கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கண்ணீர் வரைந்த கோடுகள்- கஹடோவிட நிஹாஸா நிஸாரின் புத்தக வெளியீடு.

கஹட்டோவிட மண்ணின் மைந்தர்கள் பலர் பல துறைகளில் பிரகாசித்து ஊரின் புகழை உச்சிக்கு ஏற்றிய வரலாறுகள் பல பொன் எழுத்துக்களால் பதியப்பட்டுள்ளன.


இந்த வகையில் எமதூரிற்குப் பெருமை தேடித்தரும் இன்னுமொரு பதிவாக கஹட்டோவிட அல் பத்ரியா மகாவித்தியாலயம் ஈன்றெடுத்த கவிச் செல்வியான நிஹாஸா நிஹாரின் கண்ணீர் வரைந்த கோடுகள் என்ற கவிதைத் தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா கடந்த 13.03.2011 ஆம் திகதியன்று கொழும்பு தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வேகம் பதிப்பகத்தினால் இப்புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இச்சகோதரியன் இலக்கியப் பிரவேசம் எமதூரின் இன்னும் பல இலை மறை காய்களாக உள்ள பலருக்கு முன் உதாரணமாய் அமைய வேண்டும் என்பது எமது அவாவாகும். இச்சகோதரியின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு நாம் துஆச் செய்வோமாக!

குறிப்பு - இவரது புத்தக வெளியீடு சம்பந்தமான செய்தி கடந்த 12.03.2011 ஆம்திகதியன்று சுயாதீன தொலைக்காட்சியின் தமிழ் செய்தியில்  ஒளிபரப்பப் பட்டது.  

ஒரு பெற்றாரின் உளக்குமுறல். (எமக்கு ஈமைல் மூலம் வந்த ஒரு கருத்துரையை ஆக்கமாக பிரசுரித்துள்ளோம்)

அன்புள்ள இணையத்தள உரிமையாளர்களே,


கடந்த டிசம்பரில் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்களுள் ஒருவனாகிய எனது இந்த உளக்குமுறலை உங்களது தளங்களில் பிரசுரிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இதனை எழுதுகின்றேன்.

எமது அல்பத்ரியா கல்வித் துறையில் முன்னனியில் திகழ வேண்டும் என்பதை அதிகம் விரும்புபவன் நான். அதன் பழைய மாணவர்களில் ஒருவனும் கூட. இதனால்தான் எனது மகனையும் இங்கு சேர்த்து O/L வரைக்கும் படிக்க வைத்து அதனூடாக சிறந்ததொரு பெறுபேற்றை எதிர்பார்த்தேன். ஆனால், அந்த எதிர்பார்ப்பே மண்ணாகிப் போனது.

பொதுவாக இம்முறை மாணவர்களும் சுமாராக உயர்வகுப்புக்குத் தகுதி பெற்றிருந்தாலும் ஒப்பீட்டு ரீதியில் பெண் பிள்ளைகளே நல்ல பெறுபேறுகளைப் பெற்றிருந்தனர். இப்பொது நியதி ஏன் மாறக்கூடாது ; ஏன் சமநிலையிலாவது இருக்கக்கூடாது ; இதற்கான மாற்று நடவடிக்கைகளை S.D.S. அல்லது பாடசாலை நிர்வாகம் ஏன் முன்வைக்கக் கூடாது?

இந்த எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் மாணவர்களை திட்டித் தீர்த்ததுதான் பாடசாலை ஆசிரிய சமூகம் செய்த வருந்தத்தக்க செயலாகும். மாணவிகளை புகழின் உச்சாணிக் கொம்புக்கே ஏற்றிய ஆசிரியர்கள் அதே வகுப்பு மாணவர்களை நா கூசாமல் பாதாள உலகத்தினர் என்று அப்பட்டமாக பெயர் சூட்டி அழைத்தனர். குறித்த வகுப்புக்காக நடைபெற்ற அனைத்து பெற்றார் ஒன்றுகூடலிலும் ஆசிரியரால் குறிப்பாக அதிபரால் கூறப்பட்ட வாழ்த்துரை என்ன தெரியுமா? "இவனுக பாஸாகுவத நீங்க நனச்சும் பாக்க வானம். இந்த வகுப்பு ஒரு பாதாளக் கும்பல். இவங்க சரிவரவே மாட்டாங்க" என்பதுதான்.

