கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

குவைத் மாணவர் தொழிலாளர் சங்கத்தின் புலமைப் பரிசில்

கஹடோவிடாவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவருக்கு கல்வியைத் தொடர்வதற்காக உதவிப் பணமாக மாதாந்தம் ஒரு தொகையை வழங்க குவைத் மாணவர் தொழிலாளர் சங்கம் முன்வந்துள்ளது. இவர்களின் இம்முயற்சி கல்வி கற்கின்ற ஏனைய மாணவர்களுக்கும் ஒரு உற்சாகப்படுத்தலாக உள்ளதோடு எமதூரிலுள்ள வரிய மாணவர்களின் கல்விக்கான ஒரு உந்துசக்தியாக இருப்பதாகவும் பலர் கருத்துத் தெரிவித்தனர். இவர்களின் இம்முயற்சி விரிவுபடுத்தப்பட்டு இன்னும் அதிகமான மாணவர்கள் இதனுள் உள்வாங்கப்பட வேண்டுமென்பது அனேகரின் எதிர்;பார்க்கையாகும். எமது ஊரின் வசதிபடைத்தவர்கள், புத்திஜீவிகள், இயக்கங்கள், ஏனைய சமூகசேவை அமைப்புக்கள் இவர்களின் இம்முயட்சிக்கு அதரவு நல்குவது தொடர்ந்து இவர்களால் இதுபோன்ற சேவைகள் முன்னேடுக்கப்பட வழிகோளும்.

மேலும் தற்போது கஹட்டோவிடாவில் இயங்கிவரும் தபால் நிலையக் கட்டிடம் இம்மாணவர் ஒன்றியத்தின் முயற்சியின் விளைவாக கட்டிக் கொடுக்கப்பட்டது என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.

அல்லாஹ் இவர்களின் முயற்சிகளைப் பொருந்திக் கொள்வானாக! உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை கீழே குறிப்பிடுவதன் மூலம் இவர்களின் முயற்சிக்கு ஆதரவு நல்குங்கள்.

இறுதி முடிவுகளை நிராகரிக்கின்றோம்; ஆணையாளருக்கு என்ன நடந்தது? : ரணில்


தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் தினத்தன்று தேர்தல்கள் ஆணையாளருக்கு நடந்தது என்ன? அவர் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாரா? என்பது குறித்து நாம் ஆராய்ந்து வருகிறோம். அன்றைய தினம் இறுதி முடிவுகளை அறிவித்த போது அவரது பேச்சுக்கள் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த சந்தர்ப்பத்தில் அவர் இயலாமை நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார் என்பது தெளிவாகியது. எவ்வாறாயினும் நடந்து முடிந்த தேர்தலைப் பொறுத்தவரையில் அதன் இறுதி முடிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவற்றை நாம் நிராகரிக்கின்றோம்" என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும், எதிர்க்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இராணுவப் படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரது சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் குந்தகம் விளைவித்துக் கொண்டிருக்கின்றது. இது சரியானதல்ல. எனவே, அவரது சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.கேம்பிரிஜ் டெரஸில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இங்கு மேலும் கூறுகையில், கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது காலை 7.00 மணியிலிருந்து மாலை 4.00 மணிவரையிலான காலப்பகுதியில் நாட்டின் சில பகுதிகளில் வன்முறைகள் இடம்பெற்ற போதிலும் அநேகமான இடங்களில் நீதியான தேர்தல்கள் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது. ஆனாலும் அன்றையதினம் 4.00 மணியின் பின்னர் வாக்குகள் எண்ணும் அநேகமான நிலையங்களில் சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அரசாங்கத்தின் அமைச்சர்களும் வன்முறையாளர்களும் வாக்குகள் எண்ணப்படுகின்ற நிலையங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு கண்காணிப்புபணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளைப் பலவந்தமாக வெளியேற்றிவிட்டு அவர்கள் தமக்கு தேவையான வகையில் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்ததாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.தேர்தல் முடிவுகளை அறிவிக்கின்ற சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட வாக்கு கணக்கெடுப்பு நிலையங்களுக்குள் அரசாங்கத்தின் அதிகாரிகள் தவிர்ந்த ஏனையோர் அங்கு செல்வதற்கே இடமளிக்கப்படவில்லை. இவ்வாறான அசாதாரண நடவடிக்கைகளை ஆராய்ந்து தகவல் திரட்டுவதற்கென நாம் குழு ஒன்றை அமைத்திருக்கின்றோம்.இதே சந்தர்ப்பத்தில், அநேகமான வாக்கு கணக்கெடுப்பு நிலையங்களுள் செல்வதற்கு தமது அதிகாரிகளுக்கு கூட சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை என்றும் அதேநேரம் சரியான முடிவுகளை வெளியிடுவது தொடர்பில் தம்மால் இயலாமை ஏற்பட்டிருந்ததையும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தனது இறுதிமுடிவை அறிவிக்கும்போது தெரிவித்திருந்தார். ஜனாதிபதி உட்பட தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் சமூகமளித்திருந்த சந்தர்ப்பத்திலேயே ஆணையாளர் இதனை தெரிவித்திருந்தார். மேலும் இதுவரை காலம் இல்லாதவாறே தேர்தல்கள் ஆணையாளர் கடந்த 27ஆம் திகதி தனது உரையை நிகழ்த்தியிருந்தார் என்பதையும் இன்று குறிப்பிட்டு கூற விரும்புகிறேன். அவரது கூற்றுக்களின் அடிப்படையில் முடிவுகளில் ஏதோ ஓர் உள்ளார்ந்த ரகசியம் ஒளிந்து கிடப்பதாகவே தென்படுகின்றது. அவர் ஏதோ ஒரு சஞ்சலத்துக்கு ஆட்பட்டிருந்தார் என்பதையும் அவரது பேச்சுக்கள் தெளிவாக எடுத்துக்காட்டின. அதேபோல் எதிர்பார்த்த அளவில் தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார். தேர்தல் ஆணையாளருக்கு நடந்தது என்ன? அன்றைய தினம் இரவு அவர் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாரா? இல்லாவிட்டால் அதற்கு முன்னராவது இவ்வாறானதொரு நிலைமைக்குத் தள்ளப்பட்டாரா? ஆணையாளரின் அறிவுறுத்தல்கள் கடைப்பிடிக்கப்பட்டனவா? இவற்றையெல்லாம் நோக்கும்போது அவர் அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருந்தார் என்பதை எம்மால் விளங்கிக்கொள்ள முடிந்தது. இந்த மாதிரியான பயங்கரமானதொரு சூழலில்தான் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதை நாம் வலியுறுத்தி வருகின்றோம். தேர்தல்கள் ஆணையாளரை அச்சுறுத்தும் அளவுக்குச் செல்லும் பாரதூரமான நடவடிக்கைகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவேதான் இதனை முற்றாக நிராகரிப்பதென எமது கட்சி தீர்மானித்திருக்கிறது. இது தொடர்பில் நாம் ஏனைய கட்சிகளுடனும் கலந்து ஆலோசித்து வருகின்றோம். அதேபோல் எமது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதையும் நாம் நாட்டுக்குத் தெளிவுபடுத்துவோம்.அதேவேளை, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட ஜெனரல் சரத்பொன்சேகா மீது திட்டமிடப்பட்ட வகையில் சூழ்ச்சிகரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரது சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றது. எனவே ஐக்கிய தேசிய முன்னணி என்ற வகையில் ஜெனரல் பொன்சேகாவின் சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்க வேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கின்றோம். அவருக்குச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அச்சுறுத்தல் ஊடாகவோ அடக்கு முறைகளின் ஊடாகவோ அவர் இன்னல்களுக்கு உட்படுத்தப்பட முடியாது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.தேர்தலின் பின்னர் மோசமான நிலைமை எந்தவொரு தேர்தலின் பின்னரும் நாட்டு மக்கள் அனைவரும் ஐக்கியப்பட்டு சகோரத்துவத்துடன் செயற்பட வேண்டும் என்பதையே விரும்புவர். எனினும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அது ஏற்பட்டிருக்கவில்லை. தற்போது கிடைக்கப் பெற்று வருகின்ற தகவல்களின் அடிப்படையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள், தாக்குதல்கள் சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசாங்க ஆதரவாளர்கள் மாற்று தரப்பினரின் வீடுகளைத் தாக்கிக் குழப்பத்தை விளைத்துள்ளனர். சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனர். தேர்தல் தினத்தில் பாதுகாப்பினை உறுதிப்படுத்தியிருந்த பாதுகாப்பு தரப்பினருக்கு இன்று அதனை உறுதிப்படுத்த முடியாதிருக்கின்றது.தேர்தலின் பின்னர் சமாதான சூழல் ஏற்பட வேண்டுமென்றும் அதற்காக யாவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி கூறியிருந்தார். அவரது கருத்தும் இன்று அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இராணுவத்தினரைக் கொண்டு ஹோட்டல்களைச் சுற்றிவளைக்க முடியுமானால், ஏன் கிராமப் புறங்களில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பினைப் பெற்றுக்கொடுக்க முடியாது? ஏன் அவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை? தேர்தல் முடிவுகளுக்கு மக்கள் இயைந்துள்ளனரா? தனிப்பட்ட நபர்கள், குடும்பத்தினர் மற்றும் சுற்றுச்சூழலில் உள்ளவர்கள் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனரா? அல்லது கருத்து வெளியிட்டுள்ளனரா? இதுதான் இன்று மக்களிடையே எழுந்துள்ள அடிப்படைப்பிரச்சினையாகும்.ஜனநாயகம் தோற்கடிக்கப்படக் கூடாது இந்தக் காரணிகள் அனைத்தும் ஐக்கிய தேசிய முன்னணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. எந்தவொரு தேர்தலிலும் ஒரு தரப்பினரே வெற்றிகொள்ள முடியும். மாற்றுத் தரப்பு தோல்வியடைய வேண்டும். எனினும் எந்தச் சந்தர்ப்பத்தலும் ஜனநாயகம் தோல்வியடைந்துவிடக் கூடாது. ஜனநாயகம் தோற்கடிக்கப்படுமானால் மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமை பறிக்கப்படுவதற்கு ஒப்பானதாகும். தான்விரும்பும் கட்சியை, தான்விரும்பும் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாதவாறு அந்த உரிமை பறிக்கப்படுகின்றது. தேர்தலில் வாக்களிக்கத்தவர்கள் பிரச்சினைகளுக்கும் வன்முறைகளுக்கும் முகம் கொடுப்பார்களேயானால் அதுவும் ஜனநாயக அடக்குமுறையாகும். அதனால்தான் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு நாம் எம்மை அர்ப்பணித்திருக்கிறோம். எனவே, ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் கட்சி பேதமற்ற வகையில் அனைவரினதும் ஆதரவும் எமக்குக் கிடைக்க வேண்டும்." இவ்வாறு அவர் அவர் கூறினார்.

