபை உறுப்பினர் சகோதரர் சாபி ரஹீம் அவா்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் 12.12.2012ஆம் திகதியன்று கஹட்டோவிட பாலிகா வித்தியாலயத்தில் நடாத்தப்படவுள்ளதாக அறியக் கிடைக்கப் பெற்றுள்ளது. ஊரின் ஆரோக்கிய விடயங்கள் சம்பந்தமாக வழிகாட்டல்களும் வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
சிறீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் சார்பாக மாகான சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள சாபி ரஹீம் அவா்கள் எமது ஊருக்குப் பல சேவைகள் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அல்லாஹ் அவருக்கு சிறந்த வெற்றிகளைக் கொடுப்பானாக!

விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு






சகோதரர் நாஸர் அவர்களின் முயற்சியின் காரணமாக எமது ஊரில் விளையாட்டுத்துறையில் ஈடுபடும் இளைஞர்களுக்கு சில விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பாக கிடைக்கப் பெற்றுள்ளன.

பாராளுமன்றத் உருப்பினரும், பிரதி அமைச்சருமான கௌரவ பண்டு பண்டாரனாயக அவர்கள் இன்று (09.12.2012) கஹடோவிட   Muslim Ladies Study Circle க்கு வருகைதந்ததாகவும், அப்போது எமது ஊரில் விளையாட்டுத்துரையுடன் ஈடுபாடுள்ள இளைஞர்களின் வேண்டுகொளுக்கு இணங்க ஒரு தௌகுதி விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பாக வளங்கப்பட்டதாகவும் தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.

மேலும் கௌரவ பண்டு பண்டாரனாயக அவர்களினால் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலய பாடசாலையின் நூலகத்துக்காக சுமார் 100,000 ரூபா நிதியுதவியும் கடந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கு நினைவுகூறத்தக்கது.

எனது ஊர் மற்றும் மக்கள்...(Facebook வாசகர் ஒருவரின் பார்வை)


வளம்.....

"கஹட்டோவிட்டா" என்ற அழகிய பெயர் எனது ஊர். முற்று முழுதாக 100 சதவீத முஸ்லிம்கள். பலகாலமாக வியாபாரத்தில் எமது ஊரை நம்பியே மாற்று மதத்தவர்கள் வாழ்கிறார்கள், இது அல்லாஹ் எமக்கு கொடுத்த ஒரு மகத்தான அருட்கொடை..மூன்று ஜும்மா பள்ளிகள். பல வைத்தியர்கள் (நாலு பெண்களுக்கு ஒரு ஆண்) அரசாங்க ஊழியர்கள், இஞ்சினியர், அரசியல் சாணக்கியம் மிக்கவர்கள், தொழிலதிபர்கள், தொழினுட்பவியலாளர்கள் என பல கூட்டு உறவுகள் ஒன்றாக உள்ள ஒரு ஊர்.


...பலம்.....
மூன்று தரீக்காக்கள்
தௌஹீத் ஜமாஅத்
DA
ஆசிரியர்கள்
மாணவர்கள்
உலமாக்கள்
தொழிலதிபர்கள்
அரசியலில் ஈடுபடும் நபர்கள்
எல்லாற்றுக்கும் மேலாக துடிப்புள்ள இளைஞர்கள்


பலவீனம்
தரீக்கா- தரீக்காக்கள் அவுராதுகளிலேயே காலத்தை ஒட்டிக்கொண்டு இருக்கின்றமை
தௌஹீத் ஜமாஅத் - பயான்களிலேயே தஹ்வா நடக்கின்றமை
DA - Enjoy பண்றதையே தஹ்வாவாக ஆக்கிகொண்டிருக்கின்றமை
ஆசிரியர்கள் - தனது கௌரவத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகின்றமை
மாணவர்கள் - ஆசிரியர்களின் பலி ஆடுகள்
உலமாக்கள் - ஒன்று படக் கூடிய விடயங்களை மறந்தே போய்விட்டமை
தொழிலதிபர்கள் - இளைஞர்களை கண்டுகொல்லாமை
அரசியல் ஈடுபடும் நபர்கள் - ஊரை முன்னிளைப்படுத்தாமை
இளைஞர்கள் - இருளில் மூழ்கி உள்ளமை


அன்பர்களே,,,,

என்ன செய்யலாம்??

@ இன்னும் கஞ்சா விற்பவனுக்கு ஒரு முடிவு கிடைக்கவில்லை?
@ ஒரு மைதானத்திற்கு வழியில்லை?
@ தீமைகள் நாள்தோறும் பெருகிக்கொண்டு வருகின்றதே, முடிவு?
@ பெரியவர்களே நாளை இந்த தீமையில் தான் எங்கள் குழந்தைகளும் வளரனும், அப்போ பிறகு பார்ப்போம் என்று விடுவதா?
@ உங்கள் மனைவி மார்களை இதில் விட்டு விட்டு எந்த தைரியத்தில் தொழிலுக்கு வெளி ஊருக்கோ, நாட்டுக்கோ செல்ல முடியும்?
இது தான் நான் நேசிக்கும் எனது ஊர்..
சும்மா கருத்து மட்டும் தரவேண்டாம்..
செயலுக்கு முன் இறங்க ஏன் இளைஞர்கள் வருவார்களா?
இதன் முன்னேற்றத்திற்கு ஊரானின் பங்களிப்பு என்ன?


Jazakumullah Mr. Muhammad.

செவ்வாயில் பாரிய தூசுப் புயல் - கியூரியோசிட்டி செயலிழக்கும் அபாயம்?




செவ்வாய்க் கிரகத்தில் ஆக்ஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வந்திறங்கிய கியூரியோசிட்டி ரோவர் விண்வண்டி அங்கு நுண்ணுயிர் வாழ்க்கைக்கு ஆதாரம் இருக்கிறதா என அறிவதை முக்கிய நோக்காகக் கொண்டு அங்குள்ள மண் பாறை மாதிரிகளை ஆராய்ந்து வருகின்றது.
இந்த ரோபோட்டிக் விண்கலம் கடந்த 10 ஆம் திகதி அங்கு வீசத் தொடங்கிய பாரிய தூசுப் புயலைப் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

பூமியில் உள்ள பாலைவனங்களைப் போலவே தாவரங்களும் விலங்குகளும் அற்ற செவ்வாயின் பெரும்பாலான தரை மேற்பரப்புக்களில் அவ்வப்போது பாரிய புழுதிப் புயல்கள் எழுவதும் அடங்குவதும் வழமை. ஆனால் அவை எதிர்பாராத விதத்தில் தோன்றுவதும் திடீரென காணாமற் போவதும் ஏன் என்பது விஞ்ஞானிகளுக்குப் புதிரான விடயமாகும். மேலும் கடந்த 16 ஆம் திகதி செவ்வாயின் வெப்பநிலையும் திடீரென 25 டிகிரி அதிகரித்துள்ளது எனவும் நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

இதேவேளை சில வாரங்களுக்கு முன்னர் செவ்வாயில் தோன்றிய இந்தப் புழுதிப் புயல் நிற்காமல் தொடர்ந்தால் அது கியூரியோசிட்டி விண்வண்டியின் செயற்பாட்டைப் பாதிக்கும் எனவும் விண்வெளியியலாளர்கள் கூறுகின்றனர்.

