கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா காலமானார்.

முன்னாள் மேல் மாகாண ஆளுனரும், பாராளுமன்ற உறுப்பினருமான அலவி மௌலானா தனது 84 ஆவது வயதில் இன்று காலமானார்.

1948 ஆம் ஆண்டு தொழிற்சங்கவாதியாக அரசியலில் பிரவேசித்த இவர் 1956 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து சுமார் 50 வருடங்களுக்கு மேலாக தனது அரசியல் சேவையை முன்னெடுத்திருந்ததோடு 2015 ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தரைமட்டமான முகாமின் படங்கள் வெளியானது : இன்னமும் சிறிய வெடிப்புச் சத்தங்கள் : 7500 பேர் இடம்பெயர்வு :

அவிசாவளை கொஸ்கம - சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தால் முகாம் தரைமட்டமாகியுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதும் குறித்த பகுதியில் இன்னமும் சிறு சிறு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜெயனாத் ஜெயவீர தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம்
கொஸ்கம மக்கள் யாருக்காவது அவசர தேவைகள் ஏற்படுமாயின் 117 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி பிரதமர் பணிப்பு
சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு பிரிவிற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கொஸ்கம ஆயுதக் கிடங்கில் தீ விபத்து, ஊர் மக்கள் வெளியேற்றம். வெடி அதிர்வுகள், தீப்பிளம்புகளை கஹ்டோவிடவிலும் உயர் பிரதேசங்களில் பார்க்கமுடிந்துள்ளது.

கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தினால் அதனைச் சூழ 8 மீற்றர் தூரத்தில் வசிப்போரை அந்த இடங்களிலிருந்து அகன்று செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீ இன்னும் அணைக்கப்படவில்லை எனவும், நிலைமைகள் கட்டுப்பாடில் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வெடிப்பு சம்பவத்தின் சத்தமானது 50 கிலோமீற்றர தூரத்தில் உள்ள தெரணியகல நூரி தோட்டம் வரை கேட்டதாகவும், வெளிவரும் புகை,வெளிச்சங்களைக் கொண்டு கொஸ்கம பிரதேசத்தை பார்க்க கூடியதாகவுள்ளதாகவும் இந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்டுள்ள தீவிபத்தினால் 10 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள பிரதேசங்களுக்கும் பொருட்கள் சிதறி விழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹங்வெல, அவிஸ்ஸாவளை பிரதேசங்களுக்கே குறித்த தீயினால் பொருட்கள் சிதறி விழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அவிஸ்ஸாவளை வைத்தியசாலைக்கும் பொருட்கள் வந்து விழுவதால் நோயாளிகளை இடமாற்றியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சற்று நிமுடங்களுக்கு முன்னர் கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ  விபத்தில் முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக ஹோமாகம வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 25 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள  எமது கிராமம்  கஹடோவிடாவிற்கு இதன் தாக்கம் தெளிவாக கேட்க்ககூடியதாகவும், தீப்பிழம்புகளை பார்க்கக் கூடியதாகவும் இருந்தது. 

உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முஹம்மத் அலி: நிறவெறி கொடுமையை மாய்க்கும் சக்தி இஸ்லாம் என உணர்ந்து சத்தியத்தின் பக்கம் வீழ்ந்தவர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பெரும்புரட்சி செய்த ஓர் மாவீரனாக - நிறவெறி அக்கிரமத்துக்கு எதிரான அமெரிக்க இஸ்லாமிய போராளியாக அவரை யாருக்குத்தான் பிடிக்காது..?
1967-ல் அமேரிக்கா நடத்திய வியட்நாம் போரில் கலந்து கொள்ள தம் இளம் குடிமக்களை அமெரிக்க அரசு கட்டாயப்படுத்திய பொழுது, போருக்கு சென்றாக வேண்டிய தமது முறை வந்த நேரத்தில்... அப்போது முஹம்மது அலி சொன்ன புரட்சிக்கருத்துகள் எந்நாட்டுக்கும் பொருந்தி, எந்நாளும் போற்றத்தக்கன.
"வியட்நாமில் என் சகோதரன், என் சில இருண்ட மக்கள், சேற்றில் வாழும் சில பசித்த ஏழை மக்கள் ஆகியோரை பெரிய சக்தி வாய்ந்த அமெரிக்காவிற்காக சுட்டுக்கொல்ல, என் மனசாட்சி என்னை அனுமதிக்காது.
எதற்காக அவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும்..?
என்னை அவர்கள் ஒருபோதும் நீக்ரோ என்றழைத்தது கிடையாதே.
அவர்கள் என்னை விசாரணையின்றி ஒருபோதும் அடித்து மிதித்துக்கொலை செய்ய முயன்றது கிடையாதே.
அவர்கள் என் மீது எந்த நாய்களையும் ஏவி கடிக்கவிடவில்லையே.
அவர்கள் என்னிடமிருந்து எனது குடியுரிமையை திருடவில்லையே.
அவர்கள் என் தந்தையை கொல்லவில்லை; என் தாயை பாலியல் வல்லுறவு செய்யவில்லை.
அப்புறம் நான் எப்படித்தான் அந்த ஏழை மக்களை சுட முடியும்..?
என்னால் போருக்கு போகவியலாது.
இதற்காக நான் சிறை செல்லவும் தயார்..." என தனது அமெரிக்க அரசுக்கு எதிராக முழக்கமிட்டார்.
விளைவு..?
5 வருஷ சிறை தண்டனையும் $10,000 அபராதமும் (1967ம் வருஷம்... 7 லட்சம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை) விதிக்கப்பட்டன.
அதுமட்டுமா..?
அதற்குமுன்னர் அவர் வென்ற பதக்கம், வெற்றிப்பட்டயம் அனைத்தும் பறிக்கப்பட்டன. மேலும்,
எல்லா அமெரிக்க மாகாணத்திலும் அவருக்கான குத்துச்சண்டை உரிமம் மறுக்கப்பட்டு அவர் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி,
வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளிலும் அவரால் கலந்து கொள்ள முடியாதவாறு அவரது பார்போர்ட் பறிக்கப்பட்டது.
1964 லேயே ‪#‎முஹம்மத்_அலி‬ என்று அவர் தன் பெயரை மாற்றி இருந்தாலும், அப்படி அழைக்காமல் வேண்டுமென்றே க்ளே என்ற அவரது பழைய பெயரிலேயே தொடர்ந்து அவர் பற்றிய செய்தி போட்டு நிறவெறி ஊடகங்கள் தம் வஞ்சம் தீர்த்தன.
தடை விளைவாக அவரால், 1967 முதல் 1970 வரை உலகில் நடந்த எந்த ஒரு போட்டியிலும் கலந்துகொள்ள முடியாமல் போனது. 1971ம் ஆண்டு பல்வேறு முறையீடுகளுக்கு பிறகு, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் அவர் மீதான தண்டனை ரத்தானது. அதன்பின்னர் மீண்டும் பல பல வெற்றிகள்.
இப்படியாக, "கலந்து கொண்ட எந்த ஒரு போட்டியிலும் தோல்வியே தழுவாத ஒரே வீரர்..." என்று தடைக்கு முன், குத்துச்சண்டை உலகின் சிகரத்தில் புகழோடு இருந்த போதுதான்... தமது 25 லிருந்து 29 வயது வரை தடை காரணமாக பல்வேறு வெற்றிப்பட்டங்களை பதக்கங்களை அவரால் வெல்ல முடியாமல் போனது.
இருந்தும்... குத்துச்சண்டை உலகில் இன்றும் கூட இவர்தான்... 56 வெற்றிகள், 37 நாக்கவுட், 5 தோல்விகள் மட்டுமே என... வேர்ல்ட் ரெக்கார்ட் வைத்துள்ள நம்பர் ஒன் சாதனையாளர்..!

