கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிடாவின் பாதுகாப்பு சம்பந்தான விசேட கூட்டம்

எமதூரின் பாதுகாப்பு சம்பந்தமான ஒரு விசேட கூட்டம் 25.09.2011ஆம் திகதி காலை 9.30மணிக்கு கஹட்டோவிட அல்பந்ரியா மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. நிட்டம்புவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் எமதூரின் பாதுகாப்பு சம்பந்தமான கல்நதுரையாடல் நடைபெறவுள்ளதால் ஊரின் நலன் விரும்பிகள் அனைவரும் இதில் தவறாது கலந்துகொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர். எமதூரின் இரு கிராமசேவகர்களின் ஆலோசனையின் பேரிலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு கஹட்டோவிட பாடசாலைகளின் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்









2011 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்து விட்டன.எமது ஊரைப் பொருத்தவரை, அல் பத்ரியா பாடசாலையைச் சேர்ந்த 03 மாணவர்களும், பாலிகா பாடசாலையைச் சேர்ந்த 05 மாணவிகளுமாக மொத்தம் 08 மாணவ மணிகள் இம்முறையும் எமது ஊருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். இந்த மண்ணின் மைந்தர்கள்  அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்!


அதி கூடிய புள்ளியாக அல் பத்ரியாவில் ஒரு மாணவன் 166 உம், பாலிகாவில் இரு மாணவிகள் 180 உம் பெற்றுள்ளனர். அகில இலங்கை மட்டத்தில் பெறப்பட்ட அதி கூடிய புள்ளி 195. இதில் அனுராதபுரத்தைச் சோ்ந்த செல்வன் நளீம் என்ற மாணவன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் - பளிச் இணையம்.

தனது அண்ணனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு பகிரங்க பிரம்படித் தண்டனை!


கணவன் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தனது அண்ணன் முறையான நபருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவர் பள்ளிவாயல் பரிபாலன சபையினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று திருகோணமலையில் நடைபெற்றுள்ளது.

திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவௌ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தனது தாயின் ஒன்று அக்காவின் மகனுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில்புரிந்து வருபவர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர், தனது அண்ணன் முறையானவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததனால், கருவுற்றுள்ளாள்.

பின்னர் கருக் கலைப்பிற்காக தனியார் வைத்தியர் ஒருவரிடம் சென்று கருவை கலைத்துள்ளார். கருக்கலைப்பு காலத்தின் போது சிசு உருவாகியிருந்ததனால் அடுத்த நாள் குறித்த சிசு இறந்து பிறந்துள்ளது.

அதனை யாருக்கும் தெரியாமல், பானை ஒன்றினுள் போட்டு கள்ளத் தொடர்பு வைத்திருந்த தனது அண்ணனிடம் கொடுத்து கிராம மையவாடியில் புதைத்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த விடயம் குடும்ப உறுப்பினர்களால் அம்பலமாகியது. பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, நீதி மன்றம் அப்பெண்ணை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

இதேவேளை, இது சம்பந்தமாக கிராமத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, புத்திஜீவிகள் குழு கிராம சட்ட விதிகளுக்கமைவாக பள்ளிவாயல் பரிபாலன சபையினரால் குறித்த பெண் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த பெண், தனக்குத் தெரியாமல் அண்ணன் கொத்து ரொட்டியில் மயக்கமருந்து கலந்து தந்து தன்னை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக தனது அண்ணன் மீது பழியைச் சுமத்தியுள்ளார்.

ஆனால், அதன் பின் நடைபெற்ற விடயங்களை கருத்தில் எடுத்து ஆராய்ந்து பார்த்த பள்ளிவாயல் பரிபாலன சபையினர், குறித்த பெண் கணவர் வெளிநாட்டில் இருக்கும் போது அவருக்கு துரோகம் செய்து, வேறு நபருடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார் எனக் கருதியது.

இதனால் குறித்த பெண்ணுக்கு பள்ளிவாயல் சட்டவிதிகளுக்கு உட்பட்டு ரூபா 25 ஆயிரம் ரொக்கம் தண்டப்பணமாக அறிவிடுவது எனவும் வெள்ளிக் கிழமை கிராம மக்கள் முன்னிலையில் பிரம்படி வழங்குவது எனவும் தீர்ப்பளித்துள்ளது.