தமக்கு எதிரான துன்புறுத்தல்களை நிறுத்தாவிடின் உயிரை பணயம் வைத்து அரசாங்கத்தின் இரகசியங்களை வெளியிடப்போகிறேன்: சரத் பொன்சேகா எச்சரிக்கை



தமக்கு எதிரான துன்புறுத்தல்களை அரசாங்கம் நிறுத்தாவிடின், தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை. அரசாங்கத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தப் போவதாக முன்னாள் இராணுவ தளபதியும், கடந்த ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளருமான சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தம்மை துன்புறுத்தும் அரசாங்க அதிகாரிகள் மேற்கொண்ட ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தம்மிடம் ஆவணங்கள் இருந்ததாகவும், எனவேதான் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
தம்மை பயமுறுத்துவோர் தேர்தலின் போது மேற்கொண்ட முறைகேடுகள் தொடர்பான சாட்சியங்கள் தம்மிடம் உள்ளதாக தெரிவித்த அவர், தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் அதனை மக்களுக்கு தெரியப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.
தமது அலுவலகத்தில் தேடுதல் நடத்துவது, பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை, நெருங்கிய அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டமை போன்ற செயல்களில் இறுதியாக தம்மை படுகொலை செய்வதற்கே அரசாங்கம் தயாராகி வருவதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு பாதுகாப்பளித்த 90 படைவீரர்களுக்கு பதிலாக தற்போது 4 பொலிஸ்காரர்கள் கைத்துப்பாக்கிகளுடன் மாத்திரம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படைகளில் இருந்து சட்டரீதியாக வெளியேறிய 3 ஜெனரல்கள், 3 பிரிகேடியர்கள், மற்றும் 2 கேணல்கள் தமக்கு ஆதரவளித்ததாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் சண்டேலீடர் செய்திதாளின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் சமபந்தப்பட்டவர்கள் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது பொய்யான தகவலாகும். நேற்று மாத்திரம் தமது அலுவலகத்தில் இருந்த 20 பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் 23 கணணிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை யாவும் நீதிமன்ற ஆணையின்றியே இடம்பெற்றுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சட்டம் ஒழுங்கு அனைத்தும் உடைந்துபோய் உள்ளது. யாரும் பொலிஸிற்கோ நீதிமன்றத்திற்கோ செல்லமுடியாது. எந்த நேரத்திலும் யாரும் கைதுசெய்யப்படலாம். இந்தநிலையில் நாட்டில் அனைவரும் தமது பணிகளை உரியமுறையில் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தான் ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை எனக்குறிப்பிட்ட அவர், தமது உயிரை பாதுகாப்பதற்காக மறைந்து வாழவேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தானும் தமது குடும்பத்தினரும் ( மனைவி வெளிநாட்டில் படிக்கும் இரண்டு மகள்மார்) நாட்டில் இருந்து வெளியேற முடியாதவாறு விமானநிலையத்தில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தாம் தமது பாதுகாப்புக்காகவே சினமன் லேக்சைட் ஹோட்டலில் 20 அறைகளை வாடகைக்கு அமர்த்தி தங்கியிருந்ததாக கூறிய அவர், இதன் போது அரசாங்கம் தன்னையோ அல்லது எதிர்க்கட்சி தலைவரையோ கொலை செய்ய திட்டமிடுவதாக செய்தி தனக்கு கிடைத்ததாக குறிப்பிட்டார்.
எனினும் இதனை மறைப்பதற்காகவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கொலை செய்ய தாம் திட்டமிட்டதான செய்தியை அரசாங்கம் பரப்பிவிட்டது என சரத் பொன்சேகா

தேர்தல் தினத்தன்று இரவு தேர்தல் ஆணையாளருக்கு என்ன நடந்தது?