அது எவ்வாறு எனில் மிக அதிக உயரத்துக்கு எழும் புழுதி கியூரியோசிட்டி இயங்கத் தேவையான சூரிய ஒளியைத் தடுக்கும். மேலும் இந்த ரோபோட்டின் சூரியப் படல்களில் இப் புழுதி படிந்தாலும் அதனால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போகும். கியூரியோசிட்டி விண்வண்டி செவ்வாயில் குறைந்தது 2 ஆண்டுகள் ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

சுப்ரிம் செட் விண்ணை நோக்கி பாய்ந்தது இலங்கையின் முதலாவது செயற்கைக்கோள்!

சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் சற்று முன்னர் விண்ணுக்கு ஏவப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் இலங்கை நேரப்படி மாலை 3.45 மணியளவில் ஏவப்பட்டதாக இலங்கை பிரதிநிதி விஜித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 22ம் திகதி குறித்த செயற்கைக்கோள் விண்ணுக்கு ஏவப்படவிருந்த நிலையில் 5 நாட்கள் தாமதமாகி இன்று மாலை விண்ணுக்கு ஏவப்படுகிறது.
சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின்னர் வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோளை கட்டுப்படுத்துவதற்கான நிலையம் கண்டியிலுள்ள பல்லேகலவில் அமைக்கப்படவுள்ளது. இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டதும், உலகில் சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வைத்திருக்கும் 45வது நாடாக இலங்கை வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளது.
தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு அடுத்ததாக, சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை கொண்டுள்ள மூன்றாவது நாடு என்ற பெருமையையும் இலங்கை பெறும்.



