கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அப்துல் ரஸாக் அதிரடி; பாக். அணி புதிய சாதனையுடன் வெற்றி


நியூஸிலாந்துடனான 3 ஆவது 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தான் அணி 103 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் அப்துல் ரஸாக் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் பிரகாசித்தார்.


டெஸ்ட் அந்தஸ்துள்ள அணிகளுக்கிடையிலான ட்வென்டி20 சர்வதேச போட்டிகளில் ஓர் அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கிறைஸ்ட் சேர்ச் நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்க 183 ஒட்டங்களைப் பெற்றது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அஹமட் ஷெஹாட் 30 பந்துவீச்சுளில் 54 ஓட்டங்களைப் பெற்றார்.

சகலதுறை வீரர் அப்துல் ரஸாக் அதிரடியாகத் துடுப்பெடுத்தா 11 பந்துவீச்சுகளை மாத்திரே எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள் 3 பௌண்டரிகள் உட்பட 34 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. மொஹமட் ஹாபிஸ் 23 பந்துவீச்சுகளில் 30 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 80 ஓட்டங்களுடன் சுருண்டது. அவ்வணி சார்பில் ஸ்கொட் ஸ்டைரிஸ் 34 பந்துவீச்சுகளில் 45 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் 10 ஓட்டங்களைக்கூட நெருங்கவில்லை.

அவ்வணி 3 ஓட்டங்களைப்பெற்றிருந்த நிலையில் 4 ஆவது விக்கெட்டையும் இழந்தது. முதல் நான்கு வீரர்களும் ஓட்டமெதுவுமின்றி ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் சஹீட் அவ்ரிடி 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் அப்துல் ரஸாக் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அப்துல் ரஸாக் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

இத்தொடரின் முதல் இரு போட்டிகளிலும் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றதால் அவ்வணி இத்தொடரின் சம்பியனாகியுள்ளது.

கிறிஸ்துமஸும் இஸ்லாமும்!


இஸ்லாம் தனது கொள்கையில் வெளிப்படையானது! களங்கமற்றது. அல்லாஹ் தனக்கொரு மகனை எடுத்துக் கொண்டான் என்பதை வன்மையாகக் கண்டித்து மறுக்கும் இஸ்லாம் அதைப் பின்பற்றுபவர்கள் அப்படிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டாடப்படும் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதை விரும்புமா? நிச்சயமாக இல்லை! அவ்வாறு சொல்லப்பட்டாலும் அது உண்மையான வாழ்த்தாக அமைவதில்லை.]


ஒவ்வொரு வருடமும் டிஸம்பர் மாதம் 25 ஆம் நாள் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் கடவுளாகக் கருதும் இயேசு கிறிஸ்து அன்று பிறந்ததாகவும் அவர்கள் நம்புகின்றனர். அவர்களோடு நட்பு கொண்ட பிற மதத்தவரும் அவர்களுக்கு அந்நாளில் வாழ்த்து கூறுகின்றனர்.

அவர்களால் அன்றைய தினம் சிறப்பாக தயாரிக்கப்படும் இனிப்புகளையும் உணவுகளையும் வாங்கி புசித்து மகிழ்கின்றனர். பல முஸ்லிம்களும் கிறிஸ்தவ அன்பர்களுடன் நெருங்கிப் பழகியும் அன்பு பாராட்டியும் கலந்துறவாடியும் வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸின் போது அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான எளியதொரு வழிகாட்டுதலே இக்கட்டுரை!

இஸ்லாம் படைத்த இறைவனின் இயற்கை மார்க்கமாகும். அதனை ஏற்றுக்கொண்டவனே முஸ்லிம். ஒரு முஸ்லிமின் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இஸ்லாம் முறையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. பிற மதத்தவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதற்கும் இஸ்லாம் வழிகாட்டுகிறது. மேன்மை மிக்க அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

"மார்க்க விஷயத்தில் உங்களுடன் எவர் போரிடவில்லையோ, இன்னும் உங்களுடைய வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றவில்லையோ அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதை விட்டும், அவர்களின் பால் நீங்கள் நீதி செலுத்துவதை விட்டும் அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்" (அல்குர்ஆன் 60 அல் மும்தஹினா:8)

இஸ்லாமல்லாத பிற மதத்தவர்கள் பகிரங்கமாக இஸ்லாமுடன் போர் தொடுக்காத வரை அவர்களுக்கு நன்மை செய்வதை அல்லாஹ் தடுக்கவில்லையென்றும் அவர்களுடன் நீதியுடன் நடந்து கொள்வதை அல்லாஹ் விரும்புகின்றான் என்றும் நீதிமான்களுக்கெல்லாம் நீதிபதியாகிய அல்லாஹ் அறிவிக்கின்றான்.

தெளிவான நீதி மிக்க ஓரிறைக் கோட்பாட்டைக் கொண்ட இஸ்லாம் பிற மதத்தவர் வணங்கும் கடவுளர்களை ஏசுவதையும் தடை செய்துள்ளது.

அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருப்போர நீங்கள் திட்டாதீர்கள், அப்போது அவர்கள் அறிவின்றி, வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள் (6 அல்அன்ஆம் 108)

ஒரு பன்மைச் சமூகத்தில் வாழும் முஸ்லிம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டும் இஸ்லாம் எந்நிலையிலும் அதன் கொள்கைக் கோட்பாடுகளில் சிஞ்சிற்றும் விட்டுக்கொடுத்தல்களை ஏற்பதில்லை. அக்காரணத்தால் தான் இஸ்லாம் அதன் கொள்கையில் தனித்து விளங்குகிறது. தெளிந்த நீரோடை போன்ற குழப்பமற்ற இறைகொள்கையில் அது என்றும் நிலைத்து நிற்கிறது. காரணம் அது வணக்கத்திற்குரிய உண்மையான இறைவனிடமிருந்துள்ள வழிகாட்டுதல் ஆகும்.

இது (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் - அவன்தான் உண்மையானவன், அவனையன்றி நிச்சயமாக எதை அவர்கள் அழைக்கின்றார்களோ அது பொய்யானதாகும், நிச்சயமாக அல்லாஹ் அவன்தான் உயர்வானவன், மிகப்பெரியவன் என்ற காரணத்தினாலாகும் (22 அல்ஹஜ் 62 மேலும் பார்க்க 31:30)

இஸ்லாமும் கிறிஸ்தவமும் முற்றிலும் முரண்பட்ட இரண்டு கொள்கைகளாகும். வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது இஸ்லாம். வணக்கத்திற்குரிய கடவுள்கள் மூன்று என்ற திரித்துவக் கொள்கையை உடையது கிறிஸ்தவம். அத்துடன் இயேசு அல்லாஹ்வின் புதல்வன் என்பதும் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இன்னும் மனிதர்களின் பாவத்தைப் போக்குவதற்காக இயேசு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதும் கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடு ஆகும். ஆனால் இஸ்லாம் இவற்றை வன்மையாக மறுப்பதுடன் இவை அனைத்தும் குஃப்ர் எனும் நிராகரிப்புக் கொள்கை என்றும் கூறுகிறது.

"நிச்சயமாக அல்லாஹ் - அவன்தான் மர்யமுடைய குமாரர் மஸீஹ் என்று எவர்கள் கூறுகிறார்களோ அத்தகையோர் திட்டமாக நிராரித்து விட்டனர்" (5 அல்மாஇதா 17, 72)

"நிச்சயமாக அல்லாஹ் - மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் திட்டமாக (அவனை) நிராகரித்து விட்டனர்" (5 அல்மாஇதா 73)


(நபியே!) நீர் கூறுவீராக: அவன் - அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்! அவன் (எவரையும்) பெறவுமில்லை, அவன் (எவராலும்) பெறப்படவுமில்லை! இன்னும் அவனுக்கு நிகராக எதுவுமில்லை! (அல்குர்ஆன் 112: 1-4)

இஸ்லாமின் உறுதியான இறைக் கோட்பாட்டையும் கிறிஸ்தவ நம்பிக்கைகள் குறித்த இஸ்லாமிய நிலைபாட்டையும் மேற்கண்ட வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன!

அடுத்ததாக, கிறிஸ்துமஸ் என்பது என்ன? இயேசுவின் பிறந்த தினம்! இதனை அவர்கள் கொண்டாடுகின்றனர்! இதற்காக வாழ்த்துக்கள் பரிமாறப்படுகின்றன! ஒருவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு மார்க்கம் அனுமதிக்கிறதா? என்பது ஒருபுறம் இருக்கட்டும். இங்கே யாருக்கு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது? எந்த நம்பிக்கையின் அடிப்படையில் அது கொண்டாடப்படுகிறது? என்பதுதான் முக்கியம்.

கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை இயேசுவை அல்லாஹ்வின் மகன் என்று அவர்கள் நம்புகின்றனர். இன்னும் அவரையே கர்த்தர் என்றும் நம்புகின்றனர். அப்படியானால் டிஸம்பர் மாதம் 25 ஆம் தேதி அவர்களின் நம்பிக்கைப் படி அல்லாஹ்வுடைய மகனுக்குப் பிறந்த நாள் கொண்டாடுகின்றனர். அவர்களின் இந்த நம்பிக்கையை வல்லமை மிக்க அல்லாஹ் இவ்வாறு மறுத்துக் கூறுகின்றான்.