கஹட்டோவிட சந்தியில் வீதி விபத்து.



கஹட்டோவிட பஸ்தரிப்பிடத்திற்கு முன்னால் நேற்று 07.09.2011 அன்று ஒரு காருடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவரின் கால் முறிந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. காரினை செலுத்தியவர் எமது ஊரில் பிரபல்யமான வைத்தியரான டொக்டர் சஞ்சீவ ஆவர். விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லையாயினும் காரிற்கு சேதங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. விபத்து நடைபெற்ற இடத்தில் எமதூர் மக்கள் வைத்தியரிற்கு உதவிய முறையை அவர் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

தீமைகளிற்குப் பன்னீர் தெளிக்கும் பெருநாள் கொண்டாட்டம்




30 நாட்கள் நோன்பு நோற்ற நாம் அதன் பயனை அடைந்து விட்டோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியவிதமாக பல நிகழ்வுகள் நடந்து வருவதை காணக் கூடியதாக உள்ளது. நோன்பின் நோக்கமே இறையச்சம்தான் என்று அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகிறான். இவ்விறையச்சம் பெருநாள் தினத்துடன் செல்லுபடியற்றியதாக மாறிய துரதிஷ்ட நிகழ்வொன்றை நாம் கண்டும் காணாத்துபோல் இருக்க முடியாது. வளர்ந்து வரும் வாலிபர்கள்தான் எமது அடுத்த தலைமுறையின் தலைவர்கள். இவர்கள் மார்க்க உணர்வுடன் வழிநடாத்தப்பட்டால்தான் எதிர்காலம் இஸ்லாம் வாழும் ஒரு இடமாக இருக்கும்.

பெருநாள் விளையாட்டுப் போட்டி எனும் பெயரில் முழு நாளும் ஊரை அதிரவைக்கும் சினிமாப் பாடல்கள். இடைக்கிடையில் குர்ஆனை அவமதிக்கும் வித்த்தில் கிராத் ஒலிபரப்பும் அடுத்து மீன்டும் சினிமாப் பாடல்....... இப்படி நடைபெற்று முடிந்த்து ஒரு விளையாட்டுப் போட்டி.

இவ்விளையாட்டுப் போட்டியை வெறுமனே விமர்சிப்பது எமது நோக்கமல்ல.இன்றைய இளைஞர்கள் மார்க்க விதிகளிலிருந்து நெறிதவறிச்செல்வதை யாரிடம் சொல்ல்லாம் என்ற ஆதங்கத்தில் எழுதுகிறோம். ஊரையும் இளைஞர்களையும் வழி நடாத்த வேண்டிய தலைமைகள் அமைதியாக இருப்பது எந்த வகையில் நியாயம்?

எல்லாம் நடந்து முடிந்தபின்னர் ஒரு செற்பொழிவில் அல்லது குத்பாவில் இரண்டு வார்த்தை ஏசுவதனால் தமது கடமை முடிந்துவிட்டதாக தவராக புரிந்து வைத்துள்ளனர் சிலர். இரண்டுநாள் அரங்கேற்றிய தீமையை பொறுமையாக பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு இரண்டுவார்த்தையைக் கூறித் தப்பித்துக்கொள்ளும் இவர்களை என்னவென்று கூறுவது.

வரட்டு கௌரவங்களை விட்டுவிட்டு சமூகத்தின் நலனுக்காக மாத்திரம் இது போன்ற விடயங்களில் ஒன்று படுங்கள். பள்ளி வாசல்களின் சம்மேளனம், அண்மையில் அணி திரண்ட இளைஞர் அமைப்புக்கள் மற்றும் பள்ளி வாசல்களின் நிர்வாகங்கள் அனைத்தும் இதுபோன்ற விடயத்தில் கவனம் செலுத்துங்கள். இல்லையேல் பக்கத்துக் கிராமங்களில் நடைபெறும் சங்கீத நிகழ்ச்சி கூட எமது ஊரில் நடைபெறும் என்பது ஆச்சிரியமில்லை!