தேர்தல் முடிவுகளை வெளியிட்டு உரையாற்றிய தேர்தல் ஆணையாளரின் கருத்துக்கள் மூலம் அவர் ஏதேனும் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கலாம் எனத் தெரியவருகிறது. இந்த நிலைமையானது ஜனநாயகம் தொடர்பான மிகவும் பயங்கரமானதும் ஆபத்தான துமான ஒன்றாகும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் அவர் கூறியவை வருமாறு:-
தேர்தல் ஆணையாளரின் உரையின் மூலம் அவர் எதிர்பார்த்தவாறு அரசதலைவர் தேர்தல் பணிகளை முன்னெடுக்க முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது. உண்மையில் அவருக்கு என்ன நேர்ந்தது?. தேர்தல் நடைபெற்ற தினத்தன்று இரவு தேர்தல் ஆணையாளர் ஏதேனும் அழுத்தங்களை எதிர்நோக்கினாரா?. அல்லது அதற்கு முன்னர் அழுத்தங்களுக்கு அடிபணிந்தாரா? அச்சுறுத்தலை எதிர்நோக்கினாரா?
தேர்தல் ஆணையாளர் இதற்கு முன்னர் தேர்தல்கள் முடிவுற்ற பின்னர் வெளியிட்ட கருத்துக்களுக்கும் அவர் தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கும் முற்றும் முழுதான வேறுபாடு உள்ளது. தேர்தல் ஆணையாளரின் உரையின் மூலம் ஏதேனும் மர்மம் ஏற்பட்டுள்ளதை காணமுடிகிறது. ஏதாவது சம்பவமொன்று நேர்ந்தால் அதனைத் தனியாக தானே அனுபவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் இந்த நிலைமை குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். இது குறித்து ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானமொன்றை எடுத்துள்ளது. ஏனைய கட்சிகளுடன் இது பற்றி கலந்துரையாடி வருகிறோம்.
சரத் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள்
அதேவேளை, பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. அவர் சுதந்திரமாகப் பணியாற்ற சந்தர்ப்பமளிக்கப்பட வேண்டும். அவருக்கு ஏற்படுத்தப்படும் அழுத்தங்கள், இடையூறுகளில் இருந்த அவரை விடுவிக்க வேண்டும். எந்ததொரு தேர்தலின் பின்னரும் அனைத்து தரப்பினரும் மீண்டும் கூடி ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
எனினும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அவ்வாறான நிலைமை ஏற்படவில்லை. நாடு முழுவதும் வன்முறை பரவி வருகிறது. அரசின் வன்முறையாளர்கள் பல்வேறு வகையில் தமது எதிர்வாதிகளை பழிவாங்கி வருகின்றனர்.
தேர்தல் தினத்தில் அமைதியைப் பேணிய பொலிஸரால் தற்போது அமைதியை பேண முடியாதுள்ளது. தேர்தலின் பின்னர் அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் சகலரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்த போதிலும் அவ்வாறான நிலைமையை ஏற்படுத்துவதற்கான முனைப்புகளை அரசு மேற்கொள்ளவில்லை. அரசு இராணுவத்தினரைப் பயன்படுத்தி கொழும்பில் விடுதியை சுற்றிவளைக்க முடியுமானால் சாதாரண மக்களைப் பாதுகாக்க ஏன் நடவடிக்கை எடுக்க முடியாது?
எந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஒரு வேட்பாளர் வெற்றிப் பெற்று ஏனைய வேட்பாளர்கள் தோல்வியடைவார்கள். எனினும் ஒருபோதும் ஜனநாயகம் தோற்பதற்கோ, தோற்கடிக்கப்படவோ இடமளிக்க முடியாது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க சகல சட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். ஜனநாயகம் தோல்வியடைவதென்பது மக்களின் அடிப்படை உரிமை மற்றும் வாக்குரிமை இல்லாமல் செய்யப்படுவதாகும். தேர்தலில் வாக்குகளைப் பயன்படுத்தி மக்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது ஜனநாயகத்தை மீறுவதாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக சகல அரசியல் கட்சிகளும் பேதமின்றி இந்தச் சந்தர்ப்பத்தில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குமாறு மக்கள் கேட்டுக்கொண்டனர். அதனடிப்படையில் ஐக்கிய தேசிய முன்னணி அவருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தது. அவருக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றிக் கூறுகிறோம். அதேபோல் தேர்தலில் உரிய முறையில் பணியாற்றி பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.
தேர்தல் தினத்தன்று காலை 7 முதல் மாலை 4 மணிவரை வன்முறைகள் இன்றி அமைதியாகத் தேர்தல் நடைபெற்றது. எனினும் அன்றைய தினம் இரவு வாக்கு எண்ணும் மையங்களுக்குள் தமது வன்முறை குழுக்களுடன் பிரவேசித்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கு எண்ணும் பணிகளைப் பார்வையிடச் சென்ற பலரை விரட்டியடித்தனர்.
தமது கட்சியின் ஆதரவாளர்களை தவிர ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்களை வாக்கு எண்ணும் நடவடிக்கைகளை பார்வையிட அனுமதிக்கவில்லை. இது சம்பந்தமாக விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஆளும் தரப்பினர் சிலர் வாக்கு எணணும் மையங்களில் கணக்கெடுப்பை அவதானித்துக் கொண்டிருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர். மேலும் தமது அதிகாரிகளைக் கூட பாதுகாத்து கொள்ள முடியாமல் போனது என ஆணையாளர் தமது அறிக்கையில் கூறியுள்ளார் என்றார் ரணில்.

-பாரிஸ்தமிழ்

ஈராக் யுத்தம் குறித்த விசாரணையில் டோனி பிளேயர் சாட்சியம்


ஈராக் யுத்தம் தொடர்பான விசாரணையில் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் சாட்சியம் வழங்கியுள்ளார். ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் தொடரும் ஒரு அச்சுறுத்தலாக மாறிவந்தார். ஆதலால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரிட்டனும் அமெரிக்காவும் தயாராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று டோனி பிளேர் கூறியுள்ளார். சதாம் உசைன் தொடர்பான பிரிட்டனின் நிலைப்பாடு, 11 செப்டம்பர் 2001 அன்று அமெரிக்கா மீது அல்-கொய்தா தாக்குதல் என்பவற்றையடுத்து பெரிதும் மாறிவிட்டிருந்தது என பிளேர் குறிப்பிட்டார். பேரழிவு ஆயுதங்களை உருவாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு எம்க்கு உள்ளது. இல்லாவிட்டால் இவ்வகையான ஆயுதங்கள் பயங்கரவாதக் குழுக்களின் கைகளில் சென்று சேர்ந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலில் பெண் நீதிபதி மீது 'ஷூ' வீச்சு