Jazakkallah - Mohamed Ashik

தொழுகைக்காக வர்த்தகத்தை இடை நிறுத்தும் முதல் பிரதேசம் மற்றும் முதல் முஸ்லிம் பாடசாலை

அஸ்லம் அலி: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முஸ்லிம்கள் செறிவாகவும் அதிகமாகவும் வாழும் கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசதில் முஸ்லிம் வர்த்தகர்கள் தொழுகைக்காக தமது வர்த்தகங்களை இடைநிறுத்தி தொழுகையில் ஈடுபட தீர்மானித்தனர். அதற்கு அமைவாக தற்போது அந்த தீர்மானம் ஏழு மாதங்களை அடைந்துள்ள நிலையில் தற்போதும் அந்த தீர்மானம் மிகவும் உச்சாகத்துடன் தினமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. என்பதுடன் அக்குரணை மத்திய (அல் அஸ்ஹர்) கல்லூரியிலும்  கல்வி அமைச்சின் அனுமதியுடன் இமாம் ஜமாத்துடன் லுகர் தொழுகை இடம்பெற்று வருகிறது .
அக்குரணை பிரதேசம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும், அங்கு 99 வீதமான வர்த்தக நிலையங்கள் முஸ்லிம்களுக்கு உரியதாகும். அங்குள்ள மஸ்ஜிதுகளில் பாங்கு -தொழுகைக்கான அழைப்பு- செய்யப்படும்போது முஸ்லிம் வர்த்தகர்கள் தமது கடைகளை குறித்த நிமிடங்கள் தொழுகைக்காக மூடிவிட ஏகமனதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்மானித்தனர் என்பது குறிப்பிடதக்கது.
தினமும் வர்த்தகம் சூடுபிடிக்கும் நேரங்கலான லுஹர், மற்றும் அஷர் நேரங்களில் தொழுகைக்காக முழு வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு முதலாளி , தொழிலாளி உட்பட அனைவரும் மஸ்ஜிதுகளுக்கு சென்று வருகின்றனர். தினமும் அக்குரணை பிரதேச மஸ்ஜிதுக்களில் லுஹர், மற்றும் அஷர் நேரங்களில் ஜும்மாஹ் தொழுகைக்கு கூடும் தொகைக்கு நிகரான மக்கள் கூட்டத்தை காணக்கூடியதாக இருப்பது சிறப்பம்சமாகும் .
இந்த நடைமுறையின் மூலம் ஏனைய மதத்தவர்களுக்கு சிரம்பங்கள் ஏற்படாதவாறு சில விசேட வழிமுறைகளும் கையாளப்படுகிறது . தற்போது அக்குரணை பிரதேச அரச தேசிய முஸ்லிம் பாடசாலையான அக்குரணை மத்திய (அல் அஸ்ஹர்) கல்லூரியிலும் மாணவர்கள் லுகர் தொழுகையை இமாம் ஜமாத்ஆக பாடசாலையின் மைதானத்தில் பல மாதங்களாக நிறைவேற்றி வருகிறார்கள் .
இதன் பிரகாரம் தொழுகைக்காக தமது வர்த்தகத்தை இடை நிறுத்தும் முதல் முஸ்லிம் பிரதேசம் என்ற பெருமையை அக்குரணை பிரதேசம் பெற்றுகொண்டுள்ளதுடன் லுகர் தொழுகையை இமாம் ஜமாத்துடன் நிறைவேற்றும் முதல் முஸ்லிம் அரச பாடசாலை என்ற பெருமையை அக்குரணை (அல் அஸ்ஹர்) மத்திய கல்லூரி பெற்று கொண்டுள்ளது . தொழுகைக்காக செலவு செய்யப்படும் குறித்த நிமிடங்கள் மேலதிகமாக கல்லூரியால் பெறப்படுவாதல் குறித்த பாடசாலை 10 நிமிடங்கள் தாமதித்தே நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
lankamuslim