கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எமது கிராமம் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.

தொடர்ந்து பேய்திகொண்டிருக்கும் மழையினால் அத்தனகல்ல ஆறு பெருக்கெடுத்துள்ளதனால் கஹடோவிட்ட கிராமத்தின் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. சில வீடுகள், கடைகள், வயல்வெளிகள் நீரில் மூழ்கியிருப்பதுடன் இன்னும் பல இடங்கள் மூழ்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளன.

தொடர்ந்தும் மழைபெய்துகொண்டிருப்பதால் ஆற்றின் நீர்மட்டம் இன்னும் உயரக்கூடிய அபாயம் தென்படுவதால் அப்பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.















 

கே.பி.எல் - இறுதிப் போட்டியில் கமத்தை அணி கிண்ணத்தை சுவீகரிப்பு

புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நடாத்தப்பட்ட கே.பி.எல் கிரிக்கட் சுற்றுப் போட்டியில் 8அணிகள் பங்குபற்றியமை முன்னர் பிரசுரித்திருந்தோம். 3 நாட்களாக நடைபெற்ற இச்சுற்றுப் போட்டியில் கமத்தை அணியும் குரவலான அணியும் இறுதிப் போட்டியில் மோதி  கமத்தை அணி வெற்றி பெற்றது. கடும் மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் சுற்றுப்போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.

Short View of this tournament:

Group stage point table
 
Group A
 Kochivatha riders 6
Kurawalana eagle 4
Wane warriors 2
Athawala alliance 0

Group B
 Kamatha kites 4
Moulanapura royals 4
Sarlanka challenges 2
Main street unaited 2
                   There are 2 teams selected from each group
 
Play off matchs (Semi Final)
  • Kochivatha riders vs Kamatha kites
  • Moulanapura royals vs kurawalana eagle

Final Match:

Kamatha Kites Vs Kurawalana Eagle

Champion:
             Kamatha Kites
 

கஹடோவிட இளைஞர்கள் சமூக சேவைக் களத்தில்

கடந்த 2009 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவா்களின் வகுப்பினால் கஹட்டோவிடப் பிரதேசத்தில் சமூக சேவைப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. முதல் கட்டமாக இவா்கள் கடந்த பெருநாள் தினத்தன்று வசதியற்ற 22 ஏழைகளிற்கு உணவுப் பொதிகள் வழங்கியதாக அறிய முடிகின்றது. அத்துடன் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவா்களிற்கான கருத்தரங்கொன்றையும் இவா்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள். இக்கருத்தரங்கல் 29.10.2012ஆம் திகதியாகிய இன்றைய தினம் விஞ்ஞானப் பாடம் நடைபெறுவதாக அறிய முடிகின்றது. இம்மாணவா்களின் பெற்றார்கள் இவா்களை சிறந்த முறையில் சமூக சேவைப் பணிகளிற்கு ஆா்வமூட்டுவதாக பலர் கருத்துத் தெரிவித்தனர். 
வாலிபர்கள் சிறந்த முறையில் வழிகாட்டப்பட்டால் சமூகத்தில் சிறந்தவா்களாக வரலாம் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாகும். 1993, 1994, 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அன்றிருந்த கல்வி கற்ற வாலிபர்கள் கொழும்பு இலங்கை முஸ்லிம் மாணவா்கள் சம்மேளனத்துடன் இணைந்து இலவச வகுப்புக்களை நடாத்திக் காட்டியது இவ்விடத்தில் ஈன்று குறிப்பிடத்தக்கதாகும். இவா்களின் அன்றைய மகத்தான சேவைகளைப் பொருந்திக் கொண்ட அல்லாஹ் அதில் கல்வி கற்ற மாணவா்களிற்கு பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினையும் வழங்கினான். இது போன்ற மகத்தான பனிகள் எதர்வரும் காலங்களிலும் இடம்பெற வேண்டும் என்பது எமது அவாவாகும். எமது முயற்சிகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