திரைப்படங்களில் முஸ்லிம் விரோத போக்கு


‘துப்பாக்கி’ திரைப்படத்தின் முஸ்லிம் விரோத போக்குப் பற்றி விவாதங்களும்இ மன்னிப்பு நாடகங்களும் நடந்து கொண்டிருக்கின்றது. கமலஹாஷனின் முஸ்லிம் விரோதகுனம் விஷ்பரூபமேடுக்கக் காத்துக் கொண்டிருகின்றது. இவைகளுக்கு மத்தியில் அவை தொடர்பாக எனது சில கருத்துக்கள்.
திரைப்படங்களில் முஸ்லிம் விரோதப்போக்கு தொடர்ந்து வரும் ஒன்று. இது உலக முஸ்லிம்களை இழிவுபடுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதி. வெகு அன்மையில் அமெரிக்காவில் நாயகத்தை இழிவுபடுத்தும் ஒரு நாடகம் அரங்கேரியதுஇ நேற்றுவரை இந்தியாவில் நடந்தது இன்றும் நடந்துள்ளது. புதிதல்லஇ நாமும் நமது மார்க்கமும் ஊடகங்களில் தாக்கப்படுவது.
படங்களில் முஸ்லிம்களை தாக்குவதும் தெரியாமல் இடம்பெற்றுவிட்டது மன்னியுங்கள் எனக்கோரி நீக்குவதும் திரையுலகின் வேடிக்கை நிறைந்த வாடிக்கையான நடவடிக்கையாகிவிட்டது. பல ஆயிரம் நுணுக்கங்கள் பார்த்தும் இந்து சாஸ்த்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்தும் படம் எடுக்கும் இவர்கள் இஸ்லாம் முஸ்லிம் உலகம் பற்றிய எதார்த்தங்களை மறந்தது ஏன். அதுபற்றி தெரியாமல் போனது எப்படி. இது அபத்தம்இ முஸ்லிம்களை முட்டாள்களாக்கும் முயற்சி. இவர்களின் திட்டமிட்ட செயல். இழிவான விளம்பர யுக்தி என்பதே உண்மை.
இந்தியாவைப் பொருத்தவரை வேஷம் போடும் கூத்தாட்டம் பிரதான தொழில். நன்றாய் திறந்து சிறப்பாய் நடித்து வேஷ நாடகம் போட்டு தங்களை ஏமாற்றி தங்களையே ஏய்த்துப் பிழைக்கும் கூத்தாடிகளை கடவுளாக்கி தலைவர்களாக்கி உலக நாயகர்களாக்கி கலாநிதிப்பட்டம் கொடுத்துக் கெளரவித்து அவனுகளின் கட்டவுட்டுகளுக்கு தன் சொந்தப்பணத்தில் பாலபிஷேகம் செய்து மகிழும் புத்தி ஜீவிகள் நிறைந்த நாடு இந்தியா.
இந்த மக்களிடத்தில் தன் தொழிலில் இலகுவாக இலாபம் ஈட்ட தன் வேஷ நாடகத்தை இலவசமாக விளம்பரப்படுத்த இழிவான மிகவும் கேவலமான தரங்கெட்ட பல வழிகளை திரையுலகினர் தொடர்ந்து கையாண்டு வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம்களை இழிவுபடுத்தினால் மற்ற சமயத்தவர்களிடத்தில் தன் கதைக்கும் சதைக்கும் நல்ல வரவேற்ப்புக் கிடைக்கும் என்பதனாலும் முஸ்லிம்கள் எதிர்த்தால் இலவச விளம்பரமும் கிடைக்கும் என்பதனாலும் இந்த வியாபார யுக்தியை தொடர்ந்து இந்தக் கூத்தாடிக் கூட்டம் செய்துவருகின்றது. குறிப்பாக இதைக் கூத்தாடிகலான கமலஹாஷன், விஜயகாந்த், அர்ஜூன் இயக்குனர் மணிரத்தினம் தொடக்கம் பலர் தொடர்ந்து தன் படங்களில் செய்து வருகின்றனர். இதில் இன்று விஜய், முருகதாஸ் எனும் கூத்தாடிக் கூட்டம் புதிதாக இணைந்துள்ளது. அவ்வளவுதான்.
முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளா? இஸ்லாம் தீவிரவாதத்தைத் தூண்டுகின்றதா? அப்பாவிகளைக் கொல்லுவோர் முஸ்லிம் பெயர்தங்கினாலும் அவர்கள் உண்மையான முஸ்லிம்களே இல்லை என்பது இஸ்லாத்தின் ஆணித்தரமான கருத்து. ஆராய்ந்து பாருங்கள் 98 வீதமான முஸ்லிம்கள் தீவிரவாதிகள் இல்லை. தீவிரவாதத்தை தூண்டும் ஒரு விகிதக் கருத்துக் கூட இஸ்லாத்தில் கிடையவே கிடையாது. முடிந்தால் நிரூபிக்கலாம். இது உலகத்திற்கே நீண்டநாளாய் இஸ்லாமிய அறிஞ்சர்களால் விடப்படும் சவால். யாரும் இதை இன்றுவரை சரியாய் எதிர்த்து நின்றதும் கிடையாது வென்றதும் கிடையாது.
காஷ்மீரில் அப்பாவி முஸ்லிம்களுக்கு இந்திய அரச பயங்கரவாதம் செய்யும் கொடூர கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் பற்றியோ குஜராத்தில் நரமாமிசம் திண்ணி நரேந்திர மோடி செய்த மனிதப் படுகொலைகள் பற்றியோ, ஆர் எஸ் எஸ் போன்ற இந்துத் தீவிரவாதக் குழுக்கள் முஸ்லிம்களுக்கு இந்தியா முழுவதும் செய்துகொண்டிருக்கும் கொடுமைகள் பற்றியோ, இந்து தீவிரவாதிகளால் அயோத்தியோ பத்தி எரிந்தது அது பற்றியோ, இலங்கையில் விடுதலை புலிகள் எனும் இந்துப் பயங்கரவாத அமைப்பு முஸ்லிம்களுக்குச் செய்த கொடுமைகள் பற்றியோ, மியன்மாரில் பௌத்த மதகுருக்கள் நேரடியாகக் களத்தில் நின்று பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொளுத்திச் சாம்பலாக்கிக் கொண்டிருக்கின்றார்கள், இஸ்ரேல் எனும் முறை தவறிப் பிறந்த யூத நாடு மனிதாபிமானமின்றி அப்பாவி பலஸ்தீன் மக்களுக்கு மிகவும் காட்டுமிராண்டிதனமான அட்டூழியங்களை செய்து கொண்டிருக்கின்றது இது உலகறிந்த உண்மை இது பற்றியோ அமெரிக்க தலைமையிலான கிறிஸ்தவ நாடுகள் உலகம் முழுவதும் செய்யும் அடாவடித்தனங்கள் பற்றியோ எவனாவது படம் எடுத்தானா. அப்படியான உண்மைக் கதைகளை படமாக எடுத்த முதுகெலும்புள்ள எந்த இயக்குனரும் கூத்தாடியும் இந்தியாவில் கிடையாது.
உண்மை இப்படி இருக்கும்போது எதார்த்தங்களுக்கு எதிராக படமெடுக்க முற்படுவது அபத்தமானதும் சமூக அமைதிக்கு ஆபத்தானதுமாகும்.
களைந்து காட்டிப் புளைப்பு நடத்தும் கூத்தாடிக் கூட்டங்களால் ஒரு போதும் இஸ்லாதின் கெளரவத்தை களைய முடியாது. அது எந்தத் தடையையும் தாண்டி மனித மனங்களில் ஊடுரும் வல்லமை படைத்த அல்லாஹ்வின் மார்க்கம். அவனே அதனின் பாதுவாவலன் அதன் வளர்ச்சிக்கு நேரடிப் போறுப்பாளன். இதை நாம் நிரூபிக்கத் தேவையில்லை உலக எதார்த்தங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
இவர்களின் செயற்பாட்டின் மறுபகுதியில் சில தெளிவான உண்மைகளும் இஸ்லாதிற்கான பல நன்மைகளும் உள்ளது.
1. முஸ்லிம்களின் பாரிய எந்த முயற்சியும் இல்லாதஇ இஸ்லாத்தின் இயற்கையான வளர்ச்சி அதன் வேகம் பலரை பயப்படச் செய்துள்ளது. அதனை சிறுபிள்ளைத் தனமான செல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்த முற்படுகின்றனர்.
2. அமெரிக்க வர்த்தக மைய்யம் இஸ்லாத்தின் பெயரால் தாக்கப்பட்டு இஸ்லாத்திற்கு பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட பின்னும்இ ஜேர்மனிஇ பிரான்ஸ்இ டென்மார்க் என பல நாடுகளில் இஸ்லாம் தொடர்ந்து இழிவு படுத்தப்பட்ட பின்னும் இஸ்லாம் உலகில் ஒரு துளியும் பின்னகரவில்லை மாறாக முன்னோக்கியே பாய்ந்துள்ளது. தாக்கத் தாக்க வேகமாக வளரும் இஸ்லாத்தைக் கண்டு வட்டிகான் தொடக்கம் உலகமே வியந்து வெந்து நொந்து போய் நிற்கின்றது.
இஸ்லாத்தை தாக்குவதாக நினைத்து தூக்கி விட்டுக் கொண்டிருகின்றார்கள். இவர்களின் முயற்சி இஸ்லாத்தினை மற்றவர் படிக்கத் தூண்டும் இலவச விளம்பம்.
இன்று இந்தக் கூத்தாடிகளுக்கு நான் செய்ய வேண்டியது இதுதான்
  • அவர்களின் தோல்விக்காய் நான் உழைக்க வேண்டும்.
  • அவர்கள் சொல்லுவதுபோல் இஸ்லாத்தின் பெயரால் கீழ்த்தரமாக நடக்கும் ஒரு சிலரும் திருந்தும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
  • கேவலமான கூத்தடித் தொழில் ஒழியப் பாடுபட வேண்டும்
  • வரம்புமீறிப் போகும் இக்கூத்தாடிகளின் தொடராட்டத்தை இந்திய அரசும்இ உலக அரசுகளும் தடுத்து நிறுத்துமாறு ஒருமித்த குரலில் கோரிப் போராட வேண்டும்.
முண்டியடித்து முதல் வரிசையில் நின்று திரையரங்குகளை நிரப்பும் முஸ்லிம்கள் இருக்கும் வரை கூத்தாடிகளுக்கு காத்தாடிகள் போல் செயற்படும் ரசிகர் மன்றங்களில் எம் முஸ்லிம்கள் இருக்கும் வரை அவர்களின் வியாபார வெற்றியில் ஒரு முடியளவு நஷ்ட்டதைக் கூட எம்மால் ஏற்படுத்த முடியாது என்பது மட்டும் உண்மை.
நிச்சயம் அசத்தியம் அழிந்தே போகும். எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.
 
மௌலவி மஸ்ஊத் அஹ்மத் -ஹாஷிமி

இஸ்ரேலிய உருவாக்கம் - ஒரு ஆய்வு பார்வை.....!


அவர்கள் சந்தித்தனர். அவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர...
்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடுப்பவர்கள், ஆம். அவர்கள் யூதர்கள். அவர்களுடைய இனத்திற்கென்று ஒரு பூமி இல்லை. இது தங்கள் தேசம் என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. உலக வரைபடத்தில் முகவரி இல்லை. அவர்கள் தங்களுக்கு இனி ஒரு விலாசம் தேடிக் கொள்வது என்று அந்த சூதாட்ட விடுதியில் முடிவு கண்டனர். அவர்களின் தலைவன் தியோடர்ஹெட்நெல் என்பவன்.