உஸைர் அல்லாஹ்வுடைய மகன் என்று யூதர்கள் கூறுகின்றனர், (அவ்வாறே ஈஸா) மஸீஹ் அல்லாஹ்வுடைய மகன் என்று கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர், இது அவர்களுடைய வாய்களால் கூறும் (ஆதாரமில்லா வெற்றுக்) கூற்றாகும். (இவ்விஷயத்தில் அவர்களுக்கு) முன்பிருந்த நிராகரிப்பாளர்களின் சொல்லுக்கு அவர்கள் ஒப்பாகின்றனர். அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எவ்வாறு அவர்கள் (சத்தியத்தை விட்டும்) திருப்பப்படுகின்றனர்? (9 அத்தவ்பா 30)

அல்லாஹ்வுடைய தூதரான ஈஸா மஸீஹ் (இயேசு) அல்லாஹ்வுடைய மகன் என்ற அவர்களின் கூற்று ஆதாரமற்ற இட்டுக் கட்டுதல் என்பது மட்டுமல்ல, இது அல்லாஹ்வின் உயர்ந்த தன்மைகளில் அவர்கள் ஏற்படுத்திய களங்கமாகும்! இப்பேரணடத்தையே அதிர வைக்கும் மிகப்பெரிய அபாண்டமாகும்! வல்லமையும் மேன்மையும் மிக்க அல்லாஹ் பறைசாற்றுகிறான்:

இன்னும், "அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்" என்று அவர்கள் கூறுகிறார்கள். "நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்) கொண்டு வந்திருக்கிறீர்கள். இவர்களின் இந்தக் கூற்றினால் வானங்கள் வெடித்து பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும் போலும்!. அவர்கள் அர்ரஹ்மானுக்கு ஒரு குமாரன் உண்டென்று அவர்கள் அழைப்பதனால்-(இவை நிகழ்ந்து விடக்கூடும்) ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையில்லாதது. ஏனென்றால் வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாய் வருபவரேயன்றி வேறில்லை. நிச்சயமாக அவற்றையெல்லாம் அவன் சூழ்ந்தறிகிறான்; இன்னும் அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறான். கியாம நாளில் அவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவனிடம் வருவர். (19 மர்யம் 88-95)

அது மட்டுமல்ல, அவர்களுடைய இந்த இட்டுக்கட்டுதலைக் கூறும் இடங்களில் அதைவிட்டும் அல்லாஹ் மிகத்தூயவன் என்று அவனது பரிசுத்தத் தன்மையைப் பறைசாற்றுகிறான்.

மேலும், அல்லாஹ் (தனக்கு) புதல்வனை ஏற்படுத்திக்கொண்டான் என்று அவர்கள் கூறுகின்றனர், (அவர்கள் கூறுவதை விட்டும்) அவன் மகாத் தூய்மையானவன் - அன்றியும் வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியவை, அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன. (2 அல்பகரா: 116) மேலும் (10:68, 21:26)

இன்னும் உயர்ந்தோனாகிய அல்லாஹ் அவனது வல்லமைகளையும் திருநாமங்களையும் பற்றி எடுத்துக் கூறும் இடங்களிலும் அவன் தனக்கு ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவ்வாறு நாடியிருந்தால் அவன் அதை செய்திருப்பான், ஆனால் அதை விட்டும் அவன் தூய்மையானவனாக இருக்கிறான் என்றும் பறைசாற்றுகிறான்.

"அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அமைத்தும்" என்று (நபியே!) நீர் கூறுவீராக இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக! (17 அல்-இஸ்ரா 111)

அவன் எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான்! (25:2)


"இன்னும் நிச்சயமாக எங்கள் இறைவனுடைய மகத்துவம் மிக்க மேலானது, அவன் எவரையும் (தன்னுடைய) மனைவியாகவோ, புதல்வனாகவோ எடுத்துக்கொள்ளவில்லை. (72 அல்ஜின்னு 3)

அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (6 அல்அன்ஆம்: 101)

இன்னும் பின் வரும் வசனம் மிகவும் சிந்தனைக்குரியதாகும்!

நபியே!) நீர் கூறும்; "அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்!" (43:81)

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். இந்த சமுதாயத்துக்கு எல்லா வகையிலும் சிறந்த முன்மாதிரி ஆவார்கள். அல்லாஹ்வுக்கு ஒரு பிள்ளை என்று இருந்திருந்தால் அதை நானே முதலில் வணங்கி உங்களுக்கு முன்மாதிரியாக இருந்திருப்பேன் என்று கூறுமாறு வல்லமை மிக்க அல்லாஹ் அவர்களிடம் கட்டளையிடுகிறான். அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவ்வாறு அவன் எடுத்துக் கொண்டான் என்ற கிறிஸ்தவக் கோட்பாட்டுக்கு இவ்வசனம் தெளிவான உறுதியான, அறிவுப்பூர்வமான மறுப்பாகவும் இருந்துகொண்டிருக்கிறது.



மேலும் குர்ஆன் இறக்கப்பட்டதன் நோக்கத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது இவ்வேதமானது - அல்லாஹ் தனக்கு ஒருமகனை எடுத்துக் கொண்டான் என்று சொல்லக்கூடியவர்களை எச்சரிப்பதற்காகவும் இறக்கப்பட்டது என்று கூறுகிறான்.

"புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது! அவன் எத்தகையோனென்றால் தன் அடியார் மீது இவ்வேதத்தை இறக்கி வைத்தான் - அதில் எத்தகைய கோணலையும் அவன் ஆக்கவில்லை. மிக்க உறுதியானதாக - அவனிடமிருந்து கடினமான தண்டனையை எச்சரிக்கை செய்வதற்காகவும், நற்செயல்கள் செய்கின்ற நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி உண்டு என்று நற்செய்தி கூறவதற்காகவும் (இதனை இறக்கினான்) அதில் என்றென்றும் அவர்கள் தங்கியவர்களாக இருப்பர். அன்றியும், அல்லாஹ் மகனை எடுத்துக் கொண்டான் என்று கூறுபவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கிவைத்தான்) அவர்களுக்கு இதைப்பற்றி எவ்வித அறிவும் இல்லை, அவர்களுடைய மூதாதையர்களுக்கும் இல்லை, அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த வாக்கியம்) மாபெரும் (பாவமான) வாக்கியமாகும்.; அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை. (18 அல்கஹ்ஃப்: 1-5)

ஒரு தனிநபருடைய சந்தோஷமான நிகழ்ச்சிக்கு அவருடைய நண்பரோ அல்லது உறவினர்களோ வாழ்த்து கூற வேண்டும் என்றால் வாழ்த்து கூறுபவர் உளப்பூர்வமாக அந்த நிகழ்ச்சியை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதில் அவர் திருப்தி கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் அது உளப்பூர்வமான வாழ்த்தாக அமைவதில்லை. வெறும் முகஸ்துதிக்காக அமைந்து விடும்! இது ஒரு நயவஞ்சகத்தனமான செயல்பாடு ஆகும். இத்தகைய போலியான பாசாங்குகளை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை.

இஸ்லாம் தனது கொள்கையில் வெளிப்படையானது! களங்கமற்றது. அல்லாஹ் தனக்கொரு மகனை எடுத்துக் கொண்டான் என்பதை வன்மையாகக் கண்டித்து மறுக்கும் இஸ்லாம் அதைப் பின்பற்றுபவர்கள் அப்படிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டாடப்படும் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதை விரும்புமா? நிச்சயமாக இல்லை! அவ்வாறு சொல்லப்பட்டாலும் அது உண்மையான வாழ்த்தாக அமைவதில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாவது: அல்லாஹ் கூறுகிறான்: "ஆதமின் மகன் (மனிதன்) என்னை நம்ப மறுத்தான். ஆனால், அதற்கான உரிமை அவனுக்கில்லை. அவன் என்னை ஏசினான். ஆனால் அதற்கான உரிமை அவனுக்கில்லை. அவன் என்னை மறுத்தது, "ஏற்கெனவே இருந்ததைப் போன்று மீண்டும் உயிர் கொடுத்து அவனை எழுப்ப என்னால் முடியாது" என்று அவன் எண்ணியதாகும். அவன் என்னை ஏசியது, "எனக்குக் குழந்தை உண்டு" என்று அவன் சொன்னதாகும். ஆனால், நான் ஒரு மனைவியையோ குழந்தையையோ ஏற்படுத்திக்கொள்வதை விட்டும் தூய்மையானவன் ஆவேன்" (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் புகாரி - ஹதீஸ் எண் 4482)

ஆக கிறிஸ்துமஸ் விழா என்பது அல்லாஹ்வுடைய மகனாக அவர்கள் ஏற்படுத்திய இயேசுவின் பிறந்த நாளாகும். அதை ஏற்றுக்கொண்ட நிலையில் அல்லது மறுத்துக் கொண்டு பாசாங்கான நிலையில் அன்றி ஒரு முஸ்லிமால் வாழ்த்து சொல்ல இயலாது. இந்த இரண்டு நிலைகளுமே இஸ்லாமுக்கு முரணானதாகும்.
இது அல்லாமல் கிறிஸ்தவ அன்பர்களிடம் மனிதாபிமான அடிப்படையில் நன்மை செய்வதையும் நல்லுறவைப் பேணுவதையும் இஸ்லாம் தடை செய்யவில்லை. எனவே உங்கள் கிறிஸ்தவ அன்பர்கள் கிறிஸ்துமஸ் விசேட நிகழ்ச்சிக்கு அல்லது விருந்துக்கு உங்களை அழைத்தால் அல்லது அதற்கான உணவுகளை உங்களுக்கு அழைத்தால் அதை மவுனமாக ஏற்றுக்கொள்வதை விடுத்து இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்பபடுத்தி நேர்வழியின் பால் அவர்களுக்கு அழைப்பு விடுப்பதே ஏற்றமான செயலாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நேர்வழியில் நிலைத்திலருக்கும் நன்மக்களாக நம்மை ஆக்கி அருள்புரிவானாக!