கஹட்டோவிட பிரிமிய லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டி 2012

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கஹட்டோவிடாவில் மாபெரும் கிரிக்கட் சுற்றுப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எட்டு அணிகள் பங்கு பற்றும் இச்சுற்றுப் போட்டி நிகழ்வு 27.10.2012 ஆம் திகதியாகிய நேற்று கமராகல்லை மைதானத்தில் வெகு விமா்சையாக ஆரம்பிக்கப்பட்டது. கஹட்டோவிட பிரிமிய லீக் என பெயரிடப்பட்டுள்ள இச்சுற்றுப்போட்டியின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கஹட்டோவிடாவின் பிரதேசங்களை எட்டாகப் பரித்து எட்டு அணிகள் பங்குபற்றுவதும் குறிப்பிடத்தக்கது. பங்குபற்றும் அணிகளின் பெயர் விபரங்கள் வருமாறு.
 
Moulanapura

Main street

Attawala


Wana

Kamattha

Kurawalana

Sar lanka

Kochiwatha



 



அநுராதபுரம் மஸ்ஜித் தீவைப்பு

அநுராதபுரம் நகரில் மல்வத்து ஒழுங்கையில் அமைந்துள்ள தக்கியா மஸ்ஜித் ஒன்று இன்று அதிகாலை தீமூட்டப்பட்டுள்ளது. ஐம்பது பேர் வரை தொழுகை நிறைவேற்றக் கூடியதாக அமைக்கப்பட்டிருந்த நீண்ட காலமாக இயங்கிவரும் குறித்த -தக்கியா -மஸ்ஜித்தே தீமூட்டப்பட்டுள்ளது.

புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வேளையில் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது. மூட்டப் பட்ட தீயினால் மஸ்ஜித்தின் ‘சீட்’ கூரைகள், (ஐந்து கூரைகள் ) மின்விசிறி ஆகியவற்றுடன் தடுப்பு மறைப்புகளும் எரிந்து அழிந்துள்ளது. இது தொடர்பாக போலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
 
இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபையின் தலைவர் , மற்றும் செயலாளர்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முயன்றபோதும் அவர்களின் கைத்தொலைபேசிகள் தொடர்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாள் சம்பவம் தொடர்பில் ஜம்இயதுல் உலமாவின் நடவடிக்கைகளை அறிய முடியவில்லை .
 
குறித்த பிரதேசத்தில் முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது . நேற்று வெள்ளிக் கிழமை நாட்டின் பல பகுதிகளில் பெளத்த அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் பங்களாதேசில் பெளத்த விகாரை தீ வைத்து எரிக்கப்பட்டமைக்காக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது .

கஹட்டோவிட ஜாமிஉத் தவ்ஹீத் ஏற்பாட்டில் ஈத் பெருநாள் திடல் தொழுகை

கஹட்டோவிட ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் வழமைபோன்று இம்முறையும் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை அல்பத்ரியா ம.வி மைதானத்தில் நடைபெற்றது. கடந்த நோன்புப் பெருநாளைப் விடவும் அதிகமான மக்கள் தொகையினர் கலந்து கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது. பெருநாள் தொழுகையின் பின்னர் மௌலவி முஜாஹித் அவா்களின் உரை இடம் பெற்றது. அவ்வுரையில் அன்பு கருனை இரக்கம் போன்றன அல்லாஹ்வால் வழங்கப்பட்ட அருள்கள் என்றும் அதனைப் பற்றி இறைவன் மறுமையில் விசாரிப்பான் என்றும் கூறினார். மேலும் இப்பெருநாள் தினத்தில் ஏழைகளைக் கவனிக்க வேண்டியதன் அவசியத்தையும் வழியுறுத்திக் கூறினார். இம்முறை சுமார் 1500இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது.