இஸ்ரேல் நாட்டில் ஜெருசலேம் நகரில் சுப்ரீம் கோர்ட்டு உள்ளது. இங்கு பெண் தலைமை நீதிபதியாக இருப்பவர் டோரிட் பெனிஸ்க். நேற்று காலை 11.30 மணி அளவில் இவர் கோர்ட்டில் ஒரு பெண்ணிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு உட்கார்ந்து இருந்த ஒரு நபர் திடீரென தான் அணிந்திருந்த 2 'ஷூ' க்களை நீதிபதி பெனிஸ்க் மீது வீசினார்.
அதில் ஒன்று அவரது முகத்தில்பட்டது. எனவே, அவரது மூக்குகண்ணாடி கீழே விழுந்து உடைந்தது. 'ஷூ' பட்டதில், நீதிபதியின் முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது. உடனே, அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நீதிபதி பெனிஸ்க் மீது 'ஷூ' வீசிய நபர் மடக்கி பிடிக்கப்பட்டார். போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர் கைது செய்யப்பட்டார்.
அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் பினிகொஹன் (52) என்று தெரிய வந்தது. “ஷூ” வீசும்போது கொஹன் ஆவேசத்துடன் கூச்சலிட்டார்.
அப்போது, நீங்களும், குடும்ப கோர்ட்டு நீதிபதி பிலிப் மார்கசும் ஊழல் பேர்வழிகள் நீங்கள் இருவரும் சேர்ந்து என் வாழ்வை நாசமாக்கி விட்டீர்கள் என்று கூறினார்.
குடும்பநல கோர்ட்டில் கொஹனின் மனைவி ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் அக்கோர்ட்டு நீதிபதி பிலிப்மார்கஸ் கொஹனுக்கு எதிராக தீர்ப்பளித்ததாக தெரிகிறது. அதற்கு பழிவாங்கவே தலைமை நீதிபதி பெனிஸ்க் மீது “ஷூ” வீசியதாக போலீசாரிடம் கொஹன் கூறினார்.

இலங்கையின் 6வது ஜனாதிபதி தோ்தலில் மகிந்த ராஜபக்ச 18 லட்சம் அதிகப்படியான வாக்குகளினால் மாபெரும் வெற்றி



இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆறாவது ஜனாதிபதி தோ்தலின் சகல மாவட்டங்களின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளநிலையில் தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள மகிந்த ராஜபக்ச போட்டி வேட்பாளர் சரத் பொன்சேகாவை விட 1,842, 749 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று பெருவெற்றி பெற்றுள்ளார்.
இத்தோ்தலில் மகிந்த ராஜபக்ச 6,015,934 வாக்குகளை பெற்று;ள்ளார் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகா 4,173,185 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தற்போதைய நிலைவரங்களின் படி மகிந்த ராஜபக்ச 1,842,749 அதிகப்படியான வாக்குகள் பெற்று பெருவெற்றி பெற்றுள்ளார்.
மகிந்த ராஜபக்ச 16 மாவட்டங்களிலும் எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகா 6 மாவட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர்.
இலங்கையின் ஆறாவது புதிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மாபெரும் வெற்றியடைந்துள்ளார்.அத்துடன் மாவட்ட ரீதியாக இரு வேட்பாளர்களும் பெற்ற வாக்கு விபரங்கள் பின்வருமாறு:-
தோ்தல் முடிவுகள்: இரு பிரதான போட்டியாளர்களும் மாவட்ட மட்டத்தில் பெற்றுள்ள மொத்தவாக்குகள்:

கொழும்பு
மகிந்த ராஜபக்ச 614,740சரத் பொன்சோகா 533,022

கம்பஹா
மகிந்த ராஜபக்ச 718,716சரத் பொன்சேகா 434,506
காலி
மகிந்த ராஜபக்ச 386,971சரத் பொன்சேகா 211,633
மாத்தறை
மகிந்த ராஜபக்ச 296,155சரத் பொன்சேகா 148,510
அம்பாந்தோட்டை
மகிந்த ராஜபக்ச 226,887சரத் பொன்சேகா 105,336
குருநாகல்
மகிந்த ராஜபக்ச 582,784சரத் பொன்சேகா 327,594
அநுராதபுரம்
மகிந்த ராஜபக்ச 298,448சரத் பொன்சேகா 143,761
பதுளை
மகிந்த ராஜபக்ச 237,579சரத் பொன்சேகா 198,835
இரத்தினபுரி
மகிந்த ராஜபக்ச 377,734சரத் பொன்சேகா 203,566
களுத்துறை
மகிந்த ராஜபக்ச 412,562சரத் பொன்சேகா 231,807
கண்டி
மகிந்த ராஜபக்ச 406,636சரத் பொன்சேகா 329,492
கேகாலை
மகிந்த ராஜபக்ச 296,639சரத் பொன்சேகா 174,877
புத்தளம்
மகிந்த ராஜபக்ச 201,981சரத் பொன்சேகா 136,233
மாத்தளை
மகிந்த ராஜபக்ச 157,953சரத் பொன்சேகா 100,513
பொலநறுவை
மகிந்த ராஜபக்ச 144,889சரத் பொன்சேகா 75,026
மொனறாகலை
மகிந்த ராஜபக்ச 158,435சரத் பொன்சேகா 66,803
நுவரேலியா
சரத் பொன்சேகா 180,604மகிந்த ராஜபக்ச 151,604
யாழ்ப்பாணம்
சரத் பொன்சேகா 113,877மகிந்த ராஜபக்ச 44,154
மட்டக்களப்பு
சரத் பொன்சேகா 146,057மகிந்த ராஜபக்ச 55,663
திகாமடுல்ல (அம்பாறை)
சரத் பொன்சேகா 153,105மகிந்த ராஜபக்ச 146,912
வன்னி
சரத் பொன்சேகா 70,367மகிந்த ராஜபக்ச 28740
திருகோணமலை
சரத் பொன்சேகா 87,661மகிந்த ராஜபக்ச 69,752

சரத்பொன்சேக்காவின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் 9 பேர் கைது


நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்காவின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர விடுதியான சினமன் லேக் ஹோட்டலை இன்று அதிகாலை சுற்றிவளைத்த இராணுவத்தினர் அவரை அப்பகுதியிலிருந்து வெளியில் செல்ல முடியாத வகையில் தடுத்து வைத்திருந்தனர். இந்த நிலையில் குறித்த றோட்டலுக்குள் நுழைந்த படையினர் ஜெனரல் சரத்பொன்சேக்காவிற்கு பாதுகாப்பு அளித்து வந்த அவரது மெய்ப்பாதுகாவலர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இராணுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் 6வது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே: இதுவரை முடிவுகளின்படி

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெளியாகியுள்ள வாக்களிப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.