அவர்கள் ‘யூததேசிய நிதி’ என்று வலிமை மிக்க ஓர் பெட்டகத்தைத் திறந்தனர். அங்கே கூடியவர்களே ஆளுக்குப் பல்லாயிரம் கோடி டாலர் என்று நிதி அளித்தனர். இது ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே நடந்த நிகழ்வு.
இனி அவர்கள் தங்கள் இனத்திற்கென்று ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். எங்கே உருவாக்குவது? எப்படி உருவாக்குவது ?

அவர்களுடைய வேதத்திற்கு பெயர் ‘தவுராத்.’ பத்துக் கட்டளைகள் என்றும் கூறுவார்கள். தங்கள் தேசம் எங்கே இருக்கிறது என்பதை அந்த வேதம் சுட்டிக் காட்டியிருப்பதாக கற்பிதம் செய்தார்கள். இப்படித் தான் இஸ்ரேல் என்ற நாட்டிற்காக ஒரு கரு உருவாக்கப்பட்டது.

இதனை முதன் முதலாக எதிர்த்துக் குரல் எழுப்பியவர் அண்ணல் காந்தியடிகள் தான். தங்கள் தேசம் இருந்த இடம் என வேதம் வாக்களித்திருக்கிறது என்று கூறி எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கக் கூடாது. அப்படி இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப் படுவதை எதிர்க்கிறோம். அதனையும் மீறி அப்படி ஒரு நாடு உருவாக்கப்படுமானால் அதனை உலகம் அங்கீகரிக்கக் கூடாது. கண்டிப்பாக இந்தியா அங்கீகரிக்காது என்று அண்ணல் காந்தியடிகள் தெரிவித்தார்.
ஆனாலும், வட்டிக்காக கடன் பெற்றவளின் கண்களையே கேட்கின்ற அந்த யூத மகாப்பிரபுக்கள் ஜோர்டான் எல்லையை ஓட்டிய பாலஸ்தீனப் பகுதிக்குள் காலடி பதித்தனர்.

அரபு மக்கள் ஒரு வகையினர் நமது நாடோடி மக்களைப் போல் வசிக்கும் பழங்குடி மக்கள் . அவர்களுக்கு ஜோர்டான் எல்லையோரம் பாலஸ்தீனப் பரப்பிற்குள் சொந்த நிலங்கள் இருந்தன. அவைகள் ரோஜா தோட்டங்களோ, பேரீச்சை தோட்டங்களோ அல்ல. கள்ளிச் செடி மேலும் வானம் பார்த்த பூமி.
அந்த நிலங்களை யூத மகாபிரபுக்கள் வாங்கினர். விலை என்ன தெரியுமா? யானை விலை, குதிரை விலை என்பார்களே அதற்கும் அதிகம்தான். அப்படி வாங்கப்பட்ட இடங்களில் யூதர்கள் குடியமர்த்தப்பட்டனர்.

அப்போது அண்டையிலுள்ள அரபு நாடுகளெல்லாம் அவர்களுக்கு அனுதாபமாகவே இருந்தன. யூத இனத்தையே பூண்டோடு ஒழிப்பது என்பது ஹிட்லரின் லட்சியம். அதற்காக அவன் படை கொண்டு சென்ற நாடுகளிலெல்லாம் முதன் முதலாகச் செய்த கைங்கரியம் யூத மக்களை அழித்ததுதான். தப்பித்த யூதர்கள் அடைக்கலம் தேடி உலகம் முழுமையும் ஓடிக்கொண்டிருந்தனர்.

இது அண்மைக் கால வரலாறு. ஆனால், சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலேயே ஷியாவும், ஐரோப்பிய நாடுகளும் யூதர் என்றாலே முகம் சுளித்தனர். அவர்களை தண்டிக்கப்பட்ட மக்களாகவே கருதினர். அப்படி சரித்திரத்தால் சபிக்கப்பட்ட மக்கள் இங்கேயாவது இளைப்பாறட்டுமே என்று உண்மையில் அரபு மக்கள் அவர்கள் மீது இரக்கம் கொண்டனர்.

அவர்கள் உருவாக்கிக் கொண்ட குடியிருப்பு நாளை தங்கள் எல்லைகளையே தீண்டப்போகும் மலைப்பாம்பு என்பதனையும் அதற்கு இரையாகப் போகும் மான்குட்டிகள்தான், அரபு நாடுகள் என்பதனையும் அப்போது அவர்கள் உணரவில்லை. அந்த மலைப்பாம்பு மெள்ள மெள்ள நெளியத் தொடங்கியது. தமது நீளத்தை காட்ட தொடங்கியது. சுற்றிலுமுள்ள அரபு நாடுகளுக்குள் தமது வாலினை நீட்டியது. அந்த நிலமெல்லாம் யூத சமுதாயத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உரிமையாக இருந்தது.

எனவே, இப்போது தங்கள் மூதாதையர் விட்டுச் சென்ற பரம்பரைச் சொத்தில் தங்களுக்குப் பாத்தியம் உண்டு என்று யூதர்கள் கோரிக்கை வைக்கவில்லை. அபகரிக்கவேத் தொடங்கினர்.

முதல் உலகப் போருக்குப் பின்னர் பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆளுகைக்குள் வந்தது. பாலஸ்தீனத்தில் யூதர்கள் தமது எல்லைகளை விரிவுபடுத்துவதை பிரிட்டன் ஊக்கப்படுத்தியது. காரணம் அந்த நாட்டை விட்டு வெளியேறினாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மத்தியில் -அரபு நாடுகளுக்கு மத்தியில் ஒரு ஏவல் பிராணியை வளர்த்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தது. பின்னர் பிரிட்டனுக்கு துணையாக அமெரிக்காவும் வந்தது.

பாலஸ்தீனத்திற்குள்ளேயே யூதர்களின் குடியிருப்புக்கள் பெருகின. பின்னர் இணைந்தன. தங்கள் பூமிக்குள் ஓர் கள்ள தேசம் உருவாவதை அப்போதுதான் பாலஸ்தீன மக்கள் நன்றாக உணரத் தொடங்கினர். எனவே, 1920ம் ஆண்டு முதன்முதலாக பாலஸ்தீன மக்களுக்கும், யூதர்களுக்கும் இடையே நேரடி மோதல்கள் வெடித்தன.

அடுத்த ஆண்டே இன்னொரு இனக்கலவரம். 1929 ம் ஆண்டு நடந்த மோதல் பயங்கரமானது. `ஹெப்ரான் படுகொலை’ என்று வர்ணிக்கப்பட்ட அந்த வெறித்தனமான மோதலில் ஏராளமான பாலஸ்தீனிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். காரணம் யூதர்கள் வலிமை வாய்ந்த ஆயுதங்களை பெற்றிருந்தனர். அத்தனையும் அமெரிக்க தயாரிப்புத் தான்.