 

கஹட்டாவிட கிளினிக்கின் ஏற்பாட்டில் தாய்மார்களுக்கான உளவள ஆலோசனை நிகழ்ச்சி

கா்பினித் தாய்மார்களுக்கும் ஐந்து வயதுக்குக் குறைந்த பிள்ளைகளையுடைய தாய்மார்களிற்கும் ஓர் உளவள ஆலோசனை வழங்கும் நிகழ்வொன்றை கஹட்டோவிட தாய் சேய் பராமரிப்பு நிலையம் ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சகோதரா் ஹிமாஸ் அவா்களின் பாமஸி அமையப் பெற்றிருக்கும் கட்டிடத்தின்  மேல் மாடி மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக அறியக் கிடைக்கப் பெற்றுள்ளது.  உரிய தாய்மார்கள் இதில் பங்குபற்றி தமது குழந்தை வளா்ப்பு அறிவை விருத்தி செய்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

ஓகொடபொலவில் மினிசூறாவளி

கஹடோவிடா மற்றும் அதற்கு அண்மையிலுள்ள சில கிராமங்களை நெற்று மாலை 4 . 30 மணி முதல் தொடர்ச்சியாக 30 நிமிடங்களுக்கும் மேலாக பெருமழையுடன் கூடிய கடும் கற்று வீசியதனால் ஐந்திற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.


இந்த மினிசூறாவளியினால் ஓகொடபொல கிராமத்தில் முயின் நானா பாமுக்கு அறிகில் ஒரு வீடு கடுமையாக சேதப்பட்டுள்ளதை படங்களில் காணலாம்.
இதேவேளை பிரதேசத்தில் அதிகமான மரங்கள் முறிந்தும் வேறுடன் பிடுங்கப்பட்டும் விழுந்துள்ளன. இதனால் பிரதேசத்தில்; மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. அத்தோடு ஓகொடபொல கஹடொவிட்ட பாதையின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




சவூதியில் உள்ளத்தை உருக்கிய சம்பவம்..............!!

சவூதியில் நடந்த உள்ளத்தை உருக்கும் நிகழ்ச்சியில் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் தன் ஒரே மகனைக் கொன்ற இளைஞனை எவ்வித நிபந்தனையுமின்றி, இறைப் பொருத்தம் வேண்டி மன்னிப்பதாக அன்னையொருவர் கூறியுள்ளார்.

இத்தனைக்கும், ஏழையான அந்தத் தாய் தன்னுடைய மன்னிப்பிற்காக வழங்கப்பட
முன்வந்த பல இலட்சம் ரியால்கள் + சொத்துகளை இரத்தத் தொகையாகப் பெறுவதற்கும் மறுத்துவிட்டா
ர். இது பற்றி கூறப்படுவதாவது:

மர்ஸூகா அல் பிலேவி என்பது அந்தத் தாயின் பெயர். விதவையான அவருக்கு இறந்து விட்ட மகனும், மூன்று மகள்களும் (அவர்களில் ஒருவர் முழுமையாக வாத நோயால் தாக்கப்பட்டுச் செயலற்றவர்), வாதநோயால் பாதிக்கப்பட்ட வயதான தந்தையும் உண்டு. வாழ்வாதாரமாக, மறைந்த கணவர் பெயரில் மாதந்தோறும் அரசு அளிக்கும் ஓய்வூதியம் சுமார் 2000 ரியால்களும் சவூதி சமூகக் காப்பீட்டு நிறுவனம் மாதந்தோறும் அளிக்கும் 1000 சவூதி ரியால்களுமாக இவையே வாழ்வை நகர்த்த உதவும் பொருளாதார ஊன்றுகோல்கள் அவருக்கு. சொந்தத்தில் வீடின்றி இளவரசர் சுல்தான் ஆதரவகம் ஒன்றில் தான் தங்கியுள்ளனர்.

கடந்த இரண்டாண்டுகளுக்கு முன், ஒரு மாலை நேரத்தில், உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக தன் மகனுக்காகக் காத்திருந்தார் மர்ஸூகா. ஆனால், மகன் வராமல், மகன் கொல்லப்பட்ட செய்தியே அவரை அடைந்தது. ஒரே மகனை இழந்துவிட்ட இத்துயரையும் 'இறைவனின் நாட்டம்' என்று எளிதாகவே எடுத்துக்கொண்டார் அந்தத் தாய்.