இவ்வாறான வாழ்த்துரைகளோடு (பதுஆக்களோடு) எந்த மாணவன் தான் பரீட்சையில் சித்தியடைய முடியும்? இதனால் உண்மையில் மானசீகமாகக் கூட மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை இந்தப் படித்த வர்க்கத்தினர் (???) உணர்ந்து கொள்வார்களா?

எனக்கு இப்படி விசித்திரமான எண்ணம் ஒன்றும் தோன்றுகிறது. கலந்து படிப்பதில் ஆர்வம் காட்டும் பாடசாலை நிர்வாகத்தினர் மாணவிகளை மட்டும் அரவணைத்து ஆதரிக்கும் நிலையானது, மறைமுகமாக அல்பத்ரியாவிலேயே மற்றுமொரு பால்லிகாவை நடத்தி வருகிறார்களோ என்பதுதான் அந்த எண்ண அலை.

ஏன் மாணவர்கள் மட்டும் இப்படி ஓரவஞ்சனை செய்யப்படுகிறர்கள்? இப்படி ஓரங்கட்டப்படுவதாலும் திட்டித் தீர்த்து பெற்றோர் கூட்டங்களிலேயே பதுஆ செய்யப்படுவதாலும்தான் மாணவர்களின் பெறுபேறுகள் இப்படித் ஹரங்கெட்டுச் செல்கின்"றன என்பதை ஆசிரிய சமூகம் உணர்ந்து கொள்ளுமா?

இப்போது வெளியாகியுள்ள பரீட்சைப் பெறுபேற்றில் ஒரு புதிய திருப்பமும் ஏற்பட்டுள்ளதை தொட்டுக்காட்டாமல் செல்ல முடியாது. பாதாள வகுப்பு என்றும் தேரமாட்டார்கள் என்றும் முத்திரை குத்தப்பட்ட O/L ஆண் வகுப்பில் பெரும்பாலானவர்கள், ஆசிரியர்களே மூக்கில் விரலை வைத்து வியக்கும் வகையில் பெறுபேறுகளைப் பெற்றிருப்பதுதான்.

யார் இந்த அம்னா ஃபாரூக்கி?

28 வயதுடைய நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகை ஆபாச நடிகை பூஜாலாமா, இஸ்லாத்தை படித்த பிறகு அதில் ஈர்க்கப்பட்டு, இதுநாள் வரை தான் செய்ததெல்லாம் தவறு என்று உணர்ந்து நடிப்பதையும்,மாடல் செய்வதையும்,மியூசிக் ஆல்பம் தயாரித்து வெளியிடுவதையும் விட்டுவிடார். இஸ்லாத்தை ஏற்ற அவர் இப்போது உடல் முழுவதையும் மறைக்கும் புர்கா அணிந்து வெளியே வருகிறார்.


புத்த மதத்தைச் சேர்ந்த, மூன்று திருமணம் செய்து விவாகரத்து பெற்ற அப்பெண்மனி தனது கடந்த கால வாழ்வு பற்றி..... நான் காரிருளில் வாழ்ந்து வந்தேன். தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றேன். இஸ்லாம் என் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளது. நான் இப்பொழுது ஆபாசம், மது, புகை, அசுத்தமான உணவுகள் உண்பது அனைத்தையும் விட்டுவிட்டேன். இஸ்லாத்தை பற்றி உலகம் கூறுவது அனைத்தும் அவதூறு என்பதை உணர்ந்து கொண்டேன். என்று சொல்கிறார்.

இஸ்லாத்தில் இணைந்து கொண்ட பின் தன் பெயரை இப்போது அம்னா ஃபாரூக்கி என மாற்றிக்கொண்டு, இஸ்லாமிய நெறிமுறைகளை பின் பற்றி வாழும் அவரின் கடந்த காலங்களில் புகைத்தல், மது அருந்தியது, ஆபாசமாக நடித்த காட்சிகளை ஒளிபரப்பி வேதனை உண்டு பண்ணி வருகின்றனர்.

அத்துடன் அந்த பொண்ணுக்கு இப்போது முஸ்லீம்கள் மீது ஆசை வந்து விட்டதனால், முஸ்லீமாக மாறி விட்டதாகவும் எழுதி வருகின்றனர்.

