கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹடோவிட இளைஞர்கள் சமூக சேவைக் களத்தில்

கடந்த 2009 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவா்களின் வகுப்பினால் கஹட்டோவிடப் பிரதேசத்தில் சமூக சேவைப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. முதல் கட்டமாக இவா்கள் கடந்த பெருநாள் தினத்தன்று வசதியற்ற 22 ஏழைகளிற்கு உணவுப் பொதிகள் வழங்கியதாக அறிய முடிகின்றது. அத்துடன் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவா்களிற்கான கருத்தரங்கொன்றையும் இவா்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள். இக்கருத்தரங்கல் 29.10.2012ஆம் திகதியாகிய இன்றைய தினம் விஞ்ஞானப் பாடம் நடைபெறுவதாக அறிய முடிகின்றது. இம்மாணவா்களின் பெற்றார்கள் இவா்களை சிறந்த முறையில் சமூக சேவைப் பணிகளிற்கு ஆா்வமூட்டுவதாக பலர் கருத்துத் தெரிவித்தனர். 
வாலிபர்கள் சிறந்த முறையில் வழிகாட்டப்பட்டால் சமூகத்தில் சிறந்தவா்களாக வரலாம் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாகும். 1993, 1994, 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அன்றிருந்த கல்வி கற்ற வாலிபர்கள் கொழும்பு இலங்கை முஸ்லிம் மாணவா்கள் சம்மேளனத்துடன் இணைந்து இலவச வகுப்புக்களை நடாத்திக் காட்டியது இவ்விடத்தில் ஈன்று குறிப்பிடத்தக்கதாகும். இவா்களின் அன்றைய மகத்தான சேவைகளைப் பொருந்திக் கொண்ட அல்லாஹ் அதில் கல்வி கற்ற மாணவா்களிற்கு பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினையும் வழங்கினான். இது போன்ற மகத்தான பனிகள் எதர்வரும் காலங்களிலும் இடம்பெற வேண்டும் என்பது எமது அவாவாகும். எமது முயற்சிகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

4 comments:

Anonymous said...

dear admin,
pls i thnk they r 2009 o/l batch!! not 2010!!
plz cheack it!

Anonymous said...

its 2009 o/l batch!!!!!

Anonymous said...

that is 2009 O/L batch not 2010,,,,,pls chek it and change....

ஒருவன் said...

எமது ஊரைச் சேர்ந்த வெப் ஸைட்டுகள் பத்ரியாவ மட்டும் விமர்சிக்கும் போக்குக் கொண்டது. அவற்றைப்பார்க்கின்ற போதே புரிந்து கொள்ள லாம். பாலிகாவிலும் அப்பப்போது மிஷ்டேக் நடக்கத்தான் செய்கிறது. ஆனால் சுட்டிக்காட்ட எவரும் முன்வருவதில்லை.

புதிசாக வந்த அதிபரின் முரட்டுத்தனங்களை யாருமே பேசுவதில்லை. பேரன்ஸோடு நடந்து கொள்ர முறை ஆக மொசம். இது இப்படி இருக்க ட்ரான்ஸர் கிடைத்துள்ள டீச்சர்மாரை போவதற்கு முந்தியே பிரியாவிடை கொடுக்கப் பாக்குறாராம் புதிய அதிபர். அவவுக்கு போட்டியாக உள்ள ஒரு சிலரை வைத்துக்கொள்ளௌம் திட்டம் இல்லை. பாலிகாவைக் கட்டிக்காத்த ஒரு ஆசிரியையை விரட்டியடிக்க தீவிர முயற்சி எடுக்கிறராம். இப்படியெல்லாம் நடப்பதாக பேசிக்கொண்டாங்க.

Post a Comment