அதன்பிறகு, கொலையாளி பிடிபட்டுவிட, தண்டனையும் உறுதிபடுத்தப்பட்ட பிறகு, கொலை செய்தவரின் குடும்பத்தினர் மர்ஸுகாவைத் தொடர்பு கொண்டு கொலையாளியை மன்னித்துவிடும்படியும், இரத்தப்பணமாக மில்லியன் கணக்கில் சொத்துகளும் பணமும் தருவதாகவும் கெஞ்சினர். கொலை செய்த இளைஞரின் தகப்பனார் பன்முறை கெஞ்சிப் பார்த்தும் தன் ஒரேமகனை பறிகொடுத்த அன்னைக்கு மன்னிக்க மனம் வரவில்லை. சுமார் 20 இலட்சம் ரியால்கள் (இந்திய ரூபாயில் இரண்டரை கோடி) மற்றும் சொத்துகளும் இறந்த மகனுக்கு ஈடாகாது என்றே அவர் எண்ணினார்.

இந்நிலையில், எதிர்பாராத ஒரு நாளில் நீதிமன்றம் சென்ற மர்ஸூகா தன் மகனைக் கொன்றவனைக் காண விரும்புவதாகக் கூறினார். அங்கே, அந்த இளைஞனைக் கண்டவருக்கு தன் மகனின் நினைவு வந்திருக்க வேண்டும், "உன் பணமோ, சொத்துகளோ வேண்டாம், அவை பெரிதில்லை, அல்லாஹ்வுக்காக உன்னை எந்த நிபந்தனையுமில்லாமல் மன்னிக்கிறேன்" என்றார் மர்ஸூகா. இதைக் கேட்ட அனைவருக்கும் ஆனந்த ஆச்சரியம். மர்ஸூகாவின் மன்னிப்பு உடனடியாக நீதிபதி முன்னிலையில் ஆவணப்படுத்தப்பட்டது.

நிபந்தனையற்ற மன்னிப்பைப் பெற்ற அந்த இளைஞனுக்கு சொல்ல முடியாத பெரும் ஆச்சரியம். நன்றி சொல்லவும் நா எழவில்லை. நிபந்தனையற்று தன்னை மன்னித்து இறையருளுக்குப் பாத்திரமான அந்தத் தாயை தானும் இப்போதுமுதல் தாயாக ஏற்பதாகவும், அவருடைய வாழ்நாள் முழுதும் அவருக்குப் பணிவிடை செய்ய விரும்புவதாகவும் இதுவே தான் செலுத்தக்கூடிய பிரதியுபகாரமாக இருக்கும் " என்றும் அந்த இளைஞன் கூறியுள்ளார்.

சவூதியின் தபூக் மாகாணத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், பணத்தைப் பெரிதாகக் கருதாத அந்த மனிதாபிமான தாயை சவூதி ஊடகங்களும், மக்களும் மிகவும் பாராட்டினர்

கஹட்டோவிடாவில் இம்முறையும் கூட்டுக் குர்பானி

கடந்த வருடங்களைப் போல் இம்முறையும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் கூட்டாக குர்பானி கொடுப்பதற்கான ஏற்பாடுகளை கஹட்டோவிட பள்ளிவாசல்கள் ஏற்பாடு செய்துள்ளது. இந்த வகையில் முஹியத்தீன் பள்ளிவாசலும் மஸ்ஜிதுன் நுர் பள்ளி வாசலும் இணைந்து கூட்டாகக் குர்பானி கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. வழமைபோல் தஃவாப் பள்ளிவாசலிலும் கூட்டுக்குர்பானி கொடுக்க சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அறியக் கிடைக்கப் பெற்றுள்ளது. இக் கூட்டுக் குர்பானியினால் முன்னர் போலன்றி சகலருக்கும் குர்பான் இறைச்சி கிடைப்பதுடன் வசதியற்றவா்களும் 7 நபர்கள் சோ்ந்து குா்பான் கொடுக்கும் வாய்ப்பும் கிட்டியுள்ளதாக பலரும் மகிழ்ச்சிகளைத் தெரிவித்துள்ளனர்.