1936ம் ஆண்டு பாலஸ்தீன மக்கள் யூத ஆதிக்கத்தை எதிர்த்து வெகுண்டெழுந்தனர். அந்த எழுச்சி 1939 ம் ஆண்டு வரை பொங்கும் எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்தது. அதே சமயத்தில் யூதக் குடியிருப்புக்களுக்கு உதவியாக பிரிட்டனும், அமெரிக்காவும் பெருமளவில் ஆயுத உதவிக்கள் செய்தன. கரங்களாலும், கவண் கற்களாலும் பாலஸ்தீனிய இளைஞர்கள் எவ்வளவு காலம் போராட முடியும்?

பாலஸ்தீனத்திற்குள் யூதர்களுக்கு என்ன உரிமை என்பதனை தீர்மானிக்க பல்வேறு கமிஷன்களை பிரிட்டன் அமைத்தது. கடைசியாக இந்தப் பிரச்சனையை ஐ.நா மன்றத்திற்கு கொண்டு சென்றது இப்படி. பாலஸ்தீனத்தின் இதயத்தைப் பிளந்து உருவாகிவரும் இஸ்ரேலைஒரு நாடாக அங்கீகரிப்பது என்பதுதான் தீர்வாகும்.

எப்படி நமது துணைக் கண்டத்தை இந்தியா - பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக உருவாக்கியதோ, அதே போல பாலஸ்தீனம் அதற்குள் இஸ்ரேல் என்ற கோட்பாட்டை ஐ.நா மன்றத்தில் பிரிட்டன் முன்மொழிந்தது.
இந்த நிலையில்தான், இன்னொரு தேசத்தைத் துண்டாடி ரத்தக்கோடுகளால் இஸ்ரேல் என்று ஒரு நாட்டை உருவாக்குவதை உலகம் ஏற்கக்கூடாது என்று அண்ணல் காந்தியடிகள் அறைகூவல் விடுத்தார்.

ஆனாலும், அரபு மக்களின் தாயகமான பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப்படுவதை ஐ.நா மன்றம் அங்கீகரித்தது. அந்த மன்றம் அமெரிக்கா ஆட்டி வைக்கும் பொம்மை என்பதனை எத்தனையோ முறை மெய்பிக்கவும் செய்திருக்கிறது.

சியோனிசத்திற்கு எதிராக போராடும் யூத மதகுருவின் கதை




இஸ்ரேல் என்பது யூதர்களின் தாயகம் என்றும், அது பாலஸ்தீனர்களை மட்டுமே அடக்குவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால், உலகில் எத்தனையோ யூதர்கள், இஸ்ரேல் என்ற தேசத்தையும், சியோனிசக் கொள்கையையும் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் இஸ்ரேலில் வாழ்ந்தால், அரசு சிறையில் போட்டு சித்திரவதை செய்கின்றது. வெளிநாடுகளில் வாழ்ந்தால், வாயை அடைக்க வைக்க பல்வேறு வழிகளில் முயல்கின்றது. மாறுபட்ட அரசியல் கொள்கை காரணமாக, இஸ்ரேலிய அரசினால் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட யூத மதகுரு ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். அவர் இறுதியில் விடுதலை செய்யப்பட்டு, நெதர்லாந்து வந்து சேர்ந்து, தற்பொழுது ஆம்ஸ்டர்டாம் நகரில் வசிக்கின்றார ஆனால், அவரின் மனைவியையும், மகனையும் இஸ்ரேலிய அரசு தடுத்து வைத்திருப்பதால், அவர்களை பிரிந்து வர வேண்டிய அவலம் நேர்ந்தது. இன்று வரையில், தனது மனைவியும், மகனும் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாமல் தவிக்கிறார்.

Josef Antebi என்ற யூத மதகுரு, ஆம்ஸ்டர்டாம் நகரில் நடந்த, "காஸா போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்" கலந்து கொண்டார். அப்போது தான் முதன்முதலாக அவரைப் பற்றி நான் கேள்விப் பட்டேன். ஆர்ப்பாட்டத்தில் முன்வரிசையில் நின்ற அவரை படம் எடுத்து, அதனை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். அந்தப் படம், பலரைக் கவர்ந்திருந்தது. (அந்தப் புகைப்படத்தை இங்கே இணைத்துள்ளேன்.) காஸா போர் எதிர்ப்பு பேரணி என்றால், அரேபியர்கள், அல்லது முஸ்லிம்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்திருப்பார்கள் என்பது பலரின் எதிர்பார்ப்பு. ஆனால், ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பல்லின மக்கள் பங்களித்திருந்தனர். பெருமளவு (இடதுசாரி) டச்சுக் காரர்களும் வந்திருந்தனர். ஆனால், யூதர்கள் அதிலும் மதகுருக்கள் கலந்து கொள்வார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இங்கேயுள்ள படத்தில் காணப்படும், ஜோசெப் என்ற யூத மதகுரு, வருகிற திங்கட்கிழமை காஸா போகப் போவதாக அறிவித்துள்ளார். அதன் பிறகு தான், அவரைப் பற்றிய தகவல்கள் பல எனக்குத் தெரிய வந்தன.

இன்றைய இஸ்ரேலில் வாழும், 90 சதவீதமான யூதர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தேறிய குடிகள் ஆவர். அன்றைய பிரிட்டிஷ் காலனியான பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்கள், இன்று சொந்த நாட்டில் சிறுபான்மையினராக உள்ளனர். ஐரோப்பிய யூதர்கள் குடியேறும் வரையில், பாலஸ்தீனத்தில் யூதர்களும், அரேபியர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கிடையில் இனப்பகை சிறு துளியேனும் இருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சியோனிசம் என்ற கொள்கை வழி நடந்த தேசியவாத யூதர்கள், பாலஸ்தீனத்தில் வந்து குடியேறினார்கள். இரண்டாம் உலகப்போருக்கு முன்னும், பின்னும் ஆயிரக்கணக்கான ஐரோப்பிய யூதர்கள் வந்து குடியேறியதால், அவர்களுக்கான வசிப்பிடங்களை உருவாக்குவதற்கான தேவை ஏற்பட்டது. அதுவே பிற்காலத்தில், "இஸ்ரேல் என்ற தேசத்திற்கான சுதந்திரப் போர்" என்று அழைக்கப் படலாயிற்று. வந்தேறுகுடிகளான ஐரோப்பிய யூதர்கள், பாலஸ்தீனத்தில் வாழ்ந்த அரேபியரின் நிலங்களை அபகரித்து, குடியேற்றங்களை உருவாக்கினார்கள். நில அபகரிப்பை எதிர்த்த அரேபியரை தாக்கினார்கள். அப்போது அங்கு வாழ்ந்த "பாலஸ்தீன யூதர்கள்", அரேபிய அயலவரின் பக்கம் நின்று போராடினார்கள்.