மேலதிக விபரங்கள் அறிய

கஹட்டோவிடாவில் அமைதியான தேர்தல்

இன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வழமையான தேர்தல்களைப் போலல்லாது கஹட்டோவிட மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
கஹட்டோவிடாவில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குகள் சுமார்1800ஆகும். இம்முறை 1300இற்கும் அதிகமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. சென்ற மாகாண சபைத் தேர்தலில் சுமார் 900 வாக்குகளே அளிக்கப்பட்டிருந்தன. ஏனைய தேர்தல்களைப் போலல்லாது மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தமை மக்கள் மனதில் ஒரு மாற்றம் வரவேண்டும் என்ற எண்ணத்தை பிரதிபளிப்பதாக பலரும் தெரிவித்தனர்.
கஹட்டோவிடாவில் வாக்களிக்கத் தகுதியனா சுமார் 200இற்கும் அதிகமானோர் வெளிப்பிரதேசங்களிலும், வெளிநாடுகளிலும் தொழில் புரிவது குறிப்பிடத்தக்கது. தேர்தல்வன்முறைகள் எதுவுமின்றி தேர்தல் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சிக்கு சென்ற ஜே.வி.பியின் நா.உறுப்பினர் விஜித்த ஹேரத் படையினரால் தடுத்து வைப்பு



மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வாக்குச் சாவடிகளை பார்வையிடச் சென்ற சமயம் இரட்டைப்பெரியகுளம் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், ஜனாதிபதி வேட்பாளர் சன்ன ஜானக சுகத்சிறி கமகே மற்றும் தேர்தல் முகவர்கள் 40 பேருடன் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வாக்குச் சாவடிகளை பார்வையிடச் சென்ற சமயம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் தொடர்ந்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு வந்து அதிகாரிகளுடன் முன்று மணி நேரமாக பேச்சு நடத்திய பின்னர், தற்போது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலிடத்தில் வந்த உத்தரவினடிப்படையிலேயே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்நடவடிக்கைகள் எல்லாம் பொய் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வாக்குச்சாவடிகளுக்கு முகவர்கள் செல்வதை தடுக்கும் முற்சியே என மக்கள் விடுதலை முன்னணி மேலும் தெரிவித்துள்ளது.

சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அறிவித்துள்ளார்.



ஏதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு இன்று இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் எம் எஸ் இலியாஸ் ஆகியோரே சரத் பொன்சேகாவின் வெற்றிக்கு தமது ஆதரவை இன்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இன்று காலை நிட்டம்புவ கொரஹொல்லயில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு சென்ற சரத் பொன்சேகா அங்கு பண்டாரநாயக்கவின் சிலைக்கு மலர்தூவி வணக்கம் செலுத்தி விட்டு சந்திரிகாவை சந்தித்தார். இதன் போது நாட்டில் ஊழல் அரசாங்கத்தையும் குடும்ப அரசியலையும் தோற்கடித்து புதிய அரசாங்கத்தை அமைக்க தாம் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதாக சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
தமது கட்சிகாரர்கள் தமக்கு கல்லெறியும் போது எதிர்க்கட்சியில் உள்ள ஒருவர் தமது தந்தையின் சமாதிக்கு மலர்தூவியமையை தாம் மெச்சுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் இலியாஸ் தமது போட்டியை விலக்கிக்கொண்டு இன்று சரத் பொன்சேகாவுக்கு தமது ஆதரவை வெளியிட்டார்.

யுத்தம் முடியமுன் முடிவடைந்து விட்டதாக கூறி, ஜனாதிபதி விமான ஓடுபாதையை முத்தமிட்டார்: சரத் பொன்சேகா



யுத்தம் முடிவடைவதற்கு முன்னரே யுத்தம் முடிவடைந்து விட்டதாக கூறி ஜனாதிபதி விமான ஓடுபாதையை முத்திட்மிட்டுவிட்டதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்தமது ஜாதகத்தை மஹிந்த ராஜபக்சவே அதிக தடவை பார்த்திருப்பதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தாம் 10 வீத மேலதிக வாக்குகளால் வெற்றிப்பெறப்போவதாக பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எனினும், யாழ்ப்பாணம் உட்பட்ட நாடளாவிய ரீதியில், வாக்கு மோசடிகள் ஏற்படுத்தப்படக்கூடிய ஏதுநிலைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளமை குறித்து அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் இராணுவ அதிகாரிகள் சிலர் இடமாற்றம செய்யப்பட்டமை இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ வாழ்க்கையில் உயரதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றும் பண்புகளே அதிகமாக காணப்படுகின்றன. எனினும் அரசியல் வாழ்க்கையில் அது மாறிக்காணப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சொல்வதையெல்லாம் இலங்கை மக்கள் நம்புகிறார்களா என்பது கேள்விக்குரியதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ராஜபக்ச ஏற்கனவே இந்த தேர்தலில் தோல்வி ஏற்படப்போகிறது என்ற சந்தேகத்தில் உள்ளார். எனவேதான் அவர், வாக்குப்பெட்டிக் கொள்ளைகளில் ஈடுபட முயற்சிக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ள சரத் பொன்சேகா, நாட்டின் 85 வீத மக்கள் நாளை மறுதினம் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களித்தால் தாம் 55 வீத வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ச 45 வீத வாக்குகளையும் பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பொறுப்பாக இருந்த இராணுவக் கட்டளையதிகாரி தேர்தல் தினத்தன்று பங்களாதேஸுக்கு அனுப்பப்படவுள்ளார்.
அதேநேரம் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் எனக்கூறி கொள்ளுப்பிட்டியில் கைது செய்யப்பட்ட அதிகாரி ஒருவர், இவர் பாதுகாப்பு செயலாளாரின் வலதுகையாக செயற்படுபவர். இந்தநிலையில் கிளிநொச்சியில் பொறுப்பாக உள்ள இவரை யாழ்ப்பாணத்தின் கடமைகளையும் பொறுப்பேற்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
வடமராட்சிக்கு பொறுப்பாகவிருக்கும் படையதிகாரி, கொழும்புக்கு உடனடியாக மாற்றம் பெற்றுள்ளார்.
இவையாவும் அரசாங்கம் தேர்தலில் வாக்குமோசடிகளில் ஈடுபடப்போவதை சுட்டி நிற்பதாக சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
தாம் ஒரு நியாயமான அரசியல்வாதியாக நடந்துக்கொள்ள முனைவதாக குறிப்பிட்டுள்ள அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாம் பின்னிற்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். தாம் ஆட்சிக்கு வந்ததும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அங்கு இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றச்சாட்டுக்கள் என்பவை தொடர்பில் உரிய விளக்கங்களை வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார் சரத்பொன்சேகா.
மஹிந்த ராஜபக்சவுக்கு எவ்வாறு யுத்தம் மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியாது. அவர் தமது ( மம பப்புவ தெனவா) இதயத்தை தருவதாக கூறினாலும் போர் எவ்வாறு நடத்தப்பட்டது என்பது தெரிந்திருந்தால், போர் குற்றச்சாட்;டுகளுக்கு உரிய முறையில் விளக்கமளித்து இலங்கையின் பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்கியிருக்கலாம். ஆனால் அதனை அவர் செய்யவில்லை. இந்தநிலையில் அதனை உரியமுறையில் கையாண்டு இலங்கைக்கு கிடைக்கவேண்டிய ஜிஎஸ்பி பிளஸ் ஆடைக்கோட்டா சலுகையை பெற்றுக்கொடுக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் வாய்மூலமான சில விடயங்கள் ஏற்றுக்கொள்ள்ப்பட்டுள்ளன. ஊழல்களை ஒழித்தல், சம உரிமை, இனங்களுக்கு இடையில் இணக்கத்தை ஏற்படுத்துதல், போன்ற விடயங்களில் தமக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இணக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் மஹிந்த ராஜபக்ச, இதனை பயங்கரமானதாக காட்டி, இனங்களுக்கு இடையிலான உறவை பிரச்சினைக்கு உள்ளாக்கப்பார்க்கிறார் என சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
தமக்கு வழங்கப்பட்டுள்ள தபால் மூல வாக்களிப்பின் போது படையினர் மற்றும் பொலிஸ் தரப்பில் இருந்து 80 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதில் மின்னேரிய முகாமில் அளிக்கப்பட்ட 195 வாக்குகளில் தமக்கு 192 வாக்குகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 51 வது படைப்பிரிவில் அளிக்கப்பட்ட 82 வாக்குகளில் தமக்கு 72 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் முடிவடைவதற்கு இரண்டு மூன்று இருக்கும் வேளையிலேயே இலங்கைக்கு ஜோர்தானில் இருந்து வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, களத்தில் இருந்த கட்டளைத் தளபதி சவேந்திர சில்வாவை தொடர்புகொண்டு யுத்தம் முடிவடைந்து விட்டதா எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர், இன்னும் இரண்டு நாட்கள் எடுக்கும் எனப் பதிலளித்துள்ளார்.
இந்தநிலையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சயுத்தம் முடிவடைந்து நாட்டை மீட்டுவிட்டதாக, விமான ஓடு பாதையை முத்தமிட்டதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
தமது ஜாதக நிலைமைகள் நன்றாக இருப்பதாக கூறியுள்ள சரத் பொன்சேகா, தம்மை விட தமது ஜாதகத்தை மஹிந்த ராஜபக்சவே அதிகமாக பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னால் ஜனாதிபதி சந்திரிகாவின் கஹடோவிட வருகை.