கஹடோவிட ஸாவியா வீதி புணரமைப்பு

 
 
கஹட்டோவிட பிரதான சந்தியிலிருந்து ஸாவியா நோக்கி வரும் பாதை  திருத்தற் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் நா ஸர் அவா்களின் வேண்டுகோளிற்கிணங்க அமைச்சா் ஸரன குணவா்தன அவா்களின் நிதி ஒதுக்கீட்டில் இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பல வருடங்களாக திருத்தப்படாமல் இருந்த இப்பாதை திருத்தப்படுவதுடன் அகலமாக்கும் பணிகளும் நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாதையின் புதிய அமைப்பு வாகனப் போக்குவரத்துக்கு மிகவும் சிறந்ததாக இருப்பதாக ஊா்மக்கள் திருப்திப் பட்டுள்ளதுடன் இம்முயற்சியை மேற்கொண்ட அனைவருக்கும் அவா்கள் தமது நன்றியைத் தெரிவிக்கின்றனர்.

ஊா் முன்னேற்றத்தில் பிரதேச சபை உறுப்பினர் நஜீம் நாநாவின் முயற்சிகள்



கடந்த பிரதேச சபைத் தோ்தலில் ஐ.தே.கட்சி சார்பாகப் போட்டியிட்டு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட சகோதரர் ஏழைகளின் தோழன் நஜீம் நாநா ஊா்முன்னேற்றத்தில் அக்கரையுடன் ஈடுபடுவதாக அறியக் கிடைக்கின்றது. கடந்த 01.10.2012ஆம் திகதி நஜீம் நாநாவின் வேண்டுகோளுக்கிணங்க அசித்த மானப் பெருமாவின் ஒன்றரை இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 115அடி நீளமும் 9அடி அகலமும் உள்ள பெண்பாடசாலைக்கு அருகில் உள்ள குறுக்குப்பாதை புணா் நிர்மானம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உறுப்பினா்களான சுனில் சாந்த, அமரலங்கா தென்னகோன், ஜனாப் அஷ்ரப், எம்.ஏ.எம் நஜீப்தீன், மஹர தேர்தல் தொகுதியின் ஐ.தே.கட்சியின் பிரதான அமைப்பாளர் துஷார ஹேமசந்திர ஆகியோர் பங்கேற்றனா்.மேலும் அன்றைய தினம் சா்வதேச சிறுவா்கள் தினம் என்பதை முன்னிட்டு உறுப்பினர் அசித மானப்பெரும தனது சொந்தப் பணத்தில் ஓகடபொளையிலுல்ல அல்தீன் பாலர் பாடசாலைக்கும் கஹட்டோவிட இல்மா பாலர் பாடசாலைக்கும் 22 கதிரைகளை வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது. 

எமது ஊர்பாடசாலைகளில் 12 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி



இம்முறை வெளியான ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் கம்பஹா மாவட்டத்தில் கஹடோவிட அல்பத்ரியா ம.வி மாணவன் 187 புள்ளிகளை ஏடுத்து தமிழ் மொழி மூலத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். அதேவேளை கஹடோவிட பாலிகா மகளிர் பாடசாலையில் அதிகூடியபுள்ளியாக 185 புள்ளி  மாணவி ஒருவராலும் பெறப்பட்டுள்ளது

கடந்த காலங்களை விட இம்முறை எமது ஊரில் கூடுதலான மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். அல்பத்ரியா ம.வி இல் 5 மாணவா்களும், பாலிகா மகளிர் பாடசாலையில் 7 மாணவிகளும் சித்தியடைந்துள்ளார்கள். கம்பஹா மாவட்ட கல்வி வலயத்தில் முதல் இடத்தை பெற்று எமது ஊர் பாடசாலைக்கு பெருமை சேர்த்த  மாணவன் மருத்துவ பரிசோதகர் சகோதரர் சில்மி அவர்களின் செலவப் புதல்வர் ஆவர்.