தற்பொழுது ஆம்ஸ்டர்டாமில் வசிக்கும் யூத மதகுருவான ஜோசெப், ஒரு பாலஸ்தீன யூதராக, பாலஸ்தீனத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் தனது வாழ்க்கை கதையை, சுருக்கமாக கூறினார்:

"நான் ஒரு பாலஸ்தீன யூத குடும்பத்தை சேர்ந்தவன். பாலஸ்தீன விவசாயிகளுடன் சமாதானமாக வாழ்ந்து வந்தோம். யூதர்கள் அல்லாத பாலஸ்தீனியர்கள் மீதான சியோனிச தாக்குதல்களை ஒன்று சேர்ந்து எதிர்த்து வந்தோம். அதற்காக நான் பெரியதொரு விலை கொடுக்க வேண்டியிருந்தது. என்னைப் போன்ற, பாலஸ்தீனத்தில் பிறந்த யூதர்கள், சியோனிசத்தை எதிர்த்து போராடுவதை இஸ்ரேலிய அரசினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்னை கடத்திச் சென்று, சிறையில் அடைத்து வைத்தார்கள். சித்திரவதை செய்தார்கள். கடைசியில் நாட்டை விட்டு வெளியேறினேன். நான் எனது மனைவியை இழந்தேன். எனது மகனை பதினெட்டு வருடங்களாக பார்க்கவில்லை. அதனால் இப்போதும் வருந்திக் கொண்டிருக்கிறேன். பிறந்த இடத்தை விட்டு வெளியேறுவது எத்தனை வேதனையானது என்பது எனக்குத் தெரியும். பிள்ளையை இழப்பது எந்தளவு வலி எடுக்கும் என்பது எனக்குப் புரியும். அதனால் தான், காஸாவில் அல்லலுறும் பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக, நான் அங்கே செல்லவிருக்கிறேன்."

வருகிற திங்கட்கிழமை, ஆம்ஸ்டர்டாமில் இருந்து செல்லும் குழுவில் ஜோசேப்பும் இடம்பெருகிறார். அந்தக் குழுவினர் முதலில் எகிப்து சென்று, எல்லை கடந்து காஸாவினுள்ளே நுழைய இருக்கின்றனர். இஸ்ரேலியப் படைகளின் முற்றுகைக்குள் சிக்கியுள்ள காசாவில், அவர்கள் பாலஸ்தீன மக்களுக்கு மனிதக் கவசமாக தங்கியிருப்பார்கள்.

thanks kalayarasan (tamil brother)

செவனகலையில் சிவப்பு மழை .




செவனகல பிரதேசத்தில் சற்று நேரத்துக்கு முன்னர் சிவப்பு மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.


செவனகல,இந்திகொலபெலஸ்ஸ, முதலாம் இலக்க கிராமத்தில் சற்று நேரத்துக்கு முன்னரே சிவப்பு மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த மழை நீரை பாத்திரங்களில் சேகரித்துப் பார்த்தபோது அந்நீர் சிவப்பு நிறத்தில் இரத்தம் போன்று காணப்பட்டதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை மழை நீர் பட்ட இடங்களில் எல்லாம் சிகப்பு நிறத்திலான படிமங்கள் காணப்படுவதாகவும் வீட்டு கூரைகள், இலைகள் மற்றும் ஆடைகளிலும் சிகப்பு படிமங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.



நயீமா உம்மா காலமானார்

கஹடோவிடவைச் சேர்ந்த நயீமா உம்மா அவர்கள்  காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.  அன்னார் மர்ஹும் நூர்தீன் அவர்களின் மனைவியும். பாரூக் நானா (Bag), பிர்தௌஸ் நானா, நூர்தீனா, உம்மு ஆய்ஷா, உம்மு ஸலீமா, பாத்தும்மு ஸைமா ஆகியொரின் தாயாரும். ஜனாப் நாஸிர் (மள்வானை), ஆமிர் (மள்வானை), அல் ஹாஜ் மஹ்மூத் ஆகியொரின் மாமியும் ஆவர்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (13.11.2012) மாலை 5.00 மணியலவில் கஹடோவிட முஹியத்தீன் முஹியத்தீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ் இச்சகோதரரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

ஆய்விலும் ஆவணப்படுத்தலிலும் எமது சமூகம் பின்நிற்கிறது – அஷ்கர் கான்



எம்.பி.ஏ.படிப்பை நிறைவு செய்துள்ள இவர் முகாமைத்துவ ஆலோசனை, சந்தைப்படுத்தல் மற்றும் மனித வள அபிவிருத்தியில் தேர்ச்சி மிக்கவர். முகாமைத்துவ, சந்தைப்படுத்தல் ஆலோசகராக இருக்கும் இவர், ஊடகத்துறை, ஆவணப்படத் தயாரிப்பிலும் அக்கறை கொண்டவர்.

சமூகப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அஷ்கர் கான் அவர்கள் (Caring Hands, Knowledge Box) ஆகிய நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் INSIGHT கல்வி நிறுவனத்தின் இயக்குனர் சபை உறுப்பினராகவும் முஸ்லிம் கவுன்ஸிலின் செயலாளராகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்.

...................................................................
மீள்பார்வைக்காக அவருடன் மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.


சந்திப்பு: இன்ஸாப் ஸலாஹுதீன்

Knowledge Box உருவாக்கம் பற்றி குறிப்பிட முடியுமா?

சமூகத்திலே ஒரு சாதகமான மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற சிந்தனையின் விளைவே இந்த ஊடக நிறுவனம். இலத்திரனியல் ஊடகத்தின் ஊடாக அந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் விழுமியங்களுடன் கூடிய ஒரு வலைப்பின்னலை நாம் ஏற்படுத்த முனைகின்றோம்.

ஒரு தனி நிறுவனத்தினால் மாத்திரம் அதனை சாதித்து விட முடியாது. ஏனைய அனைத்து ஊடக வலைப்பின்னல்களும் சேர்ந்துதான் இதனை சாத்தியப்படுத்த முடியும். அதற்கு உதவி செய்யும் வகையில்தான் இந்த நிறுவனமும் உருவாக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கான தனியான ஊடகம் ஒன்று உருவாக்கப்படும் போது அதற்குரிய வளங்களை, நிகழ்ச்சிகளை நாமும் வழங்க வேண்டும் என்பது எமது முக்கிய நோக்கங்களுள் ஒன்றாகும்.

சமூக மாற்றத்தை நோக்கிய படைப்புக்களை தரமான தயாரிப்புக்களாக வழங்க வேண்டும் என்பது எமது மற்றொரு குறிக்கோளாகும்.

வெறுமனே மகிழ்வளிப்புக்கான படைப்புக்களை மாத்திரம் உருவாக்காமல் அறிவுக்கும் சிந்தனைக்கும் துணை செய்யக் கூடிய படைப்புக்களையே நாம் உருவாக்க நினைக்கின்றோம்.
ஊடக நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு குறித்து என்ன சொல்கிறீர்கள்?

அடுத்தவர்களை போட்டியாளர்களாகப் பார்க்காமல் உதவியாளர்களாக நாம் பார்க்க வேண்டும். ஊடகத்தின் முக்கியத்துவத்தை இன்னும் எமது சமூகம் சரியான முறையில் உணர்ந்து கொள்ளவில்லை.