Posted By அபூ அப்திர்ரஹ்மான்

31st Night & New Year Celebrations - Islandwide Quthbah

 
----- Forwarded Message ----
From: MuslimWatch Sri Lanka <muslimwatch@hotmail.com>
To: Group Watch Muslims <muslimwatch@yahoogroups.com>
Sent: Mon, December 27, 2010 12:06:15 PM
Subject: 31st Night & New Year Celebrations - Islandwide Quthbah

 
அந்நிய சமூகம் 2011 வருடப் பிறப்பை கொண்டாட ஆயத்தமாகியுள்ள இச்சந்தர்ப்பத்தில், வழமை போன்று எமது முஸ்லிம் இளம் தலைமுறையி்னரும் அதே ஆர்வத்தில் களியாட்டங்களில் ஈடுபடுவதற்கு தயாரகுவதை உணர முடியுமாக உள்ளது.


இவ்வறான அனாச்சாரங்களிலிருந்து இவர்களைப் பாதுகாப்பது எமது கடமையாகும். இதற்கான அரிய சந்தர்ப்பமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை 31/12/2010 இடம்பெறும் குத்பாப் பிரசங்கங்களைப் பயன்படுத்தலாம். இப்பிரசங்கங்கள் மேற்படி தீமைகளைத் தடுப்பதை மையமாகக் கொண்டதாக  அமையுமானால் அது பல இளைஞர்கள் அன்று (31ஆம் நாள்) இரவு நடைபெறும் பித்னாக்களில் ஈடுபடுவதைத் தடுக்கலாம். இன்ஷா அல்லாஹ்.



எனவே, பள்ளிப் பரிபாலன சபையினர்கள், கதீப்மார்கள், மற்றும் உலமாக்கள் இவ்விடயத்தில் கூடிய கரிசனை செலுத்தி மிம்பர் மேடைகளைப் பயன்படுத்தி, 31ஆம் இரவுக் (31st Night) களியாட்டங்கள் மற்றும் புது வருடப் பிறப்புக் கொண்டாட்டங்களின் பேரில் நடைபெறும் பெரும் பாவங்களிலிருந்து எமது இளைஞர்களைப் பாதுகாக்க முயற்சி செய்வோமாக.
 
.

__,_._,___

அல்பத்ரியா மஹாவித்தியாலய புத்தக மலிவு விற்பனை

கடந்த வருடத்தைப் போல் இம்முறையும்  அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் 2011ஆம் ஆண்டுக்கான அப்பியாசக் கொப்பிகளை மலிவு விலையில் விற்பனை செய்யும் வேலைத் திட்டம் 2010.12.26 ஆம் திகதி பி.ப. 4.00 மணியளவல் வெகு விமரிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 26 மற்றும் 27 ஆம் திகதிகளிலும் நடைபெற ஏற்பாடு

செய்யப்பட்டிருக்கிறது.

பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள்; பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பத்ரியா நலன்புரிச்சங்க அங்கத்தவர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியின் மூலம் ஊர் மக்கள் பெரு நன்மை அடைந்துள்ளனர். அப்பியாசக் கொப்பிகள் எங்கும் இல்லாத அளவு மலிவான விலையில் விற்கப்படுகின்றன.
பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான ஏனைய உபகரணங்களும் புத்தகப் பை மற்றும் நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது வசதியானக உள்ளதாக பொது மக்கள் தெரிவித்தனர்.
மேலும் ஒரேயடியாக முழுப்பணத்தையும் செலுத்தி அப்பியாசக் கொப்பிகளை வாங்க முடியாதளவு பொருளாதார வசதி அற்றவர்களுக்கு கடன் அடிப்படையிலும் வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை.

தற்கொலைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாத அளவுக்குச் சான்றுகள் உள்ளன.
ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், எனது அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்த்தை ஹராமாக்கி விட்டேன் என்று கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி), நூல்: புகாரி 1364
யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத் தாமே (ஆயுதத்தால்) தாக்கி, தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1365
தற்கொலை செய்து கொண்டால் நிரந்தர நரகம் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே தற்கொலை கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் போரில், எதிரிகளை அழிப்பதற்காக தற்கொலை செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். இது தற்கொலை அல்ல! இதுவும் போர் தான் என்றும் கூறுகின்றனர். எனவே இதுகுறித்து அறிஞர்களுகிடையே கருத்துவேறுபாடுகள் கானப்படுகின்றன.

கஹட்டோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்திற்கு கணிணி அன்பளிப்பு!


2010ஆம் ஆண்டு கல்வியாண்டின் நிறைவையொட்டி கஹட்டோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலய மாணவிகளுக்கான பரிசளிப்பு வழா 10.12.2010அன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. அதிபர் புஹாரி உடையார் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பாடசாலை அபிவிருத்தச் சங்க மற்றும் நலன்புரிச் சங்க உறுப்பினர்களும் தாய்மார்களும் கலந்து கொண்டனர். இவ்வைபவத்தின்போது குவைத் மாணவர் சங்கம் இப்பாடசாலைக்காக ஒரு கணிணியை அனபளிப்பாக வழங்கியமை விசேட அம்சமாகும். இக்கணிணியை இச் சங்கத்தின் சார்பாக சகோதரர் எம்.ஐ.எம் அர்ஷத் அவர்கள் அதிபர் புஹாரி உடையாரிடம் வழங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிபர் புஹாரி உடையார் மற்றும் நலன் புரிச்சங்க உறுப்பினர் அஷ்ஷைக் மௌலவி அப்துல் முஜீப் அவர்களும் உரையாற்றினர்.

கஹட்டோவிடாவில் துயர நிகழ்வு

கஹட்டோவிடாவைச் சோ்நதத ஒரு நபர் இன்று இரவு (20.12.2010) தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன. தற்கொலைக்கான காரணம் இதுவரையில் அறியப்படவி்ல்லை. அவரது மரண விசாரணையை நிட்டம்புவ பொலிஸாரினால் நடாத்தப்படுவதாகவும் அறியக் கிடைக்கிறது.

தலையிருக்க உடலைக் காணவில்லையாம் - சாறலங்காவில் சம்பவம்

சாரலங்காப் பகுதியில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த ஆட்டின் தலையை வைத்துவிட்டு உடலைத்திருடிச் சென்ற சம்பவமொன்று கஹட்டோவிட பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டின் உடலைத் திருடியவர்கள் சாரலங்காப் பிரதேசத்தைச் சேர்ந்த சில கட்டாக்காளி இளைஞர்கள் எனவும் அவர்கள் தற்போது தலைமறைவாகி இருப்பதாகவும் அறியக் கிடைக்கின்றது. பொதுவாக நகர்ப் புறங்களில்தான் இவ்வாறான திருட்டுக்கள் நடைபெறுவது வழமையென்றாலும் எமதூரைப் போன்ற கிராமங்களில் இவை நடைபெறுவது மிகுந்த ஆச்சரியத்திற்குரியது எனபதுடன் இவ்வாறானோர் இனங்காணப்பட்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். சாரலங்காப் பிரதேசத்திலுள்ள குறிப்பிட்ட சில இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை களவு போன்ற படுபாதகச் செயல்களில் ஈடுபடுவது வெளிப்படையான விடயமாயினும் இதற்கெதிராக தகுந்த சட்ட நடவடிக்கைகள் இதுவரையிலும் முறையாக முன்னெடுக்கப்படவில்லை எனபதுவே மனதுக்கு வேதனையாகவுள்ளது.

புது விளையாட்டு அறிமுகங்களுடன் ”குட்சைல்ட்” பாலர் பாடசாலையின் விளையாட்டுப்போட்டி -

கஹட்டோவிட மேற்குப் பிராந்தியத்தில் இரண்டு வருடங்களாக இயங்கி வரும் குட்சைல்ட் பாலர் பாடசாலையின் இரண்டாம் வருட விளையாட்டுப் போட்டிகள் வெகு விமர்சையாக இன்று 18.12.2010ஆம் திகதி மாலை 1.00மணி முதல் பாலிகா முஸ்லிம் வித்தியாலய மைதானத்தில் வெகு விமர்சையா நடை பெற்றது. போட்டித் தொடரில் பல சுவாரஷ்யமான புதிய போட்டி நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டமை ஈன்று குறிப்பிடத்தக்கதாகும்.
போட்டி நிகழ்ச்சிளைப் பார்க்கும்போது இப்பாடசாலையின் கல்விசார் நடவடிக்கைகள் மாணவர்களின் ஆக்கத்திறனை அதிகரிக்கும் விதத்தில் அமைந்திருக்கும் என்பதைக் காணமுடிகின்றது. போட்டி நிகழ்ச்சியில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டமையையும் காணக் கூடியதாக இருந்தது.


 

முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளி வாசலில் யெமன் நாட்டு அறிஞரின் குத்பா உரை

கஹட்டோவிட முஹியத்தீன் ஜும்ஆப்பள்ளியில் இன்று (17.12.2010) ஆம் திகதி வெள்ளிக்கிழமை குத்பா உரையை யெமன் நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் அஷ்ஷைக் ஸாலித் அவ்வாத் அவர்கள் நிகழ்த்தினார். இவரின் உரையில் ஹிஜ்றா தரும் படிப்பினைகளை அழகாக விளங்கப்படுத்தியதுடன் பொறுமை பற்றியும் அடுத்த முஸ்லிமுடன் நடந்து கொள்ள வேண்டிய முறைகளைப்பற்றியும் தெளிவு படுத்தினார். இவரின் உரையை தொழுகை முடிந்ததும் அஷ்ஷைக் இஜ்லான் காஸிமி அவர்கள் தமிழிற்கு மொழியாக்கம் செய்தார்.