ஒருவர் பெயரளவில் இல்லாமல், இஸ்லாத்தை உண்மையாக ஆராய்ந்து நேசித்தால் அவரிடம் அல்லாஹ் பெரும் மாற்றத்தை கொண்டு வருவான் என்பதை இப்பெண்மணி மூலாமாக மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

இவரது நேர்காணலை இங்கே பார்க்கவும்............

http://anadvi.blogspot.com/2010/11/islam-is-very-great-religion-pooja-lama.html

எமது ஊரில் அடங்கப்பட்டிருக்கும் பாதீப் மௌலானா அவர்களின் வரலாறு

யெமன் தேசம் முகாவா எனும் பிரதேசத்தில் வாழும் பாதீப் எனும் பிரபலமான குடும்பத்தில் பிறந்தவர்களே அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் பின் உமர் பாதீப் அல் யமானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) ஆரம்ப கல்வியை தன் சொந்த ஊரில் பெற்றுக்கொண்ட பாதீப் மௌலானா அவர்கள் உயர்கல்விக்காக எகிப்து நாட்டில் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமை மிக்க அல் அஸ்ஹர் சர்வகலாசாலைக்கு சென்றார்கள். தங்கள் பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றும் ஆவலோடு புனித மக்காவுக்கு சென்று ஹஜ்ஜை முடித்த பின் மதீனாவுக்கு சென்று நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ரவ்ளா ஷரீபை அடைந்து பெற்ற இன்பம் ஆன்மீக சுவை நிரம்பியதென அவர்கள் கூறுவார்கள்.

ஹஜ்ஜை முடித்த மௌலானா நாயகம் அவர்கள் மக்காவில் அப்போது வாழ்ந்த உஸ்மானுல் மிர்கனி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் ஞான தீட்சை பெற்று அத்துடன் கௌஸுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் காதிரியா தரீக்காவின் பைஅத்தையும் பெற்று புனித மக்காவில் இருந்தே தங்கள் தஃவா பணியை ஆரம்பித்தார்கள்.
அதன் பிறகு தன் ஊருக்கு சென்று மௌலானா நாயகம் அவர்கள் தங்கள் நிறைந்த செல்வம் சொத்து சுகங்கள் அனைத்தையும் தியாகம் செய்து விட்டு ஊரிலிருந்து புறப்பட்டார்கள். இந்தியாவில் சில காலம் வாழ்ந்த பின் எமது இலங்கை திருநாட்டுக்கு 19 ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கொழும்பை வந்தடைந்த மௌலானா நாயகத்திற்கு கொழும்பு வாழ் மக்கள் பெரும் வரவேற்பளித்து உபசரித்தார்கள்.
இலங்கை முஸ்லிம்களின் கல்வி தொடர்பான பிரச்சினைகள் பற்றி அறிஞர் சித்தி லெப்பை அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் தான் மௌலானா நாயகம் அவர்களின் இலங்கை விஜயம் அமைந்து இருந்தது. பேரறிஞரான மௌலானா நாயகம் அவர்கள்பால் அறிஞர் சித்தி லெப்பை கவரப்பட்டார்கள். எனவே அறிஞர் சித்தி லெப்பை அவர்களின் முஸ்லிம்களின் கல்வி தொடர்பான முயற்சிகளுக்கு மௌலானா நாயகத்தின் தொடர்பு உந்து சக்தியாக அமைந்தது. இன்று ஸாஹிரா கல்லூரி என புகழோடு காணப்படும் இப்பாடசாலை மதரஸத்துல் ஸாஹிரா என்றே தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியை ஆரம்பிப்பதற்கு மௌலானா நாயகம் அவர்கள் சித்தி லெப்பைக்கு பேருதவியாக அமைந்தார்கள்.

நன்றி
பாதிபிய்யா இணையம் மற்றும் அனுப்பிய சகோதர்...

அல் பத்ரியா மாணவ, மாணவிகளின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன



கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற கலவிப் பொதுத்தராதர சாதாரனதரப்பரீட்சைக்குத்  கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்திலிருந்து தோற்றிய மாணவ, மாணவிகளின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன . இவர்களுல் ஒரு மாணவி சிறந்த பெறு பேறாக 9 A யையும்.  மேலும் இரண்டு மாணவிகள் 8A, B யும். மற்றும் இரண்ட மாணவிகள் 7A, 2C போன்ற சிறப்பான பெறுபேறுகளை  எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வழமை போன்று ஆண் மாணவாகள் எவரும் சிறந்த பெறுபேறுகளை எடுக்காமை மாணவர்களின் கல்வியின் மீதான நம்பிக்கையை குறைத்துள்ளதாக பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். எது எப்படியிருப்பினும் மாணவர்களை கல்வியின்பால் ஊக்கப்படுத்தவதற்கான ஒரு செயற்திட்டத்தை புத்திஜீவிகளும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் உருவாக்க முயற்சிப்பது காலத்தின் தேவையாகும்
இந்தியாவிற்கு செல்வதற்கு இணையத்தளம் மூலம் வீசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.