கஹடோவிட அல் பத்ரியா மகாவித்தியாலயத்தின் 2009இல் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்குவதற்காக விசேட அதிதியாக வருகை தந்த முன்னால் ஜனாதிபதி சந்திரிகா மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நாட்டின் தற்போதைய நிலைமைபற்றி விளக்கமளித்தார். அவர் கூறுகையில், அவரால் நியமிக்கப்பட்ட இந்த ஜனாதிபதி சிறீலங்கா சுதந்திரக்கட்சி அங்கத்துவத்திலிருந்து பலவந்தமாக அவரை நீக்கியதாகவும், மற்றும் இதுவரைகாலமும் நாட்டில் நடந்திராத இலஞ்சம், ஊழல் மோசடிகள், கொலை, கொள்ளைகள், கடத்தல்கள் என்பன தலைவிரித்தாடுவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் முக்கியமாக அவர் மேலும் கூறிகையில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் காலம் சென்ற அச்ரப் அவர்களுக்கு முஸ்லிம்களுக்கு தேவையான அளவு தொழில் வாய்ப்புக்களை வழங்கும்படி கூறியதாகவும் தெரிவித்தார்.
மேலும் எதிர் வருகின்ற தேர்தலில் அனைவரும் மிகவும் அவதானமாக சிந்தித்து அமைதியான ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுமாறும் தனது உரையில் குறிப்பிட்டார். அவரது இந்த உரை பொது அபேட்ச்சகர் சரத்பொன்சேகாவை ஆதரிக்க வேண்டுமென்பது மறைமுகமாக இருந்தது.

விதவைகளின் வீட்டைத் தட்டும் இளைஞர்கள்

கடந்த சில நாட்களாக சில இளைஞர்கள் விதவைகள் உள்ள வீடுகளை இரவு நேரங்களில் தட்டுவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

நவீன தொடர்பு சாதனங்களின் பாவணை அதிகரிப்பால் அவற்றினூடாக அடைந்து கொள்ளும் நன்மைகளை விட தீமைகளின்பால் இளைஞர்கள் வேகமாகக் கவரப்படுகிறார்கள். இச் சாதணங்களினூடாக பாலியல் ரீதியான காட்சிகளை பார்த்துப் பார்த்து ஒரு வகை மன நோயார்களாக இன்றைய இளைய தலைமுறை மாறிவருகின்றது. எனவே இந்நிலை தொடருமானால் நமது ஊரின் எதிர்கால சந்ததியினரின் நிலை என்னவாக மாறும் என்பது கேள்விக்குறியே.

இவ்விளைஞர்களை உரிய முறையில் வழிகாட்டி நல்வழிப்படுத்துவது சகலரினதும் பொறுப்பாகும். எனவே எமதூரின் தலைமைகள் இதுவிடயத்தில் கூடிய சீக்கிரம் அக்கறை செலுத்தி இளைஞர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்க தம்மாலான முயற்சிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரசார மேடையில் தோன்றமாட்டேன்:சந்திரிக்கா


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அத்தனகல தேர்தல் பிரசார மேடையில் தாம் தோன்றப் போவதாக வெளியான வதந்திகளில் எவ்வித உண்மையுமில்லையென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அத்தனகலத் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இக்கருத்தை தெரிவித்ததாக சந்திரிக்கா குமாரதுங்க கூறியுள்ளார்.
அவ்வாறான எதுவித எண்ணமும் தம்மிடமில்லையென்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மேடையில் தாம் பேசப் போவதில்லையென்றும், ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் தாம் இணையவில்லையென்றும் கூறிய அவர், எதிர்காலத்தில்கூட அவ்வாறு இணையும் எண்ணமும் தம்மிடமில்லையென்றும் தெரிவித்தார்.

கரப்பந்தாட்டம் - கமர் இல்லம் முதலாம் இடம்

அல் பத்ரியா ம.வி இல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இல்ல விளையாட்டுப் போட்டியில் இல்லங்களிற்கு இடையிலான கரப்பந்தாட்டப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் கமர் இல்லம் முதலாம் இடத்தையும், சம்ஸ் இல்லம் இரண்டாம் இடத்தையும், நஜும் இல்லம் மூன்றாம் இடத்தையும் தட்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடங்களைப் போலல்லாது இம்முறை விளையாட்டு நிகழ்ச்சிகள் விறு விறுப்பாக நடைபெறுவதாக எமக்கு அறியக் கூடியதாக இருந்தது.

கஹட்டோவிட அல் பத்ரியாவில் இல்ல விளயாட்டுப்போட்டி



கஹட்டோவிட அல் பத்ரியா ம.வி இன் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

வழமைபோல் இம்முறையும் சம்ஸ்,கமர்,நஜும் ஆகிய மூன்று இல்லங்களே போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றவுள்ளன.நேற்றையதினம் நடைபெற்ற கிரிக்கட் போட்டியில் சம்ஸ் இல்லம் முதலாம் இடத்தையும் நஜ்ம்,கமர் இல்லங்கள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களையும் தட்டிக் கெண்டன.