கோத்தபாயவுக்கு நேரடிச் சவால் விட்ட முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க

Prime Minister Ratnasiri Wickremanayakeபாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நேரடியாகச் சவால் விடும் வகையில் இன்று கொழும்பில் முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க நடந்து கொண்டுள்ளதாக எமது கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சாதாரணமாக ஜனாதிபதியைத் தவிர வேறு எவரும் மீறத் துணியாத கோத்தபாய ராஜபக்ஷவின் வாகனத் தொடரணிப் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் மீறிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை பாதுகாப்புச் செயலாளரின் பயணத்துக்காக கொழும்பு புல்லர்ஸ் பாதை மூடப்பட்டிருந்த வேளையில் அவ்வழியாக முன்னாள் பிரதமரும், தற்போதைய சிரேஷ்ட அமைச்சருமான ரட்னசிறி விக்கிரமநாயக்க வந்துள்ளார்.

பாதை மூடப்பட்டிருப்பதைக் கண்டு அவரே இறங்கி வந்து இராணுவத்தினரிடம் அது பற்றி விசாரித்துள்ளார்.

“சேர்.. செக்ரட்டரி வருகின்றார். அதுதான் பாதை மூடப்பட்டுள்ளது. அவர் போகும்வரை யாருக்கும் போக இடமளிக்க முடியாது சேர்..” என்று இராணுவத்தினர் பதிலிறுத்துள்ளனர்.

அதைக் கேட்டு வெகுண்ட அமைச்சர் விக்கிரமநாயக்க, “யோவ்.. நான் முன்னாள் பிரதமர்.. அவர் வெறும் செயலாளர். நான் இந்த வழியால் தான் போவேன்.. முடியுமாயின் சுடுங்கள் பார்க்கலாம்.” என்று சவால் விட்ட வண்ணம் மூடப்பட்டிருந்த பாதை வழியாக பயணித்துள்ளார்.

அரசாங்கத்தின் போக்குகளில் சிரேஷ்ட அமைச்சர்கள் கடுமையாக அதிருப்தி கொண்டுள்ளமையின் இன்னொரு வெளிப்பாடாகவே இதனை நோக்க முடியும்.

ஏனெனில் பாதுகாப்புச் செயலாளரின் வாகனத் தொடரணி செல்லும் பாதைகளில் இதுவரை காலமும் ஜனாதிபதியைத் தவிர பிரதமரே வந்தாலும் அனுமதிக்கப்படாத நிலையொன்றே காணப்பட்டிருந்தது.

ஆயினும் அதனை மீறி சிரேஷ்ட அமைச்சர் விக்கிரமநாயக்க பயணித்துள்ளமையானது, கோத்தபாய ராஜபக்ஷவின் ஆதிக்கத்துக்கு நேரடி சவால் விட்டதற்கு ஒப்பானதாகவே கணிக்கப்படுகின்றது.

சதாம் உசேனின் கடைசி நிமிடங்கள்: அம்மலப்படுத்திய விக்கிலீக்ஸ்

சதாம் உசேன் கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி தூக்கிலிடப்பட்டார். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் கடந்த 2007&ம் ஆண்டு ஜனவரி 15&ம் தேதி அனுப்பியுள்ளனர்.


அந்த தகவல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

"பாக்தாத்தில் (அப்போதைய) அமெரிக்க தூதர் ஜல்மே கலில்சத் மற்றும் அரசு தலைமை வக்கீல் முன்கித் பரூன் ஆகியோர் சதாம் தூக்கு குறித்து ஆலோசனை நடத்தினர். தூக்கு மேடை சரியில்லை என்பதால் அமெரிக்க வீரர்கள் புதிதாக மேடை கட்டியதாக கலில்சத்திடம் பரூன் கூறியுள்ளார்.

சதாம் தூக்கிலிடப்படும் இடத்துக்கு ஈராக் அதிகாரிகள் 14 பேர் ஹெலிகாப்டரில் வருகின்றனர். அவர்களிடம் அமெரிக்க வீரர்கள் சோதனை நடத்தி செல்போன்களை கைப்பற்றுகின்றனர். பரூன் மற்றும் நீதிபதி ஆகியோர் சதாம் உசேனை சந்தித்து தீர்ப்பை வாசித்து காட்டுகின்றனர். பிறகு அவர் தூக்கு மேடைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.

‘பயமாக இருக்கிறதா’ என்று சதாமிடம் ஈராக்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொவாபக் அல் ரூபே கேட்கிறார். ‘பயம் எதுவும் இல்லை. நான் ஆட்சிக்கு வரும்போதே எதிர்பார்த்ததுதான்’ என்கிறார் சதாம். தூக்கு மேடை ஏறும் வரை குர்ஆன் புத்தகத்தை கையில் வைத்திருந்த சதாம், அதை ஈராக் தலைமை நீதிபதியும் தனது நெருங்கிய உறவினருமான அவாத் அல்பந்தரின் மகனிடம் ஒப்படைக்கும்படி கூறி பரூனிடம் கொடுத்தார்.

‘எல்லாம் ஒழுங்காக நடக்க வேண்டும்’ என ஈராக் வீரர்களிடம் பரூன் சொல்கிறார். சதாமின் கால்களை வீரர்கள் கயிற்றால் கட்டினர். ‘காலை கட்டுகிறீர்களே. தூக்கு மேடையில் எப்படி ஏறுவது?’ என்று சதாம் கேட்கிறார். ‘நரகத்துக்கு போ’ என சதாமை ஒரு வீரர் திட்டுகிறார். உடனே பரூன், "யாரும் எதுவும் பேசக் கூடாது" என எச்சரிக்கிறார்.

சதாமை வீரர்கள் தூக்கு மேடைக்கு தூக்கி செல்கின்றனர். தலையை மூடிக்கொள்ள கொடுத்த துணியை வேண்டாம் என்கிறார் சதாம். சிறிது நேரம் பிரார்த்தனை செய்த பின் அவரது கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்டது.

சதாம் தூக்கில் தொங்கியபோது, அங்கு நின்றிருந்தவர்களில் ஒருவர் "முக்தடா, முக்தடா, முக்தடா" என கூச்சலிட்டார். முக்தடா அல் சதர் என்பவர் ஷியா பிரிவு மதத் தலைவரின் தந்தை. சதாம் ஆட்சியில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சத்தம் போடாதீர்கள் என பரூன் மீண்டும் எச்சரிக்கிறார்.

சதாம் இறந்ததும் தூக்கு மேடையில் இருந்து அவரது உடல் அகற்றப்பட்டு ஒரு பையில் வைக்கப்பட்டது. சதாமின் உடல் தண்ணீர் ஊற்றி கழுவப்பட்டதா என மத குரு ஒருவர் உறுதி செய்கிறார்’’என்று விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதாம் உசேன் மீது ஈராக் சட்டப்படிதான் வழக்கு விசாரணை நடந்து, ஈராக் அரசுதான் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கியது என அமெரிக்கா கூறியது. தூக்குமேடையை அமெரிக்க வீரர்களே கட்டினர் என்பதையும் சதாம் தூக்கு தண்டனையில் அமெரிக்காவுக்கு நெருங்கிய தொடர்பிருப்பதையும் விக்கிலீக்ஸ் தற்போது அம்பலப்படுத்தியிருக்கிறது.

10 தலை நாகமும் பறைசாற்றிய உண்மையும்

அண்மைக்காலத்தில் அதிகம் பேசப்பட்ட விடயம் 10 தலை நாகபாம்பு பற்றியது. வன்னிப் பகுதியில் இந்த 10 தலை நாகம் தென்பட்டதாக கூறி சில ஊடகங்களும் உண்மை நிலையை அறியாமல் செய்தியை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கியிருந்தன.


இந்த 10 தலை நாகத்தின் புகைப்படங்கள் ஏற்கனவே பல வாரங்களுக்கு முன்னர் இணையத்தளங்களில் உலாவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் மீண்டும் அண்மையில் அந்த 10 தலை நாகத்தின் புகைப்படங்களை மக்கள் மத்தியில் பரப்பவிட்டமையால் அதை உண்மையென நம்பியவர்கள் அப்புகைப்படத்தை கத்தரித்து தங்களுடைய பூஜை அறையில் வைத்து வழிபடுமளவுக்கு நிலைமை மாறியிருந்தது.

எந்தவொரு செய்தியையும் ஆராய்ந்து அறியாமல் முறையற்ற தனமாக மக்கள் மத்தியில் போலிகளை பரப்புவதால் ஏமாற்றப்படுபவர்கள் வாசகர்களே என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதனால் மதங்கள் கேலிக்குள்ளாக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 10 தலை நாகம் என போலியாக சித்திரிக்கப்பட்ட, உண்மையான 'ஒரு தலை' நாகத்தின் புகைப்படமும் இப்போது இணையத்தில் வெளிவந்திருக்கிறது. ஒரு தலை நாகத்தின் புகைப்படத்திற்கு 10 தலை கொடுத்தவர்கள் கணினி விற்பன்னர்களே...!