இன்று பல ஊடகங்கள் சமூகத்தின் பல்வேறு வட்டங்களில் செயற்படுகின்றன. இப்படி செயற்படுகின்ற எல்லோருக்கும் மத்தியில் முதலில் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அதற்கு அடுத்த கட்டமாக இணைந்து பணியாற்றுவது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் ஒரே சிந்தனை ஓட்டத்தில் எமது சமூகத்தின் பிரச்சினைகளை எமது ஊடகங்களால் பேச முடியும்.

இணைப்பு இல்லாமல் தனித் தனியாக செயற்படுகின்றபோது ஒரு வேலையை பலர் செய்கின்ற நிலை தோன்றுகின்றது. அதேபோல ஒரு பிரச்சினை வரும்போது அது எப்படி பார்க்கப்பட வேண்டும் என்ற பொதுப்பார்வை சகல அமைப்புக்களிடமும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இதற்கு ஊடகங்கள்தான் உழைக்க வேண்டும். அப்படியாயின் முதலில் ஊடக நிறுவனங்கள் தங்களுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பிற்கு வர வேண்டும். அனைவருமாகச் சேர்ந்து சமூகப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். அப்போது அந்தக் குரல் வலுவானதாகவும் அர்த்தம் கூடியதாகவும் இருக்கும்.

இலங்கை முஸ்லிம்களைப் பற்றி அறபுலகத்திற்கு என்ன தெரியும் என அண்மையில் வதா கன்பர் கூறும்போது, இலங்கை ஒரு அழகான நாடு, அங்கு நல்ல தேயிலை கிடைக்கும் என்பது தான் அவர்களுக்குத் தெரியும். இங்கிருக்கும் முஸ்லிம்களின் வாழ்வியல், கலாச்சாரம், சவால்கள் குறித்து அவர்கள் எதுவும் அறிந்தவர்களாக இல்லை எனக் கூறினார்.

எனவே, எமது பிரச்சினைகள், சவால்கள் சர்வதேச மட்டத்திலும் பேசப்படுவதற்கான வழி வகைகளை ஒருங்கிணைந்த ஊடக வலைப்பின்னல் மூலம் நாம் ஏற்படுத்த வேண்டும். அத்தோடு எமக்கிருக்கின்ற சவால்கள் மிகப் பாரியதாக இருக்கின்றன. எனவே, தமது சொந்தக் கருத்தியல்களுக்கு அப்பால் அந்த சவால்களை எதிர்வு கொள்வதற்காக ஒரு பொதுத் தளத்தில், பொதுச் சிந்தனையின் அடிப்படையில் நாம் அனைவரும் செயற்பட வேண்டிய ஒரு முக்கிய தருணத்தில் இருக்கிறோம்.

முஸ்லிம் சமூக நிறுவனங்களின் முகாமைத்துவம் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

சமூக நிறுவனங்கள் ஒப்பீட்டு அளவில் முன்பை விட இப்பொழுது தேர்ச்சி பெற்று வருகின்றன அவர்களது எல்லா விடயங்களிலும் அந்த மாற்றத்தை அவதானிக்க முடிகின்றது. ஒரு முடிவை அடையாளப்படுத்தி விளைவை நோக்கி பயணிக்கும் முறையின் மூலமே வெற்றியை துரிதப்படுத்திக் கொள்ள முடியும்.

சமூக நிறுவனங்கள், தஃவா அமைப்புக்கள், சமூக ஆர்வலர்களின் எண்ணிக்கை முன்பை விட தற்போது சமூகத்தில் அதிகரித்துள்ளது. ஆனால், சமூகப் பிரச்சினைகள் குறைந்துள்ளதா அதற்குரிய தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளதா என்று கேட்டால் இல்லை என்ற ஒற்றைப் பதிலே எமக்கு கிடைக்கின்றது.

இதற்கு என்ன காரணம் என்றால், அடைவை நோக்கிய அணுகு முறை பின்பற்றப்படாமைதான். இது முகாமைத்துவத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கியமான விடயமாகும். ஒரு வியாபார நிறுவனம் தன்னுடைய வெற்றியை இலாபாத்தை வைத்து இலகுவாக தீர்மானித்துக் கொள்ளும். ஆனால், சமூக நிறுவனங்கள் தமது வேலைத்திட்டத்தின் விளைவை வைத்துத்தான் அதனைத் தீர்மானிக்க வேண்டும்.

எனவே, விளைவை மையப்படுத்திய வேலைத்திட்டமாக தமது பணிகளை சமூக நிறுவனங்கள் ஆக்கிக் கொள்ள வேண்டும். உதாரணமாக, கடந்த ரமழானிலே செய்யப்பட்ட இப்தார் நிகழ்ச்சிகள் எந்தளவு தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தியது என்பதை நாம் சிந்தித்தாக வேண்டும்.

ஊர் மட்டங்களில் அது சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி இருந்தாலும், தலை நகரத்தில் இடம்பெற்ற பிரமாண்டமான இப்தார் நிகழ்வுகள் எம்மை ஒரு ஆடம்பர சமூகம் எனவும் அதிகம் பணம் உள்ளவர்களெனவும் அடையாளப்படுத்தி இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.

சமூக நிறுவனங்களில் இருக்கின்ற மற்றொரு விடயம்தான் எப்போதும் அவை நல்லவர்களையே தேடுகின்றன. ஒரு நிறுவனத்தின் போக்கு நல்லவர்களாலும், வல்லவர்களாலும்தான் தீர்மானிக்கப்படுகின்றது. எல்லா அமைப்புக்களும் தமது சிந்தனையோடு ஒத்துப்போகக் கூடிய நல்லவர்களிடமே பொறுப்புக்களை கொடுக்கின்றன. ஆனால், அடைவு மட்டம் பாதிக்கப்படும்போது அது அப்படித்தான் என தம்மை தேற்றிக் கொள்கிறார்கள்.

எனவே, நல்லவர்கள் தரமானவர்களாகவும் இருக்கின்றார்களா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், சமூக நிறுவனங்கள் தனிநபர்களின் ஆளுமை ஆதிக்கத்திற்கு உட்பட்டதாக இருக்கக் கூடாது. அது நிறுவனத்தின் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. மேலும், தலைமைத்து வத்திற்கு அடுத்த பரம்பரையையும் உருவாக்குவதில் அதிகம் முனைப்புக் காட்ட வேண்டும்.

எமது சமூகத்தில் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

எமது சமூகத்தில் இன்று ஆய்வாளர்கள் குறைந்து போயிருக்கிறார்கள். ஆய்வுக்காக நேரத்தை ஒதுக்குபவர்களும் குறைந்திருக்கிறார்கள். இதன் முக்கியத்துவத்தை நாம் காலம் கடந்துதான் புரிந்து கொள்ளக் கூடும்.

