கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அறிவித்துள்ளார்.



ஏதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு இன்று இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் எம் எஸ் இலியாஸ் ஆகியோரே சரத் பொன்சேகாவின் வெற்றிக்கு தமது ஆதரவை இன்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இன்று காலை நிட்டம்புவ கொரஹொல்லயில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு சென்ற சரத் பொன்சேகா அங்கு பண்டாரநாயக்கவின் சிலைக்கு மலர்தூவி வணக்கம் செலுத்தி விட்டு சந்திரிகாவை சந்தித்தார். இதன் போது நாட்டில் ஊழல் அரசாங்கத்தையும் குடும்ப அரசியலையும் தோற்கடித்து புதிய அரசாங்கத்தை அமைக்க தாம் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதாக சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
தமது கட்சிகாரர்கள் தமக்கு கல்லெறியும் போது எதிர்க்கட்சியில் உள்ள ஒருவர் தமது தந்தையின் சமாதிக்கு மலர்தூவியமையை தாம் மெச்சுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் இலியாஸ் தமது போட்டியை விலக்கிக்கொண்டு இன்று சரத் பொன்சேகாவுக்கு தமது ஆதரவை வெளியிட்டார்.

0 comments:

Post a Comment