ஏமாற்றமடைந்த வாசகர்களுக்கு உண்மைநிலை புரியவேண்டும் என்பதற்காக 10 தலை நாகத்தின் 'கிரபிக்ஸ்' விளையாட்டை இங்கே பிரசுரிக்கின்றோம். இப்படத்தில் ஒரு தலை நாகத்தின் பின்னால் அதனுடைய நிழல் அப்படியே இருக்கும். அதே படத்தை 10 தலைகளாக மாற்றியபோதும் அதே ஒரு தலை நாகத்தின் நிழல் தென்படுவதை வாசகர்களின் கவனித்திற்காக விடுகின்றோம்.

(நன்றி: பேஸ்புக் நண்பர்கள்)

இந்தியாவை தொடர்ந்து அவமானப்படுத்தும் அமெரிக்கா...


2003-ம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் அமெரிக்காவின் டல்லஸ் விமானநிலையத்தில் வைத்து ஆடைகளை அவிழ்த்து பரிசோதிக்கப்பட்டார்.


2009 ஜூலை 22-ல் முன்னாள் இந்திய ஜனாதிபதி எ.பி.ஜெ.அப்துல் கலாம் அமெரிக்காவின் காண்டினண்டல் ஏர்லைன்சில் ஷூவை அவிழ்த்து பரிசோதனை நடத்தப்பட்டார்.

2009 மே 6-ல் மலையாள சினிமா நடிகர் மம்மூட்டி நியூயார்க்கில் கென்னடி விமானநிலையத்தில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டு இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டார்.

2009 ஆகஸ்ட் 14-ல் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நியூஜெர்ஸி விமானநிலையத்தில் வைத்து இரண்டு மணிநேரம் விசாரிக்கப்பட்டார். முஸ்லிம் பெயர்தான் அதற்கு காரணம்.

2010 செப்டம்பர் 27-ல் இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல் ஷிகாகோ விமானநிலையத்தில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டார்.

2010 டிசம்பர் 4-ல் அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் அமெரிக்காவின் மிசிசிபி விமானநிலையத்தில் வைத்து உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
 
மாத்யமம்

கஹடோவிட தேர்தல்களம் சூடுபிடிப்பு!


ஜனநாயக தேசிய முன்னணியின் உறுப்பினரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் அவர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் கஹடோவிடவிற்கு தமது ஆதரவாளர்களை சந்திக்க வருகை தரவள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே கஹடோவிடவிற்கு வந்த போது அவருக்குக்கிடைத்த மிகுந்த வரவேற்பு குறிப்பிடத்தக்கதாகும்.






மேலும் நீண்ட நாட்களாக சரியாக இயங்காமல் இருந்த ஐ .தே. கட்சியின் கஹடோவிட மேற்கு கிழக்கு கிளைகளை புத்துயிரூட்டி மீள உறுவாக்கும் கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 20 ஆம் திகதி எதிர்வரும் பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகப் போட்டியிடவுள்ள சகோதரர் நஜீம் நாநா அவர்களின் முயற்சியில் விளைவாக நடைபெறவிருப்பதாக தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.

கஹட்டோவிட அல்பத்ரியாவிலிருந்து 3 மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கலகம் தெரிவு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற கலவிப் பொதுத்தராதர உயாதரப்பரீட்சைக்குத்  கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்திலிருந்து கலைத்துறையில் 18 மாணவர்கள் தோற்றினர். இவர்களுல் 3 மாணவிகள் இம்முறையும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்டுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிறந்த பெறு பேறாக 2A, B பெறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. வழமை போன்று ஆண் மாணவாகள் எவரும் பல்கலைக்குத் தெரிவு செய்யப்படாமை மாணவர்களின் கல்வியின் மீதான நம்பிக்கையை குறைத்துள்ளதாக பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். எது எப்படியிருப்பினும் மாணவர்களை கல்வியின்பால் ஊக்கப்படுத்தவதற்கான ஒரு செயற்திட்டத்தை புத்திஜீவிகளும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் உருவாக்க முயற்சிப்பது காலத்தின் தேவையாகும்.

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்

அபூதாலிப் கணவாய்:


நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் தொடங்கி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து கொண்டே வந்தது. இஸ்லாமிய வளர்ச்சியை முறியடிக்க மக்கத்து காஃபிர்கள் பல வகையிலும் முயற்சித்து தோற்றுப் போனதால், இறுதியாக நபியவர்களை ஊர் ஒதுக்கி வைக்க முடிவு செய்தனர். நபி(ஸல்) அவர்களுடனும் அவர்களுடைய குடும்பத்தினராகிய ஹாஷிம் கிளையார், முத்தலிப் கிளையாருடனும் யாரும் கொடுக்கல், வாங்கல், திருமண உறவு போன்ற எந்த செயலிலும் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என்று அறிவிப்பு செய்து, அதை தீர்மானமாக எழுதி கஃபத்துல்லாஹ்விலும் தொங்க விட்டார்கள்.

இதனால் நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினர்கள் மக்காவை விட்டு ஒதுங்கி அவர்களுக்கு சொந்தமான ஒரு மலைப் பள்ளத்தாக்கிற்கு சென்று தங்கினார்கள். இந்த இடத்திற்கு ”ஷுஃ’ப அபூதாலிப்” அபூதாலிப் கணவாய் என்று பெயர். இங்கு மூன்று ஆண்டுகள் உணவின்றி, உதவியின்றி பெரும் கஷ்டத்தோடு வாழ்ந்தார்கள். பின்னர் இந்த தீர்மானம் கிழித்தெறியப்பட்டு மக்கா நகருக்குள் வந்தார்கள். அக்கணவாயில் தங்கியிருந்த போதுதான் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் பிறந்தார்கள். இந்நிகழ்வு நபித்துவத்தின் 7 ஆம் ஆண்டு, முஹர்ரம் மாதத்தில் நடைபெற்றது.

முஹர்ரம் 10-ஆம் நாள் “ஆஷுரா” தினம்:

ஆஷூரா தினத்தில் நோன்பு வைக்குமாறும், அன்று தம் குடும்பத்தார்களுக்கு தாராளமாக செலவு செய்யுமாறும் நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு வைத்திருந்தார்கள். இதன் சிறப்பு என்ன? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள், இன்று நல்ல நாள்; பனூ இஸ்ராயீல்களை அவர்களின் விரோதிகளிடமிருந்து அல்லாஹ் ஈடேற்றமடையச் செய்த நாள்; எனவே, மூஸா(அலை) அவர்கள் இன்று நோன்பு நோற்றார்கள் என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸா(அலை) அவர்களுக்கு மிக நெருக்கமானவன் என்று கூறி, அந்த நாளில் தாங்களும் நோன்பு நோற்று, தம் தோழர்களையும் நோன்பு நோற்க கட்டளையிட்டார்கள். (புகாரி,முஸ்லிம்)

கைபர் யுத்தம்:

கைபர் யுத்தம் ஹிஜ்ரி 7-ஆம் ஆண்டு, முஹர்ரம் மாதம் நடைபெற்றது. நபி(ஸல்) அவர்கள் மக்கத்து காஃபிர்களுடன் செய்த ஹுதைபிய்யா ஒப்பந்தம் முடிந்து மதீனா திரும்பியதும் சில நாட்களில் கைபருக்கு புறப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் தங்கியிருந்த போது அல்லாஹுத்தஆலா “ஃபதஹ்” அத்தியாயத்தை அருளினான். அதில், நபியவர்களுக்கு கைபரின் வெற்றியையும், அங்கு கிடைக்கும் கனீமத்தை(வெற்றிப் பொருட்களை)யும் வாக்களித்திருந்தான். இதைப் பற்றி திருக்குர்ஆனில்…….

“யுத்தத்தில் (எதிரிகளிடமிருந்து வெற்றியின் மூலம் கிடைக்கும்) ஏராளமான வெற்றிப்பொருட்களை அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்திருந்தான்; நீங்கள் அதை கைப்பற்றுவீர்கள்.” (48;20)

அரசர்களுக்கு இஸ்லாமிய அழைப்புக் கடிதம்:

நபி(ஸல்) அவர்கள், ஹுதைபிய்யா ஒப்பந்தம் முடிந்து மதீனா திரும்பியதும் கைபர் யுத்தத்திற்கு புறப்படும்முன், பல நாட்டு அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் இஸ்லாமிய அழைப்புக் கடிதம் எழுதினார்கள். அவ்வகையில், ஹபஷா நாட்டு மன்னர் நஜ்ஜாஷி, ரோம் நாட்டு மன்னர் கைஸர், பாரசீக நாட்டு மன்னர் கிஸ்ரா, சிரியா நாட்டு மன்னர் ஹாரிஸ் இப்னு அபூஷமிர் அல்கஸ்ஸானி, எகிப்து நாட்டு மன்னர் முகவ்கிஸ், யமாமா நாட்டு மன்னர் ஹவ்தா இப்னு அலி அல்ஹனஃபி ஆகியோர்களுக்கு கடிதம் எழுதி தூதுவர்கள் மூலம் கொடுத்தனுப்பினார்கள்.

ஹிஜ்ரி ஆண்டின் துவக்கம்:

நபி(ஸல்) அவர்களின் காலத்திலும், அவர்களுக்குப்பின் அபூபக்கர்(ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் இஸ்லாமிய வருடம் கணக்கிடப்படவில்லை. ஹிஜ்ரத் நிகழ்ந்து 16-ஆண்டுகளுக்குப்பின் உமர்(ரழி) அவர்களின் ஆட்சியில் தான் இதுபற்றி ஆலோசிக்கப்பட்டது. உமர்(ரழி) அவர்கள் மற்ற சஹாபாக்களுடன் கலந்து ஆலோசனை செய்தார்கள். பல கருத்துப் பரிமாற்றத்திற்கு பின், இஸ்லாமிய மார்க்கம் உலகம் முழுவதும் பரவுவதற்கு முக்கியக்காரணமாக இருந்த “ஹிஜ்ரத்”தை மையமக வைத்து இஸ்லாமிய ஆண்டை கணக்கிட முடிவு செய்தார்கள்.