சமூகம் சார்ந்த ஆய்வுகள் தேக்க நிலையிலேயே இருக்கின்றன. செய்யப்பட்ட ஆய்வுகளும்கூட ஆவணப் படுத்தப்படவில்லை. இந்த நாட்டின் தேசிய நூதனசாலைக்கு முஸ்லிம்களின் ஆவணங்களைத் தேடிச் செல்லும் ஒருவர் வெறுங்கையுடனே திரும்பி வர வேண்டி இருக்கின்றது.

எமக்கான பொது ஆய்வு மையம் ஒன்றின் அவசியத்தை நாம் வேண்டி நிற்கின்ற இக்கால கட்டத்தில் ஆய்வுகளை ஊர், பாடசாலை மட்டங்களில் ஊக்குவிக்க வேண்டும்.

அத்தோடு, ஆவணப்படங்களை தயாரிப்பதிலே நாம் மிகவும் பின்நிற்கின்றோம். கொரியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடைபெற்ற ஆவணப்படுத்தல் தொடர்பான செயலமர்வுகளில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. பல்வேறு நாடுகளிலிருந்து பல ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் அங்கு வந்திருந்தார்கள். அப்போது எமது சமூகத்தை நினைத்து கவலைப் படுவதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியவில்லை.

அல்-ஜஸீரா, பி.பி.சி. போன்ற ஊடகங்களில் செய்தியை அடுத்து அவற்றின் ஆவணப்படங்களுக்கே அதிக வரவேற்பு இருக்கின்றன. ஆவணப் படம் (Documentary) என்பது சமூகப் பிரச்சினைகளைப் பேச ஒரு வலுவான ஆயுதம்.
எமது சமூகத்தின் முதன்மைப் பிரச்சினையாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?

சமூகத்தை நோக்கிய பார்வையில் இருக்கும் தெளிவின்மை அல்லது அறிவின்மையே என்னைப் பொறுத்தவரையில் எமது சமூகத்தின் முதன்மைப் பிரச்சினையாகும். அந்த அறியாமையின் காரணமாக மக்கள் பிழையாக வழிநடாத்தப்படுகின்றனர்.
எனவே, மக்களின் மனப்பாங்கு, சிந்தனை என்பவற்றில் மாற்றம் ஏற்பட வேண்டும். எனது மகன் எப்படி செல்வம் சம்பாதிப்பான் என்பதை விட தனது திறமைகளை இந்த நாட்டிற்கும், சமூகத்திற்கும் எப்படி செலவழிப்பான் என்று நம் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.
நல்ல மக்கள் இல்லாமல் ஒரு நல்ல அரசியல்வாதி தோன்ற முடியாது. எனவே, சமூகத்தை நோக்கிய எமது பார்வையில் இருக்கும் அறியாமை நீக்கப்பட வேண்டும். இந்தத் தெளிவின்மைதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாகும்.
எனவே, ஒரு திசையை நோக்கி சமூகத்தை நகர்த்த வேண்டும். சமூகத்தை வழிநடாத்த முன்வருபவர்களும் அதனைச் செயற்படுத்தும் மக்களும் ஒருமைப்பட்ட சிந்தனையோடு சமூக மாற்றத்தை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும். ஊடகங்கள் இதற்கு தமது மகத்தான் பங்களிப்பை வழங்க வேண்டும். மக்களது தெளிவின்மையைப் போக்கி அவர்களை அறிவூட்ட எமது ஊடகங்களை நன்கு திட்டமிட்ட வகையில் நாம் பயன்படுத்த வேண்டும்.

முஸ்லிம் சமயப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இடமாற்றம்


முஸ்லிம் சமயப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி (நளீமி) மத விவகார அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹஜ் விவகாரங்களின்போது அமைச்சர் பௌஸி மற்றும் பிரதி அமைச்சர் காதர் (ஹாஜியார்) இற்கும் இடையில் ஏற்பட்ட முறுகல்களினால் முஸ்லிம் சமய கலாசார திணைக்களமும் அதன் பணிப்பாளரும் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹஜ் பயணம் மேற்கொள்வோர் ஒரு வருடத்திற்கு முன்னரே முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒரு முறை ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் மீண்டும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற விடயங்களை இப்பணிப்பாளர் மேற்கொண்டுள்ளார்.
இவைகளை மறுப்பதுடன், தங்களுக்கு சில ஹஜ் வீசாக்களை வழங்க வேண்டும் என குறித்த அரசியல்வாதிகள் கோரியுள்ளனர். அதனை பணிப்பாளர் மறுத்துள்ளதுடன், புதிதாக ஹஜ்ஜுக்குச் செல்வோருக்கு முன்னுரிமை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான சில சிறந்த செயற்பாடுகளை மேற்கொண்டதால் இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.-

ராஸிக் நானா அவர்கள் காலமானார்.

கஹடோவிடாவைச் சேர்ந்த மர்ஹுமா நஜீபா அவர்களுடைய அன்பு மகன் ராஸிக் அவர்கள் காலமானார். அசீம், ராபி, ரமீஸ், அஸீமா, துல்பிகா, அஸ்மியா ஆகியொரின் தந்தையும், சகோதரர் பிஸ்தாமி (ஹாட்வயர்) அவர்களுடைய மாமாவும், சகோதரர் ஜுமைல் உடைய அப்பாவும் ஆவர்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (05.11.2012) காலை 10.00 மணியலவில் கஹடோவிட ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ் இச்சகோதரரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

வெள்ள நிவாரண உதவிகள் (2nd updates)

இதுவரையில் அரசிடமிருந்து எவ்வித நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட பிரதேசவாசிகளுக்கு பகல் உணவு அத்தனகல்ல பிரதேசசபை உறுப்பினர்களான நஜீம் நானா, மற்றும் அஷ்ரப் அவர்களின் தலைமையில் ஊர்மக்களின் உதவியோடு வினியொகிக்கப்பட்டது. அத்தோடு அவர்களுக்கான இரவு மற்றும் மறுநாள் உணவுகள் ஊர் பள்ளிவாசல்களினுாடாக வினியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் அறியத்தருகின்றன.

இன்று மாலை எமது பஸ்தரிப்பு நிலையம் இவ்வாறு கானப்பட்டது.


மேலதிக புகைப்படங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
www.kahatovita.tk

எமது கிராமம் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.

தொடர்ந்து பேய்திகொண்டிருக்கும் மழையினால் அத்தனகல்ல ஆறு பெருக்கெடுத்துள்ளதனால் கஹடோவிட்ட கிராமத்தின் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. சில வீடுகள், கடைகள், வயல்வெளிகள் நீரில் மூழ்கியிருப்பதுடன் இன்னும் பல இடங்கள் மூழ்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளன.

தொடர்ந்தும் மழைபெய்துகொண்டிருப்பதால் ஆற்றின் நீர்மட்டம் இன்னும் உயரக்கூடிய அபாயம் தென்படுவதால் அப்பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.