ஜனாதிபதித் தேர்தல்: 25-27 ஆம் திகதி வரை அரச பாடசாலைகள் அனைத்தும் மூடப்படும்


எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.ஜனவரி 28 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்கான பாடசாலைகள் மீண்டும் திறக்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை தேர்தலினை முன்னிட்டு இராணுவத்தினரது விடுமுறைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிறிகேடியர் உதயநாணயக்கார எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

பிணங்களுக்கிடையே தூங்கும் மக்கள்


போர்ட்டோ பிரின்ஸ்:விமானம் போர்ட்டோ பிரின்ஸ் விமான நிலையத்தில் இறங்கும் பொழுது வெளிச்சத்தை தருவது ரன்வேயில் பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகளிலிருந்து வரும் ஒளி மட்டுமே.
சாதாரணமாக ஹைத்தி தலைநகர் ஒளிவெள்ளத்தில் மூழ்கியிருக்கும்.(சில நேரங்களில் ஏற்படும் கரண்ட் கட்டைத்தவிர). ஆனால் கடும் பூகம்பம் ஏற்பட்டபிறகு ஜெனரேட்டர்கள் பயன்படுத்தும் சில வீடுகளைத் தவிர கடும் இருள் நிலவுவதாக போர்ட் ஆஃப் பிரின்சிற்கு செய்தி சேகரிக்க வந்த பி.பி.சி நிரூபர் மாத்யூ ப்ரைஸ் கூறுகிறார்.
விமான நிலையத்தில் பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் துவங்கியதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஒரு சி130 ராணுவ விமானத்திலிருந்து பொருட்கள் இறக்கப்படுகின்றன.
விமானத்திலிருந்து நகரத்தை நோக்கிய பயணத்தில் கண்ட காட்சிகள் உள்ளத்தை உருக்குகிறது. நேராக பிளந்து நிற்கும் கட்டிடங்கள், அஸ்திவாரத்தின் மேல் இடிந்து கிடக்கும் மேல் கூரைகள்.புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையின் அஸ்திவாரத்தை மட்டுமே அங்கு காணமுடிந்தது. தெருவில் எங்கும் மக்களைக் காண முடியவில்லை.
சிலர் எதனையோ முணுமுணுத்துவாறே நடக்கின்றனர்.வேறு சிலர் தளர்ந்து போயுள்ளனர். அவர்களால் வேறொன்றும் செய்ய இயலவில்லை. பூமியின் அதிர்வில் நடுங்கிப்போன அம்மக்கள் தங்களுக்கு பாதுகாப்பான இடமாக காண்பது நட்சத்திரங்களின் ஒளி உமிழும் தெருக்களைத்தான். அவர்களுக்குத் தான் திரும்பிச் செல்ல வீடுகள் இல்லையே. இரவின் நிசப்தத்தை குலைக்கும் விதமாக பல இடங்களிலும் கைக்கொட்டி பாட்டு பாடும் சப்தமும் கேட்கிறது. தங்களுக்கு ஏற்பட்ட துயரத்தை மறப்பதற்காக பாடல்களை அவர்கள் பாடுகிறார்கள்.
தலைநகரில் அமைந்துள்ள பைக்ஸ் மருத்துவமனையில் கண்ட காட்சிகள் கொடூரமாகயிருந்தது. ஒரு இனப்படுகொலை நடந்த சூழலை அது ஏற்படுத்துகிறது. சில உடல்களில் தலைகள் மட்டும் அழுக்கடைந்த துணிகளால் போர்த்தப்பட்டிருக்கிறது. பெரும்பாலான உடல்கள் நிர்வாணமாக கிடத்தப்பட்டிருக்கின்றன.சிலரின் கால்கள் பிறரின் கால்களோடு கோர்த்துள்ளது. இறந்தவர்களில் குழந்தைகள் குறைவாகவே உள்ளனர். ஒரு மூலையில் வெள்ளை நூல்களால் தைக்கப்பட்ட நீல நிற ஆடையுடன் ஒரு குழந்தை கிடக்கிறது.எவரும் அதனை கவனிப்பாரில்லை.
இதற்கிடையே ஒரு போர்வையை விரித்து ஒருவர் படுத்துறங்குகிறார். ஆம் அவர்கள் பிணங்களுக்கிடையே உறங்குகிறார்கள். மருத்துவமனையிலோ ஒரு சில மருத்துவர்களும் குறைந்த அளவிலான மருந்துகளுமே உள்ளன. காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டவர்களால் போதிய மருந்துகள் இல்லாததால் மரணத்தை தழுவியுள்ளனர்.
சேறு புரண்ட தரையில் இரண்டுகால்களும் சேதமடைந்த நிலையில் தலையில் ஏற்பட்ட ஆழமான காயத்துடன் கிடக்கும் தனது மகளை பார்த்து கதறி அழுகிறார்.ஆனால் அவரை விட அவசர சிகிட்சைக்கு பலர் உள்ளதால் மருத்துவருக்கு அந்தப்பெண்ணை கவனிக்க நேரமில்லை. காவா?(இப்பொழுது எப்படியுள்ளது?) என்று அந்தப் பெண்னைப் பார்த்து தந்தை கேட்கிறார்? பரவாயில்லை என்ற ரீதியில் அந்தப்பெண் தலையாட்டுகிறார். அழுதுக்கொண்டிருக்கும் தந்தையை மேலும் கஷ்டத்திற்கு ஆளாக்கவேண்டாம் என்ற எண்ணமாகயிருக்கும். சிகிட்சை கிடைப்பது கடினம் என்பது அந்தப்பெண்ணிற்கு தெரிந்ததோ என்னவோ?
இதற்கிடையில் சுனாமி வரப்போவதாக சிலர் கிளப்பிவிட்ட வதந்தியால் பலரும் கிடைத்ததை பொறுக்கிக் கொண்டு தெருவுகளை நோக்கி ஓடுகின்றனர்.ஆம் இத்தகைய வதந்திகள் கூட அவர்களை பீதிக்குள்ளாக்கும் வண்ணம் அவர்களின் உள்ளங்களை பயம் பாடாய்படுத்துகிறது.

இறுதிப்போரில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட படையினர் பலி; 36 ஆயிரம் வீரர்கள் அங்கவீனர்களாயினர்: சரத் பொன்சேகா

இறுதிப்போரில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட படையினர் உயிரிழந்துள்ளதாக சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று முன்னாள் சனிக்கிழமை மாத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போது இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தற்போது மகிந்த ராஜபக்ச அரசு போர் வெற்றியினை விற்று அரச தலைவர் தேர்தலில் வெல்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
நாட்டில் இனமொழி பேதங்களை ஒழித்து மக்கள் அனைவருக்கம் சம உரிமைகளை பெற்றுக்கொடுத்து மக்களது தனித்தன்மையினை பாதுகாக்க தொடர்ந்தும் உழைப்பதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை அரசு தமது சொந்த இலாபத்திற்காகவும் ஆட்சியின் பதவிகளை தக்க வைப்பதற்காகவும் தென்பகுதி சிங்கள மக்களையும் வடபகுதி தமிழ் மக்களையும் ஒருவருக்கெருவர் எதிரிகளாக உருவாக்கும் சதிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
வன்னியின் இறுதிக்கட்ட போரில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகவும் முப்பத்தியாறாயிரத்திற்கு மேற்பட்ட படைவீரர்கள் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
Lankwin web

பொன்சேகாவை ஆதரித்து பிரச்சார கூட்டம்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகாவை ஆதரித்து ஒரு கூட்டம் இன்றிரவு ஹிசாம் ஹாஜியார் அவர்களின் கடைக்கு அண்மையில் உள்ள சரத்பொன்சேகா ஆதரவாளர்கள் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ராஜ கருணா மற்றும் மேல்மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம் ஆகியோரும் பங்கு பற்றவுள்ளனர். மேலும் தேர்தலில் வெல்வது யார் என்பது சம்பந்தமான ஒரு கருத்துக் கணிப்பு எமது தளத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இத்தேர்தலில் யார் வெற்றிபெறும் எனபதை உரிய இடத்தில் கிளிக் செய்து எமது கருத்துக் கணிப்பிற்கு உதவுமாறு ஊர்மக்கள் சார்பாக வேண்டுகிறோம்.