மேலும் திருக்குர்ஆனில் அத்தியாயம் 9; 108-வது வசனத்தில் “ஆரம்பநாளிலிருந்தே (அல்லாஹ்வின்) பயபக்தியின் மீது அஸ்திவாரமிடப்பட்ட பள்ளியானது, அதில் தான், நீர் (தொழுகைக்காக) நிற்பது மிகத் தகுதியுடையது”. என்று கூறப்பட்டுள்ளதில் “ஆரம்ப நாள்” என்ற வார்த்தை ஹிஜ்ரத்தை குறிப்பதால், இந்த வசனமும் ஹிஜ்ரத்தை மையமாக வைத்து ஆண்டைத் துவக்கக் காரணமாக இருந்தது.

தங்கள் அனைவருக்கும் ஹிஜ்ரி 1432 – வது இஸ்லாமியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் ஆண்டு முழுவதும் அனைத்து நற்பாக்கியங்களையும் நன்மைகளையும் நம் அனைவருக்கும் நல்கிட துஆச் செய்கின்றேன்.

விக்கிலீக்ஸ் ஜூலியன் அசேஞ் ஸ்தாபகர் கைது

விக்கிலீக்ஸ் இணையத்தள ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ் லண்டன் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சுவீடனில் அசேஞ்சுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு காரணமாக அவருக்கு எதிராக பிடிவிறாந்து பிறக்கப்பட்டிருந்தது.

தன்மீதான வலை பொலிஸாரின் வலை இறுகிய நிலையில் இன்று செவ்வாய்கிழமை லண்டன் பொலிஸாரிடம் சரணடையப்போவதாக ஜூலியன் அசேஞ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் லண்டன் நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு நேர அவகாசம் பெற்று லண்டன் பொலிஸ் நிலையமொன்றுக்கு சென்ற அசேஞ் அங்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு தொடர்பான சந்தேகத்தின் பேரில் சுவீடன் பொலிஸாரின் சார்பாக ஜூலியன் அசேஞ் கைது செய்யப்பட்டுள்ளார் என லண்டன் பொலிஸார் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.

ஜூலியன் அசேஞ் ஸ்தாபித்த விக்கிலீக்ஸ் இணையத்தளம் அமெரிக்க  இராஜாங்கத் திணைக்களத்தின்  பெரும் எண்ணிக்கையான இரகசிய ஆவணங்களை வெளியிட்டதால் அவர் அமெரிக்காவின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு!

பிரச்சினை உருவான விதம்
89107612451949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.
வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.
'இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்' என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
'இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது' என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.
ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக் கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.
இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார்.
அயோத்தியில் ராமர் பிறந்தாரா?
அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.
இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.
இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.
வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, 'அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.
இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:
கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.
திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.
துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.
கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.
அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.
இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.
கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை.
இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,110 = 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.
இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, 'இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந் தார்' எனக் கூறுகிறது.
அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்தி ருக்க வேண்டும்.
ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் 'அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்' எனக் குறிப்பிடுகின்றார்.
அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.
இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.
அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது.
இராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வர வேண்டும்?
இந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.
'இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்' என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.
அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.
ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.
அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.
"இந்த அயோத்திதான் அந்த அயோத்தி" என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.
அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.
மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.
அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.
எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.
இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.
அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா?
'பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்! என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.
இந்த இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.
அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.
குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர்.
கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர்
பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வ றிக்கை 'தி வீக்' (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் 'சன்டே டைம்ஸ்' (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை" என்று அடித்துக் கூறுகிறார்.
'மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்' என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
இராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது?
இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் 'அமர கோஷா' என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.
லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை?
அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், 'இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்' என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட 'ரேடியன்ஸ்' பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.
அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.
கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா?
இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கி ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.
மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.
துளசி தாசர் காலம் என்ன? எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.
இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார்.
இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் "கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே" எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.
200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.
உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ரா ஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடர வில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற் றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறு வது முழுப் பொய் என்பது இதன் மூல மும் தெளிவாகிறது.
பாபர் கோவிலை இடிப்பவரா?
இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.
ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.
கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.
பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?
பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில்,
"மகனே! இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்" என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா?
பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.
கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.
பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.
பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.
பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.
கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. "உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்" என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.
அதுதான் போகட்டும்! முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.
வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்
"கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்" என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை.
1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை.
இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.
1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை.
எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.
இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.
TNTJ website

வீதி விபத்தில் இருவர் பலி


மீரிகம பஸ்யால வீதியின் மல்லாவ சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் நாம்புளுவயைச் பிறப்பிடமாககொண்ட இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்துள்ள இருவர்களதும் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு (05.12.2010) நாம்புளுவ, திஹாரி மைய்யவாடிகளில் நடைபெறுமென்று அறியப்படுகின்றது.


வேகமாக வந்த காரும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து ஏற்ட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கர வண்டி வீதியின் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சமயம் கார் சாரதியின் தவறின் காரணமாகவே இந்த விபத்தது ஏற்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்தார்.
கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அத்தனகல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு அருகில் இயங்கிய ஆடம்பர விபசார விடுதி முற்றுகை!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகைக்கு அருகில்-அதி உயர் பாதுகாப்பு வலய பிரதேசத்தில் இயங்கி வந்த ஆடம்பர விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் இன்று காலை முற்றுகை இட்டுள்ளார்கள்.

லிபேட்டி பிளாசா கட்டிட தொகுதியின் எட்டாவது மாடியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இவ்விபச்சார விடுதி இயங்கி வந்துள்ளது. முற்றுகையின்போது விபச்சாரிகள் ஐவர் அங்கு கைது செய்யப்பட்டனர். இவர்களில் இருவர் ஐரோப்பியர்கள்.

மூவர் உள்நாட்டவர்கள். விபசார விடுதியின் உரிமையாளர் எட்டாவது மாடியில் உள்ள இக்கட்டிடத்தில் மிகவும் நுட்பமான முறையில் மாற்றங்களை செய்து இருக்கின்றார்.

இக்கட்டிடத்துக்குள் இருந்து படிக்கட்டுக்கள் மூலமாக ஏழாவது மாடியில் உள்ள இன்னொரு கட்டிடத்தை சென்றடைகின்றமைக்கான இரகசிய பாதை ஒன்றை உருவாக்கி இருக்கின்றார்.
 
ஏழாவது மாடியில் உள்ள கட்டிடத்தில்தான் விபச்சாரம் இடம்பெற்று வந்திருக்கின்றது. பொலிஸாரால் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த அதிரடி நடவடிக்கைகளில் இம்முற்றுகையும் ஒன்று ஆகும்.

முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நூர்தீன் மசூர் இன்றுகாலை மாரடைப்பால் காலமானார்

See full size imageஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நூர்தீன் மசூர், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் இன்றுகாலை மாரடைப்பால் காலமானதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஹஸன் அலி தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.


48 வயதான நூர்தீன் மசூர் கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு முதற் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

2001 ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான அவர் 2001 முதல் 2004 ஆம் ஆண்டுவரை வன்னி புனர்வாழ்வு உதவிகளுக்கான அமைச்சராக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலிலும் அவர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.

நேற்றிரவு பெய்த கடும் மழையின் காரணமாக கஹட்டோவிடாவின் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.


நேற்றிரவு பெய்த கடும் மழையின் காரணமாக கஹட்டோவிடாவின் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இவ்வாறான ஒரு வெள்ளப் கடந்த வெள்ளத்தைப் போன்று பாரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் வெள்ள நீரின் அளவு கூடிக்கொண்டே இருப்பது போன்று தெண்படுகிறது.

'தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை' நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்

தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விரைவில் விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்போவதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நீதி அமைச்சில் இன்று திங்கட்கிழமை காலை கடமையை பெறுப்பேற்றுக்கொண்ட பின்னர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடகவியளாலர்கள் மத்தியில் கத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
"தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நான் நீதியமைச்சராக கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸிடம் தெரிவித்துள்ளேன்.
இவர்களின் விடுதலை தொடர்பில் பாதுகாப்பு செயலாளருடனும் நான் கலந்துரையாடவுள்ளேன்.
அத்துடன் வக்பு சபை, நல்லிணக்க சபை, நியாயாதிக்க சபை போன்றவற்றை திறம்பட செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்று முதல் நீதியமைச்சு சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து பணியற்றும்" என்றார்.
நீதியமைச்சராக ரவூப் ஹக்கீம் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேருடன் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ், இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சிப்லி அஸீஸ், நீதியமைச்சின் செயலாளர் சுஹத கே. கம்லத், முன்னாள் அமைச்சர்களான ஏ.ஆர்.எம்.மன்சூர், கே.என்.சொக்ஸி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்கள், அதியுயர் பீட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

இஸ்லாமிய பாரம்பரிய முறைப்படி அபுதாபி மசூதிக்குச் சென்ற எலிசபெத் மகாராணி படங்களுடன்

ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக வளைகுடா நாடுகளுக்குச் சென்றுள்ள எலிசபெத் மகாராணி நேற்று அபுதாபியில் உள்ள மிகப்பெரிய மசூதிக்குச் சென்றார். அங்கிருந்த இஸ்லாமிய மாணவர்களை சந்தித்து கலந்துரையாடவும் செய்தார்.