www.indianvisaonline.gov.in/visa  என்ற இணையத்தள முகவரியினூடாக வீசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் இந்த இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

இந்திய வீசா மத்திய நிலையங்களான கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய காரியாலயம் ஆகியனவற்றின் ஊடாக பாவனையாளர்களுக்கு வீசா விண்ணப்பித்தலை இம்முறை இலகுபடுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருந்து கொண்டு இலகுவாக இந்தியாவிற்கான வீசாவிற்கு விண்ணப்பிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.Share240

பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் தேர்தல் பிரசாரம் செய்தோருக்கு அழைப்பாணை



அக்கரைப்பற்று மாநாகர சபை தேர்தலில் போட்டியிடும் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிற்கு மாத்திரம் வாக்களிக்குமாறு 'அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்' என்ற பெயரைப் பயன்படுத்தி அக்கரைப்பற்றுப் பிரதேச பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகள் மூலமாக வேண்டுகோள் விடுத்த மூன்று நபர்களை நாளை செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு அக்கரைப்பற்று நீதவான் ரி. சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.


குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு நாளை 15 ஆம் திகதி அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு அக்கரைப்பற்று பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் முதன்மை வேட்பாளரான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனீபா (மதனி) மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளர் யூ.எல். உவைஸ் ஆகியோர் மேற்படி விடயம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடொன்றை செய்திருந்தனர்.

எஸ்.எல்.எம். அலியார், ரி.எஸ். ஆதம்லெப்பை, ஏ.எல். அப்துல் ரஷிட் ஆகிய நபர்கள் அக்கரைப்பற்றுப் பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகள் மூலமாக 'அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்' எனும் பெயரை பயன்படுத்தி ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும் தேசிய காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறுவதாகவும், பள்ளிவாசல்களில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படுவதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழுகைக்காக செல்லும் வாக்காளர்களிடம் தேசிய காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு கட்டளையிடப்படுவதாகவும், இதனால் கருத்துச் சுதந்திரம் மீறப்படுவதாகவும் அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி முறைப்பாட்டினை அக்கரைப்பற்றுப் பொலிஸார் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் வழக்காக பாரப்படுத்திய போதே, குற்றம் சுமத்தப்பட்ட நபர்களை நாளை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும், குறித்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

அல்பத்ரியா மஹாவித்தியாலயத்தில் உயர்தர விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்!


க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெற்றோர்களின் முயற்சியினால் எமது பாடசாலையில் உயர்தர வகுப்பு விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.


இவர்களின் இந்த முயற்சியின ஒருகட்டமாக கஹடோவிட மற்றும் ஓகொடபொலயைச் சேர்ந்த விஞ்ஞானத்துறையில் உயர்தர வகுப்பில் கல்வி கற்ற சகோதர, சகோதரிகளுடன் கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும். அதற்காக அழைப்பிதல் உரியவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது. அழைப்பிதழின் பிரதியொன்று கிழே இணைக்கப்பட்டுள்ளது. இவர்களின் இந்த முயற்யின் வெற்றிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வை நாமும் பிரார்த்திப்போமாக..



 

அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க எனக்கு ஐந்து கோடி லஞ்சம் வழங்கப்பட்டது: நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி



ஐக்கிய தேசியக் கட்சி மூலம் பாராளுமன்றத்துக்குத் தெரிவான தான் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கென ஐந்து கோடி ரூபா லஞ்சமாக வழங்கப்பட்டதென நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார்.பிரபல சிங்கள சினிமா நடிகையும், கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பபா என்றழைக்கப்படும் உபேக்ஷா சுவர்ணமாலி அண்மையில் பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