*கிளிக் செய்யும் முறை: இணையத்தளத்தின் வலது பக்கமாக வாக்கெடுப்பு என்ற பகுதியில் உரிய தெரிவை இட்டு வோட் என்ற பட்னை கிளிக் செய்யவும். *

மஹிந்தவின் முக்கிய ஆதரவாளர், பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கவுள்ளார்



இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பகுதியாக கருதப்படும் தென்மாகாணம், மாத்தறை மாநகரசபை முதல்வர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கான தமது ஆதரவை விலக்கி, பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார்.
தங்காலையில் கடந்த வாரம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட பின்னரே தாம் இந்த முடிவுக்கு வந்ததாக மாநகர சபை முதல்வரான உப்புல் நிசாந்த இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காட்டு நீதியை ஒழிக்க சரத் பொன்சேகாவே தகுதியானவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவின் தலைமையில் நாட்டின் அனைத்து இனங்களும் சுபீட்சத்தை காணும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தாம் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிப்பதன் காரணமாக தமது குடும்பத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கஹட்டோவிட இளைஞர்களிடையே பரவி வரும் காதல் நோய்….

இன்றைய இளைஞர்களை ஆட்கொள்ளும் பயங்கர நோய்களில் காதல் நோயும் ஒன்றாகும். இந்நோய் நமதூர் இளைஞர்களிடமும் மிக வேகமாக பரவி வருவது மிகவும் கவலைக்கிடமான ஒரு விடயமாகும். பல்வேறு மார்க்க நிறுவனங்களும் பள்ளிவாசல்களும் காணப்படும் ஒரு ஆண்மிக சூழல் உள்ள எமதூரில் இவ்வாறான மோசமான நோய் தொற்றிய இளைஞர்கள் அதிகரித்து வருவது ஊரின் எதிர்காலத்தில் ஆரோக்கியமான இளைஞர்;கள் உருவாவதைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஊரில் உள்ள இளைஞர்களில் 85%இளைஞர்கள் இக்காதல் நோயில் வீழ்ந்துள்ளதாக அண்மைக்காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு கூறுகின்றது. இதற்கான காரணங்களைக் கண்டறிந்து அதற்குறிய தகுந்த சிகிச்சையை வழங்காவிட்டால் இன்னும் மோசமான விளைவுகளை நாம் எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம்.

இளைஞர்களை சரியான பாதையில் வழி நடாத்துவது பெற்றேர்கள், அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், மற்றும் பள்ளிவாசல்கள், மார்க்க நிறுவனங்கள் போன்ற அனைத்துத் தரப்பினதும் கடமையும் தட்டிக் கழிக்க முடியாத பொறுப்புமாகும்.

எனவே இதுவிடயத்தில் சிறந்த ஒரு முடிவை அனைத்துத் தரப்பும் எடுத்து எமது ஊரையும் இளைஞர்களையும் சரியான பாதையில் நடாத்தக் கூடிய வழிவகைகளை இத்தளத்தினூடாக கருத்துப்பரிமாற்றம் செய்யலாம் என நினைக்கின்றேன். எனவே உங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இதனூடாகப் பரிமாரிக் கொள்ளவும்.

Clash between the ruling and opposition party supporters, many injured.


A clash had occurred in the Pollanaruwa area today among the ruling Mahinda Rajapakse’s United peoples Freedom Front supporters, and supporters of Presidential General Candidate Sarath Fonseka’s supporting party United National Party and JVP supporters.

While a procession was moving in support of Sarath Fonseka, Minister Maithiripala Sirisena’s vehicle had intruded the procession, hence a clash had occurred. Due to the clash, vehicles were damaged and events of setting a blazing had occurred. Following the incident tension was prevailing in the Pollanaruwa town. Many injured due to the clash incident had been admitted to Pollanaruwa hospital for treatment is according to reports.



இரண்டாவது முறையாகவும் கஹடோவிடவில் சரத் பொன்சேகாவின் தளமைக்கரியலாம் உடைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது.

ஹிஷாம் ஹாஜியார் அவர்களின் கோழிக்கடைக்கு அருகாமையிலும் ரிஷான் அவர்களின் சில்லரைக்கடைக்கு முன்னாலுமாக அமைந்துள்ள கஹடோவிட சரத் பொன்சேகாவின் தலைமைக்காரியலயம் இரண்டாம் தடவையாகவும் ஆளும் கட்சியால் உடைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. சுமார் அதிகாலை இரண்டு மணியளவில் ஊடுருவிய கயவர்கள் உண்மைத்தொண்டன் மு'அத்தின் அமான் அவர்களையும் அவருக்கு ஒத்துழைப்பாக இருந்த ஆமிரையும் துப்பாக்கியைக்காட்டி விரட்டி விட்டு சுமார் எட்டு தகரங்கள், என்பது சுவரொட்டிகள், நான்கு மின் குமிழ்கள் போன்றவற்றை நாஷப்படுத்திவிட்டு சென்றுள்ளர்கள். இது ஆளும் கட்சியின் திட்டமிட்ட சதி என ஊர் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சிங்கள மக்களுடன் ஒற்றுமையாக வாழும் கஹோடோவிட முஸ்லிம் மக்களை பிரிக்கும் நோக்குடன் இயங்கும் சில முஸ்'தபவிய்யா நபர்கள் கூறியே இது இடம் பெற்றுள்ளது என்று மற்றும் சில முஸ்'தபவிய்யா நபர்கள் உட்பட சில நபர்கள் கூறியுள்ளனர். எதிர் வரும் இருபத்தி ஆறாம் திகதி இடம் பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா அவர்கள் வெற்றி பெரும் அடையாளம் என்று ஊர் மக்கள் கூறுகின்றனர்.இவர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர் இது போன்ற தலைமைக்கரியலயங்கள் உடைக்கப்பட்டால் சரத் பொன்சேகாவின் வாக்குகள் அனைத்தும் மகிந்த ராஜபக்ஷவிற்கு கிடைக்கும் என்று. இது தான் இல்லை மகிந்தவின் வாக்குகள் சரத்துக்கு கிடைக்கும் என்பதே உண்மை.இதுபோக, அமைச்சர் பௌசி அவர்களும் சரத்துடன் இனைய்யப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆகவே அனைத்து கஹடோவிட வாழ் முஸ்லிம் மக்களே இது உங்களுக்கான இறுதி வாய்ப்பு. இருபத்தி ஆறாம் திகதி நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை ஆயிரம் தடவை யோசித்து வாக்களியுங்கள். ஏனென்றால் முஸ்லிம்களை காப்பாற்ற ஒரே மார்க்கம்.