 நேற்று மகாராணியும் இளவரசர் பிலிப்பும் லண்டனிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் அபுதாபி சென்று சேர்ந்தவுடன் உடனடியாக நாட்டின் மிகப்பெரிய மசூதியாகக் கருதப்படும் ஷேக் சயேத் மசூதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 
இந்த மசூதியின் சிறப்பம்சம் இதில் விரிக்கப்பட்டுள்ள தரை விரிப்புக்கள் 35-டன் எடை கொண்டது என்பது தான். 1,200 ஈரான் பெண்கள் இணைந்து இரண்டு வருடங்களாக கைகளாலேயே இந்த தரை விரிப்புக்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
அங்கிருந்த மற்ற பெண்கள் அனைவரும் இஸ்லாமிய பாரம்பரிய உடையில் இருந்ததால் மகாராணிக்கும் இதற்கென அவர் உடையுடன் பொருந்தக் கூடிய வகையில் அங்கி சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
 
மசூதிக்குள் சென்றவுடன் பாரம்பரிய முறையில் ஷூக்களை கழற்றி விட்டு வெறும் கால்களுடன் தலையிலும் இஸ்லாமிய பாரம்பரிய உடைகளுடன் நேற்று முழுதும் காணப்பட்டார்.
 
நிழற்படங்களுக்கு இங்கே சொடுக்கவும். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=14559:2010-11-25-04-47-04&catid=43:2010-01-01-15-58-29&Itemid=401 

கஹடோவிட கடைகளுக்கு அநாமேதய துண்டுப்பிரசுரம்.

சிகரட் விற்பனையை தவிர்ந்துகொள்ளுமாரு வேண்டி கடந்த சில நாட்களிற்கு முன்னர் கஹட்டோவிடாவின் கடைகளிற்கு ஒரு அநாமேதயத் துண்டுப்பிரசுரம் போடப்பட்டிருக்கிறது. சிகரட் விற்பனையால் ஏற்படும் பாதிப்புக்களை உணர்த்தி எமதூரின் இளைய தலைமுறையினரை புகைக்காத ஒரு சமூகமாக உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் அதன் வாசகங்கள் அமைந்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. (இத்துண்டுப் பிரசுரத்தின் நிழற்படம் இணைக்கப்பட்டுள்ளது). இது இப்படியிருக்க கடந்த சில நாட்களிற்கு முன்னர் தடை செய்யப்பட்ட சிகரட் வகையை விற்பனை செய்த குற்றத்திற்காக எமதூரின் ஒரு வியாபாரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துண்டுப்பிரசுரத்தின் இறுதியில் நலன் விரும்பும் ஊர்வாசிகள் என்று ஒப்பமிடப்பட்டிருப்பதைக்  காண முடிகின்றது.

புதிய அமைச்சரவை அமைச்சர்கள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று நியமனம் பெற்ற புதிய அமைச்சரவையின் விபரங்கள் பின்வருமாறு:-



சிரேஷ்ட அமைச்சர்கள்
1. தி.மு.ஜயரட்ன – புத்தசாசன மதவிவகாரம்.

2. ரட்ணசிறி விக்கிரமநாயக்க – நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு

3. அதாவுட செனவிரட்ன – கிராமிய விவகாரங்கள்

4. டியூ குணசேகர – மனிதவள அமைச்சு

5. பி.தயாரட்ன – உணவு மற்றும் போஷாக்கு

6. ஏ.எச்.எம்.பௌசி – நகர அபிவிருத்தி

7. எஸ்.பி.நாவின்ன – நுகர்வோர் நலன்

8. பியசேன கமகே – தேசியவளம்

9. திஸ்ஸ வித்தாரண – விஞ்ஞான விவகாரம்

10. சரத் அமுனுகம – சர்வதேச நிதி திட்டமிடல்


அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்
1. நிமல்சிறிபாலடி.சில்வா – நீர்ப்பாசன நீர்வளம் மற்றும் முகாமைத்துவம்

2. மைத்திரிபால சிறிசேன – சுகாதாரம்

3. சுசில் பிரேமஜயந்த – பெற்றோலிய வளத்துறை

4. ஆறுமுகம் தொண்டமான் – கால்நடை, கிராம சமூக அபிவிருத்தி

5. தினேஷ் குணவர்த்தன – நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு

6. டக்ளஸ் தேவானந்தா – பாரம்பரிய கைத்தொழில், மற்றும் சிறு கைத்தொழில்

7. ஏ.எல்.எம்.அதாவுல்லா – உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாணசபை

8. ரிஷாட் பதியுதீன் – வர்த்தக மற்றும் முதலீட்டு விவகாரம்

9. பாட்டலி சம்பிக்கரணவக்க – மின்சக்தி மற்றும் எரிசக்தி

10. விமல் வீரவன்ஸ – வீடமைப்பு, பொறியியல் நிர்மாணத்துறை

11. ரவூப் ஹக்கீம் – நீதியமைச்சு

12. பஷில் ராஜபக்ஷ – பொருளாதார அபிவிருத்தி

13. வாசுதேவ நாணயக்கார – தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்கம்

14. எஸ்.பி.திஸாநாயக்க – உயர்கல்வி

15. ஜி.எல்.பீரிஸ் – வெளிவிவகாரம்

16. டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன – பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள்

17. சுமித்திரா ஜி.ஜயசேன – நாடாளுமன்ற விவகாரம்

18. ஜீவன் குமாரதுங்க – தபால் சேவைகள்

19. பவித்திரா வன்னியாராய்ச்சி – தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி

20. அநுர பிரியதர்ஷன யாப்பா – சுற்றாடல் விவகாரம்

21. திஸ்ஸ கரலியத்த – சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகாரம்

22. காமினி லொக்குகே – தொழில் மற்றும் தொழில் உறவுகள்

23. பந்துல குணவர்த்தன – கல்வி

24. மஹிந்த சமரசிங்க – பெருந்தோட்ட கைத்தொழில்

25. ராஜித சேனாரட்ன – மீன்பிடி மற்றும் நீரியல்வளம்

26. ஜனக பண்டார தென்னக்கோன் – காணி மற்றும் காணி அபிவிருத்தி

27. பீலிக்ஸ் பெரேரா – சமூகசேவைகள்

28. சி.பி.ரத்நாயக்க – தனியார் போக்குவரத்து சேவைகள்

29. மஹிந்த யாப்பா அபயவர்த்தன – விவசாயம்

30. கெஹெலிய ரம்புக்வெல்ல – வெகுஜன ஊடக மற்றும் தகவல்

31. குமார வெல்கம – போக்குவரத்து

32. டலஸ் அழகப்பெரும – இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன்; விருத்தி

33. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர்;

34. சந்திரஸ்ரீ கஜதீர – புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

35. சலிந்த திஸாநாயக்க – சுதேச மருத்துவம்

36. ரெஜினோல்ட்குரே – சிறு ஏற்றுமதிப்பயிர் ஊக்குவிப்பு

37. டிலான் பெரேரா – வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி சேவைகள்

38. ஜெகத் புஷ்பகுமார – தென்னை அபிவிருத்தி மற்றும் ஜனதா தோட்ட அபிவிருத்தி

39. டீ.பி.ஏக்கநாயக்க – கலாசாரம் மற்றும் கலைகள்

40. மஹிந்த அமரவீர – அனர்த்த முகாமைத்துவம்

41. எஸ்.என்.சந்திரசேன – கமநலசேவைகள் மற்றும் வனவிலங்கு

42. குனரத்ன வீரக்கோன் – மீள்குடியமர்தல்

43. மேர்வின் சில்வா – பொதுசன உறவுகள் மற்றும் பொதுசன விவகாரங்கள்

44. மஹிந்தானந்த அளுத்கமகே – விளையாட்டுத்துறை

45. தயாசிறித்த திசேர – அரச வளங்கள் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி

46. ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய – தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம்

47. டொக்டர் ஜகத் பாலசூரிய – தேசிய மரபுரிமை

48. லக்ஷ்மன் செனவிரத்ன – உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு

49. நவின் திஸாநாயக்க – பொதுமுகாமைத்துவ சீர்திருத்தம்


பிரதியமைச்சர்கள்
1. சுசந்த புஞ்சி நிலமே – மீன்பிடி மற்றும் கடல்வள விவகாரம்

2. லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன – பொருளாதார அபிவிருத்தி

3. ரோஹித்த அபய குணவர்த்தன – துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி

4. பந்து பண்டாரநாயக்க – ஆயுர்வேத மருத்துவ விவகாரம்

5. ஜயரத்ன ஹேரத் – கைத்தொழில் மற்றும் வர்த்தகம்

6. துமிந்த திஸாநாயக்க – இளைஞர் விவகாரம் மற்றும் திறன் அபிவிருத்தி

7. லசந்த அழகியவண்ண – வீடமைப்பு, பொறியியல் நிர்மாணத்துறை

8. ரோஹண திஸாநாயக்க – போக்குவரத்து விவகாரம்

9. ஏச்.ஆர்.மித்ரபால – கால்நடை, கிராம சமூக அபிவிருத்தி

10. நிர்மல் கொத்தலாவ – துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி

11. பிரேமலால் ஜயசேகர – மின்சக்தி மற்றும் மின்வலு

12. கீத்தாஞ்சன குணவர்த்தன – நிதி திட்டமிடல்

13. விநாயமூர்த்தி முரளிதரன் – மீள்குடியேற்றம்

14. பைஸர் முஸ்தபா – தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி

15. இந்திக்க பண்டாரநாயக்க – உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாணசபை

16. முத்துசிவலிங்கம் – பொருளாதார அபிவிருத்தி

17. சிறிபால கம்லத் – காணி அபிவிருத்தி

18. டபிள்யூ.பி.ஏக்கநாயக்க – நீர்ப்பாசன நீர்வளம் மற்றும் முகாமைத்துவம்.