தன் கணவனால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிரந்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் பெறச் சென்றிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரிடமே அவர் அரசாங்கத்தால் தனக்கு லஞ்சம் வழங்கப்பட்ட விடயத்தைப் போட்டுடைத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் பாராளுமன்றத்துக்குத் தெரிவான தனது ஆதரவை ஆளுங்கட்சிக்குப் பெற்றுக் கொள்வதற்காக தனது கணவனுக்கு ஐந்து கோடி பணமும், விலைமதிப்புள்ள காரொன்றும் லஞ்சமாக வழங்கப்பட்டதாகவும், தனது கணவனின் நெருக்குதல் காரணமாகவே தான் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்க முன் வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உபேக்ஷா சுவர்ணமாலி பிரஸ்தாப சர்ச்சைக்குரிய வாக்குமூலத்தை வழங்கிய போது அதனை குறிப்பெடுத்துக் கொண்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் அது குறித்து உடனடியாக நுகேகொடைப் பிரதேசத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோனுக்கு மொபைல் போன் மூலமாக அறிவித்துள்ளார்.

அதனையடுத்து உபேக்ஷாவின் வாக்குமூலத்தை குறிப்பெடுப்பதை இடைநிறுத்துமாறு அறிவித்த பொலிஸ் அத்தியட்சகர், சற்று நேரத்துக்குப் பின் திரும்பவும் மொபைல் போனில் பிரஸ்தாப பெண் பொலிஸ் உத்தியோகத்தரைத் தொடர்பு கொண்டு உபேக்ஷா சுவர்ணமாலி இருக்கும் அவரிடம் தற்போதைக்கு எதுவிதமான வாக்குமூலமும் பெற வேண்டாம் என்று பணிப்புரை விடுத்துள்ளார்.

அதனையடுத்து சிறிது நேரத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷாவைத் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய நிலையில் அரசாங்கத்தைச் சர்ச்சைக்குள் மாட்டிவிடும் வகையான எதுவித கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என்றும், அவரின் எதிர்காலத்தை நல்ல முறையில் அமைத்துத் தருவது தனது பொறுப்பு என்றும் வாக்குறுதியளித்துள்ளார்.

தற்போதைய நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் வற்புறுத்தல் காரணமாக உபேக்ஷா தன் கணவருக்கு எதிராக செய்திருக்கும் முறைப்பாட்டையும் மீளப்பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு இறங்கி வந்துள்ளதாகவும் பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகத்திரை அணிவதற்கு தடை விதிக்கும் ஃப்ரான்ஸ் அரசின் சட்டம் எதிர்வரும் ஏப்ரல் 11 முதல் நடைமுறைக்கு வருகிறது.


முகத்தை மறைக்கும் வகையில் முகத்திரை அணிவதற்கு தடை விதிக்கும் ஃப்ரான்ஸ் அரசின் சட்டம் எதிர்வரும் ஏப்ரல் 11 முதல் நடைமுறைக்கு வருகிறது. குறிப்பாக, இஸ்லாமியப் பெண்கள் மரபு காரணமாக அவ்வாறு அணிந்து வருவார்களானால், அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு வரும்படி கோரப்பட்டு, முகத்திரை நீக்கக் கோரப்படுவார்கள் அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று அந்தச் சட்டம் உள்ளதாம்.


"இது ஒரு குறியீடான சட்டம் தான், அதற்காக எல்லா முஸ்லிம் பெண்களையும் துன்புறுத்துவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று ஃப்ரேஞ்ச் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"தேவையற்ற குழப்பத்தைத்தான் இது ஏற்படுத்தும்" என்று பாரிஸ் நகர இமாம் மூஸா நியாம்பில் கருத்துத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இச்சட்ட மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இது முஸ்லிம் பெண்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று கண்டனங்கள் எழுந்தது நினைவிருக்கலாம்.

முகத்தை மறைக்கும் எந்த ஆடை வகையையும், பொது இடங்களில், குறிப்பாக, வீதிகள், பொது போக்குவரத்து வாகனங்கள், கடைகள், பள்ளிகள், பொது அவைகள், அரச அலுவலகங்கள், மருத்துவமனைகளில் அணியக்கூடாது என்று இந்தச் சட்டம் சொல்கிறது. மீறுவோர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு திரை நீக்கி தங்கள் அடையாளத்தை பதிவு செய்யப் பணிக்கப்படுவார்களாம். மறுத்தால் இருநூற்று எட்டு அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும்.