தம்புள்ளைப் பள்ளிவாசல் தொடர்பாக மீண்டும் ஓர் அதிர்ச்சித் தகவல்– ஜமாஅத்தே இஸ்லாமி

தம்புள்ளைப் பள்ளிவாசல் அரசின் வாக்குறுதிப்படி பாதுகாக்கப்படு மென்றிருந்த நிலையில் மீண்டும் ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிவாசலைச் சுற்றியுள்ள 65 கட்டிடங்களை அகற்றுமாறு நகர அதிகார சபை அனுப்பிய கடிதம் மீண்டும் முஸ்லிம் சமூகத்தில் கவலையையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது என இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஊடகப் பேச்சாளர் எம்.எச்.எம். ஹஸன் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் முஸ்லிம் அமைப்புக்கள், இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் பிரமுகர்கள், தனிமனிதர்கள் என்று பலரும் காத்திரமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தனர். முஸ்லிம்களின் மத உணர்வுகளைக் காயப்படுத்தும் சம்பவமாக அதனை அரசாங்கமும் உணர்ந்திருப்பதாகச் செய்திகளும் வெளிவந்தன. இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரமுகர்கள் ஜனாதிபதி அவர்களைச் சந்தித்து முஸ்லிம்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
 
ஜெனீவாவில் இலங்கைக்குச் சார்பாக அறபு முஸ்லிம் நாடுகளை ஆர்வங் கொள்ளச் செய்யும் முயற்சியில் ஜம்இய்யத்துல் உலமாத் தலைவர்கள் ஈடுபட்ட சந்தர்ப்பத்திலும் இந்த விடயம் ஊடகங்களில் பேசப்பட்டன. அந்த வகையில் தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பான முழுப் பொறுப்பும் இப்போது அரசாங்கத்திடமேயுண்டு.
 
நபிகள் நாயகத்துக்கு எதிரான திரைப்படத்துக்கான எதிர் விளைவுகளைக் காட்டிய முஸ்லிம்களின் முன்னெடுப்புக்களின்போதும் முஸ்லிம்கள் சமய விவகாரங்களின்போது எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை அரசாங்கம் மீண்டும் ஒருமுறை கண்டு கொண்டது. பள்ளிவாசல் அகற்றப்பட மாட்டாது என்று அரசாங்கம் வாக்களித்திருப்பதாகவே பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் தலைவர்களும், ஜம்இய்யத்துல் உலமாத் தலைவர்களும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு உறுதி வழங்கியுள்ளனர். கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் ஆயுதமாக தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் முன்னெடுக்கப்பட்டபோது கூட அரசாங்கம் முஸ்லிம்களுக்குச் சாதகமான பதிலையே கூறி வந்ததது.
 
இந்நிலையில் தம்புள்ளை நகரில் உள்ள 65 வீடுகளை ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கிடையில் அகற்ற வேண்டும் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும் மாத்தளைப் பிராந்திய முகாமையாளரும் ஒப்பமிடப்பட்ட கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 12 முஸ்லிம் வீடுகளும் அடங்கும். பள்ளிவாசலுக்கு இத்தகைய ஒரு கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை. பாதுகாப்புச் செயலாளர் பள்ளிவாசலுக்கு ஆபத்தில்லை என்று கூறியிருப்பதாக அரசாங்கத்தின் முக்கிய ஆதரவாளரான சிரேஷ்ட சட்டத்தரணி கூறியிருந்தாலும் அனுப்பப்பட்டுள்ள கடிதங்கள் பாரதூரமானவை என்றே நம்பப்படுகிறது.
 
மீண்டும் ஆர்ப்பாட்டங்கள், வீதி மறியல்கள் என்றில்லாமல் முஸ்லிம் புத்திஜீவிகள், அரசியல், சமூகத் தலைவர்கள் அரசின் உயர் பீடத்தைச் சந்தித்து உத்தியோகபூர்வமான உறுதிப்பாட்டை பெற்றுக் கொள்ள ஆவன செய்ய வேண்டும். அதன் பின்னரே அடுத்த கட்டம் பற்றி யோசிக்க முடியும். இப்பணி அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.