19. சந்திரசிறி சூரியாராய்ச்சி – சமூக சேவைகள்

20. நந்தமித்த ஏக்கநாயக்க – உயர்க்கல்வி

21. நிரூபமா ராஜபக்ஷ – நீர்வழங்கல் மற்றும் வடிகால்

22. லலித் திஸாநாயக்க – சுகாதாரம்

23. சரண குணவர்த்தன – பெற்றோலிய வளம்

24. காமினி விஜித் விஜிதமுனிசொய்சா – கல்வி

25. எம்.எல்.ஏ ஹிஸ்புல்லா – மகளிர் மற்றும் சிறுவர் விவகார

26. வீரகுமார திஸாநாயக்க – பாரம்பரிய கைத்தொழில், மற்றும் சிறுகைத்தொழில்

27. எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன – புத்தசாசன மதவிவகாரம்.

28. ஏர்ல் குணசேகர – பெருந்தோட்ட கைத்தொழில்

29. பஷீர் சேகுதாவூத் – உள்நாட்டு வர்த்தகம் கூட்டுறவு

30. அப்துல் காதர் – சுற்றாடல் அபிவிருத்தி

31. துலிப் விஜயசேகர – அனர்த்த முகாமைத்துவம்

பிரதேச சபைத் தோ்தலில் ஜனாப் நஜீம் போட்டி

See full size imageஎதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தோ்தலில் அத்தனகல்ல தோ்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ஜனாப் நஜீம் நாநா அவர்கள் போட்டியடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் அரசியலில் ஈடுபாடு கொண்டு பல்வேறு சேவைகளை எமதூருக்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் அரசியலின்றி தனிப்பட்ட முறையில் பல்வேறு சமூக சேவைகளையும் இவர் ஊரின் நலனிற்காகச் செய்துள்ளார்.
பொது ஜன ஐக்கிய முன்னனி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னனி சார்பகாக எந்தவொரு முஸ்லிமும் போட்டியிடுவதாக இதுவரை எவ்விதத் தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை.

கஹட்டோவிடாவில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

“தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்!”



கஹட்டோவிட அல் மஸ்ஜித் ஜாமிஉ பள்ளி வாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று காலை 7 .15 மணியளவில் நடைபெற்றது. நேற்றிரவு பெய்த மழையையும் பொருட்படுத்தாது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமையையும் காண முடிந்தது. ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் உட்பட சுமார் 1000 போ் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பெருநாள் தொழுகையைத் தொடாந்து பள்ளி வாசலின் பிரதம் இமாம் அஷ்ஷைக் மஸ்ஊத்(ஸலபி) அவாகளின் உரையும் இடம் பெற்றது. இவ்வுரையில் அல்லாஹுத்தஆலாவால் மனிதர்களிற்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு அருட்களான ஆரோக்கியம், ஓய்வு நேரம் என்பவற்றை நாம் எப்படி சிறந்த முறையில் பயன்படுத்துவது என்பது பற்றிய ஒரு சிறந்த விளக்கத்த வழங்கினார்.  குர்ஆன் சுன்னாவின் பிரகாரம் பெருநாள் தொழுகையை தொழுவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தந்த அல்லாஹ்விற்கும், மஸ்ஜித் ஜாமிஉவின் நிர்வாகத்திற்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

நிழற்படங்களுக்கு இங்கே கிளிக் பன்னவும்.


ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை அறிவித்தல்

இன்சா அல்லா நாளை 17.11.2010 ஆம் திகதி புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது. பெருநாள் தொழுகை முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளியில் பெண்களுக்கு காலை6.45 மணிக்கும் ஆண்களுக்கு 7.00மணிக்கும் நடைபெறும். தவ்ஹீத் ஜமாஅத்தினரால்  காலை 7.00மணிக்கு வழமை போன்று நபிவழியின் அடிப்படையிலான பெருநாள் தொழுகை  கஹட்டோவிட அல்பத்ரியா மகாவித்தியாலய மைதானத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னனிக்குப் பின்னால்…… கிளை 10

கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின் கீழ் சிறு சிறு உப தலைப்புக்களைத் தாங்கியதாக இது அமைந்துள்ளது. இது பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எனது இந்த முயற்சியில் இன்னும் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும் என்பது எனது கருத்தாகும்.

.................................................................................
கல்வியை ரசித்தவன் அறிஞனாகின்றான்.கவியை ரசித்தவன் கவிஞனாகின்றான். தத்துவத்தை ரசித்தவன் ஞானியாகின்றான். அறிவியலை ரசித்தவன் விஞ்ஞானியாகின்றான். ரசனைகளால் சமைந்ததே மனித வாழ்வு. புரிதல் மனிதனின் பொது மொழி ரசித்தல் மனிதனின் தனிமொழி. கருத்துக்களை ரசிப்பதனால் அவற்றுள் மறைந்திருக்கும் வலிகளைப் புரியலாம். காட்சிகளை ரசிப்பதால் கல்லாகிப்போன நெஞ்சங்களை நெகிழவைக்கலாம். காவியங்களும் ஓவியங்களும் ரசனையால் பிறந்தவைதான். சில ரசனைகளில் அர்த்தமில்லை என்பதற்காய் ரசனைக்கே அர்த்ததில்லாமற் போய்விடாது. எழுத்தை ரசிக்கும் ஒரு எழுத்தாளன் தன் கருத்தைக் கட்டுரையிலும் சொல்வான் கவிதையிலும் சொல்வான். கருத்துக்களே இங்கு கவனத்துக்குறியன. கவிதையோ கட்டுரையோவல்ல. எழுத்தில் அசிங்கத்தையும் கூறலாம். அழகையும் கூறலாம். ஓர் அறிஞன் புறக்கனிக்கப்படுவதால் அங்கே அறிவு புறக்கனிக்கப்படுகின்றது. விமர்சனங்களால் சில ரசனைகள் நசுக்கப்படுகின்றன. விமர்சிப்பதாய் கூறி சிலர் வஞ்சிக்கின்றனர். ரசனைகள் பசுமையானவை அவற்றை புண்படுத்தாதீர்ககள் பண்படுத்துங்கள். ரசனைகள் சுகந்திரமானவை அவற்றை சிறைப்படுத்தாதீர்கள் சீர்படுத்துங்கள். இதய ஆழத்தில் என்றோ புதையுண்ட பல ரசனைகளாளேயே மாறுகின்றன. உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத மனித ஜடங்களிடம் தம் இதயக்கிடக்கைகளைச் சொல்லி நொந்து போவதை விட இயற்கையை ரசித்து சில உள்ளங்கள் ஆறுதலடைகின்றன. வார்த்தைகளால் தம் உணர்வுகளைக் கூற முடியாத உள்ளங்கள் எழுத்தால் எத்திவைக்கின்றன. ரசனைகளுக்குப்பின்னால் இப்படியும் சில மறைந்து போயுள்ளன

மஹிந்தரின் கோட்டைக்கு பேராபத்து!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இரண்டாக வெடித்து விட்டது என்று தகவல்கள் கசிந்துள்ளன. மஹிந்தர்ஆதரவாளர்கள் அணி, மஹிந்தர் அதிருப்தியாளர்கள் அணி என்று இரு பிரிவுகள் தோற்றம் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஸ எம்.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மஹிந்தர் அதிருப்தியாளர் அணியின் பிதாமகர்கள் என்று கூறப்படுகின்றனர்.

ஐ.தே.கவில் இருந்து ஆளும் கூட்டமைப்புக்கு தாவியவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை கொடுக்க மஹிந்தர் தீர்மானம் எடுத்தமையை அடுத்து கூட்டமைப்புக்குள் பூசல் ஏற்பட்டு இருந்தது.

தற்போது மு.கா அரசுடன் சேர்ந்துள்ள நிலையில் அக்கட்சியை சேர்ந்தவர்களுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதை அடுத்தே உக்கிரமான பிளவு தோன்றி விட்டது என்று அரச வட்டரங்களில் இருந்து தகவல்கள் வெளி ஆகி உள்ளன.

ஜனாஸா அறிவித்தல்

மாவனல்லையைச் சேர்ந்த அல்ஹாஜ் இல்யாஸ் அவர்கள் காலமானார். அன்னார் மர்ஹும்களான உம்மு குல்ஸும், ஸகரீயா தம்பதிகளின் புதல்வியான ஸம்ஸுல் ஹிதாயா அவர்களின் கணவராவர். அன்னார் கஹடோவிடாவை சேர்ந்த அஹமட் முனவர் (இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்), ஜிபிரி, ஹுசைன், மர்ஹும் ஜாபிர், மர்ஹும் ஐன் பாதிமா, நூருல் அமீனா, சித்தி உமைரா, சித்தி கதீஜா (கஹடோவிட) ஆகியோரின் மைத்துன்னும் ஆவர்.


அன்னாரின் ஜனாஸா இன்று (2010.11.13) சனிக்கிழமை இரவு 10.00 மணியளவில் மாவனல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸஹவுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி வைப்பானாக!